Followers

Wednesday, December 31, 2014

சிந்தனை விருந்து



  • நன்மை செய்தவருக்கு நன்மை செய்யாதிருப்பது மனித குணத்திற்கே மாறுபட்டதாகும். நன்மை செய்தவருக்கு தீமை செய்வது பேய்க் குணமாகும்
    ~ஜெனிக்கா~

  • மேகங்கள் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் கதிரவனை மறைத்திட முடியாது. உண்மையான திறமைசாலியை எவ்வளவு சக்தி வாய்ந்த எதிரிகளும் மடக்கிவிட முடியாது ~ரவீந்திரநாத் தாகூர்~

  • தங்களுக்கு தெரிந்தவற்றைப் பற்றி எல்லா ஆண்களும் பேசுவார்கள். ஆனால் பெண்கள் தங்கள் மனதுக்கு திருப்தியானதையே பேசுவார்கள் ~ரூஸ்ஸோ~
  • சிந்திக்கத் தெரியாதவன் முட்டாள். சிந்திக்கத் தெரிந்தும் சிந்திக்காதவன் சோம்பேறி. பிறர் சிந்திப்பதைக் கெடுப்பவன் அயோக்கியன் ~ ரூஸ்வெல்ட்~

  • பாம்பு போன்ற விச ஜந்துக்களைக் கூட நான் நூலகங்களுக்குள் அனுமதிப்பேன் ஆனால் நச்சுத் தன்மை வாய்ந்த நூல்களை நான் நூலகத்திற்குள் அனுமதிக்க மாட்டேன் ~ குன்றக்குடி அடிகளார்

  • பாயாசம் அதிக சுவையா இருக்கிறது என்பதற்காக அதிகமா சாப்பிட்டா அவதிதான். அதுமாதிரி பணமும் அளவோட இருந்தா நிம்மதியா இருக்கும். அதிகமானா அவதிதான் ~அறிஞர் அண்ணா~

  • மேலுலகில் நமக்கு சொர்க்கம் கிடைப்பதை விட, இந்த உலகத்தில் நமக்கு சுதந்திரம் கிடைப்பதே மகிழ்சிக்குறியது ~ பாலகங்காதர திலகர்~

  • நம்ம நாட்ல "சரஸ்வதி" படத்த வெச்சுட்டு பூசை செய்கிற மாணவன் பரிட்சைல தோத்து போறான். ஆனா அமெரிக்கா போன்ற அயல் நாடுகள் ல அச்சடித்த காகிதத்தில மலத்த தொடச்சுட்டு போறவன் நம்மைவிட அறிவுலேயும், திறமையான ஆற்றலாலும் திறமையுடன் இருக்கான் எப்பிடி? ~ தந்தை பெரியார்~

  • அதிகமாக அனுபவிகவும், மிக சொர்பமாய் இருக்கும் வருவாயைப் பெருக்கிக் கொள்ளவும் கற்றுக் கொள்ளுங்கள். அதுவே வெற்றிக்கு வழி  ~கதே~

  • இந்த உலகம் விரைவில் உயர்வோருக்குத் தான் நல்ல மதிப்பு கொடுக்கிறார்கள். ஆனால் உண்மையில் புழுதிகள், வைக்கோல், மூங்கில் இவைகள் தான் இவ்வளவு விரைவில் வளர்கின்றன. ~ஹாரி~

  • எதிர்பார்ப்பது குறைவாக இருந்தால் நிச்சயம் ஏமாற்றம் ஏற்படாது. நம் தகுதிக்கு மேலே எதிர் பார்த்தால் நிச்சயம் ஏமாற்றம் தான் ~ பீச்சர்~

  • நீ நல்ல பெண்ணை கலியாணம் செய்துக விரும்புகிறாயா? தன் பெற்றோருக்கு நல்ல மகளாக வாழ்பவளையே தேர்ந்தெடு ~புல்லர்~

  • பால் கீழே சிந்திவிட்டதற்கு வருத்தப் பட்டால் திரும்பவும் கிடைக்காது. நடந்து முடிந்த காலங்கடந்த நிகழ்ச்சிக்களுக்காக வருத்தப் பட்டால் திரும்பவும் பெற முடியாது. ~எமர்சன்~

  • எந்த ஒரு மனிதன் தீவிரமாகவும் திடமாகவும் சிந்திக்கிறானோ அந்தச் சிந்தனைகளின் வளர்ச்சியே ‪#‎கலை‬. அப்படி சிந்திப்பவனே சிறந்த கலைஞன். ~புதுமைப் பித்தன்~ 
  •  **************************************
"Tomorrow, is the first blank page of a 365 page new life book...to start with"
Wish You all a Great, Prosperous, Blissful, Healthy, Bright, Delightful, Energetic and Extremely Happy, HAPPY NEW YEAR 2015 
 
~kalakumaran~
Download As PDF

Thursday, December 4, 2014

ஸ்பேஸ் டூரிசம் [ விண்வெளி சுற்றுலா ]



"மனித மனம் பேராசைகளால் நிறைந்தது அதுவே பலவற்றை சமைக்கவும்* காரணமானது. "      [ சமைக்க = உருவாக்க ]

ஸ்பேஸ் டூரிசம் எனும் கவன ஈர்ப்பு 2004 லில் இருந்து பெரிதாக பேசப்பட்ட ஒன்று. கடந்த பத்தாண்டுகளாக வணிக நோக்கோடு பல தனியார் நிறுவனங்கள் இதற்கான முயற்சியில் ஈடுபட்டன. 

ஸ்பேஸ் ஷிப் 2 [ வெர்ஜின் காலெக்டிக் /  Virgin Galactic ] எனும் திட்டம். இதில் ஆறு பயணிகள் இரண்டு விண்னோட ஓட்டிகளுடன் செலுத்த தக்கதாக இருக்கும் என விளம்பரப் படுத்தப் பட்டது. ஆனால் சர் ரிச்சர்ட் ப்ரான்சன் ( Sir Richard Branson )தலைமையிலான அந்த திட்டம் இன்னம் முடிவற்ற நிலையில் இருப்பதாக சொல்லப் படுகிறது. 

 
XCOR Aerospace எனும் நிறுவனமும் ராக்கெட் இஞ்சின் பொருத்தப்பட்ட லினக்ஸ் ஸ்பேஸ் கிராப்ட்  (Lynx spacecraft ) எனும் விமானத்தை போலான ஊர்த்தியில் ஜனங்களை கூட்டி செல்வதாக திட்டம் தாயாரித்தது, அதோடு இல்லாமல் டிக்கெட் களை கூட விற்றதாம்.

தற்போது வேர்ல்ட் வியூ என்டர்ப்ரைசஸ் [ World View Enterprises ] எனும் நிறுவனமும் ஹீலியம் காஸ் பலூன்களை பயன் படுத்தி வானில் புவி ஈர்ப்பு எல்லையில் நிலைநிறுத்த தக்கபடியான ஒரு வாகனத்தை உருவாக்க இருப்பதாக தெரிவிக்கப் பட்டது. இதிலும் நான்கு பயணிகள் மற்றும் இரண்டு விண்னோட ஓட்டிகளுடன் செல்லலாம்.  இதற்கு தலைக்கு சுமார் 75000 டாலர்கள் ஆகும் எனவும் கணக்கிடப்பட்டது. இந்த திட்டத்தின் படி பூமியின் மேலாக கிட்டத்தட்ட 32 கிலோமீட்டர்களில் இந்த வாகனம் சுழலுமாம்.

இந்த கேப்சூல் சுமார் 4 டன் எடைகொண்டது. டாய்லெட் உட்பட பார் மற்றும் சகல வசதியுடன் கூடியதாகவும் நவீன தொடர்பு கருவிகளுடன் இருக்கும். விண்வெளி சுற்றுலா பயண நேரம் சுமார் 5 அல்லது ஆறு மணிகள். இதில் பயணிக்க பிரத்தியோக பயிற்சி தேவை இல்லையாம்.  

பூமியின் மேலாக சுமார் 2 மணி நேரங்கள் சுற்றிவிட்டு பாராசூட் (பாராவிங்) இறங்குவது போல வாகனத்தோடு சேர்த்து இறக்கி விடுவார்கள்.

சாதாரணமாக போயிங் 747  பூமிக்கு மேலாக 10 முதல் 13 கிலோமீட்டர்களில் பறக்கவல்லது என்பதை கவனத்தில் கொள்க. அது பறக்கும் வான் காற்று வெளி தான் ”ட்ரோபோஸ்பியர்”

சோதனை முன்னோட்டமாக ஜூலை 2014 ல்  ஹீலியம் வாயு அடைக்கப்பட்ட பலூன் ”ட்ரோபோஸ்பியர்” வான் எல்லை பகுதியில் நவீன உபகரணங்கள் பொருத்தப்பட்டு (iPhone, GoPro camera, GPS tracker and flight computer) சோதிக்கப்பட்டுள்ளது.   இது  தரையில் இருந்து வானில் 28 கிலோமீட்டர் உயரத்தில் பறந்தது. இந்த பலூனில் வாயுவின் அழுத்ததை தேவையான அளவு அதிகரிக்கவோ அல்லது குறைக்கும் படியான கருவி அமைக்கப்பட்டு இருந்தது.

 
வாயு மண்டலத்தின் பல கட்டங்களும் அதில் இயங்கும் வாகனங்களும் படத்தில் விளக்கப்பட்டு உள்ளது.


இதெல்லாம் அடுத்த இரண்டாண்டுகளில் ( 2016 ல்) சாத்தியப்பட்டு விடும் என்கிறார்கள்.

What’s certain is that when passengers  finally fly, they’ll be transported by  balloons that are big – very big. At sea level, 1m3 of helium can lift 1kg. By the time you’ve added the weight of the  balloon itself to the weight of a 4,000kg capsule, you’re already talking about a  weight of 6,000kg. To lift that would  require at least 6,000m3 of helium, and probably more. The balloon would need to be 22m in diameter. Bloon’s Annelie  Schoenmaker says its capsule will be  lighter, at around 2,000kg, though this would still require an enormous balloon.

the president of the Commercial Spaceflight Federation,  Astronaut Michael Lopez-Alegria, is confident. “It won’t be long before tourists are heading into space,” he says

Download As PDF

Tuesday, December 2, 2014

ஆர்டிக் கடற்பகுதியில் மறைந்துள்ள இரகசியம் !



ஆர்டிக் பெருங்கடல் பகுதி பனிபாறைகளால் சூழப்பட்டது. பருவ காலங்களுக்கு தகுந்த படி அதிகமாவதோ அல்லது குறைவதோ நிகழும். ஆயின் கடந்த காலங்களின் அதாவது 35 வருடங்களை கணக்கில் எடுத்து கொண்டால் அவற்றின் பரப்பளவானது 14 சதவீதம் குறைந்து விட்டதாக ஒரு (டேட்டா ) குறிப்பேடு தெரிவிக்கிறது.

ஆர்டிக் பகுதியில் தொடர்ந்த கண்காணிப்புகளும், ஆய்வுகள் நடந்தவண்ணம் உள்ளன.  மேலா பார்வையில் இவை மீன்வள ஆய்வாகவே தெரியப்படுத்தப் படுகின்றன.

சொல்லப்போனால்  கடற்படுகையின் வளங்களை பற்றின ஆய்வாகவே அவை கருதப்படுகின்றன.

இந்த வருடம் கனடா புதிதாக இரண்டு பெரிய ஆய்வு கப்பல்களை (Vessels) ஆர்டிக் கடற்படுகைகளை ஆய்வு செய்வதற்காக அமர்த்தி இருக்கிறது.  இம்மாதிரியான நடவடிக்கைகள் ஆக்கிரமிப்பு ரீதியாகவும், வணிக ரீதியாகவுமே உற்று நோக்கப் படுகின்றன. மேற்படி ஆர்டிக் கடற்படுகை பிரதேசங்களில் மறைந்து இருக்கக்கூடிய பெருமளவு எண்ணெய் வளங்களும், வாயுக்களையும் கைக்கொள்வது எப்படி என்பதான பிரதேச போட்டி இது என்று சொல்லலாம்.

2007 ல் ரஷ்யர்கள் குட்டி நீர்மூழ்கிகளை எடுத்துக்கொண்டு ஆர்டிக் பகுதிக்கு  போய் வடகோளம் எமது.. என்பதாக அவர்கள் நாட்டு கொடியியை அங்கு நட்டு வைத்ததார்கள்.


அப்போதிருந்தே ஆர்டிக் கடற்படுகை பிரதேசத்தில் “லொமோனோஸோவ் ரிட்ஜ்”(Lomonosov Ridge) என்ற பகுதி முக்கியமான அவதானிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. (படத்தில் இப்பகுதி சுட்டிக்காட்டப்பட்டுள்ளது )  இப்பகுதி முழுக்க தம் சொந்தப்பகுதி என சொந்தம் கொண்டாடியது ரஷ்யா.  ஆனால் அப்படி கருதமுடியாது என்று கீரின்லாந்தை தன் ஆளுமையில் வைத்திருக்கும் டென்மார்க் குரல் எழுப்பியது.  இத்தோடு கனடாவும் சேர்ந்து கொண்டது. தத்தம் நாட்டு புவியியல் பரப்பளவின் எல்லைகளின் படி ஒரே நாடு அப்பகுதியை சொந்தம் கொண்டாட முடியாது என்ற கோரிக்கையும் முன் வைக்கப் பட்டது. அது பற்றிய பஞ்சாயத்து ஒரு பக்கம் போய் கொண்டு இருக்கிறது.

அடுத்த பத்தாண்டுகளில் இப்பகுதி பிஸியான பகுதியாக மாறிப்போவதற்கு வாய்ப்புகள் பிரகாசமாக தெரிந்தாலும் அதன் பின்னனியில் ஆக்கிரமிப்புகளினால் ஏற்படப்போகும் நிலவியல் மாற்றங்களும் சுற்று சூழல் பாதிப்புகளும் தாம் எமக்கு பூதாகரமாக தெரிகின்றன.

( நன்றி டேவிட் சுக்மேன் கட்டுரை தகவல்கள்...  )

Download As PDF

Friday, November 21, 2014

ஒளி உமிழும் மீன்கள்!



விதையின ஈரால் வகையை சேர்ந்த "அஸ்ட்ரகோட்" (ostracods)  எனும் கடல்வாழ் உயிரிகளில் 70000 வகைபாட்டியலில் உள்ளதாகவும் அதில் 13000 வகைகள் அழிந்து போய்விட்டதாகவும் சொல்லப்படுகிறது.


இந்த உயிரினங்களில் சில , மின் மினியை போல ஒளியை சிதறுகின்றன. இதற்கெ இவைகளுக்கு சிறப்பு உறுப்புக்கள் உண்டு.  இந்த உறுப்புகளில் ஒளியுமிள் வேதிப் பொருட்களை  (luminescent chemicals)கொண்டிக்கின்றன. தம்மை பாதுகாத்துக் கொள்ள இவ்வுறுப்புகளின் மூலம் ஒளிச்சிதறலை ஏற்படுத்துகின்றன.

இவற்றில் இன்னும் சில வகை தம் இணைகளை கவர்வதற்காக இவ்வொளியை பயன் படுத்துகின்றன.


இந்த வேதி பொருட்களில் லுசிஃபெரின், லுசிஃபெராஸ் ( luciferin , luciferase)  என்பவைகள் முக்கியமாவை. இந்த வேதிப்பொருட்களின் கூட்டு ஒளியை ஏற்படுத்துகிறது. இந்த வேதி மாற்றம் ஆங்கிலத்தில் (bioluminescence) பயோலுமினென்ஸ்.

கொசுறு தகவல் இவைகளில் ஆணினம் இரண்டு "ஆண் குறிகளை (penes) " கொண்டிருக்கின்றன.

கார்டினல் மீன்கள் "ப்ளேங்டான்" Plankton பாசிகளை விரும்பி உண் கின்றன. ஒரே கண்ணாடித் தொட்டியில் மேற்சொன்ன அஸ்ட்ரகோட் களை போட்டு வைத்தால் மீன்கள் அவற்றை விழுங்குகிறது. அந்த நொடியிலே அஸ்டகோட்கள் அவைகளிடம் இருந்து தப்பிக்க ஒளியை உற்பத்தி செய்கின்றன மீன்கள் தவறுதலாக விழுங்கிவிட்டதாக அவற்றை உமிழ்ந்து விடுகின்றன. இவை பார்பதற்கு மீன்கள் ஒளி உமிழ்வதாக தெரிகிறது.

பார்க்க படம் : (Image credit: BBC )


Download As PDF

Thursday, November 20, 2014

கொசுக்கள் ஏன் மனித ரத்தத்தை விரும்புகின்றன ?




யானை மற்ற விலங்குகள் மனித வாடையை பல அடி தொலைவில் மனித நடமாட்டம் இருக்கும் போதே கண்டுபிடித்து விடுகின்றன.  உண்ணும் உணவின் வாடையை சுவையை நாம் உணர்ந்து கொள்வது போலவே என்று சொல்லலாம்.

குறிப்பாக "சல்கேடோன் " (Sulcatone ) எனும் வேதியல் நொதி வியர்வை சுரப்புகளில் வெளிப்படுகிறது.  பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே "என் அன்பே " என தம் குட்டினூன்டு மூளையில் பதிவு செய்துவிட்டன கொசுக்கள் .

நியூயார்க் ராக்ஃபெல்லர் பல்கலைகழகத்தை சேர்ந்த லெல்ஸ்லி வோஷெல் தலைமையில் ஒரு குழு கொசுக்களுக்கு ஏன் மனித ரத்தம் பிடிக்கிறது என்ற ஆய்வில் இறங்கியது.

விலங்குகளை காட்டிலும் மனிதனின் வாழ்க்கை முறை அவைகளுக்கு பிடித்து போனது.   கொசுக்கள் தம் இனத்தை பெருக்குவதற்கு தேவையான சகல ஏற்பாடுகளையும் மனிதர்கள் தம்மை சுற்றி தண்ணீர் மற்றும் கழிவுப் பொருட்களை அமைத்துக்கொண்டதே காரணமாம்.


காடுகளில் ரத்தத்தை தேடி அலைவதற்கு கிராமங்கள் நகரங்கள் அவைகளுக்கு தோதாக அமைந்து விட்டன.  விலங்குகளிடம் இருப்பதை போன்ற தடிமனான ரோமங்கள் மனிதர்களுக்கு இல்லை. அதுவுமில்லாமல் மனிதர்கள் கூட்டங் கூட்டமாக வசிக்கிறார்கள். அதனாலேயே விலங்குகளை விடுத்து அவை மனிதர்களை தேர்தெடுத்து இருக்க வேண்டும்.


14 விதமான கொசுக்களின் மரபியல் கூறுகளை ஆராய்ந்த போது மனிதர்களுக்கும் கொசுக்களுக்குமான தொடர்பினை உறுதி செய்து இருக்கிறார்கள். குறிப்பாக  "Or4" (codes for an odor receptor) எனும் கூறு இதை உறுதி செய்கிறது.


இதுதான் முக்கிய பாரம்பர்ய சாவி என்று சொல்லலாம்.  அதாவது மேற்சொன்ன கூறு அதன் ஜீனில் பதியப்பட்டதால், புதிதாக ஜனிக்கும் கொசுக்கள் மனிதர்கள் மேல் "காதல்" கொண்டு துரத்துகின்றன (! ).


"அடெஸ் அஜிப்டி " (Aedes aegypti)  எனும் வகை கொசுக்களே அதிக அளவில் உலகம் பூராவும் பரவி உள்ளன.

Download As PDF

Tuesday, November 18, 2014

பில்கேட்ஸ் சிந்தனைகளில் இருந்து !



வெற்றியை கொண்டாடுவது சரிதான் அதைவிட முக்கியமானது தோல்விக்கான பாடம் மறைந்து இருப்பதை கவனி.



  • நான் சில பாடங்களில் தோற்றுப்போனேன்.  என் நண்பன் எல்லா பாடங்களிலும் வெற்றி பெற்றான். இப்போது அவன் மைக்ரோசாப்டில் எஞ்சினீயராக இருக்கிறான் நான், மைக்ரோசாப்டில் முதலாளியாக இருக்கிறேன்.



நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய ஊற்று உங்களது மகிழ்ச்சியற்ற வாடிக்கையாளர்களிடம் இருக்கிறது.


  • கடினமான வேலையை செய்ய நான் சோம்பேரிகளையே தேர்ந்தெடுக்கின்றேன்.  ஏனென்றால் அவர்கள் தான் அதை சீக்கிரம் முடிக்க சுலபமான வழியை யோசிப்பார்கள்.


கற்றவை எதிலும் எதிலும் உச்சம் அடையவில்லை...ஆனால் இன்று  பல்கலைகழகங்களில் உச்சம் பெற்ற பலரும் என்னிடம் வேலைபார்பவர்கள்..


  • வெற்றி மோசமான வாத்தியார்.  ”இழப்பில்லை” என்று நுணுக்கமானவர்களை நினைக்க வைத்து வசப்படுத்திவிடுகிறது.



நிறையப்பேர் ஒருவருடத்தில் எவ்வளவோ செய்யலாம் என்று திட்டமிட்டு, அடுத்த பத்துவருடத்தை குறைத்து மதிப்பிட்டு விடுகிறார்கள்.



  • ஒரு வேலையை மட்டுமே செய்ய கூடியவனுக்கு தான் அந்த ஒரு வேலை தேடி வரும்.


வாழ்க்கை எளிதானதல்ல; அதை நீ எளிதாக்கு.


  • சீனாவை ஒப்பு நோக்கும் போது, மில்லியன் பேர்களில் நீ ஒருவன் ஆனால்  அங்கேயோ உன்னைப் போல் 1300 பேர் இருப்பார்கள்.



நீ உள்ளுக்குள் நினைப்பவைகளை உலகம் கண்டுகொள்ளாது...
உன்னிடம் இருக்கும் நல்லவைகளை பற்றி தீர்மானிக்கும் முன்பே
உன்னிடம் அதை எதிர்பார்க்கும்.


  • ஆசிரியர் உன்னிடம் கடினமாக நடந்து கொள்கிறார் என நினைப்பதற்கு முன்...உன் முதலாளியின் வருகைக்காக காத்திரு.



பர்கருக்குள்ளா வெற்றி கிடைக்கும் என்று நினைக்கிறாய் ! 

இதையே மாற்றி யோசித்தால்; 
உயர்வடைந்த உன் தாத்தாக்களோ அதினுள்ளே  வெற்றிக்கான வாய்ப்பு இருப்பதை கண்டார்கள்.



  • மைக்ரோசாப்டின் வளர்ச்சியை பார்த்து என்னை விட யாரும் பெருமை பட்டு விடமுடியாது ஆனால் அதே சமையத்தில் வாழ்நாள் முழுதும் ஒருவன் சம்பாதிப்பதை என் தவறுகளால் நான்  தொலைத்துவிட்டு இருக்கிறேன்.



தொழில் நுட்பம் என்பது ஒரு கருவி.  குழந்தைகளிடையே ஒருவருக்கு ஒருவர் முன்னேற்றம் அடைய தூண்டுகோலாக இருக்கும் ஆசிரியரே முக்கியமானவர் இல்லையா.


  • வெற்றியின் திறவுகோல் பொறுமை !



எதிர்காலத்தில், இணைய பயன்பாடு குக்கிராமங்களை உலக மயமான நவீன 
 வசதிகளுடன் கட்டமைக்கும்.


  • புத்திசாலி தனமான வாழ்க்கை என்பது வாழை அடுத்தடுத்த கட்டங்களுக்கு உருமாறி குலைதள்ளுவதை போல இருக்க வேண்டும்.




எல்லைக்கோட்டை தொட்டுவிட திட்டமிட்டுக்கொண்டே இருக்கிறேன்...நீங்கள் நினைப்பது போல் அந்த கோட்டை நான் கடந்துவிடவில்லை.


சொன்னவர் : பில் கேட்ஸ்


Download As PDF

Friday, November 14, 2014

ஐன்ஸ்டீன் சிந்தனைகளில் இருந்து..




  • தொழில்நுட்ப மாற்றம் என்பது கொடுமைக்காரன் கையில் கிடைக்கும் கோடாளி.


ஒருவன் பள்ளியில் கத்துகிட்ட மொத்த வித்தையும் மறந்து போய் எஞ்சி இருப்பது கல்வி.



  • கப்பல் கரையில் இருப்பது பாதுகாப்பானது தான்... ஆனால் அதற்காக அது உருவாக்கப் படவில்லையே.


ஈர்ப்பு விசை   காதலில் விழுபவர்களுக்கு பொறுப்பாகாது.
உலகில் புரிந்து கொள்ள கடினமான விசயம் ஒன்று உண்டென்றால் அது வருமானவரி.


  • நான் எதிர்காலத்தை பற்றி நினைப்பதே இல்லை, அதுவே சீக்கிரம் வந்துவிடுகிறதே.


செய்யப்படுபவை முடிந்தவரை எளியதாக இருக்கவேண்டும்.  ஆனால் எளிமையான தாக இருக்க வேண்டியதில்லை.


  • ஒருவனின் படைப்பாற்றலின் ரகசியம் எப்படி புரிந்து கொள்ளப்படுகிறது  என்பது அதன் ஆதாரங்கள்(சோர்ஸ்) எப்படி மறைக்கப்படுகிறது என்பதில் இருக்கிறது.


புதிர்களை விடுவிப்பது என்பது அதை உறுவாக்கிய முறையிலே தான் என்று சொல்ல முடியாது.


  • அவனுக்கு வெளியே வாழ்ந்து பார்க்கும் போதுதான் அவன் வாழ தொடங்குகிறான்.


கணிதம் சிக்கலாக இருப்பாதாக கவலைப் படவேண்டாம், என் திறமை அதில் அதி மோசமானது.


  • இரண்டு விசயங்கள் எல்லையற்றது. ஒன்று இந்த பிரபஞ்சம், அடுத்து மனித முட்டாள்தனம். பிரபஞ்சத்தை பற்றி உறுதியா தெரியல.


மூன்றாம் உலகப்போரில் எந்தவிதமான ஆயுதங்கள் பயன்படுத்தப் படுமோ தெரியல, ஆனா
நான்காம் உலகப்போரில் கற்களையும், தடிகளும் பயன்படுத்தப் படலாம்.


  • மந்தையில் மாசற்ற உறுப்பினராக இருக்க வேண்டுமானால் அவர் ஒரு செம்மறி ஆடாக இருந்தாக வேண்டும்.


   ஆபத்து அறியாமல் விபத்தில் இறப்பவனுக்கு "மரண பயம்" அனைத்து பயங்களிலும் நியாயமற்றது 



  • மனநிலை பிறழ்ந்தவர்கள் ஒன்றையே திரும்ப திரும்ப செய்கிறார்கள் ஆனால் விதவிதமான முடிவை எதிர் பார்க்கிறார்கள்.

கற்பனை அறிவைவிட முக்கியமானது. அறிவுக்கு எல்லை உண்டு.  கற்பனை பரந்துபட்டது


  • நல்ல அரசியல் ஆலோசகரின் வயிறு காலியாக இருக்காது.


புத்திசாலிக்கும் முட்டாளுக்கும் ஊள்ள வித்தியாசம். புத்திசாலி எல்லைகளை வகுத்து கொண்டவன்.


  • ஒவ்வொருவரும் புத்திசாலி தான் எப்போது ? தர்க்கரீதியாக சிந்திக்கும் போது. மீன் மரம் ஏறும் என்பதை அறிந்தவனை விட மீன் வாழ்க்கையை அங்கேயே கழிக்கும் என நினைப்பவன் முட்டாள்.


சார்பியல் (ரிலேட்டிவிட்டி) என்பது ? அழகிய பெண்னை ஒரு மணி நேரம் பார்த்துக்கொண்டே இருப்பது மணி துளி போல ஓடிவிடும்  : அதுவே சூடான அடுப்பின் மேல் ஒரு சில மணிதுளி  உட்கார்ந்திருப்பது ஒரு மணி நேரம் போன்றது.


  • திறமைசாலி பிரச்சனையை அணுகுகிறான்.  அறிவாளி அதில் இருந்து தப்பிக்க நினைக்கிறான்.




A = x + y + z  இதில் A என்பது வாழ்க்கையின் வெற்றி , x  என்பது வேலை, y  என்பது விளையாட்டு, z என்பது வாயை மூடி இருப்பது.


  • ஆண் கடைசிவரை மாற மாட்டோம் என்று பெண்னை கலியாணம் செய்துகொள்கிறான்.  கடைசிவரை சேர்ந்திருப்போமா...என்று நினைத்த பெண், ஆணை கலியானம் செய்து கொள்கிறாள் . இதில் இருவருமே ஏமாற்றமடைகிறார்கள்.


எதையும் அறிவியல் பூர்வமாக வரையறுத்து விடலாம், ஆனால் அதை உணர முடியாது.  பீத்தோவனின் சிம்பொனி அலையின் வேறுபாடு மற்றும் அழுத்ததை பொறுத்தது என்று சொல்வது போல.




  • தண்டனைக்கு பயந்துதான் ஒழுக்கமானவனாக இருக்கிறான், ஒழுக்கமானவனுக்கு பரிசு கிடைக்கும் என்ற நம்பிக்கையிலா அவன் இருக்கிறான்.




ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுக்குள்ள உரிமை கொடுக்க வேண்டும்.




  • தனியொருவனுக்கு,  அவனுக்கு தெரியாமல் ஏதும் மறைக்கப் படவில்லை என அரசியல் நிறுவனங்கள் உறுதி செய்யவேண்டும்.



வாழ்க்கையின் ஜீவாதாரமாக இருப்பது வேலை மட்டுமே.




  • ஆர்வம் எனும் புனிதத்தை இழக்கக் கூடாது.


அனைத்திற்கும் வெளியே  இருந்து பார்க்கும் போது கவலை கொள்வதற்கு சின்னதும் பெரியதுமான பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும்.


  • காகிதங்களில் எழுதி வைத்துக்கொள்வது நாம் ஞாபகப் படுத்தி கொள்வதற்காகத்தான். மூளை சிந்திபதற்கு மட்டுமே.




சொன்னவர் : ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்






Download As PDF

Wednesday, November 12, 2014

விச சிலந்திகள் !

கரப்பான்களை கண்டு எப்படி பின்வாங்குகிறோமோ (பெரும்பாலான பெண்களின் எதிரி ! ) அதுமாதிரி சிலந்திகளை கண்டு மனிதன் பயப்படத்தான் செய்கிறான்.

இந்த பயத்தை ஆங்கிலத்தில் "அரெச்னோ போபியா" "arachnophobia" என்கிறார்கள்.

நாற்பது சதவீத "போபியாக்கள்" பூச்சிகள், எலிகள், பாம்புகள் மற்றும் வெள்வால்களை ஒட்டியே ஏற்படுகிறது.   மனிதனுக்கு காலங்காலமாக  பூச்சிகள் முக்கியமாக சிலந்திகளின் மீதான பயம் அவனது டி.என்.ஏவில் பதியப்பட்டு இருக்கலாம்.  பாம்புகளை போல சிலந்திகள் விச ஜந்துகளாக இருந்து இருக்கின்றன.



"படத்தில் மயில் சிலந்தி "


விச சிலந்தி கடித்து இறந்தவர்கள் என்பது குறைவுதான்.  விசமுள்ளவை சிலந்திகள்  கடித்தால் தேள்கடி போல கடு கடுப்பு
இருக்கும் குழந்தைகளை கடித்தால் மரணம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஒரு குழந்தை இறந்து போனதை தொடர்ந்து 2000 ல்  பிரேசிலில் நடத்தப் பட்ட ஆய்வில்  கடி பட்டவர்களில்  80% பேருக்கு பெரிய பாதிப்பு இல்லை என தெரிவிக்கப் பட்டது .  விச சிலந்தி கடித்தால் மனிதனுக்கு அலர்ஜி மற்றும் தோல் (skin necrosis) பாதிப்பு ஏற்படுகிறது.


அமோசான், பிரேசிலில் காணப்படும் விச சிலந்திகள் வாழை ஏற்றுமதியின் போது மற்ற நாடுகளுக்கும் இடம் பெயர்ந்தன.

ஃபினுட்டிரியா சிலந்திகள் வாழைமரங்களை வசிப்பிடமாக கொண்டவை. சில விச சிலந்திகளின் படங்கள்...


" Cute monste -  Phoneutria spider " 



-Hadronyche -



 funnel-web spiders of Australia


 - fera -




Latrodectus mactans


பொதுவில் உலகில் பூச்சி கடித்து இறப்பவர்களை விடவும் விபத்தில் இறப்பவர்களே அதிகம்.
Download As PDF

Wednesday, August 27, 2014

வைரஸ் கிருமிகளற்ற உலகம் சாத்தியமா ?



சமீபத்தில் உலக சுகாதார அமைப்பு (the World Health Organization  WHO)  அம்மை சாம்பிள்களை(மாதிரிகள்) ஒழித்து விடுங்கள்  ( ”to destroy the smallpox virus once and for all” ) என்ற அறிவிப்பை சப்தமில்லாமல் தெரிவித்தது.

மனிதர்களுக்கு நோய் வருகிறது அந்த நோய் கிருமிகளை ஆய்வு மையங்களில் எதுக்கு பாதுகாத்து வைக்கனும் ? அதற்கு உலக நாடுகள் சொல்லும் காரணம் திரும்ப அது வேறு வடிவில் தாக்கினால் அவற்றை ஒழிப்பதற்கான தடுப்பு நடவடிக்கைக்கு அது அவசியம் என்பது.  இது வெளிப்படையாக சொல்லப் படும் கருத்து தான்.  ஆனால் உண்மையில் வைரஸ் கிருமிகளின் மாதிரிகளை பாதுகாத்து வைத்துக்கொள்வது ஒவ்வோர் நாடும் எதிரி நாட்டின் மேல் ஏவுவதற்குதான் என்பது மறைக்கப்பட்ட உண்மை.

வெள்வால்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியதாக சொல்லப்படும் சமீபத்திய உயிர் கொள்ளி நோய் “எபோலா” திட்டமிட்டு பரப்பப்பட்டு இருக்கலாம் யார் கண்டது ?

தடைசெய்யப்பட்ட மருந்து வகைகள் சர்வ சாதாரணமாக ஊடுருவி இருப்பதுவும் அத்தகைய ஒரு சதிகளில் ஒன்றுதான்.

80" களில் முற்றாக ஒழிக்கப்பட்டதாக சொல்லப்படும் சின்னம்மைமாதிரிகளை இதுவரை ஒழிக்காததுவும் எதிரி நாடு நம்நாட்டின் மேல் பிரயோகித்தால் என்ன செய்வது? இப்பிடியான வலுவான காரணங்களும் உண்டு.  உலக நாடுகளில் அமெரிக்கா, ரஷ்யா (அப்போதைய) இதே காரணத்திற்காகத்தான் அந்த மாதிரிகளை அழிக்காமல் வைத்து இருந்தன.  அப்படியானால் அந்த நாடுகள் மட்டும் தான் மாதிரிகளை வைத்து இருந்தனவா என்றால் அதுவும் இல்லை பெரும் பாலான நாடுகள் அம்மாதிரியான வைரஸ் மாதிரிகளை சேமித்து வைத்து இருக்கின்றன.

இன்னும் சொல்லப் போனால் பலப் பல வைரஸ் மாதிரிகள் ஏதோவொரு காரணங்களுக்காக வைக்கப் பட்டிருக்கும்.  அதிகாரப்பூர்வமான ரெக்கார்டுகள் என்பது கண்கட்டு வித்தைதான்.


விஞ்ஞானிகள் சொல்வது ஒரு மனிதனின் டி.என்.ஏ மரபியல் கூறுகளை (GENETIC SEQUENCE) அடுத்த அடுத்த தலைமுறைக்கு கடத்துகிறது [epigenetics !].  அதன் கட்டமைவுகள் மேம்பட்டு கொண்டே செல்கிறது.  வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட டேட்டாவும் அதில் பதியப்பட்டிருக்க வேண்டுமல்லவா? என்று யோசித்தோமால அதற்கும் வாய்ப்பு இருக்கிறது.  உதாரணமாக எகிப்திய மம்மிகளின் உடல் திசுக்களில் இன்னமும் சின்னம்மை கிருமிகள் இருக்கின்றன என ஒரு ஆய்வறிக்கை சொல்லுகிறது. வைரஸ்கள் எவ்வளவு ஆண்டுகாலம் உயிர்ப்புத் தன்மையோடு இருக்கும் என்பதுவும் அறிவியலுக்கு அப்பாற்பட்ட விசயமாக இருக்கிறது. 

"smallpox"

ஒரு நோய் முற்றாக அழிக்கப்பட்டதாக சொல்லப்படுவதெல்லாம் ? என்ற கேள்வி எழுகிறது. ஆம் எந்த நோயும் முற்றாக ஒழிக்கப்படவில்லை அந்த கிருமிகள் ஏதோ ஒருவடிவில் ”மோன” நிலையில் இருக்கின்றன. வாழ்க்கையில் ஒரு சுழற்சி திரும்ப திரும்ப வருவது போல அவை மீண்டு எழுவதும் தவிற்க இயலாதது.

இன்னொன்றையும் நாம் கவனித்தில் கொண்டால் எவ்வளவுக்கெவ்வளவு நாம் தடுப்பு நடவடிக்கை எடுத்தாலும் அவ்வளவுக்கு அவ்வளவு ஏதோ ஒரு வடிவத்தில் வைரஸ்கள் தம்மை உருமாற்றிக்கொள்கிறதோ ? ( ! ) என்பதும் சிந்திக்கவேண்டிய விசயம்.




A sophisticated laboratory could resurrect smallpox right now. And at some point in the near future, anyone could. And if that is the case, then what would destroying the samples in these two labs in the US and Russia really accomplish? We might be able to destroy smallpox next year, but we won't be able to destroy it forever.
Download As PDF

Thursday, August 7, 2014

வெளிசப்தங்கள் கனவை பாதிக்கிறதா ?



எனது அனுபவத்தை சொல்கிறேன்...

அன்று வீட்டில் நான் மட்டுமே இருந்தேன். வழக்கம்போல சாப்பிட்டபின்
தொலைக்காட்சி பார்த்துவிட்டு தூக்கம் கண்ணை சொக்க தூங்க சென்றேன்.
காற்று வரட்டும் என்று சன்னலை திறந்து வைத்து விட்டு,கண்ணை கூசுகிறது
என்று இரவு விளக்கையும் நிறுத்தி விட்டேன்.  நல்ல உறக்கம்.

லேசாக உறக்கம் கலைந்த போது என்னால் முழுவதுமாக கண்ணை திறக்க முடியாமல் சொக்கியது, அப்போது என்ன மணி என்றும் தெரியவில்லை, திறந்திருந்த சன்னலில் இருந்து நீளமான தடிமனான ஜந்து ஊர்ந்து கட்டிலில் இருந்த என் கால் மாட்டில் நைசாக இறங்கியது. உதறல் எடுத்தாலும் என்னால் அடித்துப்போட்டது போல அசையக்கூட முடியவில்லை.

அந்த ஜந்து அதோடு நிற்கவில்லை தரையில் இருந்து எழும்பி
என் முகத்திற்கு நேராக நிற்கிறது. புஸ்...புஸ் என்ற சப்தம் இன்னும் என்னை
காபுரா படுத்தி எடுத்தது. எனது சின்ன சலனம் கூட அதை கோபப் படுத்த
முடியும்.  என்ன செய்வது என்றே தெரியவில்லை...

 எந்த அசைவும் இல்லாமல் அப்படியே படுத்து இருந்தேன்....எவ்வளவு நேரம் அப்படி படுத்து இருந்தேன் என தெரியவில்லை. படு முயற்ச்சி செய்து கண்ணை விழித்து பார்த்தேன்.  மச மசவென்று இருந்ததது ஆனால் அது இப்போது அங்கு இருக்காது என்று உள்மனது சொல்லியது.  எப்படியோ தட்டு தடுமாறி டக் கென்று லைட்டை போட்டு பார்தேன்.... எதுவும் இல்லை.

பின்புதான் என்ன நடந்திருக்கும் என புரிந்தது.  அதாவது என் கால்மாட்டில் இருந்த துப்பட்டியின் ஓரம் காலில் பட்டுக்கொண்டும், தலைக்கு மேலே நிறுத்தி ஓடி கொண்டிருக்கும் (பெடஸ்டல்) மின்விசிறியின் உஸ் என் ஓசையும், தரையில் கிடக்கும் சுருட்டி வைக்கப்பட்டிருக்கும் மெத்தையும் பாம்பை உருவகித்து என்னை உசுப்பேற்றி இருக்கிறது என் மூளை.


சரி அது கனவுஅல்ல...

இரவில் அலைபேசியை சார்ஜில் போட்டு விட்டு சார்ஜ் முடிஞ்சதும் சுவிட்சை
நிறுத்தனுமே என்று நினைத்து தூங்கிவிட்டேன்.

"டேய் எழுந்திருடா..." அம்மாவின் சப்தம் என்னை எழுப்பியது. எழுந்து பார்க்கிறேன்.

அம்மா நல்லா தூங்கிட்டு இருக்காங்க. அதற்கு ஒரு செகண்ட் முன்பு அந்த
குரல் ரீவைண்ட் ஆகியது எப்படி?.  ஒருக்களித்து படுத்து இருந்ததால் ரத்த ஓட்டம் தடை பட்டு கை விண் விண் என்று வலி தெரித்தது.  அந்த குரலுக்கு முன்னாடி கனவு ஓடிக்கிட்டு இருந்து இருக்கு ஆனா அதை நினைவுக்கு கொண்டு வரமுடியல..

போனை எடுத்துப் பார்த்தேன் 100% அப்போதுதான் சார்ஜ் ஏறி முடித்திருந்தது. அப்ப   வெளிப்புர சப்தத்தை மூளை எழுதிய கனவுக் கதையில்
அம்மாவின் வாய்ஸை அப்லோட் செய்திருக்கிறது.   வெளிப்புர சப்தங்களை
விழித்திருக்கும் "சப் காண்ஸியஸ் மனம்"  அந்த சப்தத்தை நம் கனவுடன் கோர்த்து கதை திரிக்கிறது.

இதே போல் கொள்ளைக்காரர்களிடம் மாட்டிக்கொண்டது
போல இன்னொருவருக்கு  கனவில் ; தூரத்தில் கேட்ட துப்பாக்கி சப்தம் அருகில்  கேட்கிறது. அவருக்கு ஒரு கைத்துப்பாக்கி கிடைக்க அவரும் எடுத்து சுடுகிறார் ஆனால் அந்த சப்தம் தூரத்தில் இருந்து கேட்பதுபோல இருந்திருக்கிறது.

பக்கத்து வீட்டில் கார் எடுக்கும் வெளி சப்தம் இவருக்கு துப்பாக்கி சுடும் சத்தத்தோடு கனவு ஓடிக்கொண்டு இருந்து இருக்கிறது.
சிலருக்கு தொலைக்காட்சியில் தொல்லை காட்சி பார்த்தபடியே தூங்கி விட்டால் வரும் கனவிலும் அந்த சீரியல் ஓடிகொண்டு இருக்கும்.  ஆனா அடுத்த எபிசோடுகள் ஓடுமான்னா பெரும்பாளும் இருக்காது.  அவர் இதுவரை
பார்த்த எபிசோடுகளில் இருந்தே முன்னுக்கு பிறனான காட்சிகள் ஓடும்.

முகப்புத்தகத்தில்,,அதாங்க பேஸ்புக்கில் மேய்ந்தபடியே தூங்கி விடுபவர்களுக்கு வரும் கனவில் ஸ்டேடஸ் போடுர மாதிரியோ கமெண்ட் செய்யரமாதிரியோ அதிகமான லைக்குகள் கமெண்டுகள் அவருக்கு விழுவதுமாதிரியும் கனவுகள் ஓடும்.

பாத்ரூமில் தண்ணீர் சொட்டும் சப்தம் கூட டுவிஸ்டாக கனவில் மிதப்பவருக்கு அருவி சப்தமாக இருக்கும்.

குடிதண்ணீர் வரலயே நாளக்கி என்ன செய்வது என்ற சிந்தனையில் தூங்கு
பவருக்கும் வரண்ட பாலைவனத்தில் தவிப்பது போல கனவு வரலாம்.

ரயில் செல்லும் சப்தம் கேட்கும் தொலைவில் இருப்பவர்களுக்கு
அந்த சப்தம் வேறு பல விநோத கனவுகளைத் தருகிறது.

எங்கோ தூரத்தில் சென்று கொண்டிருக்கும் மோட்டார் பைக்கின் சப்தம் கூட
கனவில் யானையின் பிளிரலாக கேட்கும்

வெளிப்புர சப்தங்களை உணரும் நம் மூளை ஒரு ஓவியனின், சிறந்த எழுத்தாளரின் திறமையோடு கதை சொல்லி செல்கிறது.  பல எழுத்தாளர்கள் கனவில் முடிவு கிடைக்கிறது.  ஓவியனுக்கு வரும் கனவில் அழகிய ஓவியங்களையும், பெரிய பாராங்கல் கனவில் கானும் சிற்பி அழகிய சிலையையும் வடிக்கிறான். பிச்சை காரனுக்கும் பலவிதமான  உணவுகள் சாப்பிடுவது போல கனவு வருகிறது. கணித புரபசருக்கு பல்வித குறியீடுகளும் கணக்கீடுகளும் ஓடும்.

பெரும்பாலான கனவுகள் ஞாபகத்தில் இருப்பதில்லை.  கனவு முடியும் போது
விழிப்பு வந்தால் கொஞ்சம் ஞாபகப்படுத்த முடிகிறது.

கனவுகளால் எந்த பிரியோஜனமும் இல்லை என்று சொல்ல முடியாது
கனவுகள் ஆராய்ந்தால் நம் பிரச்சனைகளுக்கு (ஆலோசனை) தீர்வும் கிடைக்கும்.

வெளிப்புற சப்தங்கள் கனவை தடை செய்வது என்பது அந்த சப்தமானது பெரிதாக இருந்தால் மட்டுமே. தூக்கம் கலைக்காத சப்தங்கள் கனவில் இருப்பவருக்கு விசுவல் எபெக்ட்டோடு செல்லும்.

ஏன் அவரின் குறட்டை சப்தம் கூட கனவில் பல டிவிஸ்ட்டுகளை கொடுக்கலாம் !! .


Download As PDF

Wednesday, July 30, 2014

மீன்கள் விசிலடிக்குமா ?

மீன்கள் சப்தம் எழுப்புமா ? 


மற்ற விலங்கினங்களை போல் அல்லாமல் மீன்களால் சப்தம் எழுப்ப
முடியும்.  மீன்களுக்கு வாயுப் பை [air bladder] என்ற மீச்சிறு உறுப்பு இருக்கு
இந்த காற்றுப்பையில் ரத்தத்தில் இருந்து வாயுக்களை நிரப்பி வைத்துக் கொள்ளும். இது அதன் மிதவை நிலையை தக்கவைத்துக் கொள்ள உபயோகப் படுத்திகொள்கிறது.

தண்ணீர் மேல் மட்டத்தில் சென்றும் வாயுவை நிரப்பி கொள்ளும். சில
மீன்கள் இந்த உறுப்பை கொண்டு சப்தம் செய்கிறது.   சில மீன்கள் பல் போன்ற
உறுப்புக்களை நற நற வென்று கடித்தும் சப்தம் ஏற்படுத்தும்.


(Oyster Toadfish ) தேரைமீன்கள் தம் இணையை அழைக்க விசில் (சீல்கை) சப்தம்
எழுப்புகிறது. இந்த சப்தத்தை மனிதர்களால் கேட்க முடியும்.

(mackerel utter )மேக்ரெல், drumfish டிரம் மீன் வகை மீன்கள் எழுப்பும் ஒலியை நீர் மேல்மட்டத்தில் கேட்டிருப்பதாக மீனவர்கள் சொல்கிறார்கள்.


[drumfish] டிரம் மீன் கள் நீரில் 60 ஆழத்தின் கீழ் இருந்து ஒலி ஏற்படுத்துகின்றன.

அவ்வளவுக்கு ஏன் நாம் வீடுகளில் வளர்க்கும் வண்ணமீன்களில் குறிப்பாக
தங்கமீன்கள் எழுப்பும் "பொளக்"  ஒலியை அவதானிக்கலாம்.

சரி மீன்களுக்கு காது உண்டா சப்தங்களை எப்படி கேட்கிறது?

கடலின் அடியில் சென்றுவரும் "டிரைவர்கள்" கடல் உள்ளே அமைதியாக
இருப்பதாக சொல்கிறார்கள்.  ஆனால் பல சப்தங்களை மனிதனால்
கேட்க முடிவதில்லை என்பதே உண்மை. மேலே சொன்னோம் மீன்கள்
சப்தம் எழுப்புவதாக அப்படி இருக்கும் போது சப்தங்களை கேட்க அவை
களுக்கு காதுகள் இருக்கின்றனவா?  தலைப்பகுதியில் இருந்து வால்வரை நீண்ட நீளமான நுணர் உறுப்புகள் மிக மெல்லிய உறுப்பு மூலம் சப்தங்களையும் அதிர்வுகளையும் அவைகள் உணர்ந்துகொள்கின்றன.


பூனை மீன்களால் [Catfish] எல்லாவித சப்தங்களையும் கேட்க முடியும் என்கிறார்கள். (படத்தில் இருப்பது)

இருட்டில் மீன்கள் ஒன்றை ஒன்று மோதாமல் நீந்துமா?

மீன்களின் செவுள்களில் (Gills )  இருந்து வால்வரை மெல்லிய புலன் உறுப்பு மற்ற மீன்கள் மீது மோதாமல் செல்லவும் எதிரிகளிடம் தற்காத்துகொள்ளவும் உதவுகிறது. இது மிக மெல்லிய அதிர்வலைகளை உடனுக்குடன் உணர்ந்துகொள்ளும். இரவில் எதிரே இருப்பது மீனா பாறையா என்பதை எல்லாம் இந்த நுணர் உறுப்பின் மூலம் அது அறிந்துகொள்ளும்.

(இருட்டில் எதிரே வருபவன் மீது மோதாமல் நம்மால்
போக முடியுமா? )

வலை இல்லாமல் கைகளால் மீன் பிடித்தல் 

(maori) நியூசிலாந்து குக் தீவின மக்கள் "மெளரி" அவர்களின் பாரம்பர்ய மீன்
பிடித்தல் வித்தியாசமானது.  தெளிந்த நீருக்கடியில் சலனமில்லாமல் இருந்தபடியே மீன்களை தடவி (கிச்சு கிச்சு மூட்டுவது போல) பின் அவற்றை வெறும் கைகளால் பிடிக்கிறார்கள்.


Download As PDF

Sunday, July 20, 2014

வெளிநாட்டில் வேட்டி அனுபவம் : கவிஞர் கண்ணதாசன் நினைவலைகள்

சமீபத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கிளப்பில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஹரி பரந்தாமன் மற்றும் இரு உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் வேட்டி உடுத்திச் சென்றதால் , கிளப்புக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து தமிழர்களின் பாரம்பர்ய உடை மடுமல்ல தன் மான பிரச்சனையாக சட்ட சபை வரை விவாத பிரச்சனையானது வேட்டி. தொடர்ந்து கிளப்புகள் அனுமதி மறுப்பது முதல்வரின் கண்டனத்திற்கு உள்ளானது.


வெளிநாட்டில் வேட்டி கட்டி சென்ற கவிஞர் கண்ணதாசனின் அந்தக் கால சுவரஸ்ய பயண அனுபவத்தை , படித்ததில் இருந்து உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

அதற்கு முன் சின்ன நகைச்சுவை காட்சிகள்.....

‪#‎தலீவரின்_மனைவி‬

ஏனுங்க சபைக்கு போறதா சொன்னீங்கன்னுதான் நாலஞ்சு வேட்டி எடுத்து வெட்சிருக்கேன்...மறக்காம எடுத்திட்டு போங்க. அப்புரம் துண்டக் கானோம் துணியக் கானோமினுட்டு கூவாதீக


‪#‎தலைவனும்_தொண்டனும்

தலைவரே ....உங்க வேட்டி??

அதா இப்ப முக்கியம் சண்டைல காணாம போறது சகஜம்பா...


#அரசியல் வாதி கணவனிடம்...மனைவி

"ஏனுங்க எங்கேங்க உங்க வேட்டி ?"

"அடியேய்..எத வேனா கேளு...வேட்டிய மட்டும் கேட்காத...ஓடுகாலி...ஓடுகாலி"

"வேட்டிஇல்லாம வந்திருக்கீங்களே எங்கேன்னு கேட்டா ஓடுகாலின்றீங்களா? நா அம்மா வூட்டுக்கு போறேன்"

"அய்யய்யோ...கிழிஞ்சது, அவங்க கிட்ட கேட்கப்போறியா? "

"கிழிஞ்சிடுச்சா முன்னமேயே சொல்றதுக்கென்ன"



கவிஞர் கண்ணதாசனின் வெளிநாட்டு பயண அனுபவம், முக்கியமாக வேட்டி அனுபவம் அதில் இருப்பதால் இந்த கட்டுரையை இங்கு பகிர்கிறேன். அந்தக் கால காட்டத்திற்கு நம்மையும் அழைத்து செல்கிறார், கவிஞர்.

சந்தித்தேன் சிந்தித்தேன்....கவிஞர் கண்ணதாசன் நூலில் இருந்து....



ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் நானும், மன்னை அம்பிகாபதியும், மெல்லிசை மன்னர் தம்பி விஸ்வநாதனும், பன்மொழிப் புலவர் தெ.பொ.மீ யும் தெரு வழியாக நடந்து வந்து கொண்டிருந்தோம். எங்களில் மன்னை அம்பிகாபதி மட்டும் வேட்டி கட்டி, மேலே ஜிப்பா போட்டிருந்தார். அந்த வேட்டி காபூல் நகரத்துச் சிறுவர்களுக்கு வேடிக்கையாகத் தெரிந்தது. அவர்கள் கூட்டமாகக் கூடி அந்த வேட்டியை இழுத்துப் பார்க்கத் தொடங்கி விட்டார்கள். அம்பிகாபதிக்கு கோபம் வந்துவிட்டது.

“நீங்கள்தானடா கோமாளிகள்” என்று அவர்களைத் தமிழில் திட்டினார்.

காபூலில் கேலியாகத் தெரிந்த வேட்டி, சோவியத் யூனியனில் துருக்மினிஸ்தான் தலைநகர் அஷ்காபாத்தில் பெரும் மரியாதைக்குரியதாயிருந்தது.

சின்னச் சின்னப் பெண்களெல்லாம் கூட அம்பிகாபதியின் கையைப் பிடித்துக் கொண்டு படம் எடுத்துக் கொள்ள ஆசைப்பட்டார்கள்.

நல்ல வேளையாக நானும் வேட்டி கொண்டு போயிருந்தேன்.

துருக்மினிஸ்தானில் சீசன், அசல் பெங்களூர் மாதிரியே இருக்கும். மாஸ்கோவைப் போல் அங்கே பனி பெய்வதில்லை. லேசான வெய்யிலும், குளிர் காற்றும் இருக்கும். ஆகவே, நானும் வேட்டி கட்டிக் கொண்டு போட்டோவுக்கு நிற்க ஆரம்பித்தேன்.

இந்தோ சோவியத் கலாசாரக் கழகத்தின் தமிழகப் பிரிவுக்கு நான் துணைத் தலைவர். சோவியத் அழைப்பின் பேரில் நாங்கள் சென்றிருந்தோம்.

அஷ்காபாத்தில் நாங்கள் போய் இறங்கிய போது, காலை எட்டு மணி. விமானத்தின் கதவு திறக்கப் பட்டதும், வாத்தியங்கள் முழங்கின. படப் பிடிப்புக் காமிராக்கள் சுழன்றன. மாநில மந்திரிகளெல்லாம் வந்திருந்தார்கள்.

”அண்ணே! யாரோ மிகப் பிரபலமான ஒருவர் இந்த விமானத்தில் வந்திருப்பார் போலிருக்கிறது” என்ற படியே விமானத்தை விட்டுக் கீழே இறங்கினார் தம்பி விஸ்வநாதன்.

”நான் தான் அது! “ என்றார் அம்பிகாபதி.

அவர் சொன்னதிலும் தவறில்லை. வந்திருந்தவர்கள் எங்கள் கழுத்தில் மாலைகளைப் போட்டார்கள்.

லெனின் கிராடில் ‘செம்பியன்’ என்ற தமிழறிவு மிக்க ரஷ்யர் எங்கள் துணைக்கு வந்தார்.

லெனின் கிராடைச் சுற்றிப் பார்த்த போது அங்கேயும் அம்பிகாபதிக்குத் தான் சிறப்பான வரவேற்பிருந்தது.

இந்த வேட்டியையும் சட்டையையும் ரஷ்யர்கள் எப்படி மதிக்கிறார்கள் என்பதை அப்போதுதான் பார்த்தேன். ஆனால் மாஸ்கோவில் நிலமை வேறு. அங்கே அடுப்பையே தூக்கி இடுப்பில் வைத்துக் கொள்ள வேண்டிய அளவுக்குக் குளிர். அங்கேயும் அம்பிகாபதி வேட்டி சட்டையோடுதான் காட்சியளித்தார்.

எனக்கு எங்கேயுமே இருப்புக் கொள்ளாது. அற்புதமான சர்க்கஸ். அதிலிருந்து பாதியிலே ஹோட்டலுக்குப் போக விரும்பினேன். தெ.பொ.மீ க்கு ரொம்ப வருத்தம். கூட வந்த பெண்மணி, “கார் வரத் தாமதமாகும்” என்றார்.

ஒரு கிலோமீட்டர் தொலைவு நடக்க வேண்டும்.

அம்பிகாபதியின் வேட்டியையும், சட்டையையும் பார்த்து மாஸ்கோ ஜனங்களெல்லாம் பரிதாபப் பட்டார்கள். துணைக்கு வந்த அம்மையார் தன் கோட்டுக்குள்ளேயே அம்பிகாபதியையும் திணித்துக் கொண்டு, பனி தாக்காதபடி அவரைக் கட்டிப் பிடித்துக்கொண்டார்.

இருப்பினும், எனக்கும் அம்பிகாபதிக்கும் அதனால் பாதங்கள் பாளம் பாளமாக வெடித்துவிட்டன. காரணம் நாங்கள் பூட்ஸ் போடவில்லை.

நான் எந்த நாட்டிலும் எந்தப் பெண்ணைக் கண்டாலும் முத்தமிடுவேன். அம்பிகாபதி அதற்குத் தூபமிடுவார். ஒரு கூட்டுப் பண்ணையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்ற போது தெ.பொ.மீ க்கு கெட்ட கோபம் வந்துவிட்டது.

துருக்மினிஸ்தானில் ‘மாரே’ என்று ஓர் அற்புதமான ஊர். அங்கே அம்பிகாபதியோடு படம் பிடிக்க ஏக கிராக்கி. அந்த ஊரிலுள்ள எல்லோருமே கலைஞர்கள்.

தம்பி விஸ்வநாதனைப் பாடச் சொல்லிவிட்டு. நாங்கள் படத்துக்குப் ”போஸ்” கொடுத்தோம்.

எந்த ஊருக்குப் போனாலும் தெ.பொ.மீ யோடு அம்பிகாபதியைத் தங்க வைத்து விடுவோம். தெ.போ.மீ மிகவும் கண்டிப்பானவர். அம்பிகாபதி அவருக்குக் கட்டுப் பட்டு அவர் கூட இருப்பார். நானும் விஸ்வநாதனும் அறையில் பத்துப் பேரைக் கூட்டி வைத்துக் கொண்டு பாட்டுப் பாடுவோம்.

1967 கடைசியில் சோவியத் யூனியன் சுற்றுப் பயணம் முடித்துத் திரும்பினோம். அதுவரை காங்கிரஸ்காரராக இருந்த அம்பிகாபதி, சோவியத் விஜயம் முடிந்து திரும்பியதும் இந்தியக் கம்யூட்னிஸ்ட் கட்சியில் உறுப்பினர் ஆனார். இப்போது, சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார்.

இரண்டு நாட்களுக்கு முன் அம்பிகாபதி என்னைச் சந்திக்க வந்தார்.
நேற்று (10-1-80) அவர் சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றிருக்கிறார். ஒரு மாதம் சிங்கப்பூர் மலேஷியாவில் சுற்றுப்பயணம் செய்கிறார்.

சோவியத் யூனியனில் எந்த வரவேற்பிலும் அவர் பெயரை “அம்பிகாபதி” என்று உச்சரிப்பதில்லை. ‘அம்பிகபோதி’ என்றழைப்பார்கள்.

விஸ்வநாதனை “விஷ்வகாந்த்” என்பார்கள்.

தெ.பொ.மீ யை ரெக்டார். நான் கொண்ணதாசன்.

அதோ அந்த துருக்மினிஸ்தானில், கோரகும் கால்வாயில் நானும், தம்பி விஸ்வநாதனும், அம்பிகாபதியும் பிறரும் படகு சவாரி செய்த காலங்கள்.....

* * * * * * * * * * * * * * * * *

Download As PDF

Wednesday, July 2, 2014

பூமியில் இருந்து நிலவுக்கு டார்ச் அடிக்க முடியுமா ?



அப்ப பத்து 12 வயசிருக்கும் வானத்தில் வட்டமா டார்ச் ஒளி சீரான
வேகத்தில சுத்திட்டு இருக்கும் என்ன விட பெரிய பசங்களுக்கு அது
என்னன்னு தெரிஞ்சிருந்தது. நாங்க இருக்கும் பகுதி நகரத்தில் இருந்து 8 கிலோ மீட்டர்ங்கரதால அந்த வட்ட டார்ச் ஒளி அமாவாசை இருட்டில் பளிச்சுன்னு தெரியும். ஜம்போ சர்கஸ், ஜெமினி சர்கஸ், ரஷ்யன் சர்கஸ் இப்பிடி பல சர்கஸ் கம்பெனிகள் அப்ப பிரபலமா இருந்தது. அவங்க கூடாரத்தில் இருந்து ஒளிவட்ட சமிங்சை தான் அது.

கயித்து கட்டில் போட்டு வாசலில் படுத்துப்போம். சிறுவர்களான எங்களுக்கு அது ரொம்ப சுவாரஸ்யமான அனுபமா இருந்துச்சு. வானத்தின் நட்சத்திர சிமிட்டல்களை ரசிச்சுகிட்டே பல கதைகள் பேசி மகிழ்வது ஏகாந்த அனுபவம் இப்போதைய சிறுவர் சிறுமிகளுக்கு இல்லாம போச்சு.

சர்கஸ் காரங்களும் அந்த ”சர்ச் லைட்டை” இப்ப அடிக்கராங்களான்னு தெரியல... அப்ப இருந்த வீதி விளக்கு வெளிச்சங்கள் முன்ன மாதிரி மஞ்சளா மினுக்கு மினுக்குன்னு இல்லாம பளீர்ன்னு இருப்பதால சர்ச் லைட் தோத்துப் போச்சானும் தெரியல...

அவங்களோட பெரும்பான்மையான இரவு வாழ்க்கை வீட்டுப் பாடம் (ஹோம் வொர்க்) செய்வதிலும் மீதி டி.வி பெட்டியும் எடுத்துகிச்சு. என் வீட்டுக்கு உறவு குழந்தைகள் வந்து தங்கினால் அவங்களுக்கு மொட்ட மாடி அனுபவத்த கொடுகிறேன். நிலாச்சோறு சாப்பிடுவது குழந்தைகளுக்கும் ஏன் பெரியவங்களுக்கும் பல சிந்தனை ஓட்டங்களை ஏற்படுத்தும் அட்வெஞ்சர்னு சொல்லலாம்.

சரி கேள்விக்கு செல்வோம்...பூமியில் இருந்து நிலவுக்கு டார்ச் அடிக்க முடியுமா ?

நிலாவின் மேற்பரப்பு கண்ணாடி போல ஒளியை பிரதிபளிக்க செய்யும் வகையில் அமைஞ்சிருக்கு. சூரிய கதிர்கள் நிலவின் மேற்பரப்பில் பட்டு எதிரொளிப்பது தெரிந்ததுதான். சினிமா திரையை போல பெரிய திரைன்னும் சொல்லலாம். அமாவாசை காலங்களில் பூமியில் இருந்து சர்ச் லைட் மாதிரி பெரிய லைட்ட அடிக்கமுடியுமா ? முடியும். பெரிய பவர் லேசர் புரொஜெக்டர் வெச்சு 4 லட்சம் கிலோ மீட்டருக்கு ரீச் ஆகரமாதிரி ஒளி கற்றைகளை பாய்ச்சினா அது நிலவில் பட்டு எதிரொளிக்கும். என்ன அந்த செலவு “அஸ்ட்ரானாமிகளா” இருக்கும் அம்புடுதான்.





Download As PDF

ஓரிரு வரி துணுக்குகள் !

  • உலகம் முழுக்க பாட்டிலில் அடைத்து விற்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரில் 40 சதவீதம் நேரடியாக பைப்பில் பிடித்து விற்கப்படுகிறது ” ஒரு பகீர் தகவல் ”



  • அண்டார்டிக் கடல்களால் சூழப்பட்ட ஒரு கண்டம், அது போல ஆர்டிக் கண்டங்களால் சூழப்பட்டது.



  • பென்சில் என்ற வார்த்தை இலத்தீன் மொழியில் இருந்து உருவானது. அந்த மொழியில் பென்சில் என்பதற்கு ‘small penis’ என்று அர்த்தமாம்.



  • ஒரு டீஸ்பூனில் 2000 கேரட் விதைகளை வைக்கலாம்.



  • எலிசபெத் டைலர் 79 வயசு வரை வாழ்ந்த அவிங்க வாழ்நாளில் ஒரு முட்டையை அவிக்க கத்துக்கல  (மெய்யாலுமா !)



  • ஸ்பெயின் நாட்டின் தேசிய கீதத்தில் பாடல் வரிகள் இல்லை (பெப்ர..பெப்ப்ர...பே)



  • தாவரங்களில் அசைவம் உண்டு தெரிந்ததுதான்...பாம்புகளில் சைவம் உண்டா ?...பச்...இல்ல.



  • ஆட்டு மந்தைகளை மேய்க்க நாய்களை பழக்கப் படுத்துவது போல ஆஸ்ட்ரிச்சையும் பழக்கலாம்.



  • எகிப்தில் உள்ளதை விட சூடானில் அதிக பிரமிிடுகள் இருக்காம்.  மம்மிகள் என்றால் எகிப்து ஞாபகத்திற்கு வருகிறது ஆனால் உலகின் பல இடங்களில் மம்மிகள் உண்டு.



  • பேங்க் ஆப் இங்கிலாந்தில் உட்சபட்ச மதிப்பு நோட்டுகள் வெளியிடப்பட்டன. ஒரு மில்லியன் (ஜியண்ட்ஸ்) 100 மில்லியன் (டைட்டன்ஸ்).



  • மலேயா பாசையில் தண்ணீரை ”ஏர்” (Air) ன்னு சொல்றாங்க.

  • ”War and Peace" புத்தகத்தை லியோடால்ஸ்டாய் சொல்ல சொல்ல மனைவி எழுதினாராம்.



  • புது பேனா வாங்கரவங்கல்ல 97 சதவீதம் பேரு அவங்க திருநாமத்தை எழுதறாங்கலாம். (நீங்க ?  நான் “ # " இந்த குறியீட்டை அல்லது கட்டம் வரைகிறேன் ஏன்னு தெரியல )



  • ”East of Eden” என்ற நாவலை எழுதியவர் John Steinbeck இதில சுவாரஸ்யம் என்னன்னா அந்த நாவலை 300 பென்சில்களை சீவி சீவி எழுதி இருக்காா்்



Download As PDF

Saturday, June 21, 2014

மீன் பிடிக்கும் சிலந்தி



மீன்பிடிக்கும் சிலந்திகளில் 18 வகைகள் இருக்கிறது.  அண்டார்டிகாவை தவிர மற்ற கண்டங்களில் இவைகள் வாழ்கிறது.

ஆறு, குளங்கள்,நீரோடைகள் இவற்றின் வாழ்விடங்கள். மற்ற சிலந்திகளை போல இவை இரை பிடிப்பதற்காக வலை பின்னுவது இல்லை.  முட்டைகளை பாதுகாக்க பெண் சிலந்திகள் வலைபின்னி கொள்கிறது. சிறிய மீன் குஞ்சுகள், தவளை குஞ்சுகள் இவற்றின் உணவு.  சில நீர் சிலந்திகள் நீரினுள் மூழ்கியும் மீன் பிடிக்கின்றன.





கிரேட் ராப்ட் சிலந்தி (இங்கிலாந்து), ஆறு புள்ளி மீன் பிடி சிலந்தி(US)
[Great Raft Spiders,Dolomedes triton ]

இவை கரை ஓரப் பகுதிகளில் தண்ணீரின் மேல் மிதந்தபடி இருக்கும் இவை முன்காலை மட்டும் நீரினுள் விட்டபடி நின்று கொள்ளும் அதிர்வு கிடைத்த உடனே சட்டென இரையை கவ்வி கொள்கிறது. சில வகை இலை அல்லது பாறைகளில் தொத்திக் கொண்டு முன்காலை மட்டும் நீரில் விட்டு மீன் பிடிக்கின்றன.

துள்ளும் மீனின் மேல்  கடித்து விசத்தை (நியுரொடாக்ஸின்) செலுத்துகிறது  (lethal neurotoxins), மயங்கி பின் இறக்கும் மீனின் உடல் பகுதிகளில் அதன் சுரப்பு ரசாயனங்களை பாய்ச்சி செரிமானப் படுத்தி உறிஞ்சி உண்கிறது.

பெரிய சிலந்தி என்று எடுத்துக்கொண்டால் 7 கிராம் எடைகொண்ட சிலந்தி 30 கிராம் மீன் குஞ்சை பிடித்து தின்று விடுகிறது.

தொடர்புடைய பதிவு :


Download As PDF

Thursday, June 19, 2014

பழைய கற்கால டயட்டும் குகை மனிதர்களும்



உடல் பருமனாக உள்ளவர்களுக்கு மருத்துவர்களின் ஆலோசனை உடற்பயிற்சி, நடைபயிற்சி முக்கியமாக உணவு கட்டுப்பாடு (டயட்).  முதல் இரண்டை கடைபிடித்தாலும் மூன்றாவதை கட்டுப்படுத்த தான் பலரும் படாத பாடு படுகிறார்கள்.   (ஒரு சாண் வயிற்றிற்கு தானே இந்த பொழப்பு ! அதிலென்ன வஞ்சனை !!).
 
சரி இந்த டயட் அந்த கால குகை மனிதர்களிடம் இருந்திருக்குமா? என்று யோசித்தால் அப்ப அந்த குகை மனிதர்கள் உணவு பழக்கம் இப்போதிருக்கும் உணவு பழக்கம் போல் இருந்ததா ? என்றால் இல்லை (அப்ப ஏது பீட்சா ,பர்கர்,கேக்குகள்... !!)


பாலியோலித்திக் டயட்

பாலியோலித்திக் மனிதர்களின் உணவு என்றால் வேட்டையாடப்படும் விலங்குகள், பழங்கள், கொட்டைகள், அதாவது அம்மனிதர்கள் (2.5 million and 10,000 years ago ) டயட்டை கடைப்பிடித்து இருக்கிறார்களோ இல்லையோ அதுவே அவர்களின் உணவு பழக்கமாக இருந்து இருக்கிறது.
 மனிதனின் வளர்ச்சி கட்டம் அதன் பிறகே உணவு பழக்கங்கள் அடுத்த கட்டத்திற்கு செல்கிறது.

மனிதனின் மரபியல் கூறுகளும் மாற்றமடைய துவங்குகின்றன.  விவசாயம் செய்யத்துவங்கிய மனிதனின் உணவு பழக்கங்களும் மாறின.  தானியங்கள்,பால் அவனுடைய உணவில் இடம் பிடிக்கிறது.  அதுவரைக்கும் கூட பிரச்சனை இல்லை.  தானியங்களை மாவாக்கி பயன் படுத்த தொடங்கியதில் இருந்து அவன் செரிமான  அமைப்பு முற்றிலும் மாற்றம் பெறுகிறது.

அப்படியாயின் குகை மனிதன் உணவுப் பழங்கங்களை பொறுத்த மட்டில் உணவு கட்டுப்பாட்டில்(டயட்டில்) இருந்து இருக்கிறான்.
அடுத்து உடலுக்கு தேவையான சத்துக்களை பொருத்த அளவில் சரிவிகித உணவு முறை அவன் உணவுப் பழக்கத்தில் இருந்ததா ?
நவீன உணவுப் பழக்கத்தினால் அவன் உடல் உபாதைகளை எதிர் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுவிட்டான்.

பரவலான நோய்நொடிகளான சக்கரை வியாதி, ரத்தக்கொதிப்பு, இதய நோய்கள், புற்றுநோய் இவைகள் நம் உணவுகட்டுப்பாடுகளுக்கு கட்டுப்பட்டவையா ? என்ற கேள்வி எழுவதில் வியப்பில்லை.
ஒன்றை நன்றாக கவனித்தோமானால் இளவயதிலேயே பால் பால் பொருட்டகளின்பால் நம் உடல் சுரப்பிகள் செரிவூட்டப் பட்டு விடுகின்றன.  சிலர் மட்டும் விதி விலக்காக பால் ஆடைகள் ஒத்துகொள்ளாது. தயிர் மோர் சேர்ந்து கொள்ள மாட்டார்கள். இந்த ஒவ்வாமை ஏன் என்று சிந்தித்தோமானால் அது குகை மனிதர்களிடம் கொண்டு சேர்க்கிறது.

இன்னொருபுரம் டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளும், பதப்படுத்தப்பட்ட பழரசங்களும், பதப்படுத்தப்பட்ட நான் வெஜ், ஜங்க் உணவு வகைகளும் உயர்தரமென்று எண்ணுவோர் அதிகமாகி வருகின்றனர்.
எனினும், கற்கால மனிதர்கள் போல் அல்லாமல் நமது மரபியல் கூறுகள், அமைவுகள் மாற்றப்பட்டு விட்டன என்பது மறுக்க இயலா உண்மைகள்.  நிச்சயமாக உணவு பழக்கத்தின் இன்றைய நிலை கவலை அளிப்பதாகவே உள்ளது.



Download As PDF

Tuesday, June 17, 2014

சர்தார்ஜி ஜோக்ஸ்(Part III)






பார்க்கிங்கில் நிறுத்திய ஆட்டோவின் பின் சக்கரத்தை கலட்டிக்கொண்டிருந்தார்.

"ஏன் பஞ்சரா ? "

"போர்டைப்பாருங்க ஜி"

போர்டில் "பார்க்கிங் டுவீலர் "

*@ * @ * @* @ *@ * @ * @* @ *@ * @ * @* @ *


வெளிநாடு சென்ற சர்தார் பீச்சில் குளித்து விட்டு ஹாயாக குடையின் கீழ் படுத்துகிடந்தார்.

வெள்ளைக்கார பெண் அவரை கடந்து செல்லும் போது "ஆர்  யூ ரிலாக்ஸிங் ?" என்று கேட்டார்

அதற்கு அவர் " நோ ...நோ ஐ ஆம் பாண்டா சிங்" என்றார்

திரும்பவும் இன்னொரு பெண்னும் இதே கேள்வியை கேட்க, இந்த இடம் சரிப்படாது என்று இடத்தை மாற்றினார்.

அங்கே ஒரு சர்தார்ஜி இருக்க இவர் தம் இங்கிலீசு புலமையை காட்ட அதே கேள்வியை அவரிடம் கேட்டார்.

அவர் படித்த சர்தாஜி சிரித்துக்கொண்டே "யா...ஐ ஆம் ரிலாக்ஸிங்"

"பொடேர் "என்று அவரை அடித்த சர்தாஜி "உன்ன தான் அங்க எல்லோரும் தேடிட்டு என்ன கேட்கிறாங்க கொய்யால நீ இங்க இருக்க"

*@ * @ * @* @ *@ * @ * @* @ *@ * @ * @* @ *


மைசூர் அரண்மனையில்

"ஜீ இதில உட்காரக்கூடாது திப்பு சுல்தானோட நாற்காலி"

"ஒயே...கவலப்படாத அவரு வந்தவுடனெ ஏந்திருச்சுருவேன்"

*@ * @ * @* @ *@ * @ * @* @ *@ * @ * @* @


மாசமாயிருக்கும் தன் மனைவிக்கு சர்தார்  SMS அனுப்பினார்.

சிறிது நேரம் கழித்து ரிபோர்ட் வந்தது

பல்லே...பல்லே என்று குதிக்க ஆரம்பித்தார் கேட்டதற்கு

மெசேஜ் செய்தியை காட்டினார் .  SMS ரிபோர்ட் "Delivered"

*@ * @ * @* @ *@ * @ * @* @ *@ * @ * @* @


ரயில் வருவதற்காக காத்திருந்த சர்தார்....ஓடிப்போய் ஓரமாக நின்றுகொண்டார்.

ஏன் ? என்றால் ஸ்பீக்கர் சொன்னத கேட்கலியா

"காடி ப்ளேட்பார்ம் பர் ஆ ரஹி ஹை"  கத்தினார்.

*@ * @ * @* @ *@ * @ * @* @ *@ * @ * @* @

 " எழுதினதை காட்டு "

சர்தார் :   "நீங்க அழிச்சப்பவே நானும் அழிச்சுட்டேன் மிஸ்"

*@ * @ * @* @ *@ * @ * @* @ *@ * @ * @* @

சர்தாருக்கு கல்யாணம் மார்ச் 2 ம் தேதி கல்யாணம் முடிவாகி இருந்தது.

இந்தி, தமிழ்,  தெரியாதவர்களிடம் ( ! ! ?) இன்விடேசன் கொடுத்து விட்டு இப்படி சொன்னார்

"மேரேஜ் ஆன் மார்ச்  செகண்ட், ப்ளீஸ் கம் ஆன் ஃபர்ஸ்ட் நைட்"

*@ * @ * @* @ *@ * @ * @* @ *@ * @ * @* @

பட்டிமன்றத்தில் ஒரு பேச்சாளர்  "நெப்போலியன் டிக்ஸ்னெரியில்  "முடியாது "
 "பயம்" என்ற வார்த்தைகள் இல்லை"

சர்தார் "இப்ப யோசிச்சு என்ன செய்ய வாங்கும்போதே பார்த்து வாங்கனும்"

*@ * @ * @* @ *@ * @ * @* @ *@ * @ * @* @

இரவில் சர்தாரின் அறையின் வெளியே குரல் கேட்டது...

"புரிஞ்சிக்கோ என்ன தொந்தரவு செய்யாத.. நேத்து ராத்திரியே நல்லா தூங்க
முடியல..என் வாழ்க்கையோட விளையாடாத "

காலையில்...

ஜி...யாரோட பேசிட்டு இருந்தீங்க

பேசிட்டா பொளம்பிட்டு இருந்தேன் கொசு தொல்ல தாங்கல..

*@ * @ * @* @ *@ * @ * @* @ *@ * @ * @* @


ஸ்கூல் டேஸ்..

ஆங்கில வாத்தியார் சர்தாரிடம் இந்த வாக்கியத்தை   கொடுத்து past tence ல்
எழுத சொன்னார்   "I make a mistake"

என்ன எழுதி இருப்பார்....

இப்படித்தான்..

"I was made by a mistake"

*@ * @ * @* @ *@ * @ * @* @ *@ * @ * @* @

சர்தார் பல சமயங்களில் போனில் மணிக்கணக்காக பேசுவார்...

ஒரு நாள் அதே போல போன் பேசிவிட்டு வைத்து விட்டார்

அவர் மனைவி "என்ன சீக்கிரம் முடிச்சிட்டீங்க 25 நிமிட் தானே ஆச்சு"

சர்தார் "அது ராங்க் கால் ஸ்வீட்டி" சொல்லிவிட்டு வெளியே நடந்தார்.

*@ * @ * @* @ *@ * @ * @* @ *@ * @ * @* @

சர்தாரிடம் ஒருவர் " நீங்க எங்க பிறந்தீங்க ? "

"பஞ்சாப்"

எந்த பகுதி ?

பகுதியா எல்லாம் இல்ல பாய்... எல்லாம் முழுசா தான்

*@ * @ * @* @ *@ * @ * @* @ *@ * @ * @* @

விவாகரத்துக்காக சர்தாரும் அவருடைய மனைவியும் கோர்ட்டில் ;

உங்களுக்கு  3 குழந்தைகள் இருக்கு விவாகரத்து கொடுக்க வேண்டுமானால் எப்படி பிரிப்பது ?"

குசு ..குசுவென்று மனைவியிடம் பேசிவிட்டு சொன்னார்

"அடுத்த வருசம் பிரிச்சிறோம் மேம் சாப் "

*@ * @ * @* @ *@ * @ * @* @ *@ * @ * @* @

டாக்டர் படித்து விட்டு முதல் முறையாக ஒரு நோயாளிக்கு வைத்தியம் பார்த்தார்.

டார்ச் அடித்து கண்கள், காதுகள்,, நாக்கை நீட்ட சொல்லி பார்த்துவிட்டு


"லோவா இருக்கே"

டாக்டர் நீங்க ப்ரஸர் பார்க்கவேயில்லையே


"டார்ச் பேட்டரி லோவா...இருக்கே "

*@ * @ * @* @ *@ * @ * @* @ *@ * @ * @* @

"ஒருவாரமா யாருக்கு பேசினாலும்....கர்ர்ர்ர்ர்... இந்த பொன்னு ரொம்ப
தொல்ல குடுக்குதுபா..."

பக்கத்தில் இருந்தவர் போனை வாங்கி கேட்டார்

 "ப்ளீஸ் ரீ சார்ஜ் யுவர் கார்ட் "

*@ * @ * @* @ *@ * @ * @* @ *@ * @ * @* @

தொடர்புடைய பதிவுகள் :





Download As PDF

Saturday, June 14, 2014

டிசைனர் குழந்தைகள் !!



"டிசைனர் குழந்தை " (Designer Baby) இந்த பதம் விஞ்ஞானிகளால் சொல்லபடவில்லை மாறாக பத்திரிக்கையாளர்களால் சொல்லப்பட்டது.

ஒவ்வொருவருக்கும் தம் உடலைப் பற்றிய குறை இருக்கிறது...உயரமா பொறந்திட்டேன், குள்ளமா பொறந்திட்டேன், கருப்பா இருக்கேன், நம்ம கண்னு மட்டும் ஏன் ப்ளூவா இல்ல, இப்படி சொல்லிட்டே போலாம்.  அதெல்லாம் நாம நிர்ணயிக்க முடியாதப்பா... என்பதே பெரும்பாலவர்களின் பதிலாக இருக்கும்.

40 வயசுக்கு மேல இல்ல இல்ல பிறந்த குழந்தையே சக்கர வியாதியோட பிறக்குதே, டாக்டரின்  முதல் கேள்வியே  உங்க அப்பாக்கு சுகர் இருக்கா அம்மாக்கு சுகர் இருக்கா என்பதாக இருக்கும் இது ஒரு வியாதியே இல்லை என்றாலும் நம் உடம்பில் குறைபாடு ஏற்பட உணவு பழக்கம் தவிர்த்து
பெற்றோரிடமிருந்தே அதாவது பரம்பரை பரம்பரையாக ஜீனில் பதியப்பட்டு நமக்கு நம்முடைய மரபணுவில் அப்படியே தொடர்கிறது. இதற்கு தீர்வை விஞ்ஞானிகள் பல ஆண்டுகள் ஆய்வு செய்து கண்டுபிடித்திருக்கிறார்கள்.

அதன் படி குழந்தை உருவாக்களில் (கருவிலேயே) மரபணுவை மாற்றி அமைக்க முடியுமா என்றால் முடியும் என்கிறது இன்றைய விஞ்ஞானம்.
நமக்கு பிடிச்ச காரை எப்படி தேரிந்தெடுக்கிறோமே அதுமாதிரி , எதிர்காலத்தில் நம் குழந்தை இப்படி பர்ஸ்னாலிட்டியாக,  இன்னின்ன பரம்பரை நோய் தாக்காத, நம்மமாதிரி ! (ஙே) அறிவு ஜீவியா பிறக்கனும் என்பதை தீர்மானிக்கலாமாம்.



அது படி வெளிப்படையாக தெரியாத தகவல்கள் (Genome kid) மரபியல் நிர்ணயக் குழந்தைகள் ஏற்கனவே பிறந்தாச்சு என்பதுதான்.
ஜீனோம் மேப்பிங் என்ற மரபணு ப்ளூ ப்ரிண்ட் 2003 ல் முழுமையாகியது. அதன்படி எந்த எந்த கூறு இன்னின்ன செயல்களை நிர்ணயம் செய்கிறது என்பதை வரையறுத்து இருக்காங்க. மேலும்  இத்தோட முடிஞ்சது என்று இல்லாமல் அந்த ஆய்வு தொடர்கிறது.  2010 ல் இந்த் ஜீன் மூலக்கூறுகளை மாற்றி அமைக்க முடியும் என்ற முடிவிற்கு வந்தார்கள்.

ஊமையாகவோ, குள்ளர்களாகவோ, காதுகேட்காது, இருப்பவனின் குழந்தை பரம்பரை பரம்பரையாக அப்படியே பிறக்கனுமா என்ற அவர்களின் மனவருத்தம் போராட்ட அளவில் ஏற்பட இங்கிலாந்து அரசு இதற்கென சட்ட திருத்தங்களை செய்தது. (முழு விவரம் தெரியல)

 ஆங்கிலத்தில் InVitro Fertilisation (IVF) என்று சொல்றாங்க டெஸ்ட் டியூப் பேபி கேள்வி படுறோம் அந்த ப்ராசஸ்ல மரபணுவை திருத்தங்கள் செய்து விதைக்கிறார்கள். Pre-implantation Genetic Diagnosis (PGD) என்று இன்னொரு டெக்னாலஜியும் இருக்கு (selected embryos are implanted back into the mother's womb.)

இதில ஆபத்து என்னென்னா எல்லோரும் ஆண் குழந்தையே வேணும்னா என்ன செய்யறது.

டிசைனர் பேபி என்றால் என்ன  விளக்கம் ஆங்கிலத்தில் இருக்கு படித்து கொள்ளுங்கள்.

What is a designer baby?

Advanced reproductive technologies allow parents and doctors to screen embryos for genetic disorders and select healthy embryos.

In-vitro fertilisation or IVF

The fear is that in the future we may be able to use genetic technologies to modify embryos and choose desirable or cosmetic characteristics. Designer babies is a term used by journalists to describe this frightening scenario. It is not a term used by scientists.

Advanced reproductive techniques involve using InVitro Fertilisation or IVF to fertilise eggs with sperm in 'test-tubes' outside the mother's body in a laboratory. These techniques allow doctors and parents to reduce the chance that a child will be born with a genetic disorder. At the moment it is only legally possible to carry out two types of advanced reproductive technologies on humans. The first involves choosing the type of sperm that will fertilise an egg: this is used to determine the sex and the genes of the baby. The second technique screens embryos for a genetic disease: only selected embryos are implanted back into the mother's womb. This is called Pre-implantation Genetic Diagnosis (PGD).

Recently scientists have made rapid advances in our knowledge of the human genome and in our ability to modify and change genes. In the future we may be able to "cure" geneticy diseases in embryos by replacing faulty sections of DNA with healthy DNA. This is called germ line therapy and is carried out on an egg, sperm or a tiny fertilised embryo. Such therapy has successfully been done on animal embryos but at present it is illegal to do this in humans.

However, it is legal to modify the faulty genes in the cells of a grown child or an adult to cure diseases like cystic fibrosis - this is called body cell gene therapy.

Download As PDF

தமிழ் எழுதி (உதாரணம்) - ammaa =அம்மா, aRam=அறம், thamiz=தமிழ்,manjsaL=மஞ்சள்

மேலும் படிக்க பக்க எண்களை காண பழைய இடுகையை [OLD POSTS ]மீது கிளிக் செய்யவும் !


பிரபலமான இடுகைகள்

கடந்த 30 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Labels of this Blog

Alien (1) amphibians (1) ancient people (2) ancient scripts (1) ancient tamil poets (1) anteater (1) antibiotics (1) archaeologist (5) art (4) Artic (1) Asteroid (1) astronomy (4) atom (1) bangalore lalbagh (2) bats (1) beauty (1) Bees (2) Belmez faces (1) Bermuda Triangle (1) Birds (7) birthday song (1) black holes (1) brain activity (5) brains (2) Brown Drawfs (1) carnivorous plants (2) chennai conference (1) cloning (2) Cockroach farrms (1) Concisious mind (3) conjoined animals (1) conjoined twin (1) Contest approach (1) crinoids (1) curiosity (1) darwin (2) dhasavadaram (1) dinosaur bird (1) Draco (1) dreams (4) earth worm (1) earthday (1) environment (2) Firefly (1) Fugu (1) G.D.NAIDU (4) Galaxies (2) general knowledge (1) Genetic (1) Ghost (1) Gillette razor (1) golden buddha (1) Gulf streem (1) H.Erectus (1) Hess (1) highway of kongu culture (1) Hindusim (1) Historical Famous Faces (1) human (1) HumanMilk (1) humanoid (1) ice melting (1) indian iron pillar (1) infrared (1) interview (1) jellyfish (1) Jokes (12) KaKapo (1) Kongu culture (6) land scape (1) Library of Alexandria (1) life of bees (2) life science (3) Life Sciences (11) Liger Tigon (1) long life (1) M.Metha (1) mamies milk (1) Mars (1) meat-eating plants (1) milkyway (2) mind (1) MIR Diamond mine (1) Moscow Kremlin (1) Mosquito (1) mushroom (2) Mystery (14) mystry (2) nanban (1) Nasca (1) Nazca Lines (1) Northern Hawk owl (1) Number 108 (1) oddity (1) Omen (1) paranormal interpretation (1) Penquins (1) peru (1) Perur (1) Perur Temple (5) philosophers (1) Piri Reis Map (1) poet Kannadasan (2) QUIZ (2) rare animal (2) Religion (1) RHINOCEROS (2) Richard III (1) RMS Queen Mary (1) Rongorongo script (1) Russian royal bell (1) save trees (2) Science (3) Sea level Rise (1) sediba (1) self confidence (1) Shark (1) Short Stories (1) silambam (1) sleep (3) Sloth (1) smallpox (1) song-birds (3) Space (2) space scientist (1) sphere Robo (1) Spider (2) Sprit (1) Stars (1) story (3) strangeness (1) Superstitious behavior (1) swami vivekanandar (1) tamil artist maruthu (1) tamil history (6) Telescope (1) tibet (3) tickle (1) Tsar Bell (1) twins (1) ultraviolet (1) universe (2) vairamuthu (1) Virus (1) water (2) whales (1) windmill (1) அணு (1) அமானுஷ்யம் (4) அலெக்ஸாண்டிரியா (1) அறிவியல் துணுக்குகள் (14) அறிவியல் புதிர் (9) அனுபவம் (87) அனுபவம். பயணம் (4) அஸ்ட்ராய்டுகள் (2) ஆதி மனிதன் (2) ஆய்வு (11) ஆர்டிக் (1) ஆவி (1) ஆழ்கடல அனுபவம் (2) ஆழ்கடல் அனுபவம் (1) ஆனந்தம் இதழ் (1) ஆன்டிபாயாடிக்ஸ் (1) இரட்டை உயிர்கள் (1) இரும்பு தூண் (1) ஈஸ்டர் தீவு (2) உணவு (1) உணவுப்பழக்கம் (2) உயிர்நிழல் (1) உள்ளுணர்வு (3) உறக்கம் (1) எகிப்து (2) எண்ணங்கள் (2) எண்ணியல் (1) எறும்புதின்னி (1) ஏமாற்றம் (1) ஏன் எதற்கு எப்படி (26) ஐன்ஸ்டீன் (1) ஒளிஉமிழ்காளான் (1) ஓவியம் (6) கடல் ஆய்வு (2) கடல் சுழல் ஆய்வுக்கூடம் (2) கடல் மட்டம் (1) கடல் லில்லி (1) கடல்பல்லிகள் (1) கட்டுரை (125) கணினி (1) கண்காட்சி (3) கண்டுபிடிப்பு (5) கதை (6) கரப்பான்கள் (1) கருந்துளை (1) கல்வெட்டு (1) கவிஞர் கண்ணதாசன் (6) கவிஞர் வைரமுத்து (2) கவிதை (2) கவிதைகள் (2) கற்பாறை சித்திரங்கள் (2) கனவு (1) கனவுகள் (4) காடுறை உலகம் (1) காண்டாமிருகம் (2) காதல் (1) காந்தி (1) காளான் (2) கிச்சுக்கிச்சு (1) குளவி (1) குளோனிங் (2) கேலக்ஸி (3) கொங்கு (7) கொங்கு வரலாறு (1) கொசு (1) கொசு ஒழிப்பு (2) கொசுக்கள் (2) கோபிநாத் (1) கோவை புத்தக வெளியீடு (2) கோவை வரலாறு (7) சகுணம் (1) சலீம் அலி (1) சவரம் (1) சாதனை (1) சார்லி சாப்ளின் (1) சார்லிசாப்ளின் (1) சிங்கம்புலி (1) சிந்தனை (6) சிரோ டிகிரி. சிறுகதை (1) சிலம்பம் (1) சிறுகதை (4) சினிமா (2) சுறா (1) செண்டினல் தீவு (1) செப்பேடு (1) செய்தி (3) செய்திகள் (10) செவ்வாய் (2) டார்வின் தவளை (1) டாவின்சி (1) டிசைனர் பேபி (1) டிராட்ஸ்கி மருது (2) தங்க புத்தர் சிலை (1) தண்ணீர் (1) தத்துவம் (3) தமிழர் (2) தமிழர்கலை (1) தமிழன் (4) தமிழ் (7) தவளைகள் (1) தாய்ப்பால் (1) திபெத்திய குகைகள் (3) திமிங்கிலம் (1) தினமலர் (1) தீவு வாசிகள் (1) துணுக்குகள் (16) தூக்கம் (4) தூப்ளே (1) தேவிகா (1) தேனீ (3) தொலைநோக்கி (1) நகைச்சுவை (17) நடிகர் சிவகுமார் (3) நட்சத்திர குள்ளர்கள் (1) நட்சத்திரம் (1) நாசா (1) நாயக்கர் மகால் (2) நானோ டெக்னாலஜி (1) நானோ-தொழிநுட்பம் (1) நானோபாட்கள் (1) நாஸ்க்கா (1) நீண்ட ஆயுள் (1) நீர் சிலந்தி (1) நொய்யல் (4) பதிவுதிருட்டு (1) பயணம் (2) பறவை (7) பறவை மனிதன் (1) பறவைகள் (2) பாக்தாத் பேட்டரி (3) பாமரன் (1) பால்வீதி (1) பால்வெளி (2) பிரபஞ்சம் (5) பிரிரெயிஸ் (1) பில் கேட்ஸ் (1) பிளாஸ்டிக் (1) பிளேட்டோ (2) பிறந்தநாள் பாடல் (1) புதுவை (1) புத்தகம் (2) புவி தினம் (1) புவி வெப்பமாதல் (1) புழு (1) புனைவுகள் (1) பூச்சியுண்ணும் தாவரங்கள் (1) பூமி தினம் (1) பெங்களூரு (2) பெரிய ஆலமரம் (1) பெருவழிப்பாதை (1) பெல்மீஸ் (1) பேரூர் (7) பேரூர் கல்வெட்டு (1) பொன்மொழிகள் (3) போலியோ (1) ப்ளாஸ்மான்கள் (1) மங்கள்யான் (1) மணிகள் (1) மதுரை (1) மரங்களின் பாதுகாப்பு (2) மரபியல் (5) மருத்துவம் (18) மனம் (2) மனித மூளை (1) மனோவலிமை (2) மாமிச உண்ணி தாவரம் (1) மின்மினிப் பூச்சிகள் (1) மீன்கள் (2) மு. மேத்தா (1) முதுமக்கள் தாழி (1) மூடபழக்கவழக்கம் (2) மூளை (4) மேஜிக் (1) ராசாளி ஆந்தைகள் (1) ராஜநாகம் (1) ரூபிக் க்யூப் (1) ரேசர் (1) வரைபடம் (1) வலைப்பதிவர்கள் விழா (1) வாழ்க்கை (1) விச சிலந்தி (1) விண்கற்கள் (1) விண்ணியல் (3) விண்வெளி (6) விண்வெளி வாகனங்கள் (3) விண்வெளி விஞ்ஞானிகள் (2) விநோதங்கள் (1) விமர்சனம் (1) விலங்குகள் (2) வெப்பமயமாதல் (1) வெளவால் (1) வேற்றுகிரகவாசி (1) வைர சுரங்கம் (1) வைரஸ் (1) வொயுனிச் (1) வௌவாள் (1) ஜி.டி.நாயுடு (3) ஜெல்லி மீன் (1) ஜோக்குகள் (3) ஜோக்ஸ் (10) ஸ்டெம் செல் (1) ஸ்லவுத் (1)