Followers

Tuesday, July 30, 2013

கணிப்பொறி என் தோழி

கம்ப்யூட்டரில் முதல் அனுபவம் குறித்து அழைப்பு கொடுத்திருக்காங்க எழில் இந்த பதிவு மூலமா நானும்  “ஜோதியில்” கலக்கிறேன்.

கணிணி பற்றி ஒவ்வொருவரும் எழுதும் தொடரும் சுவாரசிமாக இருக்கிறது என் நினைவுகளையும் தூண்டி விட்டது. வலையுலகத்தை சுற்ற புதியவகை ரேவர் வாகனத்திற்கு எம்மையும் அழைத்து வெள்ளை கொடி அசைத்து துவக்கிவிட்ட ராஜி அவர்களுக்கு நன்றி.


கணிப்பொறி பற்றி உயர்நிலை படிக்கும் போது அறிந்திருந்தாலும் அதைப்பற்றிய பெரிய ஆர்வம் இல்லை அதை பார்க்கும் வரைக்கும்.  சர்வஜன மேல் நிலைப்பள்ளியில்  படிக்கும் போது PSG தொழில் நுட்ப கல்லூரியில் கண்காட்சியில் வைத்திருந்தார்கள்.  அப்போது கம்யூட்டர் படிப்பவர்கள் எனக்கு அந்தஸ்துள்ளவர்களாக தெரிந்தார்கள் இது நமக்கு எட்டாக் கனி என்று மனதில் பதிந்து விட்டது.  தொழிநுட்ப படிப்பு படிக்க ஆர்வம் இருந்தாலும் குடும்ப சூழ்நிலை காரணமாக அது தவிர்க்கப்பட்டது. எனக்கு ஆலோசனை கூறுவதற்கும் யாரும் இல்லை.  கோவை அரசு கலைகல்லூரியில் கணிதப்பிரிவில் எனது படிப்பை தொடர்ந்தேன்.  அங்கு போர்ட்ரான் ஒரு பாடமாக இருந்தது. ஆனால் அப்போதும் கண்பொறியை தொட்டுப் பார்த்ததில்லை.  டைப்ரைட்டர் இயந்திரம் இதற்கு மாற்றாக (ஙே?!) என் கண்ணில் பட்டது. நண்பனின் தூண்டுதலால் டைப்ரைட்டர் கிளாசில் சேர்ந்து குறுகிய காலத்தில் ஹை ஸ்பீட் வரைக்கும் தேர்ந்தேன். அக்கவுண்டன்ஸி படிக்கல இருந்தாலும் ஒருத்தர்கிட்ட அரிசி கடை கணக்கு எழுதி கற்றுக்கிட்டேன்.

கல்லூரி படிப்பு முடிஞ்சு வேலை தேடிய போது நண்பன் உதவியால் ஒரு டெக்ஸ்டைல் மெசின் கம்பெனியின் முகவரி கொடுத்து பார்க்க சொன்னார்கள்.

அங்கே நாலஞ்சு கம்யூட்டர் இருந்துச்சு. காலர தூக்கி விட்டுக்கிட்டேன். ஆனா வேலை அங்க கிடையாது (போச்சா ! போச்சா ! ) அந்த ஆபிஸோட ப்யூன் இன்னொரு முகவரிக்கு என்னை கூட்டிட்டு போனான்.  அது அந்த கம்பெனியோட தொழில் முறை ஏஜெண்டு அட்ரஸ். அந்த பங்களாவின் மேல் மாடி அறைதான் ஆபீஸ். விசாரிப்பு அப்புரம் டெஸ்டு பத்து நிமிசத்தில பட படன்னு அடிச்சு கொடுத்தேன். வேலை கிடைத்தது ஆனா அங்கே டைப்ரைட்டர் ஒரு போன் மட்டுமே இருந்துச்சு.

முதலாளி பக்கத்தில ஒரு நாய் ஜெய்ஜாண்டிக்கா காலடியில் படுத்து கிடந்தது.
நாக்கு மேலன்னத்தில் ஒட்டிக்க தயங்கி, தயங்கி இதுதான்  “ஆபீஸா சார்”

ஆமாம்பா ஏன்?... நாளைக்கு புதன் கிழமை நல்ல நாளு ஒன்பதரை மணிக்கே வந்துருன்னாரு மொதலாளி.“சொக்கா உனக்கு வந்த சோதனைன்னு !” மனசில நினைச்சுகிட்டேன். ஆனா குடும்பசூழ்நிலை எந்த வேலைன்னாலும் சேர அப்ப ரெடியா இருந்தேன்.

அங்கே தான் ஆங்கிலத்தில் போன்ல பேசி பழகி கிட்டேன்.  அடுத்த மாசத்திலேயே கம்ப்யூட்டரும் வந்திடுச்சு கூடவே ப்ரோக்ராம் படிச்ச பெண்ணும் வேலைக்கு சேர்ந்தாள்.  என் கண்ணு அந்த கம்யூட்டர் மேலேயே இருந்திச்சு, அட நம்புங்க !.. ஏன்னா அவள விட கம்யூட்டர் எனக்கு அழகா தெரிஞ்சது.

அவளுக்கு நடந்த உபசரிப்பு யப்பா! என் காதில் புகை வராத குறைதான். அவள் காஃபி டீ எல்லாம் சாப்பிட மாட்டாளாம் பால் தானாம்.

அவள் எப்படி மோனோக்ரோம் (கருப்பு வெள்ளை) கம்ப்யூட்டரை இயக்குகிறாள் என்பதையும் டாஸ் கமெண்ட்ஸ் களையும் மனப்பாடம் செஞ்சுகிட்டேன்.  அப்ப விண்டோஸ்-3 கிடையாது. ஒவ்வொரு புரோக்ராம் இருக்கும் டைரக்டரிக்கு உள்ள நுழைஞ்சு அந்த exe பைல்லோட பெயர தட்டினா புரோக்ராம் உள்ள நுழைஞ்சிடலாம் வெளியேறுவதற்கு பைல் எக்ஸிட் இப்படி  C :\ ப்ராம்ப்டிற்கு திரும்ப வந்திடலாம்.

சமயம் கிடைக்கும் போது எப்படியோ தட்டு தடுமாறி சி ப்ராம்டில் இருந்து புரோக்ராம் உள்ளே செல்வதற்கும் வெளியே வருவதற்கும் தெரிந்து கொண்டேன். அப்பதான் சிக்கல் ஆரம்பமாச்சு அடுத்த நாள் கம்யூட்டர் பூட் ஆகல. அவள் என்மேல் புகார் சொன்னாள் சரியா சட்டவுண் செய்யாம ஆப் செஞ்சதால் பூட் பைல் கரப்ட் ஆகி பூட் ஆகல.

மொதலாளி சொன்னாரு நீ டைப்ரைட்டர் மாதிரி பட படன்னு தட்டியிருப்ப ஃபெதர்,  ஃபெதர் டச் கொடுக்கனும்னாரு.


அப்ப ஏற்பட்ட கோபம்,  அது வெறியா மாறி எப்படியும் கம்ப்யூட்டர் கத்துகிறதுன்னு முடிவு பன்னினேன்.  முதலாளி வெளியூர் போகும் சந்தர்பமெல்லாம் எனக்கு அங்க தான் ஸ்டே.  அவர் வாங்கி வெச்சு இருக்கும் கம்யூட்டர் புத்தகங்கள மேஞ்சேன்.  அதுக்கப்புரம் முதலாளியே ஆச்சர்யப்படும் படியா...வேர்ட்ஸ்டார், வேர்ட், லோட்டஸ்123, க்யூப்ரோ(அப்போதைய எக்ஸெல்), ஃபாக்ஸ்புரோ, டேலி எல்லாம் புகுந்து வருவேன். எல்லாம்  “பழகு தப்பு நடந்தா பரவாயில்ல” (trial and error) பாணி தான். அந்த பெண்ணா அவள் ஏற்கனவே ஒருத்தர காதலிச்சு இருந்ததால திடீர் கல்யாணம் செஞ்சுகிட்டா அப்பீட்டு !.

அதிலிருந்து கம்ப்யூட்டர் எனக்கு ஒரு தனி உலகத்தை காட்டிச்சு, அவள் என் கேர்ல் ப்ரெண்ட் ஆனாள்?.  ஏன் தோழன் இல்லையா ? உங்க மைண்ட் வாய்ஸ் கேட்குது.  நம் நாட்டு நதிகள் எல்லாம்(பெரும்பாலும்) பெண்களின் பெயரால இருக்குது அதனாலயே என்னமோ  கம்ப்யூட்டர் எனக்கு பெண்ணாகவே தோற்றம் அளிக்கிறது. இது வரைக்கும் எனக்கும் அவளுக்கும் உள்ள தொடர்பு விவரிக்க முடியாத ஒன்று. எனக்கு பல விசயங்கள அவள் கற்றுக் கொடுத்திருக்கிறாள், இன்னும் நான் கற்றுகொண்டே இருக்கிறேன். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய், அவளின் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது.

அப்ப ஆபீஸ்ல நடந்த ஒரு சம்பவம். புதுசா இரண்டு பெண்கள் வேலைக்கு சேர்ந்தாங்க. ஈட்டி க்கு ஆபிஸில் எல்லா இடங்களுக்கும் போகும் சுதந்திரம் இருந்தது. (ஈட்டியா..அந்த வளர்ப்பு நாய்ங்க!) நான் வெளி வேலையா... (என்ன வேலையா லெட்டர் போஸ்டிங் !) போய்ட்டு திரும்பி வந்தேன் ரெண்டு பேரும் கைய பிசஞ்சுகிட்டு நிக்கறாங்க நம்ம ஹீரோ பேக்ஸ் தாள கடிச்சு பிச்சு சுருட்டி முன்னங்காலுக்கடில வைச்சுகிட்டு வாலை ஆட்டி  “இப்ப..என்ன செய்வீங்க.. இப்ப..என்ன செய்வீங்க..” என்ற ரேஞ்சில நின்னிட்டு இருக்காரு.

ஹா..ஹா..ஹா.. என்னால சிரிப்ப அடக்க முடியல, ஏன்னா இந்த அனுபவம் எனக்கு முன்னமேயே ஏற்பட்டிருக்கு.

கொரியன் பேக்ஸ் மெசின்ல பேக்ஸ் தகவல் தாளில் பிரிண்ட் ஆகி வெளிய வரும் முடிஞ்சதும் கட்டரினால் கட் செய்யப்பட்டு விழும்.

மின்விசிறி காற்றில் பறந்து கீழே விழ அதை கவ்வி துவம்சம் செஞ்சிட்டான் நம்ம ஹீரோ ஈட்டி. அவருக்கு எந்த பேப்பர் கீழே விழுந்தாலும் அவருக்குதான் சொந்தம். (ஹி..ஹி)

பேக்ஸ் மெசினில் காலிங் டேட்டா எடுத்து சம்பந்தப்பட்ட கம்பெனிக்கு போன போட்டு பிரச்சினைய தீர்தேன்.

பின்னாளில்,  “க்யூலிங்க்” மூலமாக கம்யூட்டரில் இருந்து எளிதாக பேக்ஸ் அனுப்பவும் பெற்றுக்கொள்ளவும் உபயோகித்தேன்.

கலர் மானிட்டர் வந்த பின்னாடி  நிறுவனத்தின் விற்பனையை விரிவு படுத்தும் நோக்கில்  மியூசிக்கோட “ஸ்லைட் ஷோ” பவர்பாய்ண்டில் தயாரிச்சு கொடுத்தேன் என் திறமையை வெளிக்காட்டுவதா அமைஞ்சது.

நூறு பேருக்கு சர்குளர் அனுப்பனும்னா ஃபாக்ஸ்புரோ புரோக்ராம் மூலமா ப்ரிண்டரில் லேபில் தயாரிச்சு பின் பொது லெட்டரை வேர்ட் மெய்ல் மெர்ஜ் மூலமாக பிரிண்ட் எடுத்து தயார் செய்து கொடுப்பேன்.

ஒரு வருட அக்கவுண்ட்சை ப்ரிண்ட்ல போட்டுட்டு டீ சாப்பிட வெளிய போய்டு வந்து எடுத்துப்பேன்.   (tvs printer ம் tally software ம் இந்தியரின் திறமைக்கு ஒரு சான்று) டேலி சொல்யூசன்ஸ் திரு.கோயங்கா(S.S. Goenka ) அவர்களால் துவக்கப்பட்டு வாழ்நாள் சாதனையாளர் விருதும் (NASSCOM) பெற்றுள்ளது


இன்னொரு சமயம் டேலியில் (tally) போட்டு வைச்சிருந்த ஒருவருட கணக்கு பேக்கப் எடுத்து வைக்காததால திரும்ப போடும் படியா ஆகிடுச்சு போர்ட் நைட்ல (14 நாள்) திரும்ப ரெடி செஞ்சு குடுத்தேன்.

எதுக்கு சொல்றேன்னா வேலையில் தவறு ஏற்படறது சகஜம் அதை ஏற்றுக் கொண்டு எப்படி தீர்கறது என்று பார்க்கவேண்டும். அதை சந்திக்கும் தைரியத்தை நாம் இழக்க கூடாது.

கம்யூட்டர் மேலிருந்த ஆர்வமே இன்றைக்கும் என்னை வலைப்பதிவு எழுதத்தூண்டியது.. எழுதி வருகிறேன். (ஸ் அப்பா...டா!)

நட்புடன்,
கலாகுமரன்.

Download As PDF

இந்தியாவின் எடிசன் ஜி.டி.நாயுடு வாழ்க்கை சம்பவங்கள் (பகுதி 2 )

தம் கண்டுபிடிப்புகளையே உடைத்தெறிந்த‌ தீரன்

ஒருசமயம் வெளிநாடுகளில் இருந்து இயந்திரங்களை கொண்டுவந்த போது ரூ.80,000/-  வரி போடப்பட்டது. இதை எதிர்த்து அரசுடன் போராடினார். வசூலித்த வரி மிக அதிகம் என்றும் இல்லையெனில் அந்த மிஷின்களை உடைக்கிறேன் என்றார். ஆனால் எந்தவித பிரியோசனமும் இல்லை.

சென்னையில் அத்தனை இயந்திரப்பொருள்களையும் கண்காட்சி வைத்தார். தன் கருத்துக்களை முன்வைத்து உடைப்பதாக சொன்னார். கூட்டத்திற்கு வந்திருந்த ராஜிலு நாயுடு, காமராஜ், டாக்டர் சுப்பராயன் இவர்களெல்லோரும் அப்படி செய்யவேண்டாம் என வற்புறுத்தினர்.  அப்போது, உடைக்கும் எண்ணத்தை கைவிட்டார்

ஆனால் இயந்திரங்களை உடைக்கும் எண்ணம் அவர் உள்ளத்தை குடைந்து கொண்டே இருந்தது.

இன்னொரு சமயத்தில் இதே போன்ற கண்காட்சியில் அவர் திட்டமிட்ட படி இயந்திரங்களை உடைத்தார். கஷ்டப்பட்டு கண்டுபிடிக்கப் பட்ட உண்மைகளை, பொருளை உடைப்பது என்பது எந்த ஒரு விஞ்ஞானிக்கும் இயலாத செயல். ஆக்கம் அழிவிற்கே என்ற சித்தாந்தத்தை உறுதிப்படுத்தினார்.

தன்னுடைய கண்டுபிடிப்புகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வில்லையே என்ற ஆதங்கத்தின் விளைவே இது என்றாலும் அரசாங்கத்தை எதிர்க்கும் மனோபாவம் அவருக்கு இருந்தது அதை வெளிப்படையாக காட்டி போராடியவர் ஜி.டி.நாயுடு. 


பெரியாருடன்..

ஒரே அறையில் நான்கு பெண்கள் 

புத்தாண்டு தினத்தில் சிகாகோ நகரில் எல்லாப்பகுதிகளிலும் ஒரே கொண்டாட்டமாக இருந்தது. எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துவிட்டு தன் அறைக்கு திரும்பினார். அவர் தங்கியிருந்த அறைக்கு நான்கு பெண்கள் குடி போதையில் வந்து தொந்தரவு செய்தனர். அவர்களை வெளியே தள்ளி கதவை சாத்தினார். ஆனால் மீண்டும் ஜாமத்தில் வந்து ஏதேதோ பிதற்றி அவர் அறையில் வலுகட்டாயமாக நுழைந்து அங்கேயே தூங்கி விட்டனர். தூக்கம் வராமல் இரவு முழுவதும் விழித்திருந்தார். மறுநாள் காலை தெளிந்து தவறுக்கு மன்னிப்பு கேட்டனர்.

பிற்பாடு அவர்களில் ஒருத்தி அவரை மணந்து கொள்ள ஆசைப்படுவதாக தெரிவித்தாள். இந்தியரின் பழக்க வழக்கம் வேறு என சொல்லி மறுத்துவிட்டார்.

அதே போல ஜெர்மனி தொழிற்சாலையில் இருந்த ஒரு பணக்காரப் பெண்மனி  மூன்றாவதாக இவரை மணக்க விருப்பப்பட்டார்.  அந்த வெளிநாட்டு பெண்கள் "இந்திய கணவர்கள் அன்பானவர்கள்..பண்பானவர்கள் " என நினைத்திருக்கலாம்.  இந்த பெண்மனியின் விருப்பத்திற்கும் அன்புடன் மறுத்து விட்டார்.

நடிகர் என்.எஸ்.கிருஷ்ணனுடன்



கழுத்தில் மாலையுடன் இருப்பவர் சர்.ஆர்தர் ஹோப் அருகில் ஜி.டி.நாயுடு
அப்போது துவக்கப் பட்ட ஆர்தர் ஹோப் பாலிடெக்னிக் பின்னாளில் கோவை அரசினர் தொழில் நுட்பக் கல்லூரி ஆனது. இந்த கல்வி நிலையத்திற்காக கட்டிடங்கள் மற்றும் பொருள் உதவிகள் பல செய்தவர் ஜி.டி.நாயுடு.

புத்தகப் பித்தர்

நாயுடுவுக்கு புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் அதிகம். வெளிநாட்டு பத்திரிக்கைகள் படிப்பார் தேவையான தகவல்களை குறிப்பு எடுத்து கொள்வார். நூல்களை போல் வீட்டை அலங்கரிக்கும் அழகான பொருள் இல்லை என்பது அவர் கருத்து. படிப்பதற்காகவே ரயில் பயணங்கள் போவார். ஒருசமயத்தில் 80 ஆயிரம் மதிப்புள்ள 30,000 நூல்கள் இருந்தது. புத்தகங்களையும் பத்தாயிரம் ரூபாய் நன்கொடையையும் கோவை நகராட்சிக்கு கொடுத்தார். (புத்தகங்களை அவர்கள் வாங்கி கொண்டார்களா என்பது தெரியவில்லை)   

இளவயதில் இவர் பாட புத்தகங்களை வெறுத்தவர். படிப்பின் மேல் நாட்டம் இல்லாதவர் என்பதை இங்கு கவனிக்க வேண்டும்.

அரசுக்கு அநியாய வரி கட்டுவதை எதிர்த்த அவர் கல்விக்காகவும் தொழில் அபிவிருத்திக்காகவும் நன்கொடை அளித்தார். போர்காலத்தில் அரசுக்கு யுத்த நிதியும், யுத்த நிதி பத்திரங்களில் முதலீடும் செய்தார்.

கோவையில் தொழிற்கல்வி நிலையங்கள் ஏற்படுத்தி நடத்துவதில் இவர் முன்னோடி. குறுகிய காலங்களில் (short term certificate course) படித்து முடிக்கும் தொழில் கல்வி முறையை புகுத்தினார் .தனது மகன்(கோபால்) அவர்களுக்கும் தொழிற் கல்வியையே படிக்க வைத்தார். தொழிற்கல்வி ஒன்று தான் இந்தியா முன்னேற வழிவகுக்கும் என்பதோடு அதை செயலிலும் நிறுபித்தார்.

இன்னும் பல சுவாரசிய தகவல்களுடன் அடுத்த பகுதியில் தொடர்கிறேன்.

தொடர்புடைய பதிவுகள் :

இந்தியாவின் எடிசன் ஜி.டி.நாயுடு வாழ்க்கை சம்பவங்கள் (பகுதி 1 )

விஞ்ஞானி ஜி.டி. நாயுடு அவர்களின் பார்வையில் சர் எம்.விஸ்வேஸ்வரய்யா 



Download As PDF

Saturday, July 27, 2013

இந்தியாவின் எடிசன் ஜி.டி.நாயுடு வாழ்க்கை சம்பவங்கள் (பகுதி 1 )


பிறக்கும் போதே யாரும் முதலாளியாகவோ, பேரறிஞனராகவோ பிறப்பதில்லை.  தங்களுடைய சுய முயற்சி, சிந்திக்கும் ஆற்றல், அயராத உழைப்பு, காலத்தின் ஒத்துழைப்பு இவைகளினால் தங்களுடைய தகுதியை உயர்த்திக்கொள்ள முடியும் என்பதற்கு இந்தியாவின் எடிசன் ஜி.டி. நாயுடு சரியான உதாரணம். கோவையின் தொழில் உற்பத்தி நிறுவனங்கள் உருவாக ஒரு முக்கிய ஆளுமை ஜி.டி நாயுடு அவர்கள்.  உலக அளவில் கோவையின் பெருமையை முன் நிறுத்தியவர். அவர் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்கள் நமக்கு அனுபவப் பாடங்கள்.  

விஞ்ஞானி சர்.சி.வி. ராமன் மனம் திறந்த வார்த்தைகள்  “கோவை வாசிகள், தங்களிடையே கல்வியிலும் இளைஞரிடமும் மிகுந்த அக்கறை கொண்டுடிருக்கும் நாயுடுவை கண்டு பெருமை கொள்ள வேண்டும். இப்படிப் பட்ட மனிதருடன் வசிக்க எவ்வளவு பாக்கியம் செய்திருக்க வேண்டும்”

புரோகிதர் இல்லாமல் கலியாணமா ?

கல்யாணத்திற்கு எல்லோரும் வந்தாச்சு, எல்லாமும் தயார். புதுப் பொண்ணும்(செல்லம்மாள்) காத்திருக்கிறார் மாப்பிள்ளையான ஜி.டி நாயுடுவை காண வில்லை. நாலப்புறமும் தேடுறாங்க, கடைசில தோட்டத்தில இருக்காரு.  மாப்பிள்ளைக்கு என்ன குறை?என்ன பிரச்சினை? 

“புரோகிதர் தேவை இல்லை, சடங்கு சம்பிரதாயம் எல்லாம் தேவை இல்ல, அம்மி மிதிச்சு, அருந்ததி பார்பதெல்லாம் முடியாது, சரின்னா சொல்லுங்க கல்யாணம் செஞ்சுக்கறேன்” என்றார். 

அவரின் விருப்படியே அந்த சீர்திருத்தக் கல்யாணம் நடந்தது.

பின்னாளில் அவரின் இரண்டு பெண்களுக்கும் இது போன்றே சீர்திருத்த கல்யாணம் நடந்தது.

பட்டணத்திற்கு சென்ற கிராமத்தான்.

கலங்கல் தோட்டத்தின் வழியாக ஒருநாள், பட்..பட், பட பட வென இரைச்சலுடன் மோட்டார் சைகிளில் வெள்ளைக்கார துரை (லங்காஷியர்) அந்த கிராமத்திற்கு வந்தார். அவருக்கு இரண்டு அதிசயங்கள் ஒன்று வெள்ளை துரை இன்னொன்று அந்த மோட்டார் சைக்கிள்.  திரும்ப செல்லும் போது மோட்டார் சைக்கிள் தகராறு ஏற்பட சரி செய்ய சிறுவன் ஜீ.டி.நாயுடுவிடம் மண்ணெண்னையும் துணியும் கேட்டார், துரை.  

கொடுத்துவிட்டு உன்னிப்பாக துரை சரி செய்வதை கவனித்தார். அவரின் மோட்டார் சைக்கிள் ஆசை தான் ,பின்னாளில் அவரை மோட்டார் கம்பெனியின் முதலாளி ஆக்கியது.

அவருக்கு 20 வயதிருக்கும் போது கோவை பட்டணத்திற்கு வருகிறார். ரயில் செல்வதை நடுக்கத்தோடு.. கண் இமைக்காமல் கவனித்தார். கையில் காசில்லாத நிலையில் நடந்து வந்த அலுப்பினால் பிளாட்பாரத்திலேயே தூங்கி எழுந்தார். ஒரு ஓட்டலில் 12 ரூபாய் மாத சம்பளத்தில் சர்வர் வேலை கிடைத்தது.

அவர் தேடி வந்த அதே வெள்ளை துரை செட்டில்மெண்ட் ஆபீசராக இருந்தார். அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளை அவினாசி சாலையில் ஓட்ட கற்றுக்கொண்டார். பல மாதங்கள் அல்லும் பகலும் வேலை செய்து அவரிடம் 200 ரூபாய் கொடுத்து அந்த மோட்டார் சைகிளை சொந்தமாக்கிக் கொண்டார்.  அந்த மோட்டார் சைக்கிளை பிரித்து பொருத்தும் திறமை அவருக்கு இருந்தது.

தொழிலாளி முதலாளியானார்




G. D. Naidu (Gopalaswamy Doraiswamy Naidu) (Birth: 1893 - died: 1974) 
உருவ ஓவியம்:  மாருதி


கோவை மற்றும் திருப்பூரில் பஞ்சு வியாபாரம் செய்த காசெல்லாம் பம்பாய் வியாபாரத்தில் இழந்தார். செய்வதறியாது கோவை வந்த அவர் ஸ்டேன்ஸ் மோட்டார் கம்பெனியில் மெக்கானிக் வேலைக்கு விண்ணப்பித்தார்.   ஸ்டேன்ஸ் துரை ரப்பர், தேயிலை, காஃபி எஸ்டேட்டுகளுக்கு சொந்தக்காரர்.  இவரை மெக்கானிக்காக சேர்த்துக்கொள்ள விருப்பப் படாத துரை அவரிடம் ஒரு ஒப்பந்தம் வைத்துக் கொண்டார்.

 தம்மிடம் இருக்கும் ஒரு பஸ்ஸை அவருக்கு கடனாக அளிப்பதாகவும் தினமும் வசூல் ஆகும் தொகையை கொண்டு வந்து தந்துவிட வேண்டும் என்பது அந்த ஒப்பந்தம்.  அந்த பஸ் பொள்ளாச்சிக்கும் பழனிக்கும் ஓடியது அவரே முதலாளி அவரே தொழிலாளி.  அவரது தேவைகளை சுருக்கிக்கொண்டார்.  ஒருநாளைய உணவு இரண்டு வாழைப்பழமும் அரைக்கால் படி பாலுமே.


பின்னாளில் இந்த பஸ் சர்வீஸ் 2500 தொழிலாளர்களுடன் “ யுனைடெட் மோட்டார் சர்வீஸ்(UMS)” என்ற பெரிய நிறுவனமாக உருவெடுத்தது.  டிக்கெட்டுக்களை கொடுக்க ஒரு இயந்திரம் இவரே கண்டறிந்து பயன்படுத்தினார்.

பணியாளர்கள் எப்படி வேலை செய்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க மாறுவேடத்திலும் செல்வார். பணியாளர்களின் மேல் அக்கரை கொண்டவர்.  அவர்களுக்கு நல்ல பல நலத்திட்டங்களை செயல் படுத்தினார். போனஸ் என்ற ஒரு சலுகையை இவர் தான் ஆரம்பித்து வைத்தார் எனவும் சொல்கிறார்கள். அவரிடம் 640 பூட்டுக்களை திறக்கக்கூடிய மாஸ்டர் கீ இருந்தது அதை பயன் படுத்தி அவரின் பல நிறுவனங்களின் கதவுகளை எளிதாக எப்போது வேண்டுமானாலும் திறந்து பயன் படுத்துவார்.

தன் அறையில் இருந்த படியே தொழிற்சாலையில் என்ன நடக்கிறது என்பதை கண்காணிக்கும் இரகசிய சாதனம் அவரிடம் இருந்தது. கண்டிப்பு மிகுந்தவர் குற்றம் செய்த தொழிலாளிக்கு ஒரு சிறிய சீட்டில் “வேலையிலிருந்து நீக்கப்பட்டுவிட்டீர்கள்” என எழுதி கொடுத்துவிடுவார்.

அலுவலகத்தில்,அலங்கோலமாக கிடந்த டேபிலில் காகிதங்கள் மற்றும் பைல்களை அடுக்கி வைத்து ஒரு துண்டு காகிதத்தில் இப்படி எழுதி வைத்திருந்தார்.  “நீங்கள் உங்களுடைய மேசையை சுத்தமாக வைத்துக் கொள்ளப் போகிறீர்களா அல்லது உங்கள் எஜமானரை தினமும் இரவில் இது மாதிரி வந்து சுத்தம் செய்யச் சொல்லுகிறீர்களா ?”

தான் செய்யும் தவறுகளை “my own blunders" என்று தலைப்பிட்டு ஒரு பைலில் எழுதி வைத்திருப்பது இவருடைய வழக்கம்.


ஜெர்மன் அழைப்பு

ஜெர்மன் ரப்பர் வர்த்தகம் செய்துவந்த குன்ஸ்ஸீம் என்பவர் கோயம்புத்தூருக்கு வந்திருந்த போது காய்சலால் அவதிப்பட்ட அவரை நல்ல முறையில் கவனித்துக் கொண்டார்.  ஜெர்மன் திரும்பி சென்ற அவரின் அன்புத் தொல்லையால் ஜி.டி.நாயுடு ஜெர்மன் சென்றார். கொழும்பு துறைமுகத்திலிருந்து கப்பல் ஒன்றின் மூலம் ஐரோப்பாவிற்கு அவர் பயணம் தொடங்கியது. 

எதிர்பாராத விதமாக அந்த கப்பல் தீ விபத்திற்கு உள்ளானது.  தப்பிக்கும் எண்ணத்தை மறந்து தன் நண்பர்களை தேடினார்.  தப்பிப்பதற்காக சிலர் கடலில் குதித்தார்கள் அவர்களை சுறாமீன்களுக்கு இரையானார்கள்.  அவரின் அருகே இருந்த இரண்டு பெண்களும் கடலில் குதித்தார்கள். இவரும் துணிவுடன் தண்ணீரில் குதித்தார்.  பெண்கள் மூச்சு திணறி மூழ்கினர் அவர்கள் இருவரின் கூந்தலை தமது கைகளால் இறுகப் பற்றி இழுத்து சென்றார். நல்ல வேலையாக அவர்கள் அருகில் உயிர் காக்கும் படகு வந்தது. அப்பெண்களையும் காப்பாற்றினார்.  அந்த வழியாக வந்த ரஷ்ய எண்ணெய் கப்பலில் பயணத்தை தொடர்ந்தார்.  நண்பர்களும் உயிர் பிழைத்தனர். அந்த ரஷ்ய கப்பலில் உணவு தட்டுப்பாடு அவருக்கு நாய் பிஸ்கட்கள்  தான் கிடைத்தன. இதுவே கிடைத்ததே என சந்தோசப்பட்டார் தீக் காயங்களுடன் இருந்த ஜி.டி.நாயுடு.


ஹிட்லருடன் சந்திப்பு




லண்டனில் இருந்து ஜெர்மன் சென்ற ஜி.டி.நாயுடுவிற்கு ஹிட்லரை சந்திக்க அனுமதி கேட்டிருந்தார். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக சில நாட்களுக்கு பின் ஹிட்லர் கோலோன் என்ற இடத்தில் தங்கியிருந்தார்.  அவருடன் கோயரிங், ஹெஸ், கோயப்பெல்ஸ் நாஜித் தலைவர்களும் இருந்தனர்.  அந்த ஹோட்டல் நிர்வாகியின் பெரும் முயற்சியால் ஹிட்லரை சந்திக்கும் அரிய வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அந்த சந்திப்பில் டாக்டர் லே என்பவர் மொழி பெயர்ப்பாளர். ஹிட்லருடன் அரசியல் பேசவில்லை. பண்பாடு கலாச்சாரம் பற்றி பேசினார். இறுதியில் ஹிட்லருடன் புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்பட்டார். நாயுடு எடுத்த போட்டோவில் அவரின் கையெழுத்தையும் பெற்றுக் கொண்டார்.

நாஜி ராணுவ அணிவகுப்பை புகைப்படம் எடுக்க ரகசிய போலீஸ் அதிகாரியினால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் சொன்ன உண்மைகளை புரிந்து கொண்ட அதிகாரி ஹிட்லர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு போன் செய்தார்.  கோயப்பெல்ஸ் இவரை விடுதலை செய்யச்சொன்னார்.

ஹிட்லரை புகைப்படம் எடுத்த ஜி.டி நாயுடு தெரிவித்த கருத்து “ஹிட்லரின் முகத்தில் காணப்படும் உணர்ச்சித் தோற்றங்கள் மிக விசித்திரமானவை.  ஒரு புகைப்படத்தில் இருப்பது போல் மற்றொன்றில் அவரது தோற்றம் இருப்பதில்லை.  சில புகைப்படங்களை பார்க்கும் போது அவர் தான என்று சந்தேகம் ஏற்படும்”

இந்தியாவிற்கு திரும்பி வரும் போது ஒரு லாரி நிறைய பொருட்களுடன் வந்தார். அவர் நாஜி உளவாளி என்ற சந்தேகத்தின் பேரில் ரகசிய போலீசாரால் கொச்சி துறைமுகத்தில் சோதனை செய்யப்பட்டது தனி கதை.

ஜெர்மன் நகரில் நடைபெற்ற பொருட்காட்சியில் இவரின் அரிய தயாரிப்புகளான ரேஸாண்ட் சவரக் கத்திக்கு முதல் பரிசும், பிளேடிற்கு மூன்றாம் பரிசும் கிடைத்தன.


ஜெர்மனியில் பெற்ற பரிசு (ஹிட்லர் உருவம் பொறித்த ஷீல்டு)

இதேபோல முசோலினியையும் பல புகைப்படம் எடுத்திருக்கிறார். “இவைகளினால் உங்களுக்கு என்ன உபயோகம். என் படங்களை கெடுத்துவிட மாட்டீர்களே என சிரித்து கொண்டே கேட்டார்.” முசோலினி அதற்கு ஜி.டி நாயுடு ”அதுபற்றி இன்னும் சிந்திக்கவில்லை. நிச்சமாக கெடுக்க மாட்டேன்” என்று பதில் அளித்தார்.


இன்னும் பல தகவல்களுடன் அடுத்த பகுதியில் தொடர்கிறேன்...

தொடர்புடைய பதிவு :விஞ்ஞானி ஜி.டி. நாயுடு அவர்களின் பார்வையில் சர் எம்.விஸ்வேஸ்வரய்யா

Download As PDF

Monday, July 22, 2013

உலகம் வியக்கும் இந்தியாவின் பழமையான தூண்

1600 ஆண்டுகள் பழமையான இந்த இரும்புத்தூண் இந்தியர்களின் திறமைக்கு அறிவியல் தொழில் நுட்பத்திற்கு கட்டியம் கூறுகிறது.

இந்த இரும்புத்தூண் சுமார் 24 அடி (7.2 மீட்டர்) உயரம் இதனுடைய எடை ஆறு டன் இதனுடைய அடிப்பாகம் நிலத்தினுள் ஒரு மீட்டர் இருக்கும்ங்கராங்க. இத்தூணில் சமஸ்கிருத வாசகங்கள் பிராமி எழுத்துகளை கொண்டு பொறிக்கப்பட்டு உள்ளது.




குத்புதீன் டெல்லியில் கட்டிய முதல் மசூதி குவ்வாத்-அல்-இஸ்லாம் சுமார் 23 இந்து, ஜைனக் கோயில்களை இடித்து உடைந்த பகுதிகளால் கட்டப்பட்டதே.  இந்த பகுதியில் தான் இந்த இரும்புத்தூண் கம்பீரமாய் நிற்கிறது.

இந்த இரும்புத்தூணின் வரலாற்றை இன்னும் பின்னால போய் பார்த்தோம்னா இது இரண்டாம் சந்திரகுப்த விக்கிரமாதித்தியரால் கி.பி.402 ல் செய்யப்பட்டது. இது அப்போதைய உதய கிரியின் (Vishnupadagiri) விஷ்ணு கோயிலின் எதிரில் இருந்த கொடிமரம். தூணின் உச்சியில் கருடன் இருந்ததாக நம்பப்படுகிறது. பின்னாளில், அதாவது 10ம் நூறாண்டில் தற்போது இருக்கும் பகுதிக்கு ராஜபுத்திர அரசர் ஆனங்பாலினால் கொண்டுவந்து நிறுத்தப்பட்டது. இந்த இடத்திலும் விஷ்ணு கோயிலின் முன்னால் கம்பீரமான கொடிமரமாக இருந்தது.

இருந்துட்டு போகட்டும்,  ஆனால் இன்னும் இந்த தூணின் துருப்பிடிக்காத அதிசயம் தான் உலகத்தை ஆச்சர்யப்படுத்துவதாகவே இருக்கிறது.

கான்பூர் ஐ.ஐ டியை சேர்ந்த வல்லுனர்கள் இந்த தூண் துருப்பிடிக்காததன் காரணத்தை ஆராய்ந்தார்கள்.   கடினமான ஒரு முலாம் பூச்சு இதனை துருவில் இருந்து தக்கவைத்து இருப்பதாக சொல்கிறார்கள்.  மேலும் இதில் உள்ளீடு செய்யப்பட்ட பாஸ்பரஸின் (phosphorous) கலப்பு தன்மையே துருப்பிடிக்காத தன்மையை அதற்கு தருவதாக கண்டுபிடித்திருக்கிறார்கள். ( இதை பற்றிய விரிவான ஆய்வு புத்தகம் 2001 ல் வெளியாகி இருக்கு Delhi iron Pillar new insights by R.Balasubramaniam )

முக்கியமாக இதை உருவாக்கும் போது கடைபிடிக்கப்பட்டிருக்கும் வார்பட டெக்னாலஜி ஒரு பெரும் ரகசியத்தை நமக்கு சொல்வது என்னன்னா ? அது இந்தியர்களின்  “புத்திக்கூர்மை” 

இதே வகையை சேர்ந்த பிரம்மாண்ட இரும்புத்தூண்கள் மத்தியபிரதேசத்தின் தார் மாவட்டத்தில் லாட் மசூதியில் (The Lat Masjid ) காணக் கிடைக்கின்றன. (லாட் = தூண்)



அந்த கால கட்டங்களில் இந்தியாவில் இருந்து போர்வாள்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கின்றன. அலெக்ஸாண்டருக்கு போர்வாள் பரிசு அளிக்கப்பட்டுள்ளதாக வரலாறு.

மேலும் குத்புதீன் பற்றி சில தகவல்கள் :

இஸ்லாமிய மதத்தை இந்தியாவில் பரப்புவதில் முழுமூச்சாக இருந்தவர் சுல்தான் குத்புதீன் அய்பெக்.  இவரால் உடைத்து தள்ளப்பட்ட இந்துக் கோயில்கள் ஏராளம். இப்படி இடிக்கப்பட்ட கோயில்களின் தூண்களையும் படிக்கற்களையும் கச்சிதமாக மசூதி கட்டுவதற்கு பயன்படுத்தி கொண்டார்.

குத்புதீன் துருக்கிய இனத்தை சேர்ந்தவன். அடிமையாக ஒரு வியாபாரிக்கு விற்க்கப்பட்டவன். முகமது கோரியின் கண் பார்வையில் பட்டு குதிரை படை பிரிவில் தலைவனான், பின் பிரதம தளபதியாக உயர்ந்தான். பின்னாலில் கோரியால் பிரதி நிதியாக அமர வைக்கப்பட்டு அடிமைகளின் சாம்ராஜியத்தை நடத்தி காட்டியவர் குத்புதீன். கோரி ஆப்கானிஸ்தானுக்கு போகும் வழியில் மர்மமாக கொல்லப் பட்டார்.

குத்புதீன் நான்கே வருசம் ஆட்சி செய்தான் எதிர்பாரத விதமா, விளையாட்டின் போது குதிரையில் இருந்து எசகு பிசகா வீழ்ந்து இறந்தான்.  குதுப்மினாரின் முதல் அடுக்கு இவரால் எழுப்பப்பட்டது.

எத்துணையோ பிரம்மாண்ட மாளிகைகள் இருந்த இடம் தெரியாமல் போக வரலாற்றில் ஒரு அடிமையால் நிறுவப்பட்ட குதுப்மினார் இன்றைக்கும் அவர் ஆட்சியின் சாட்சியாக இருக்கு.

                                                                  *********

கீழே உள்ள பிரம்மாண்ட ஆலமரம் 250 ஆண்டுகள் பழமையானது. இதுதான் ஆசியாவிலேயே பெரிய பரப்பளவை கொண்டிருக்கும் மரம்.  அதாவது இந்த ஒரு மரமே வேர்களையும் கிளை விழுதுகளையும்(3300) பரவ விட்டு பெரிய காடுபோல் காணப்படுகிறது (சுமார் 4 ஏக்ரா ). இன்னொரு ஆச்சர்யம் இந்த விருட்சம் கிளைவிழுதுகளில் தான் உயிர் வாழ்கிறது அதாவது நடு மரம் இப்ப இல்ல. இது இன்னும் கிளைவிட்டு படர்ந்து வளர்ந்துட்டே இருக்கு பல உயிர்களின் புகழிடமாய்.
இது உள்ள இடம்  ஹெளரா (Howrah, India)






Download As PDF

Saturday, July 20, 2013

கவிஞர்.கண்ணதாசன் சுய விமர்சனம்



கண்ணதாசன் நினைவலைகள் :
தன்னைத் தானே விமர்சித்துக் கொள்வது எத்துணை பேருக்கு சாத்தியப்படும்.  ஒரு நிலைக் கண்ணாடி முன் நம்மை பார்த்தே நாம் பேசியது உண்டா?. சிந்தித்தது உண்டா?  ( இக்கட்டுரையை அவசர கதியில் படிக்க முடியாதவர்கள் சேமித்து வைத்து ஓய்வான சமயத்தில் படிக்கலாம். [ click on this Link இங்கு சொடுக்கவும் ]



கவிஞர்.கண்ணதாசன் தன்னைப்பற்றி எழுதிகொண்ட சுய விமர்சனம் இதோ...

வனது வாழ்க்கை அதிசயமானதுதான்.  எந்த ஒரு சராசரி மனிதனும் இப்படிப் பட்ட வேடிக்கையான வாழ்க்கையை மேற்கொள்ள மாட்டான்.  அவசரத்தில் காரியம் செய்து, சாவகாசத்தில் சங்கடப் படுவது அவனது இயற்கையான சுபாவம்.

இந்த வாரம் அவனை நான் சந்தித்தபோது, அவனுக்காக இரக்கப்பட்டேன்.  நரகம், சொர்க்கத்தை உணரத் தெரிந்த அவனுக்கு, அதைத் தேர்ந்தெடுக்க மட்டும் தெரிந்திருந்தால், இவ்வளவு நீண்ட கால வாழ்க்கையில் எவ்வளவோ அற்புதங்களை அவன் சாதித்திருக்க முடியும்.

தவறுகளின் மீது நின்று கொண்டே அவற்றை மறந்து விட அவன் முயன்றான்.  சில நேரங்களில் நியாயம் கற்பிக்கவும் முயன்றான்.  அதனால் அவன் நெஞ்சு அழும்போதே, வாய் சிரித்துக் கொண்டிருந்தது.

பரமஹம்ஸர் சொன்னதைப் போல பயனற்ற வேலைகளில் ஆசையோடு ஈடுபட்டுப் பொழுதைச் செலவழித்தான். பரமஹம்ஸரின் கதை இதுதான் :

ஆறுமாதம் சிரமப்பட்டு ஒரு சீடன் நீரில் நடக்கக் கற்றுக் கொண்டானாம்.  கங்கையில் நடந்து அவன் கரையேறியதும், பகவான் அவனைப் பார்த்து அனுதாபத்தோடு, ‘நாலணா கொடுத்தால் ஓர் ஓடக்காரன் இந்த வேலையைச் செய்து விடுவானே!  இதற்காக இவ்வளவு காலத்தை வீணாக்கி விட்டாயே! என்றாராம்.

வாழும் காலம் மிகவும் குறுகியது. செயலற்ற காலம் ஒன்று வரக் கூடும். இடைப்பட்ட காலத்தில் ஒவ்வொரு மணி நேரத்தையும் பயனுள்ளதாக்க வேண்டும்.

இவையெல்லாம் அவனுக்குத் தெரியாதவையல்ல.  ஆனால் நிரந்தரமாக விளையாடப் போகிறவன் போலவே வாழந்து பார்த்தான்.

அவனது அரசியல் வேடிக்கையானது.  அவனது தேர்வுகள் சிரிப்புக் கிடமானவை.  கடந்த முப்பதாண்டுகளாக ஒவ்வொன்றிலிருந்தும் விடுபடுவதாக நினைத்து, மேலும் மேலும் அவற்றிலேயே சிக்கிக் கொண்டான்.  இப்போது அஸ்தமன சூரியன் கிழக்கு வானத்தைப் பார்த்துப் பெருமூச்சு விடுகிறது.

தான் பசுமையாக இருந்தபோது காய்த்துக் குலுங்கிய காலங்களை எண்ணிப் பார்க்கிறது.  கண்ணாடியில் பார்த்தால் உருவம் இப்போது அழகாக இருக்கிறது. உள்ளம்தான் தனது பரந்த மைதானத்தைப் பகுதி பகுதியாகப் பிரித்து விற்று விட்டது.

ஏக்கர் கணக்கில் இருந்த நிலம் கிரவுண்ட் கணக்கிலாகி, இப்போது செண்டுக் கணக்கில் ஆகி இருப்பது போன்ற ஒரு மயக்கம். 
ஆர்ப்பாட்டங்களில் இருந்து ஒதுங்கிவிட்டதாலே, பெரிய கண்டங்களில் இருந்து தப்பியாகி விட்டது.  ஆனாலும் மெய் சிலிர்க்கக்கூடிய உற்சாகம் மீண்டும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆற்றங்கரைகளில் துள்ளிக் குதித்து, பசுமையான மலைகளின் காற்றில் உலாவி, குற்றாலத்து அருவியிலே கிருஷ்ணா !, கிருஷ்ணா ! என்று குளித்து, ‘வாழ்க்கை அற்புதமானது எண்றெண்ணிய மனது, பட்டியில் அடைபட்ட ஆட்டுக் குட்டி போல் சுற்றிச் சுற்றி வருகிறது.

பாம்புக்குப் பிடாரனின் கூடை வசதியாக இருநதாலும், அது வாழந்த காடுபோல் ஆகுமா?

அழகான மாளிகையின் தொட்டியில் எவ்வளவுதான் உணவுப் பொருட்கள் விழட்டுமே, ஆற்றில் கிடப்பது போன்ற சுகம் மீனுக்கு வருமா?

ரத்ததின் வெள்ளோட்டம் குறையக் குறைய, அந்த நாள் ஞாபகம் நெஞ்சைச் சுடுகிறது.

நான் அவனைச் சந்தித்தபோது, சிரித்துக் கொண்டே அழுதான்; அழுதுகொண்டே சிரித்தான்.  பாவம்! இப்போது மனிதன் மாறிவிட்டான்.

ஒரு சுகமான இடைக்காலமே இப்போது அவன் வாழ வேண்டிய அவசியத்துக்குக் காரணமாகிறது.  இல்லையென்றால், ராஜாமாதிரி வாழ்ந்தவன், சந்நியாசி மாதிரி வாழக்கூடாது என்ற கொள்கை அவனுக்கு உண்டு.

‘அதிசயங்கள் நிகழ்த்திய பெருமையோடு ஆவி பிரிந்து விடவேண்டும்.” என்பான், ‘மாரடைப்பால் மரணம் என்பது கடவுள் கொடுக்கும் வரம் ‘ என்பான்.

அவனது நிறம் இன்னும் பசுமையாகவே இருக்கிறது. அவனது கற்பனை மகாநதியில் இன்னும் வெள்ளம் நுங்கும் நுரையுமாக பொங்கியே வருகிறது.

ஆத்ம ராகத்தில் மெய்சிலிர்க்க, இரண்டு கைகளையும் பின்னுக்குக் கட்டியபடி முன்னும் பின்னும் உலாவும் போது வானம் கீழே இறங்கி அவன் கால்களை முத்தமிடுகிறது. 
அவனுக்கு உலகத்தில் எதுவுமே பெரிதல்ல.  சம்பாதிக்கத் தெரிந்தவன்; பத்திரப்படுத்தத் தெரியாதவன். சேமிப்பு இல்லாத காரணத்தால், பல நேரங்களில் கண்ணீரையே எண்ணிப் பெட்டியில் வைக்க வேண்டியதாயிற்று.

முப்பது வருட முட்டாள்தனத்தில் அவன் சேமித்த சொத்துக்கள், அவனது எழுத்துக்களே!

அவையும் இல்லாமற் போயிருக்குமானால், பூமியில் முளைத்து நிற்கும் தூங்குமூஞ்சிமரங்களில் அவனும் ஒன்றாகி இருந்திருப்பான்.

எப்போது தன் மதத்துக்குச் சம்பந்தமில்லாத ஒன்றில் தலையிட்டானோ, அப்போதே அவனது உற்சாகம் குறையத் தலைப்பட்டது.  இது ஒருவகையில் தெய்வத்தின் பரிசே! 
ஆயிரம் இருக்கட்டும்.  அவனது வாழ்க்கை வரலாறு ஓர் அற்புதமான பெருங்கதை.  தனது காதல் கதைகளில் தன்னை நேசித்த பெண்களையும், தன்னிடம் அன்பு செலுத்திய உள்ளங்களையும் அவன் குறிப்பெடுத்துக் கொண்டிருக்கிறான்.

இவ்வளவு நாடகத் திருப்பங்கள் வேறு யாருடைய வாழ்க்கையிலும் நிகழ்ந்திருக்க முடியாது.

இன்றைய இளைஞர் சமுதாயம் முழுமைக்கும் எப்படி வாழக் கூடாது என்று போதிக்க அவனுக்குச் சக்தி உண்டு.

கள்ளம் கபடமற்ற அந்த வாழ்க்கையில் கங்கையின் புனிதமும் இருக்கிறது. வைகையின் வறண்ட தன்மையும் இருக்கிறது. 
கடந்த ஜூன் இருபத்து நான்காம் நாள், ஐம்பத்து நான்கு வயதை எட்டிவிட்ட அந்த அதிசய மனிதனைப் பார்த்தபோது அவனது ஆதங்கங்கள், ஏக்கங்கள் அனைத்தையும் கடந்து, கண்களில் பரவி நின்ற தெளிவையே என்னால் காண முடிந்தது.

அவனுக்கு முதுமை வரவில்லை என்பதுபோல், அவனது உருவம் இருந்தது.  தத்துவங்களுக்குள் சிக்கிக் கொண்டிருக்கும் அவனிடம் இருந்து விடைபெற என்னால் முடியவில்லை...காரணம் இது என் சுய தரிசனம்.

(ஒருகாலத்தில் குமுதத்தில் வெளியான கட்டுரைகளில் ஒன்று “சந்தித்தேன் சிந்திதேன்’ -கவிஞர்.கண்ணதாசன் நூல் அவர் மறைவுக்குப் பின் வெளியான ஆண்டு:1982)

Download As PDF

Thursday, July 18, 2013

முதல் குகை ஓவியம் டிஸைன் எது ?

புதை பொருள் ஆராய்சியாளருக்கு ஒரு பொருள் கிடைத்தால் அது எந்த காலத்தை சேர்ந்ததது என்பதை உறுதிப் படுத்துவதே பெரும் சவால்.  அதிலும் ஒரு கற்கால ஓவியம் கிடைத்தால் (அதை சிதைக்காமல்..?!) அதைப் பற்றிய காலத்தை வரையறுப்பதில் பல நடைமுறைச் சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும். அப்படியே எடுத்துக்கொண்டுபோய் ஆய்வுக்கூடத்தில் சோதிக்க முடியாது ?!.    பாறை ஓவியங்கள் காலத்தாலும் தட்பவெப்ப சூழ் நிலைகளாலும் மழை வெயில் இவற்றாலும் பாதிப்பு அடைகிறது.

ரேடியோ கார்பன் மற்றும் தெர்மோலுமினெஸென்ஸ்[ thermoluminescence (TL) ]எனும் தொழில் நுட்பத்தின் மூலம் புதைபொருளின் காலத்தை நிர்ணயிக்கிறார்கள்.

தென்மேற்கு நமீபியாவில் ஹன்ஸ் சிகரத்தில் இரண்டு துண்டுகளாக உடைந்து போன ஓவியப் பலகைகளை கண்டு பிடித்தார்கள்.  இது தான் காலத்தின் முந்திய முதல் ஓவியம் அப்படின்னு முடிவு செஞ்சாங்க.  இதோட காலத்தை 26300 முதல் 28400 (B.P) இருக்கலாம்னு சொல்றாங்க. இந்த கற்பலகைக்கு  "அப்போலே 11 " அப்படின்னு பேர் வைச்சாங்க ( Appollo பறந்த சமயமா ? !).  இது கரி துண்டு, மற்றும் மண்நிறமி(Ocher), சுண்ணாம்பு கொண்டு வரைந்து இருக்காங்க.  ஆப்ரிக்க கண்டத்தில கண்டுப்பிடிச்ச பழமையான ஓவியம் இது.


ஆனால்  ப்ளும்பாஸ் குகையில் (South Africa)ஆய்வு செய்து கண்டுபிடிக்கப்பட்ட பொருளின் மேல்  வரைபட டிசைன் போல இருக்கிறது.

இது சுமார் 70000 முதல் 1 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்து இருக்கும்னு இது பற்றிய ஆய்வு செஞ்ச க்ரிஸ் ஹென்சில்வுட் என்பவர் தெரிவிக்கிறார். (கண்டுபிடிப்பு 2008 ல்)




இந்த கண்டுபிடிப்பு என்ன உணர்த்துன்னா மூதாதை இனமான ஹோமேஸேப்பியன்கள் அறிவுக்கூர்மையானவங்க அவங்களுக்கு வேதியல் , ஜியோமெட்ரிக் எல்லாம் தெரிஞ்சிருக்கு என்கிற முடிவுக்கு வரமுடியும்.


மேலும் இந்த ஆய்வில் கிடைத்த பொருள்கள் கரி படிந்த கடற்சிப்பி (இதிலதான் வண்ணங்கல கலக்க பயன்படுத்தி இருக்காங்க,) எலும்பு துண்டு கலக்கி, சுண்ணாம்பு கட்டிகள்.

இன்னொரு தகவல், வண்ணங்கலவைக்கு சிறுநீரை பயன்படுத்தியிருக்காங்க.
Download As PDF

Saturday, July 13, 2013

டுவோ இரைச்சல் - உங்களுக்கு கேட்குதா?

“டுவோ ஹம்” என குறிப்பிடப்படும் ஒருவித ஓசை 1993 ல் விமர்சிக்கப்பட்ட ஒரு விநோத ஒலி.  நியூ மெக்ஸிகோவின் டுவோ தேசத்தில் இந்த ஒலி உணரப்பட்டது. இந்த ஒலி எதனால் ஏற்பட்டது ? ஆய்வு முடிவுகளுக்கு அறுதி இட்டு கூற முடியாததால் இது விடை தெரியாத விநோதங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு விட்டது.

இந்த விநோத இரைச்சல் எல்லோருக்கும் கேட்கவில்லை மக்களில் 2% பேருக்கு கேட்டிருக்கிறது. காதொலி கருவி மாட்டியிருந்தவர்களுக்கு பெரிய பிரச்சனையை கொடுத்திருக்கிறது. இந்த மீ ஒலி இரைச்சல் 30 முதல் 80Hz குள் என மதிப்பிடப்பட்டது.(The sound was extremely low on the frequency scale ­ between 30 and 80Hz.)

இது குறித்து அப்போது கிளரப்பட்ட சந்தேகங்கள் :

மலை இடுக்குப் பள்ளத்தாக்குகளில் விபத்துகுள்ளான வேற்றுகிரக வாகனத்தில் இருந்து இந்த சப்தம் வந்திருக்கலாம்.

இராணுவ இரகசிய கருவிகளால் ஏற்பட்ட ஒலி அல்லது Extremely Low Frequency ( or ELF) சோதனை.

எரிமலை சீற்றத்தின் அறிகுறி

நிலத்தினடியில் நகர்ந்த தட்டுகளின் ஓசை.

இப்படி இதுபற்றி பல சந்தேகங்கள் இருந்த போது நியூரோபோன் ஆராய்சியாளர்கள் தெரிவித்தகருத்து.   “ நம் காது மட்டுமே ஒலிகளை உணர்வதில்லை நம் உடலின் மேல் தோல் ஒலி அதிர்வுகளை நம் மூளைக்கு கடத்துகிறது.  இம்மாதிரியான ஒலிகளை நாம் இந்த வகையில் உணர்கிறோம். ”

இந்த நுண் ஒலியை பதிவும் செய்திருக்கிறார்கள். உங்களுக்கு கேட்குதா ?


இதை பற்றிய கணக்கெடுப்பு ஆராய்ச்சி எல்லாம் நடந்தது. மூன்றாண்டுகளுக்கும் மேலாக, உறுதியான முடிவுக்கு வர முடியவில்லை என்கிறார்கள்.

காணொளி

Download As PDF

Monday, July 8, 2013

பழைய ஜோக்குகள்...கொஞ்சம் சிரிங்க பாஸ்!


அது ஒரு ஞாயிறுக் கிழமை சுவாரசியமாக நாளிதழ் படித்துக்கொண்டிருந்தான் கணவன்.

குழந்தை விட்டு விட்டு அழுவது கேட்டது.  மனைவியை கூப்பிட்டான்.
“குழந்தை அழுது என்னன்னு கவனிக்க மாட்டியா ?
“இல்லையே தூங்கிட்டுதான் இருக்குதுங்க.”
“இல்ல இப்ப அழுதுச்சே...”

உள்ளே இருந்து மனைவி “நான்தேன் பாடிட்டு இருக்கேன்”

**********************************************************************

மலை ரயில் சுமாரான வேகத்தில போய்கிட்டு இருந்தது. அந்த பெட்டியில் ஒரு அழகான பெண், ஒரு கிழவி, ஒரு இந்தியன், ஒரு ஃப்ரெஞ்சு காரன் நாலுபேர் மட்டும் இருந்தாங்க.
அந்த ரயில் ஒரு குகையின் உள்ளே நுழைந்தது. ஒரே கும்மிருட்டு, லைட்டு எரியல. “பச்சக் பச்சக்னு முத்தம் இடும் சப்தம் கேட்டது.  அதை தொடர்ந்து “பளார்” என்று அறையும் சப்தமும் கேட்டது.  குகையை விட்டு ரயில் வெளியே வந்தது.  ஃப்ரெஞ்சுகாரன் கன்னத்தில் அறைவிழுந்ததற்கு அடையாளமா கை விரல்களின் அச்சு இருந்துச்சு.

கிழவி நினைச்சுகிட்டா
“ என்ன கன்றாவியோ, இவ சுத்த மேசம் ஒரு ஆளு முத்தம் குடுக்க வுட்டுடாளே”

மனதிற்குள் சிரித்து கொண்ட அந்த பெண்
“ என்ன ஆளு இவன் நமக்கு முத்தம் குடுக்காம கிழவிக்கு குடுத்துட்டான் போலிருக்கு”

அறை வாங்கிய ஃப்ரெஞ்சுக்காரன் கன்னத்தில் கை வைத்தபடி மனதில்
“இந்தியாக்காரனுக்கு முத்தம் குடுத்துட்டு நம்மள அறஞ்சிட்டாளே பாவி”

இந்தியாக்காரன் குஷியா மனதில் “மவனே பொண்னு பக்கதில வசதியான எடமா பிடிக்கிற “ நானே என் கையில முத்தம் கொடுத்து அவனுக்கு உட்டேன் ஒரு அறை “வாழ்க இருட்டு”

**********************************************************************

ஒரு சமய கூட்டம் நடந்திட்டு இருந்தது, சாமிஜி சொன்னார்
”முத்தம் இடுவதால ஒருத்தருக்கிட்ட இருந்து கிருமிகள் மற்றவருக்கு பரவி விடும்.

வெள்ளைச்சாமி எழுந்து சொன்னார்
“ அதாஞ் சாமி என் பொஞ்சாதி முத்தங்குடுத்தாக்கூட திருப்பி கொடுத்துறேனுங்க”

**********************************************************************
நடு சாமத்தில் நல்லா தூங்கும் கணவனை பட படவென தட்டி எழுப்பினாள் மனைவி

“ஏங்க ஏந்திருங்க வெளியே புயலும் மழையுமா இருக்கு வீட்டுக்கு ஏதாச்சும் ஆகிடுமோன்னு எனக்கு பயம்ம்மா இருக்குதுங்க...”

“அடச்சீ கம்முன்னு தூங்கு...இது வாடகை வீடு தானே நீ ஏன் கவலைப்படறே”

**********************************************************************
ஒரு பெண்ணின் தோழிக்கு அவளின் நடவடிக்கை எரிச்சலாக இருந்தது. ஒரு நாள் அவளிடமே கேட்டுவிட்டாள்.  “ஆமா நீ ஏன் ரெண்டு போரோடேயும் நெருங்கி பழகுற”
அதுக்கு அவள் சொன்னாள்.  “ஜீப்பு பின்னாடி ஒரு ஸ்டெப்னி இருக்கு கவனிச்சிருக்கியா? அது எதுக்கு?”

“அதுமாதிரிதான்”
**********************************************************************

கல்யாணத்திற்கு முன்னாடி பெண்னோட கையை பிடிச்சிகிட்டா
அது அவளின் மேல் இருக்கும் அன்பை காட்டும்.
அதுவே கல்யாணத்திற்கு பின்னாடி
வெறென்ன... அவனோட தற்காப்புக்குத் தான்
**********************************************************************

“அந்த காலத்தில இளவரசர்களுக்கு 14 வயசிலேயே நாட்டை ஆளும் பொறுப்பு குடுத்திருவாங்க” “ஆனா கல்யாணம் 18 வயசில தான்”
“ஏன் ?”
“நாட்டை ஆளலாம் பெண்ணை ஆளுவது அவ்வளவு சுலபம் இல்ல”
**********************************************************************

82 வயசான ஒருத்தர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 10 லட்சம் பரிசு கிடைத்தது.
அவரோட குடும்பதினர் இந்த விசயத்தை அவரிடம் எப்படி சொல்வது சொன்னா “பொக்குன்னு போய்ட்டார்னா” யோசனை செஞ்சு ஒரு டாக்டர் கிட்ட போனாங்க
விசயத்தை கேட்ட டாக்டர் “நீங்க ஒன்னும் கவலைப் படாதீங்க நா பாத்துக்கிறேன்”
ஊர்க்கதை பேச்சிட்டு மெல்லமா ““ஐயா உங்களுக்கு லாட்டரியில 10 லட்சம் விழுந்தா என்ன பன்னுவீங்க”
டாக்டர் சார் நீங்க ஆஸ்பிடல் கட்டுரீங்க இல்லையா உங்களுக்கு ஒரு அஞ்சு லட்சம் கொடுத்திருவேன்”
இத கேட்ட டாக்டர் மயக்கம் போட்டு விழுந்திட்டாரு.. பின்னாடி எழுந்திருக்கவே இல்ல.
**********************************************************************

மகன் : “இந்த இயற்கைக்கு ரொம்ப முன் யோசனை ஜாஸ்திப்பா.”
அப்பா : “முன் யோசனையா எப்படிப்பா”
மகன் : பின்ன மனுசன் கண்ணாடி போடுவான்னு அதுக்கு முன்கூட்டியே தெரிஞ்சு இருக்கு
இல்ல.. காது இல்லேன்னா கண்ணாடிய எப்படி மாட்டுவே”
**********************************************************************

நேற்று நீங்க கூப்பிட்ட விருந்துக்கு வர முடியாம போச்சுங்க...என்ன ரொம்ப எதிர் பார்த்திருப்பீங்க...

அப்படியா நேற்று நீங்க வரலியா ?

**********************************************************************

ஒரு பேருந்தில் இரண்டு இளவயசு பெண்கள் பயணம் செஞ்சாங்க. அவங்களுக்கு உட்கார இடம் கிடைக்கல...ஒருத்தி கொஞ்சம் சப்தமாவே சொன்னாள் “அழகானவர் எந்திருச்சு நமக்கு எடங்குடுப்பாருடி” ஆறு சீட்டுகள் காலியாகிடுச்சு.

எழுந்திருச்சவங்க ஆறுபேரும் அறுபது வயசுக்காரங்க

**********************************************************************

வாத்தியார் : “என்னடா முழிக்கிற இந்த கேள்விக்கு முட்டா பய கூட பதில் சொல்லிருவாண்டா !”
மாணவன் : “அதான் சார் நா பதில் சொல்லல...”

**********************************************************************

ஜோஸ்யம் பார்ப்பவர் : பத்துரூபா கொடுத்தீங்கன்னா நீங்க இரண்டு கேள்வி கேட்கலாம்
வந்தவர் : ”ரெண்டு கேள்விக்கு பத்துரூபாயா”
ஆமா “அடுத்த கேள்வி கேளுங்க”
**********************************************************************

கணக்கு வாத்தியார் : “உங்க அப்பாவுக்கு நான் ஆயிரம் ரூபாய் கொடுத்தேன். மாசம் 100 ரூபாய் வீதம் ஆறுமாதம் திருப்பி கொடுதால், அவர் மீதி எவ்வளவு எனக்கு தரணும்”
பையன் : “ஆயிரம் ரூபா சார்”
கணக்கு வாத்தியார் : என்ன.. உனக்கு கணக்கே புரியலயா?
பையன் : “சார் எங்க அப்பாவ பத்திதான் உங்களுக்கு தெரியல”
**********************************************************************
ஒரு போர் வீரன் பந்தயம் கட்டுவதில் அளவு கடந்த ஆசை அல்ல வெறியே இருந்தது. இந்த விசயம் புதிதாய் வந்த படைத்தலைவருக்கு தெரிந்தது.
என்ன நீ எதுன்னாலும் பந்தயம் கட்டுவியாமே அப்படியா? என்று கேட்டார்.
ஆமாங்க, எதன்மேல் வேண்டுமானாலும் பந்தயம் கட்டுவேன் உதாரணமா உங்க தொடையில் மச்சம் இருக்குன்னு பந்தயம் கட்டுரேன்.

(அவருக்கு அவன் தோற்றால் பந்தயம் கட்டும் சுபாவத்தை விட்டுருவான் என்று எண்ணினார்)

என்ன எங்க இருக்கு பாருன்னு தொடைய காட்டினார் மச்சம் இல்ல தோத்துட்டான்.
பந்தய தொகைய கொடுத்தான். படைத்தலைவர் சொன்னார் “போப்பா இனி மேலாச்சும் திருந்து”

அடுத்தநாள் பழைய படைத் தலைவர், சமாச்சாரம் கேள்விப்பட்டேன் உண்மையா ? அப்படின்னு  கேட்டார். ஆமா இனி அவன் திருந்திடுவான்னாரு.

போங்க சார்..உங்க தொடைய காட்ட மாட்டீங்ன்னு எங்கிட்ட பந்தயம் கட்டி ஜெயிச்சுட்டான்..
**********************************************************************

இது உண்மையான்னு தெரியல...

ஹிட்லர் காலத்தில் அவரு ரொம்ப ஸ்ரிக்டுன்னு தெரியும்.
சினிமா தியேட்டரில் படம் முடிஞ்சதும் தேசிய கீதம் மாதிரி அவரோட படத்தை காட்டுவாங்கலாம் ஜனங்க மரியாதையா எழுந்து நிற்பாங்க. 
ஒருநாள் ஹிட்லர் மாறு வேடத்தில் சாதாரனமா ஒரு தியேட்டருக்கு விசிட் செஞ்சாரு.
வழக்கம் போல அவரோட படத்தை காட்டும் போது உட்கார்ந்திருந்தாரு.
பக்கத்தில் இருந்தவன் அவரைப் பார்த்து
“யோவ் உன்ன மாதிரித்தான் நானும், அதுக்காக எழுந்திருக்கலேன்னா மாட்டிக்குவே எழுந்திரு” என்றான்.
**********************************************************************
விமானத்தை கண்டுபிடித்த ரைட் சகோதரர்களுக்கு, மேடையில் பேசறதுக்கு விருப்பம் இல்ல.
இருவரும் ஒரு விருந்தில் கலந்து கொண்டார்கள். வில்பர்ட் ரைட்டை பேசும்படி வற்புறுத்தி கேட்டுகிடாங்க வேற வழி இல்லாம எழுந்து
“நான் பேசுவதில்லை ஆர்வில் ரைட் தான் வழக்கமா பேசுவாரு” ன்னு சொல்லிட்டு உட்கார்ந்துட்டாரு.

அடுத்து ஆர்வில் ரைட்டுக்கும் வேற வழி இல்ல அவரும் எழுந்து
“வில்பர்ட் சொற்பொழிவாற்றிட்டாரு இனி நான் என்ன பேசுறது” என்று பேச்சை முடிச்சுகிட்டார்.
**********************************************************************
சர் ஆர்தர் கானன் டாயில் துப்பறியும் நாவல்கள் எழுதுவதில் புகழ் பெற்றவர் ( கரெக்ட் ஷெர்லக் ஹோம்ஸ் !) அவருக்கு ஆவியுலகத்தில் நம்பிக்கை இருந்தது.  அவரோட நண்பர் ஒருவர் இறந்துவிட்டார். இன்னொரு நண்பர் இவரை மடக்கனும்னு இவரிடம் இறந்தவரின் ஆவி இவரோடு பேசியதா ? என்று கேட்டார்.
அதுக்கு கானன் டாயில் “இல்ல” ன்னு பதில் சொன்னார்.
 “இப்பவாவது நம்புரீங்களா ஆவி இல்லேன்னு”

”அப்படி நினைக்கல..அவர் இறக்கறதுக்கு முன்னாடி எங்களுக்குள்ள பேச்சு வார்த்தை இல்ல, அதனால ஆவி இப்ப பேசாம இருந்திருக்கலாம்”
**********************************************************************
அறிஞர் அண்ணா சொன்ன குட்டிக்கதை இது.
ஒரு ஓவியன் ஒரு படத்தை கொண்டு வந்து காட்டினான் அதில் பசுவும் புல்லும் வரைந்து இருப்பதாக சொன்னான். சுருட்டி வைத்திருந்த படத்தை பிரித்து பார்த்தா அதில பசுவும் இல்ல புல்லும் இல்ல.

புல் எங்கே? என்று கேட்டதற்கு “பசு புல் சாப்பிட்டு விட்டது” என்று சொன்னான் ஓவியன்.
சரி பசு எங்கே? என்று கேட்டதற்கு “அது புல்ல திண்ணுட்டதால விரட்டி விட்டுட்டேன்” என்றான்.
அவரு சொன்ன இன்னொரு கதை :

இரண்டு நண்பர்கள் இருந்தாங்க. ஒருதனை இரண்டு பெண்கள் காதலிச்சாங்க. ஒருத்தி ஏழை, ஆனால் அழகா இருப்பா. இன்னொருத்தி சுமாரான அழகு, இரண்டுபேரில் யாரை திருமணம் செய்துக்கிறதுன்னு நண்பன் கிட்ட ஆலோசனை கேட்டான்.  நண்பன் சொன்னான். “ஏழையா இருக்கிற பெண்னை கல்யாணம் செய்துக்க, அவதான் உனக்கு ஏற்றவள். வாழ்கையில் உனக்கு உறுதுணையா இருப்பாள், அதோட அழகாவும் இருப்பான்னு சொன்னியே”. 

போகும் போது “சரி, அந்த பணக்காரப் பெண் எங்கிருக்கிறாள் முகவரி சொல்லுப்பா” என்று கேட்டான்.
**********************************************************************
அஞ்சலகத்தில் எழுதுவதற்காக ஒரு பேனாவை கட்டி வைத்திருப்பார்கள்.  வந்தவர் அந்த பேனாவில் எழுதினார்,  எழுதவில்லை.

அஞ்சலக எழுத்தரிடம் “இது என்ன ஹைதர் அலி காலத்து பேனா வா ? “ ன்னு கேட்டார்.

அதற்கு அவர் “ தகவல் விசாரணைக்கு பக்கத்து கவுண்டரில் கேளுங்க சார்”
**********************************************************************
கணவனும் மனைவியும் ஒரு ஹோட்டலுக்கு சாப்பிடப் போனாங்க.
சாப்பிட்டு முடிச்சுட்டு வெளியில போகும் போதுதான் மூக்கு கண்ணாடி பையில இல்ல அது டேபிலேயே இருக்கும்ன்னு பார்க்க மனைவி மட்டும் உள்ள போனாங்க..டேபில் மேல பார்த்தாள் கீழே பார்த்தாள் காணோம்...தேடுறத பார்த்து
அங்கிருந்த சர்வர் “அம்மா அவரு அப்பவே போயிட்டாருங்களே” என்றான்.
**********************************************************************
சென்னையில் இருந்த குடும்பம் வெளிநாடு போவதால் அவர்களுடைய நாயை உறவுக்காரர்களிடம் விட்டுவிட்டு போய் விட்டார்கள்.  அந்த வீட்டு பையன் நாயை பழக்குவதற்காக துணியை காட்டி “எடுத்துட்டு வா” என கட்டளை போட்டான் அது அசையவே இல்ல.  அவனோட அப்பா வந்தாரு ”ரொம்ப நேரமா இது கூட கத்திட்டு இருக்கேன்” என்று சொன்னான். அவர்  “ இஸ்துக்கினு வா”ன்னு சொல்லவும் அது பாய்ந்தோடியது.
********************************************************************** 


பாட்டி பேரனிடம் ஒரு விடுகதை போட்டார்.  “சிங்கம் போல நுழையும்,  ஆடு போல வெளியே போகும், அது என்ன?

வினாடி யோசித்த பேரன் : “அப்பா”

**********************************************************************

ஒரு அமைச்சரை முட்டாள் என்று ஒரு பொதுக்கூட்ட மேடையில் ஒருவன் பேசிவிட்டான். அமைச்சர் சும்மா விடுவாரா அவன் மேல் வழக்கு போட்டார். தீர்ப்பு வந்தது அமைச்சரை அவமானப்படுத்தியதற்கு இரண்டு வருசமும், அரசாங்க இரகசியத்தை வெளிப்படுத்தியதற்கு எட்டு வருசமும் ஆகப் பத்துவருசம் சிறை தண்டனை அவனுக்கு.
**********************************************************************
Download As PDF

Saturday, July 6, 2013

அவன் நல்ல மூளைக்காரன்டா !

ஒரு வேலைய சிறப்பா செஞ்சு முடிக்கிறவன பார்த்து சொல்றோம்  “ அவன் நல்ல மூளக் காரன்டா !  நம்ம மூளையின் செயல் பாடுகள் ஆச்சர்யமூட்டும் செயல்களை செஞ்சுகிட்டே தான் இருக்கு நமக்குத் தான் வெளங்கரது இல்ல.

தமிழ் இலக்கணம் தெரிஞ்சவருக்கு மேலே இருக்கும் பாரா என்னத்தை எழுதறாங்க தப்பும் தவறுமா? என்று தோன்றும் ஏனென்றால் தமிழின் பேச்சு வழக்கம் வேறு எழுத்து கோர்வை வேறு. இதை உணர்த்துவது அவர் மூளை. இங்கு நான் குறிப்பிட்டு சொல்ல வருவது எழுத்து வழக்கம் இல்லை மூளை பழக்கம். அதாவது சிறிய வயதில் இருந்து அவர் மூளை இது,  இதுக்கு இப்படி என்று கட்டுப்பாடுகளை அமைச்சிருக்கு அதனால தவறுகளை சுட்டிக்காட்டுது. சொற்களின் கையாடல் எளிமையா இருந்தால் அதுக்கு தகுந்த படி, படிக்க படிக்க நம் மூளை சோர்வு அடைவதில்லை. பல பேர் வலுவான எழுத்துக்கோர்வையோடு இருக்கும் புத்தகங்களை தொடாம போறதுக்கு இதுவும் ஒரு காரணம்.  பார்த்தீங்களா... நான் மூளையின் செயல் பாட்டை எழுதப் போகையில் மொழி மீதான கவனத்திற்கு திசை திருப்புது, மூளை.

நிலைக்கண்ணாடி (mirror) உருவத்தின் இடது  வலது காட்டுது ஏன் கீழ் -மேல் தோற்றம் காட்டுவதில்லை?


அரிஸ்ட்டாடில் காலத்தில் (2300 வருடங்களுக்கு முன்பிருந்து ) இருந்து இந்த சந்தேகம் இருந்துகிட்டு இருக்கு. நிலைக்கண்ணாடி பிம்பத்தை அப்படியே பிரதி பளிக்குது ஆனா நம்முடைய மூளை தான் தவறா உணர்த்துகிறதா, இது திசை குறித்த செயல் தலை கீழ் செயல்.

உதாரணமா ஒரு பெரிய கண்ணாடி வைக்கப்பட்டிருக்கும் அறையில் கண்ணாடிய கவனித்து கொண்டிருக்கும் போது உங்களிடம் கை குலுக்கும் நண்பர் தவறான கையை (இடது) குலுக்குவதாக தோன்றும். உண்மையில் அப்படியில்லை...இல்லையா?

(பலர், சீலை உடுத்தி செல்லும் வடநாட்டு பெண்களை குறு குறுன்னு? பார்குறது இதனால தானோ !)

மூளைச் செல்கள் புதிதாக உருவாக்கப் படுகிறதா?


காலங்காலமா சொல்லப்பட்டு வரும் செய்தி என்னன்னா... பிறந்ததில் இருந்து உங்களோடு வளரும் மூளை செல்கள் அப்படியே தான் இருக்குது. மூளை செல்கள் புதிதாக உருவாக்கப்படுவதில்லை. அதாவது ஏதேனும் விபத்தில் பாதிக்கப்படும் மூளை செல்கள் இறந்து போனால் திரும்ப உருவாவதில் சிக்கல் இருக்கு.

இந்த எண்ணத்தை மாத்திக்க வேண்டியதா இருக்கு சில ஆய்வின் முடிவுகள்.
கலிபோர்னியா நியூரோ பயாலஜிஸ்டுகள் இறந்தவங்களோட (டிஷ்யூ) மூளை செல்களை தொடர் ஆய்வு செய்து, சில தகவல்கள் சொல்றாங்க.  மூளையில் ஹிப்போ கேம்பஸ் எனும் பகுதியில் ஆயிர கணக்கான புது செல்கள் உருவாக்கப்படுது ஆனா அவை ஒரு சில வாரங்களில் இறந்து போகிறது அல்லது அழிக்கப்படுகிறது, நம் உடலின் இம்யூன் சிஸ்டத்தால்.  நியூரான்களின் இணைப்பு செயல் இதை தக்க வைத்துக் கொள்வதற்கும் தவிர்பதற்கும் காராணமாகிறது. 

புதிதாக உருவாகும் மூளைசெல்களை தக்க வைத்து கொள்வது எப்படி என்பது குறித்து எதிர்காலத்தில் இந்த நுணுக்கமான ஆய்வு கை கொடுக்கும்.

சுருக்கமா சொன்னா, நாம மூளைக்கு எப்படிப் பட்ட வேலை கொடுக்கறமோ அதைப் பொருத்து அதோட வளர்ச்சி அமையுது. மனச் சோர்வு மூளையின் செயலை பாதிக்கிறது என்பது உண்மைதான்.

தலைவலி எதனால் ஏற்படுகிறது ?
(சுருக்கமா...)


தலைவலி ஏற்படக் கூடிய காரணங்கள் 200 வகை இருப்பதா குறிப்பிடறாங்க.  தலை வலிக்கான முக்கிய காரணம் பதட்டம் மற்றும் வேலைப் பளு (tension & over work).  இதில் மைக்ரைன் தலைவலி சில மணி நேரங்களில் இருந்து மூன்று நாட்கள் கூட தொடரும். அந்த மாதிரியான சமயங்களில் நாம் எதன் மேலும் கவனம் கொள்ள முடியாது.  நல்ல ஓய்வு மட்டுமே மருந்து. 

சில தலைவலிகள் நாமலாகவே உருவாக்கிக் கொள்வது அதாவது சரியான உடற் பழக்கம் இல்லாம கழுத்தை சாய்த்து பணிசெய்வது, ஜீரணமின்மை(டிஹைட்ரேசன்), அதிக பெயின் கில்லர் மாத்திரைகளை உட் கொள்வது.

மிக சிக்கலான தலைவலி மூளை மற்றும் மண்டை ஓட்டுக்கு இடையில் தலையில் ஏற்படும் நுண்ணிய ரத்த கசிவினால ஏற்படுவது, மூளை ப்ரைன் டியூமரினால பாதிக்கப் படுவது. மூளைக்கு சரியான ஆக்ஸிஜன் கிடைக்காம போறது, போர்வையால முகத்தை மூடி தூங்குவதினாலேயும் தலை வலி ஏற்படுது.  சுற்றுபுற சீர்கேட்டினால் கார்பன் மோனாக்சைடால் நம் உடலுக்கு ஏற்படும் பாதிப்பு, கண் பாதிப்பும் ஒரு காரணம்.

பெரும்பான்மையானவர்கள் வலது கைப் பழக்கம் உடையவங்களா இருக்காங்களே ஏன்?


சில விலங்குகள் பறவைகள் ஒரு குறிப்பிட்ட கண், காலை உபயோகிப்பதா இருக்கு, மனிதர்கள் மட்டும் இதுல வித்தியாசப்படுகிறார்கள் ஏன் என்பது சரியா தெரியலா.   90 சதவீதம் வலது கை பழக்கம் உள்ளவங்களா இருக்காங்க. மொழி நினைவாற்றலுக்கு ஒரு பக்க மூளை செயல் படுது, கட்டளைகளுக்கு இன்னொரு பாகம் செயல் படுது. வலது கை பழக்கம் உடையவங்களோட மூளையின் இடது பாகம் பேசுவது இன்னபிற செயல் கட்டளைகளை இயக்குது. அப்படி பார்த்தா இடது கை பழக்கம் உடையவங்களோட மொழி இயக்கம் மூளையின் வலது பக்கம் செயல்படனும் ஆனா அப்படி இல்ல பாதிப் பேருக்கு மட்டுமே இப்படி இருக்கு.  டென்னிஸ், கிரிகெட், பாக்ஸிங் இந்த மாதிரியான விளையாட்டுகளில் இடது கைப் பழக்கம் உடையவங்களோட ஆதிக்கம் இருக்கு, அவுங்களுக்கு இது சாதகமான விசயம். இடது கைபழக்கம் உடையவங்க வரையும் ஓவியமும் ஒருவித ஸ்பெஷாலிட்டியோட இருப்பதும் கண்கூடு.

தொடர்புடைய பதிவுகள் :

நமது மூளை குறித்த நமது மூளை குறித்த சில ருசிகர தகவல்கள் !!

தலை ஒட்டி பிறந்த இரட்டை பெண் குழந்தைகள் !

நம்மை நாமே ஏன் கிச்சுக்கிச்சு மூட்டி கொள்ள முடிவதில்லை ?

மனிதனின் நீண்ட ஆயுளின் சூட்சுமம் !! - ஒரு ஆய்வு

Download As PDF

Monday, July 1, 2013

360 டிகிரியாக மாறிப்போன சீரோ டிகிரி !

ஜீரோ டிகிரி புத்தகம் பற்றி பர பரப்பான செய்திகள் வந்த போதும் ஏனோ என்னைக் கவர வில்லை. புத்தகத்தை வாங்கிப் படிக்கும் ஆவலும் இல்லாது போய் விட்டது.

அவ்வப்போது ஊடகங்களில் இதைப் பற்றி பேசப்படும் போதெல்லாம்  சுவாரஸ்யம் அதிகமானது.   வெயிலில் மழைமாதிரி அவ்வப்போது இந்த எண்ணத்திற்கு திடீர் தாக்கம் ஏற்படும்.   சமீபத்தில் தோழர், தோழிகளுடன் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். அதன் பிறகு திரும்பும் போது ஒரு பேராசிரியையுடன் (ரயில் சினேகிதம் !) நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தேன். பேச்சு சுவாரஸியமாக போய்கொண்டிருந்தது.   சொந்த முயற்சியில் ஒரு குறும்படம் எடுத்திருக்காங்க (பேர் ஞாபகம் வரல) பேசும் போது "சீரோ டிகிரி” என்று வாய் குரழ...குழர,  ஹையோ அதப் பற்றி நினைச்சாலே...என்று சொல்லிவிட்டு வாயை மூடிக்கொண்டார்.

ஏதோ விசயம் இருக்கு எனப் புரிந்து போனது. பேச்சு வேறு தலைப்புகள் மாறி சென்று மீண்டு வந்தது.  உங்க மனசில் இருக்கிறத சொல்லிருங்க என்ற என் நச்சரிப்பு தாங்க முடியாமல் சொன்னார்...

“என்னுடன் பணிபுரியும் தோழி ஒருத்தி, இந்த புத்தகத்தை படியுங்க என என் கையில் திணித்துவிட்டு போய்விட்டாள். நானும் வீட்டுக்கு எடுத்துட்டு போய் ஒரு பத்து பதினைந்து பக்கம் படிச்சேனுங்க...முடியல வெச்சிட்டேன்... வீட்டுக்கு  வர்ரவங்க யாரும் இந்த புத்தகத்தை பார்த்திர கூடாதேன்னு எனக்கு பெருங்கவலை வந்திருச்சு.

ஏகப்பட்ட கவிதை, கதை, இலக்கிய புத்தகம் படிச்சிருக்கேங்க... இத படிச்ச எனக்கு ஏன் இந்த கவலை வந்ததுன்னு தெரியல.., பழைய நியூஸ் பேப்பர்ல போட்டு சுத்தி வெச்சிட்டேன்.
திரும்ப இத எடுத்துட்டு போய் தோழியிடமே கொடுத்தேன் இல்ல.. நீங்களே வெச்சுக்குங்க, அவசர ஜோலி இருக்குன்னு சொல்லிட்டு போய்ட்டா...

“நானும் படிக்கனும்னு இருக்கேன் கொடுங்க... ” இது நான்.

ஆனா இத மேல படிக்க எனக்கு தோனல வீட்லேயும் என்னால வெச்சுக்க முடியல..ஏன்னா இத படிக்கிறவங்க நீ.. இதெல்லாமா படிக்கிற என கேட்டுடக்கூடாதே..அப்பவும் மீறி வயசு வித்தியாசம் பாக்காம இந்த புத்தகம் பல பேர் கண்ணுல பட்டுடிச்சு...ஒவ்வொரு தடவையும் அவுங்கள திசை திருப்பி இதை காப்பாத்திட்டு வந்தேன்.

“ஏங்க கஷ்டப்படுறீங்க எங்கிட்ட குடுத்திருங்க...” மறுபடியும் நான்.

அதைவிட புத்தகம் கொடுத்த தோழியின் அட்டகாசம் தாங்க முடியல... பொழுது போகாதப்ப எல்லாம் என்ன வெச்சு காமெடி பன்ன ஆரம்பிச்சுட்டா.. சமயம் கிடைக்கும் போதெல்லாம், இந்த புத்தகம் எங்கிட்ட இருக்குன்னு சொலிடுவா.

இத யாருகிட்டையாச்சும் கொடுத்திரலாம்னா நம்மள பத்தி என்ன நினைப்பாங்க எனும் எண்ணத்தினால அந்த முடிவை கைவிட்டுட்டேன்.

நல்ல வேலையா...போகி பண்டிகை வந்ததுங்க சந்தோசமா இந்த புத்தகத்தை போட்டு கொழுத்திட்டேன் என்று சொல்லி ' முற்றும் ' போட்டார்.

வடை போச்சே ! என நினைத்த போது " எஹே..என்னப்பா... இது, நவீன இலக்கியத்திற்கு வந்த சோதனை... வேதனை...நடிகர் பாலையாவின் அசரீரி கேட்டது.

  *****

நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் பள்ளிக்கு அருகில் நடமாடும் புத்தக கடை இயங்கியது , ஒரு வாகனத்தில்  புத்தக விற்பனை நியூசென்சுரியால நடத்தப்பட்டதுன்னு நினைக்கிறேன். அப்ப ரஷ்ய புத்தகங்கள் எனக்கு அறிமுகம் ஆச்சு.  எதுக்குமே லேசுல பைசா தாராத அப்பா...புத்தங்கள் வாங்கனும்னா கொடுத்திருவாரு, ரஷ்ய புத்தகங்கள் நல்ல பைண்டிங்கில் அருமையான படங்களோட கிடைக்கும்.  அப்ப என்னை கவர்ந்த ஒரு மொழி பெயர்ப்பு புத்தகம் "மக்சீம் கோர்க்கி கதைகள்" அதில் இருந்த ஓவியங்கள் என்னை மிகவும் கவர்ந்தது. இந்த புத்தகம் அப்பவே பழசு தான்.

இதில் உள்ள ஒரு கதை "கிழவி இஸெர்கீல்"  இச்சிறுகதை மனிதனுக்கு தன்னம்பிக்கை ஊட்டக்கூடியது. தனிமை எல்லாவற்றிலும் பெரிய துன்பம், சாவு கூட அதைவிடக் குறைந்த தண்டனையே என்று போதிக்கிறது லாராவின் வாழ்க்கை வரலாறு. தான்கோவின் எரியும் இதயம் பற்றிய கதையின் கடைசிப் பகுதி மக்களின் விடுதலைக்காகத் தன்னைப் பலி கொடுப்பது எத்தகைய இன்பம் என்பதை விவரிக்கிறது. இஸெரிகீலின் நாடோடி வாழ்க்கையும் அவளின் மனோதிடமும் சுவாரசியமாக விவரிக்கிறது. இஸெர்கீல் நம்முடன் மிகவும் ஒன்றிப் போகும் ஒரு கதா பாத்திரம்.


"புரட்சியின் வரவை முன்னறிவித்த புயற்பறவை மக்சீம் கோர்க்கி " சொன்னவர் வி.இ. லெனின்



மல்தாவிய நாடோடிக் கதைகளின் அடிப்படையில் கோர்க்கி படைத்த மரபு வழி கற்பனைக் கதை. அந்தோன் சேகவுக்கு எழுதிய கடிதத்தில் ருஷ்ய எழுத்தாளர் கோர்க்கி பின்வருமாறு குறிப்பிட்டார்

"கிழவி இஸெர்கீல்   கதையைப் போல இசைவான வடிவமைப்புடனும் அழகாகவும் எதுவும் எழுத மாட்டேன் என்று தோன்றுகிறது..” (1892)

ஒரு பிஸ்கட் தொழிற்சாலையில் தொழிலாளியாக வாழ்க்கையைத் துவங்கிய மக்சீம் கோர்க்கி (இயற்பெயர் : அலெக்சேய் பெஷ்கோவ்) என்னும் புனை பெயர் கொண்ட எழுத்தாளரின் முதல் படைப்பு ஜிப்ஸி. 1898 முதல் இவரது கட்டுரைகளும், சிறுகதைகளும் பெருத்த வரவேற்ப்பை பெற்றன.  அந்தோன் சேகவ், லேவ் தல்ஸ்தோய் வரிசையில் கோர்க்கியை வைத்தன.

1892 ல் சாலை போடும் தொழிலாளியாக இருந்த போது ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு பாதையில் பேறுகால வேதனையில் தவித்த ஒரு பெண்ணுக்கு பிரசவம் பார்த்தார். நிஜ நிகழ்வை கதையாக வடித்தார் அது தான் “பிறந்தான் மனிதன்”

கிழவி இஸெர்கீல்   கதையை   படிக்கும் ஆர்வம் இருப்பவர்கள் இங்கே தரவிற‌க்கி படியுங்கள். 

Download As PDF

தமிழ் எழுதி (உதாரணம்) - ammaa =அம்மா, aRam=அறம், thamiz=தமிழ்,manjsaL=மஞ்சள்

மேலும் படிக்க பக்க எண்களை காண பழைய இடுகையை [OLD POSTS ]மீது கிளிக் செய்யவும் !


பிரபலமான இடுகைகள்

கடந்த 30 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Labels of this Blog

Alien (1) amphibians (1) ancient people (2) ancient scripts (1) ancient tamil poets (1) anteater (1) antibiotics (1) archaeologist (5) art (4) Artic (1) Asteroid (1) astronomy (4) atom (1) bangalore lalbagh (2) bats (1) beauty (1) Bees (2) Belmez faces (1) Bermuda Triangle (1) Birds (7) birthday song (1) black holes (1) brain activity (5) brains (2) Brown Drawfs (1) carnivorous plants (2) chennai conference (1) cloning (2) Cockroach farrms (1) Concisious mind (3) conjoined animals (1) conjoined twin (1) Contest approach (1) crinoids (1) curiosity (1) darwin (2) dhasavadaram (1) dinosaur bird (1) Draco (1) dreams (4) earth worm (1) earthday (1) environment (2) Firefly (1) Fugu (1) G.D.NAIDU (4) Galaxies (2) general knowledge (1) Genetic (1) Ghost (1) Gillette razor (1) golden buddha (1) Gulf streem (1) H.Erectus (1) Hess (1) highway of kongu culture (1) Hindusim (1) Historical Famous Faces (1) human (1) HumanMilk (1) humanoid (1) ice melting (1) indian iron pillar (1) infrared (1) interview (1) jellyfish (1) Jokes (12) KaKapo (1) Kongu culture (6) land scape (1) Library of Alexandria (1) life of bees (2) life science (3) Life Sciences (11) Liger Tigon (1) long life (1) M.Metha (1) mamies milk (1) Mars (1) meat-eating plants (1) milkyway (2) mind (1) MIR Diamond mine (1) Moscow Kremlin (1) Mosquito (1) mushroom (2) Mystery (14) mystry (2) nanban (1) Nasca (1) Nazca Lines (1) Northern Hawk owl (1) Number 108 (1) oddity (1) Omen (1) paranormal interpretation (1) Penquins (1) peru (1) Perur (1) Perur Temple (5) philosophers (1) Piri Reis Map (1) poet Kannadasan (2) QUIZ (2) rare animal (2) Religion (1) RHINOCEROS (2) Richard III (1) RMS Queen Mary (1) Rongorongo script (1) Russian royal bell (1) save trees (2) Science (3) Sea level Rise (1) sediba (1) self confidence (1) Shark (1) Short Stories (1) silambam (1) sleep (3) Sloth (1) smallpox (1) song-birds (3) Space (2) space scientist (1) sphere Robo (1) Spider (2) Sprit (1) Stars (1) story (3) strangeness (1) Superstitious behavior (1) swami vivekanandar (1) tamil artist maruthu (1) tamil history (6) Telescope (1) tibet (3) tickle (1) Tsar Bell (1) twins (1) ultraviolet (1) universe (2) vairamuthu (1) Virus (1) water (2) whales (1) windmill (1) அணு (1) அமானுஷ்யம் (4) அலெக்ஸாண்டிரியா (1) அறிவியல் துணுக்குகள் (14) அறிவியல் புதிர் (9) அனுபவம் (87) அனுபவம். பயணம் (4) அஸ்ட்ராய்டுகள் (2) ஆதி மனிதன் (2) ஆய்வு (11) ஆர்டிக் (1) ஆவி (1) ஆழ்கடல அனுபவம் (2) ஆழ்கடல் அனுபவம் (1) ஆனந்தம் இதழ் (1) ஆன்டிபாயாடிக்ஸ் (1) இரட்டை உயிர்கள் (1) இரும்பு தூண் (1) ஈஸ்டர் தீவு (2) உணவு (1) உணவுப்பழக்கம் (2) உயிர்நிழல் (1) உள்ளுணர்வு (3) உறக்கம் (1) எகிப்து (2) எண்ணங்கள் (2) எண்ணியல் (1) எறும்புதின்னி (1) ஏமாற்றம் (1) ஏன் எதற்கு எப்படி (26) ஐன்ஸ்டீன் (1) ஒளிஉமிழ்காளான் (1) ஓவியம் (6) கடல் ஆய்வு (2) கடல் சுழல் ஆய்வுக்கூடம் (2) கடல் மட்டம் (1) கடல் லில்லி (1) கடல்பல்லிகள் (1) கட்டுரை (125) கணினி (1) கண்காட்சி (3) கண்டுபிடிப்பு (5) கதை (6) கரப்பான்கள் (1) கருந்துளை (1) கல்வெட்டு (1) கவிஞர் கண்ணதாசன் (6) கவிஞர் வைரமுத்து (2) கவிதை (2) கவிதைகள் (2) கற்பாறை சித்திரங்கள் (2) கனவு (1) கனவுகள் (4) காடுறை உலகம் (1) காண்டாமிருகம் (2) காதல் (1) காந்தி (1) காளான் (2) கிச்சுக்கிச்சு (1) குளவி (1) குளோனிங் (2) கேலக்ஸி (3) கொங்கு (7) கொங்கு வரலாறு (1) கொசு (1) கொசு ஒழிப்பு (2) கொசுக்கள் (2) கோபிநாத் (1) கோவை புத்தக வெளியீடு (2) கோவை வரலாறு (7) சகுணம் (1) சலீம் அலி (1) சவரம் (1) சாதனை (1) சார்லி சாப்ளின் (1) சார்லிசாப்ளின் (1) சிங்கம்புலி (1) சிந்தனை (6) சிரோ டிகிரி. சிறுகதை (1) சிலம்பம் (1) சிறுகதை (4) சினிமா (2) சுறா (1) செண்டினல் தீவு (1) செப்பேடு (1) செய்தி (3) செய்திகள் (10) செவ்வாய் (2) டார்வின் தவளை (1) டாவின்சி (1) டிசைனர் பேபி (1) டிராட்ஸ்கி மருது (2) தங்க புத்தர் சிலை (1) தண்ணீர் (1) தத்துவம் (3) தமிழர் (2) தமிழர்கலை (1) தமிழன் (4) தமிழ் (7) தவளைகள் (1) தாய்ப்பால் (1) திபெத்திய குகைகள் (3) திமிங்கிலம் (1) தினமலர் (1) தீவு வாசிகள் (1) துணுக்குகள் (16) தூக்கம் (4) தூப்ளே (1) தேவிகா (1) தேனீ (3) தொலைநோக்கி (1) நகைச்சுவை (17) நடிகர் சிவகுமார் (3) நட்சத்திர குள்ளர்கள் (1) நட்சத்திரம் (1) நாசா (1) நாயக்கர் மகால் (2) நானோ டெக்னாலஜி (1) நானோ-தொழிநுட்பம் (1) நானோபாட்கள் (1) நாஸ்க்கா (1) நீண்ட ஆயுள் (1) நீர் சிலந்தி (1) நொய்யல் (4) பதிவுதிருட்டு (1) பயணம் (2) பறவை (7) பறவை மனிதன் (1) பறவைகள் (2) பாக்தாத் பேட்டரி (3) பாமரன் (1) பால்வீதி (1) பால்வெளி (2) பிரபஞ்சம் (5) பிரிரெயிஸ் (1) பில் கேட்ஸ் (1) பிளாஸ்டிக் (1) பிளேட்டோ (2) பிறந்தநாள் பாடல் (1) புதுவை (1) புத்தகம் (2) புவி தினம் (1) புவி வெப்பமாதல் (1) புழு (1) புனைவுகள் (1) பூச்சியுண்ணும் தாவரங்கள் (1) பூமி தினம் (1) பெங்களூரு (2) பெரிய ஆலமரம் (1) பெருவழிப்பாதை (1) பெல்மீஸ் (1) பேரூர் (7) பேரூர் கல்வெட்டு (1) பொன்மொழிகள் (3) போலியோ (1) ப்ளாஸ்மான்கள் (1) மங்கள்யான் (1) மணிகள் (1) மதுரை (1) மரங்களின் பாதுகாப்பு (2) மரபியல் (5) மருத்துவம் (18) மனம் (2) மனித மூளை (1) மனோவலிமை (2) மாமிச உண்ணி தாவரம் (1) மின்மினிப் பூச்சிகள் (1) மீன்கள் (2) மு. மேத்தா (1) முதுமக்கள் தாழி (1) மூடபழக்கவழக்கம் (2) மூளை (4) மேஜிக் (1) ராசாளி ஆந்தைகள் (1) ராஜநாகம் (1) ரூபிக் க்யூப் (1) ரேசர் (1) வரைபடம் (1) வலைப்பதிவர்கள் விழா (1) வாழ்க்கை (1) விச சிலந்தி (1) விண்கற்கள் (1) விண்ணியல் (3) விண்வெளி (6) விண்வெளி வாகனங்கள் (3) விண்வெளி விஞ்ஞானிகள் (2) விநோதங்கள் (1) விமர்சனம் (1) விலங்குகள் (2) வெப்பமயமாதல் (1) வெளவால் (1) வேற்றுகிரகவாசி (1) வைர சுரங்கம் (1) வைரஸ் (1) வொயுனிச் (1) வௌவாள் (1) ஜி.டி.நாயுடு (3) ஜெல்லி மீன் (1) ஜோக்குகள் (3) ஜோக்ஸ் (10) ஸ்டெம் செல் (1) ஸ்லவுத் (1)