Followers

Thursday, May 29, 2014

(எங்கே ஏன் எப்படி ?) ஒரு காகிதத்தை எத்துனை மடிப்புகள் மடிக்கலாம் ?


வெறும் கண்ணால் எத்தனை கேலக்ஸிகளை நம்மால் பார்க்க முடியும் ?



மேகக் கூட்டம் இல்லா நிலையில் விண்மீன் கூட்டம் அல்லது விண்மீன் திரள் நம் பார்வைக்கு எட்டுமா என்றால் எட்டுகிறது ஆனால் சற்று கூர்ந்த கவனிப்பு தேவைப்படும். சரி அப்படியானால் எத்தனை கேலக்ஸிகளை நம்மால் கவனிக்க (அ) அவதானிக்க முடியும் என்றால் நம் சூரிய மண்டலம் இருக்கும் கேலக்ஸி அதாவது பால்வெளி மண்டலம் மற்றும் 3 கேலக்ஸிகளை பார்க்கமுடியும். அதிலும் சிக்கல் என்னவென்றால் 2 கேலக்ஸிகள் வட கோளார்த்தப் பகுதியிலும், 2 தென் கோளார்த்த பகுதியிலும் தெரியும்.

வட கோளார்த்தப் பகுதியில் பால்வெளி மண்டலமும்(Milky Way ), ஆன்ரோமெடா Andromeda (M31), தெரியும்  தென் கோளார்த்தப் பகுதியில் மெகா லித்திக் க்ளவுடுகள் சின்னதும், பெரிதும்( Magellanic Clouds.) தெரியும்.

M33 ( in Triangulum), M81 (in Ursa Major) மற்றும் M83 (in Hydra) இவைகள் தெரியும் என்கிறார்கள் ஆனால் இவை தெரியுமெ என நிரூபிக்கப்படவில்லை.

ஆனால் எந்த ஒரு கேலக்ஸியும் வெறும் கண்ணால் முழுமையாக தெரியாது. (பார்க்கவும் முடியாது !)

ஒரு கேலக்ஸியை மட்டுமே வெறும் கண்ணால் பார்க்க இயலும். இந்த பிரபஞ்சத்தில் 100 பில்லியன் கேலக்ஸிகள் இருப்பதாக ஒரு கணக்கீடு உண்டு. ஒவ்வொரு கேலக்ஸியும் 10 முதல் 100 பில்லியன் நட்சத்திரங்களை உள்ளடக்கியது.

வெறும் கண்ணால் எத்தனை நட்சத்திரங்கள் பார்க்க முடியும் என்றால், 10000 ஆயிரம் என்கிறார்கள் அதுவும் தவறு  2,873 நட்சத்திரங்களை மட்டுமே பார்க்கமுடியும் (நீங்க வேனா எண்ணிப் பார்த்துக்கோங்க....அவ்..)

**GALAXY - விண்மீன் மண்டலம்/விண்மீன் கூட்டம்/விண்மீன் திரள்

நிலவில் இருந்து பார்க்கும் போது பூமியில் மனிதனால் கட்டப்பட்ட சீன மதில் சுவர் தெரியுமாமே ?


வானத்தில் இருந்து பார்த்தால் அதாவது சுமார் 100 கி.மீ தூரத்தில் இருந்து பூமியின் கட்டிடங்கள் தெரியும் அதற்குமேல் உயரே சென்றால் தெரிய வாய்ப்பு இல்லை.  நிலா பூமியில் இருந்து 4,00,000 கி.மீ தொலைவில் இருக்கு. அங்கிருந்து நிச்சயமாக சீன மதில் சுவர் தெரிய வாய்ப்பே இல்லை தானே.

கண்ணாடியை சீனர்கள் கண்டுபிடிச்சாங்களா ?


கண்ணாடி போன்ற பீங்கான் பொருள் ஹான்   வம்சத்து காலத்தில் சீனாவில் இருந்து இருக்கு அதாவது இந்த ஆண்டுகளில்...(206 BC–AD 220) ஆனா அதுக்கு முன்னாடியே 1350 BC ல் எகிப்தில் கண்ணாடி பொருட்கள்,கண்கவரும் வண்ண கண்ணாடி அணிகலன்கள்  இருந்து இருக்கு.


நமது சூரிய குடும்பத்தின் உயரமான மலைச்சிகரம் எந்த கோளில் உள்ளது?


"ஒலம்பஸ் மான்ஸ் " என்று செல்லமாக அழைக்கப்படும் ஒலம்பஸ் எரிமலை சிகரம் செவ்வாய் கிரகத்தில் இருக்கு. இதன் உயரம் சுமார் 22 கிலோ மீட்டர்கள், சுற்றளவு சுமார் 624 கி.மீ கள், எவரெஸ்டின் உயரம் 8848 மீட்டர்கள் அதை விட மூன்று மடங்கு உயரம் உள்ளது.  பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் எரிமலை சீற்றம் இருந்திருக்கலாம் என்று சொல்லுகிறார்கள்.

அறை வெப்பத்திலேயே உருகிவிடும் உலோகம் இருக்கிறதா ?

                                                                                 "Gallium"

பாதரசம் (mercury) காலியம்(மென் தங்கம்) ( gallium ), சீசியம்( caesium), மற்றும் ப்ரான்சியம் ( francium) இந்த உலோகங்களை சொல்லலாம். கேலியம் மைக்ரோ சிப்புகளிலும், டிவிடி ப்ளேயர்களிலும், லேசர் லைட் எந்திரத்திலும் பயன் படுத்தப் படுகிறது.

சீசியம் அணு கடிகாரத்தில் உபயோகிக்கப் படுகிறது. சீசியம் என்றாலே ”ஆகாயநீலம்” அதே போல அந்த நிறத்தை வெளிப்படுத்தும். தண்ணீருடன் எதிர் வினை (explodes)புரியக்க்கூடியது.

ப்ரான்சியம் ரேடியோ கதிர் தன்மை கொண்ட இயற்கையில் கிடைக்கும்  தனிம வரிசையில் கடைசியில் கண்டுபிடிக்கப் பட்டது.

மழைபெய்யும் போது மண்வாசனையை நாம் நுகர்கிறோம் அதுபோல நிலவின் புழுதி வாசம் எப்படி இருக்கும் ?

நிலவின் புழுதி வெடி மருந்து (Gun powder) வாசனை அடிக்கிறதாம்.

பூமியை ஒரே ஒரு துணைக்கோள் தான் அதாவது நிலா தான் சுற்றிவருகிறதா ?

பூமியின் துணைக்கோள் நிலா தான் ஆனால் அதே போல 7 அஸ்ட்ராய்டுகளும் பூமியோடு சேர்ந்து சுற்றி வருகிறதாம். (the snappily named Cruithne ,2000 PH5, 2000 WN10, 2002 AA29, 2003 YN107 and 2004 GU9) கார் பந்தயத்தில் வெவ்வேறு டிராக்கில் ஒரே வேகத்தில் நீள் வட்டமாக சுற்றும் கார்களைப் போல.  ஆனால் எவ்வளவு பெரிய அஸ்ட்ராய்டாக இருந்தாலும் அதை கோள் என சொல்வது இல்லை.

நம் சூரிய குடும்பத்தில் 9 கோள்கள் இருக்கா இல்லையா?

எட்டு என்று தான் சொல்ல வேண்டும். 2006 ஆகஸ்டில் கூடிய அஸ்ட்ரானாமிகல் கூட்டமைப்பு இதைத்தான் உறுதி செய்தது.

காற்றில் கலந்துள்ள முக்கிய மூலங்கள் எவை எவை ?

ஆக்ஸிஜன், கார்பன் டை ஆக்ஸைட், ஹைட்ரஜன், நைட்ரஜன் இந்த நான்கில் மிக முக்கியமானது நைட்ரஜன் தான். 78  சதவீதம் பூமியில் நிறைந்துள்ளது.  21 சதவீதத்திற்கும் குறைவானது ஆக்ஸிஜன். 300 ல் ஒரு சதவீதம் கார்பன் டை ஆக்ஸைட். இந்த பூமி உருவாகும் போது எரிமலை வெடிப்புகளில் அதிக அளவில் வெளியானது நைட்ரஜன்.  ஹைட்ரஜன் ஹீலியம் இவைகளை காட்டிலும் ஹெவியானது. புவியின் காற்று மண்டலத்தில் விரவி தங்கி விட்டது என்று சொல்லப்படுகிறது.  76 கிலோ (கி) உள்ள மனிதனில் சுமார் 1 கிலோ (கி) நைட்ரஜன் இருக்கும் (தனிம வடிவில்). வானம் நீலநிறமாக தோற்றம் தருவதற்கும் நைட்ரஜன் ஒரு காரணம்.


கையால் ஒரு காகிதத்தை ஒன்றன் மேல் ஒன்றாக திரும்ப திரும்ப எவ்வளவு தடவை மடிக்க முடியும்?

பல பேர் இதை சோதித்தும் பார்த்து இருக்கலாம் A4 அளவு காகிதத்தை எடுத்து மடித்து பின் மடித்து பின் மடித்து இப்படியே செய்தால் 5 முறைக்கு மேல் அதை மடிக்க முடியாத கனம் ஆகிவிடும். (ஒவ்வொரு முறை மடிக்கும் போதும் அதன் தடிமன் கூடிக்கொண்டே போகும்)

டிசம்பர் 2001 ல் அமெரிக்க பள்ளி மாணவி ( Britney
Gallivan ) இதற்கான சூத்திரம் (பார்முலா ) ஒன்றை கண்டுபிடித்தார்.

 
W is the Width of the paper, L is the Length , t is the thickness, and n is the number of folds.

The first equation describes folding a piece of paper in half in
one direction and then the other, alternately; the second one describes folding it in one direction only

இதில் முதல் பார்முலா காகிதத்தை முதலில் பாதியாக மடிக்கிறோம் பின், பின் மடிக்கும் போது திசையை மாற்றி மாற்றி மடித்தால் ;

இரண்டாவது பார்முலா காகிதத்தை ஒரே மாதிரியாக மடித்தால் ;

பிரிட்டனி இதற்காக இரண்டு விதமான காகிதங்களை பயன் பயன்படுத்தினார் 1. மிக மெல்லிய தங்க  தகடு (சதுர வடிவம்)
2. 4000 அடி நீளமான டாய்லட் பேப்பர்

தங்க காகிதத்தை ஒன்று விட்டு ஒன்று திசையில் (in alternate directions) ;
டாய்லட் பேப்பரை ஒரே திசையில் (நீளவாக்கில்) மடித்து காட்டினார். இந்த முறையில் 12 மடிப்புகளை மடித்துக் காட்டினார்.

ஆனால் இதே மாதிரி சாதாரண A4 அளவு பேப்பரை மடிக்க முடியவில்லை. (அதிகபட்சம் 5 மடிப்புகளையே மடிக்க முடியும்)

10 அடி நீள முள்ள மெல்லிய பேப்பரை எந்த கருவியையும் பயன் படுத்தாமல் அதிக பட்சம் ஒன்றன் மேல் ஒன்றாக 8 மடிப்புகளை மடிக்க முடியும்.

Download As PDF

Monday, May 26, 2014

கண்களை திறந்து கொண்டே தூங்குவது சாத்தியமா?


"நெக்டெர்னல் லெகோப்தாலமஸ் " [ Nocturnal lagophthalmos ] என்று மருத்துவத்துறையில் குறிக்கப்படும் கண்களை திறந்து கொண்டே தூங்குவது குழந்தைகளில் பலருக்கு இருக்கும்.   ஆனால் பெரியவர்களுக்கு என்பது கொஞ்சம் சீரியஸ் ஆன பிரச்சனை தான்.  குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட வயது வரை தூங்கும் போது இமைகள் முழுமையாக மூடாமல் கொஞ்சம் திறந்த படி தூங்குவது(அரைக்கண்) இயல்பு. மேல் இமை தசைகள் சரியான வளர்ச்சி அடைந்த பின்னர் இமைகளை முழுவதுமாக மூடிய படியே தூங்குவர். சிலருக்கு டீன் ஏஜ் வரைக்குமே இந்த பிரச்சனை இருக்கலாம்.  பெரியவர்களுக்கு எனும் போது தோல் நோய் பிரச்சனை அல்லது முகத்தில் ஏதேனும் சர்ஜரி செய்திருந்தால் இந்த பிரச்சனை இருக்கும். பெரியவர்களுக்கு இந்த பிரச்சனையால் இமைமுடிகள் கண்களில் பட்டு எரிச்சலை (அலர்ச்சி/அயர்ச்சி) ஏற்படுத்தும்.  தொடர்ந்தால் பார்வை பிரச்சினை ஏற்படும்.  அப்படிப்பட்ட பிரச்சனை உள்ளவர்களுக்கு மருத்துவர்கள் ஐ மாஸ்க் என்று சொல்லக்கூடிய முக மூடியை அணிந்து கொள்ள பரிந்துரை செய்கிறார்கள்.

அடுத்த கேள்வி ஒரு கண்னை மட்டும் திறந்தபடி தூங்க முடியுமா ?
இயல்பின் மனிதனுக்கு இதுவும் முடியாத காரியந்தான். பறவைகள், விலங்குகள் அந்த மாதிரி தூங்குவது உண்டு.  பெரும்பான்மையான விலங்குகள் ஒரு கண்ணை மூடி தூங்கு கின்றன.  அப்போது அவைகளுக்கு ஒரு பக்க  மூளையும் விழிப்புடன் இருக்கும். இது எதிரிகளிடம் இருந்து தம்மை தற்காத்து கொள்ள இயற்கை வழங்கிய கொடை. இமைகளே இல்லாத விலங்குகள் அதிகம் உண்டு.

மீன்களுக்கு இமைகளே இல்லை பிரச்சனை இல்லை.  டால்பின்கள் ஒரு கண்னை மூடியே தூங்கும். கண்டம் விட்டு கண்டம் பறக்கும் பறவைகளும் தூங்கி கொண்டே பறக்கும்.



Download As PDF

Thursday, May 22, 2014

கொஞ்சம் சிரிப்பு !!

தனி கட்டையா இருந்த வரைக்கும் பிரச்சனை இல்ல கலியாணத்துக்கு அப்புரம் அப்பிடி இருக்க முடியாது இல்லையா.   தேதிகளை  கரெக்டா ஞாபகம் வெச்சிகனுமே. என்ன தேதியா ?  மனைவியோட பிறந்த நாள், மனைவியர் தினம், முக்கியமா அவளோட தங்கச்சி பிறந்த நாள் கூட ஞாபகம் வெச்சிகனும் இல்லியா.

முத்தண்ணா  ஒரு ஐடியா செஞ்சாரு நேரா பொக்கே ஷாப்புக்கு போனாரு, முன்னதாகவே இன்னின்ன தேதில வாழ்த்து மலர் கொடுக்கனும்னு கார்டு எழுதி அதுக்கான அட்வான்ஸ் கொடுத்து வெச்சிட்டாரு.

அவர் வேலைக்கு போன பின்னாடி மனைவிக்கு அவர் கைப்பட எழுதிய வாழ்த்து அட்டையோட பொக்கே டெலிவர் ஆச்சுது. அவர் மேல ஒரு தனி பிரியமே அவளுக்கு ஏற்பட்டுச்சு. எல்லாம் நல்ல படியா போய்ட்டிருந்தது,

இரண்டாவது வருசம் வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்தார். வந்தவர் கண்ணில பொக்கே பட்டுச்சு.

மனைவியை பார்த்து  “ வெரி ப்யூடிபுள் நீ வாங்கின பொக்கேவா யாருக்கு ? “

அதுக்கப்புரம் என்ன நடந்திருக்கும்கிறீங்க....?


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

ஒரு பெண்மணிக்கு எதிர்பாராத விதமா அலாவுதின் விளக்கு கிடைச்சது.   அத தேச்சதும் ஜீனி  " என்ன வேண்டும் கேளுங்கள் எஜமானி."

"எனக்கு 3 விசயம் நீ செஞ்சு குடுக்கனும்"

மன்னிக்கவும் நீங்கள் கேட்கும் ஒரு கேள்வியை மட்டுமே நிறைவேற்ற முடியும்.  எனக்கு அதுக்கு மேல பவர் இல்லன்னு சொல்லிடுச்சு.

உலக மேப்பல் ஒரு இடத்த சுட்டிக் காட்டி இந்த நாட்டில் அமைதி இருக்கனும் சண்டையே நடக்கக் கூடாது.

அம்மணி அந்த இடத்தில் ஆயிரம் வருசமா சண்டை நடந்துக்கிட்டு இருக்கு சமாதானம் கொண்டுவர்ரது கஷ்டம்ன்னுச்சு

சரி போனா போவுது,   என் குழந்தைகளை கவனிச்சுக்கர, முக்கியமா தொவச்சுபோடற, சமைக்கர , பங்களா, காசுபணத்தோட, என்ன அன்பா கவனிச்சுகற புருசன் வேனும் முக்கியமா அவரு கிரிகெட் பார்க்கக் கூடாது என்னோட சேர்ந்து டிவி. சீரியல் தான் பார்கனும். அப்படிப்பட்டவரு என்ன கட்டிகிடனும்

ஜீனி  " எஜமானி... முதல் கேள்வி கேட்டீங்களே அது எந்த இடம் ?"


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


(கணவனும், மனைவியும்)

கண்ணே உங்கிட்ட ஒரு நல்ல விசயம் ஒரு கெட்ட விசயம் சொல்லனும்

குரல் கம்ம ” ஆனா எனக்கு தொண்டை கட்டிக்கிச்சு ”

”சரி கெட்ட விசயத்த சொல்லு “


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

நண்பனோட வீட்ல நடந்த சம்பவம்.   அவங்க சின்ன பையன் தொன தொனன்னு ஏதாவது சந்தேகம் கேட்டுட்டே இருப்பான்.
அவங்க கிட்ட கேட்டான் “ நான் எப்படி பொறந்தேன் ?”

அதுவந்து, அதுவந்து (சமாளிபையிங்..)  ஒரு பெரிய கழுகு கொண்டாந்து போட்டது.

சரி அப்போ...அப்பா , நீங்க ?

அது மாதிரி தான்பா....

தாத்தா... பாட்டி?

அது மாதிரி தான்பா (ஸ் ஸ்  ப்பா..)

அடுத்த நாள் ஸ்கூல் அசைன்மெண் டீச்சரிடம் சொன்னான்

“இத எப்படி சொல்றதுன்னு தெரியல ஆனா 3 தலமுறையா எங்க குடும்பத்தில இயற்கையான குழந்தை பிறப்பு நடக்கல அதுதான் எனக்கு கவலையா இருக்கு “

டீச்சர் “ ங்ஙே “

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

நண்பனோட மனைவி நல்லா வயலின் வாசிப்பாங்க, அவங்க திருமண தினத்தில (Wedding day) வாசிச்சு காட்றதா இருந்தது.

ஆனா ஏதோ ஒரு பொருள் விழுந்ததினால அதில ஒரு கம்பி அறுந்து போச்சு.
அந்த பெண்னோட அம்மா இப்படி அறிவிச்சாங்க

எல்லோரும் மன்னிச்சுக்கங்க அமி இன்னிக்கு பெர்பார்ம் செய்ய முடியாது அவளோட ஜி ஸ்டிரிங் அறுந்து போச்சு”

பி.கு இது  a ஜோக் இல்லை


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

எட்டுவயசு பையனுக்கு பிறந்த நாள் பரிசாக ஒரு புத்தகம் கிடைச்சது. அந்த புத்தகத்தில் பின்னாடி சில பக்கங்கள் காலியாக இருந்தது

"இது எதுக்குமா? "

அதுவா உனக்கு ஏற்பட்ட அனுபவங்கள அதில எழுதனும்

எப்படி ?? பேஸ் புக்ல எழுதறாப்பலயா ?

@@@@@@@@@@@@@@@@@@@@@@@

அனுபவ பாடத்திற்காக ஸ்கூல்ல இருந்து குழந்தைகள ஒரு ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போனாங்க அங்க

எக்ஸ்-ரே டெக்னீசியன்  : " எப்பவாச்சும் எலும்பு உடஞ்சிருக்காமா ? "

”ஆமா”

உனக்கு ரொம்ப வலிச்சு இருக்குமே

”இல்ல”

உண்மையாவா எந்த எலும்பு காட்டுமா ?

அது என்னோட சிஸ்டரோட எலும்பு உடச்சது நான் தான்

எக்ஸ்-ரே டெக்னீசியன்  : " அவ்.... நீங்க போங்கம்மா "


@@@@@@@@@@@@@@@@@@@@@@@

என்னோட பெண்னுக்கு சைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுத்தேன்.

”“Step back on the pedals, and the bike will brake!”

சைக்கிள் நேரா புதருக்கு ஓடியது....

"ஏய்.... " நல்ல வேலயா ஓன்னும் அடிபடல

நான் தான் சொன்னேன்ல ஏன் பெடல புஷ் பேக் செய்யல...

"ஹைய்யய்யோ.... நான் பெடல புஷ் பேக் அடிச்சா சைக்கிள் ஒடஞ்சிபோயிரும்னு நினைச்சிட்டேன்"

நான் “ ங்..ஙே “



@@@@@@@@@@@@@@@@@@@@@@

ஒரு பள்ளிக்கூடத்தில் புதிதாக வந்த டீச்சர்

“பெயர் என்னப்பா”

“ஸ்பைடர் மேன்”

உன்னோட ரியல் நேம் என்னப்பா ?

ஓ...அதுவா..சாரி,  பீட்டர் பார்க்கர்”

@@@@@@@@@@@@@@@@@@@@@@

Download As PDF

Wednesday, May 21, 2014

ரூபிக் க்யூப் !


நேற்று க்யூப் பிறந்த 40 ஆண்டுகளை கொண்டாடிவிட்டார்கள்.  கூகில் குழுமமும் அதோடு சேர்ந்து கொண்டது.

அப்ப எட்டாவதோ இல்லேன்னா 9 படிச்சிட்டிருந்திருப்பேன். அப்ப எனக்கு அறிமுகமானது அந்த ரூபிக் க்யூப் . என்னோட உறவுக்கார பையன் கைல அது இருந்துச்சு. எந்த விளையாட்டிலேயும் ஆர்வம் இல்லாம இருந்த எனக்கு அந்த விளையாட்டு பொருள் மேல் அதீத மோகம் ஏற்பட்டுச்சு. ஆனா அது ஒரு சில நிமிடங்கள் மட்டுமே என் கைகளில் இருந்தது.

முத்தாரம், கல்கண்டு வார புத்தகங்களில் அதைப் பற்றி அடிக்கடி செய்திகள் வரும். ஒரு கட்டத்துக்கு அப்புறம் அந்த க்யூப் என்னோட நினைவில் ஒரு ஓரம் போயிடுச்சு. ஒரு முறை அந்த க்யூப்ப வாங்கினேன். அதில எதிர் எதிர் கலர் தப்பா இருந்ததால என்னால தீர்க்க முடியல.

சமீபத்தில் ஒரு மாலுக்கு சென்ற போது என் மகள் கண்ணில் பட என் கையில் தவழ்ந்தது. முழு மூச்சா அதை சால்வ் செஞ்சு முடித்த போது அதை தயாரிச்ச ரூபிக் எவ்வளவு உழைச்சிருப்பாரு என்பது எனக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ஆரம்பத்தில மரக் கட்டையில் அதை உருவாக்கினார். அப்ப அவருக்கு வயசு 24 தான். உலக அளவில் அதிகம் விற்பனையான விளையாட்டு பொருள் இது.

சரி அதை கண்டுபிடித்தவர் பற்றிய விவரங்களை பார்க்கலாம்.


இரண்டாம் உலகப்போர் சமயத்தில் , புடாபெஸ்டில் (ஹங்கேரி) பிறந்தவர் எர்நோ ரூபிக். அவருடைய தாய் கவிஞர், அவருடைய தந்தை விமான பொறியாளர். க்ளைடர்களை தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வந்தார்.
இளவயதில் (ரூபிக் ) இவருக்கு சிலைகள் செய்வதில் விருப்பம் இருந்தது பின்னாளில் " the Academy of Applied Arts and Crafts "  ல் டிசைனிங் துறை படிப்பு படித்தார். அங்கேயே 3டி டிசைனிங் துறையில் பணிபுரிந்தார்.

உலக மக்கள் தொகையில் எட்டில் ஒரு பகுதியினரிடம் இந்த விளையாட்டு பொருள் சென்று இருப்பதாக ஒரு தகவல் சொல்கிறது (அந்த காலத்தில்)

1974 ல் மரக்கட்டையில் 3 x 3 க்யூப் உருவாக்கினார். 1975 ல்   விளையாட்டு பொருள் டிசைனாக பேடண்ட் பதிவு செய்தார். அதன் கலரிங் புதிரை விடுவிக்க அவருக்கு ஒரு மாதம் ஆகியது. ஜனரஞ்சகமாக விற்பனைக்காக தயாரிப்பதற்கு முன் பல சிக்கல்களை சந்திக்க வேண்டி இருந்தது. இது ப்ளாக்குகளை சுமுகமாக இயங்குவதில் சிக்கல் இருந்தது, சமயங்களில் பொல பொலவென பிரிந்து விழுந்தது.  பல முயற்சிகளுக்கு  பின்னர்  சாலிடாக உருவாக்கப் பட்டது.

 “மேஜிக் க்யூப் ” என்ற பெயரில் 1977 முதற்கொண்டு ஹங்கேரியில் உற்பத்தி செய்யப்பட்டது. அதன் பின் ஐரோப்பா முழுமையும் இதன் மகிமை உணரப்பட்டது, பிரபலமடைந்தது. கணிதவியலை சேர்ந்த பலரும் இதை ஒரு விளையாட்டு பொருளாக மட்டும் பார்க்காமல் மூளைக்கு வேலைதரும் ஒரு அருமையான பொருளாகவே பார்த்தனர்.

ஸ்டீவன்டவுன்ஸ் முதலாளியால் U. S  ல் ரூபிக் க்யூப் ஆக டப் செய்யப்பட்டன. செஸ் விளையாட்டு போல 1982 ல் க்யூப் புதிர் போட்டிகள் வைக்கப்பட்டன. ஹங்கேரியில் எர்னோ ரூபிக் பெரும் செல்வந்தர் ஆனார் என்று சொல்ல தேவையில்லை.



ரூபிக் ஸ்பிக் க்யூப்

புடாபெஸ்டில் முதல் உலக சாம்பியன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  வியட்நாமை சேர்ந்த 16 வயது சிறுவன் ” மிந் தாய் “( Minh Thai ) 23 செகண்டுக்குள்ளாக க்யூப் புதிரை விடுவித்தான் (June 1982). 

கடந்த 2013ல் ஃபெலிக்ஸ் லாஸ்வேகாசில் 8.18 செகண்டுகளில் க்யூப் புதிரை விடுவித்து காட்டியிருக்கிறான்.

ஒரு 3 x 3 சைஸ் க்யூபில் குறைந்த பட்சம் 24 - 28  மூவ்களில் 6 பக்கங்களும் ஒரே நிறமாக கொண்டுவந்து விட முடியும்.

இத்தனை வேகமாக எப்படி அவங்க க்யூப் இயக்கறாங்க ? எல்லாம் சூத்திரம் தான். கணக்கு மாதிரி இதுக்கும் பார்முலா இருக்கு அதில தெளிவாகிட்டா அத்தனை வேகமாக இயக்க முடியும்.

இன்னும் கூட தண்ணீருக்கு அடியில் இருந்தபடியே வேகமாக க்யூபை போட்டு காட்டிருக்கிறார்கள்.

 செஸ் போல மனித மூளைக்கு வேலை கொடுக்கும் ஒரு பொருள் என்றால் "க்யூபை" சொல்லலாம்.







Download As PDF

Tuesday, May 13, 2014

வொயுனிச் புத்தக மர்மம்



"வொயுனிச் கையெழுத்துப் பிரதியின் மர்ம குறிப்புகள்"


வொயுனிச்  ஆச்சர்யங்களை உள்ளடக்கிய 600 வருட பழமையான படங்களுடன் கூடிய கையெழுத்து புத்தகம். 240 பக்கங்கள் கொண்ட இதில், உள்ளவைகளை இன்னதென்றே புரிந்து கொள்ள முடியாத மர்மம் மிக மிக நீண்ட ஆண்டுகளாக  இருந்தது (இருந்து வருகிறது !)

பெட்ஃபோர்ட்ஷயர் பல்கலைகழகத்தை சேர்ந்த மொழியியல் பேராசிரியரால் இப் புத்தகத்தில் உள்ள சில குறிப்புகள் விடுவிக்கப்பட்டது என்று சொல்லலாம்.  (இன்னமும் முழுமையாக அறியப்படவில்லை !! ) .   2012 ல் பிபிசியில் வெளியான செய்தியின் பின்னே புத்தகத்திலுள்ளவற்றை தெரிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.

"வொயுனிச் கையெழுத்து புத்தகம்" என இது அழைக்கப்பட்டாலும் இதை எழுதியவர் யார் ?



இந்த புத்தக எழுத்தாளரின் பெயரை விடுவிக்கவே பல வருடங்கள் ஆகியிருக்கிறது.

இறுதியாக அறியப்படும் புத்தக பரிமாற்றத்தின் படி, இப்புத்தகம் வில்ஃப்ரெட் வொயுனிச் ( Wilfrid Voynich ) எனும் புத்தக வியாபாரியால் 1912 ல் விலைக்கு வாங்கப் பட்டது. ஒரு பெரிய டிரங் பெட்டியில் கொண்டு வரப்பட்ட புத்தகங்களில் ஒன்று இந்த புத்தகம்.  தென் இத்தாலியில் எழுதப்பட்டிருக்கலாம் என நம்பப் படுகிறது.  மேலும் இத்தாலியின் மறுமலர்ச்சி காலத்தை சேர்ந்ததாக இது இருக்கும் என்பது ( 1400 ) கார்பன் சோதனையில் உறுதிப் படுத்தப் பட்டது.  வொயுனிச் மறைவு வரைக்கும் இப்புத்தகத்தின் எழுத்துக்களும் தகவல்களும் "அவரால்" தெரிந்து கொள்ள முடியவில்லை என்பது கூடுதல் தகவல்.


இந்த புத்தகத்தில் அப்படி என்னதான் இரகசியங்கள் இருக்கக்கூடும் ?


நட்சத்திரங்கள், கோள்களைப் பற்றிய தகவல்களும், தாவங்கள் பூக்கள் பற்றிய விவரங்களும், மனித உடல் கூறு (அனாடமி) சம்பந்தமான தகவல்களும், விண்ணியல், இந்த பிரபஞ்சம், பல்வேறு மூலிகைகள்,மருத்துவம்,மருந்துகள், ரெசிபிகள் பற்றிய தகவல்கள் இந்த புத்தகத்தில் உள்ளன.

இப்புத்தகத்தில் இருக்கும் சில விளக்கப்படங்கள் அனுமானதில் இல்லாமல் பார்த்து வரையப்பட்டிருக்கின்றன. உதாரணமாக மைக்ரோ பயாலாஜிகல் சம்பந்தமான படங்கள் (மைக்ராஸ்கோப்பில் மட்டுமே பார்க்கக்கூடிய இமேஜ்கள்) இந்த புத்தகத்தில் உள்ளன. அப்படியாயின் இப்புத்தகம் எழுதிய கால கட்டத்தில் மைக்ராஸ்கோப்புகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்ததா ? கூட்டு நுண்ணோக்கியானது கலிலியோவால் 1625 ல் கண்டுபிடிக்கப்பட்டது.

There are other claims that the microscope and the telescope were invented by Roger Bacon in the 1200s but this is not substantiated. Giovanni Faber coined the name microscope for Galileo Galilei's compound microscope in 1625 (Galileo had called it the "occhiolino" or "little eye").

நம் கேளக்சியை பற்றிய தகவல்களும் இதில் இருக்கு.

                                                                   " inside book view "



                         "constellation of Taurus - ஏழு நட்சத்திர கூட்டம்  Pleiades cluster"

முதலாம் உலகப்போர் காலந்தொட்டு இப் புத்தக குறியீடுகளை விடுவிக்க பல ஆண்டுகள் பல்வேறு தரப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இறுதியில் மொழியியல் வல்லுநர் (Stephen Bax) ஸ்டீபன் பக்ஸ் இப்புத்தக மர்மம் துலங்கப்பட்டதாக அறிவித்தார். முக்கியமாக அம்மொழி எழுத்துக்களை தம்மால் படிக்க முடிந்ததாக தெரிவித்தார். இவர் மட்டுமே புத்தக ரகசியத்தை விடுவித்தார் என்று சொல்வதற்கு இல்லை அவருக்கு முன் பல ஆராய்சியாளர்கள் புத்தக ரகசியத்தை விடுவிக்கப் பாடுபட்டனர்.

"க்ளிப்" என்று சொல்லக்கூடிய 1,70,000 குறியீட்டுப் படங்கள் இப்புத்தகத்தில் நிறைந்துள்ளது. (hieroglyphs )எகிப்திய உருவ (வடிவ) எழுத்துகளை கொண்டிருந்ததன. பல தகவல்களை உள்ளடக்கிய ஒரே குறியீடு ( "குழு குறியிடு") என்ற வகை பயன்படுத்தப் பட்டு உள்ளது.
[ உதாரணமாக  Centaurea என்ற மலர் " kantairon " என்ற பெயரால் ஒரு குறியீடாக குறிப்பிடப்பட்டுள்ளது. கவுண்டமணி - செந்தில்
ஜோக் ஞாபகம் இருக்கும் என நினைக்கிறேன் பூவை... புஷ்பம் என்றும் சொல்லலாம் புய்பம் என்றும் சொல்லலாம் !! ]

                                                   Centaurea என்ற மலர் ( kantairon)



இதிலுள்ள மலர்களை பற்றிய விவரங்களே இதை எழுதியவர் உலகின் பல பகுதிகளுக்கும் சென்று இருப்பார் என்பது தெளிவு. ஒரு மலர் என்றால் அதை மேலோட்டமாக மட்டும் அல்லாமல் அதன் குறுக்குவெட்டு தோற்றம் அதன் உள்ளீட்டின் செல் பகுப்பாய்வு வரை விவரங்கள் இருப்பதாக சொல்கிறார்கள்.


இன்றைக்கு ப்ரூப் பார்த்து பிரின்ட் போடப்படும் புத்தகங்களே தப்பும் தவறுகளுமாயிருக்க கையால் எழுத்தப்பட்ட இந்த புத்தகத்தில் தவறுகள் இல்லை (அடித்தல் திருத்தல் கூட) என்பது ஆச்சர்யமானது.

இதில் பயன்படுத்தி இருக்கும் வண்ணங்கள் நிறம் மங்காமல் இருப்பது. பெரிய படங்கள் இப்புத்தகத்தில்  பல சீரான மடிப்புகளுடன் இணைக்கப்பட்டு காட்சி அளிக்கிறது.

இன்னும் இப்புத்தகத்தின் இரகசியங்களை விடுவிக்க பல்வேறு துறை வல்லுநர்களின் உதவியும் தேவைப்படுவதாக குறிப்பிடுகிறார் ஸ்டீபன் பக்ஸ் ( Code remained uncracked  !! )

மேலும் சில தகவல்கள்


புத்தகத்தை எழுதியவர் (Roger Bacon )ரோஜர் பெகான் 

காலம் 1214 - 1292 பிரத்தியேகமான மென்மையான ஆட்டு தோல் பேப்பர் போல பயன்படுத்தப் பட்டுள்ளது.

1586 ல் ரோமானிய பேரரசர் ருடால்ஃப் II இதை ரோஜர் பெகான் இடம் இருந்து 600 ட்யூகேட்ஸ் (சுமார் 2 லட்சம் பவுண்டுகள் அப்போதைய மதிப்பு ?? ) கொடுத்து பெற்றுக்கொண்டார்.

1912 ல் நியூயார்க்கை சேர்ந்த புத்தக டீலர்  வில்ஃப்ரெட் வொயுனிச்  கைக்கு வந்தது.

அதன் பின் இத்தாலிய புத்தக காப்பகத்தில் மிக பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.






1921 ல் பென்சில்வேனியா பல்கலைகழக பேராசிரியர் இப்புத்தகம் வேற்று மொழியில் இருந்து மொழிபெயர்க்கப் பெற்ற பக்கங்களும் படங்களும் இருப்பதாக கண்டறிந்து சொன்னார்.

1978 ல் இப்புத்தகத்தில் இருந்து போட்டோ நகல் வடிவில் The Voynich Manuscript: An Elegant Enigma எனும் பெயரில் Mary D’Imperio என்பவரால் (அல்லது குழுமத்தால்)  பிரதி உருவாக்கப்பட்டது

2013 ல் டாக்டர் ரக் ( Dr. Gordon Rugg of Keele University ) என்பவர் புத்தகம் பற்றிய தனது ஆய்வுகளை வெளியிட்டார்.




Download As PDF

Sunday, May 4, 2014

பல்சுவை குட்டி தகவல்கள் !



ஆரோக்கியமான மனிதன் தன் வாழ்நாள் முழுதும் நடக்கும் தூரம் இந்த உலகை மூன்று சுற்று சுற்றுவதற்கு சமம். அதே போல அவன் இதயம் பம்ப் செய்யும் ரத்தம் மூன்று தொட்டிகளை நிறைக்கும் அளவிற்கு இருக்கும்.

லியானார்டோ டாவின்சி மோனாலிசா ஓவியத்தை வரைய 15 வருடங்கள் எடுத்துக்கொண்டாராம் 1519 ல் மரணம் அடையும் முன்பு அந்த ஓவியத்தை இன்னும் முடிக்கவில்லை என்று சொன்னாராம். மனிதனின் முதுகெலும்பு அப்படி வளைஞ்சு இருக்குன்னு ஸ்கெட்ஸ் போட்டவரும் அவர் தான்.



இந்த உலகில் எவ்வளவு வைரங்கள் இருக்கும் ? உலகின் ஒவ்வொருவருக்கும் ஒரு கப் வைரம் கொடுக்கும் அளவுக்கு.

ஆங்கிலத்தில் அதிகமாக உபயோகிக்கப்படும் பெயர்சொல் (Noun) "time"

ஹெராயினையும் (போதைமருந்து), அஸ்பிரினையும் கண்டுபிடித்தவர் ஒருவரே அதே ஆண்டில் [Felix Hoffman, 1897]

மனித மூளை ஒரு நொடியில் 11 million bits தகவல்களை சேமிக்கும் ஆற்றல் கொண்டது ஆனால் அதில் 40 மட்டுமே ஒரு நொடியில் வெளிப்படுத்த முடியும்.

மனிதனின் பார்வைத்திறன் கும் இருட்டில் ஐம்பது மைல் தொலைவில் ஒரு தீக்குச்சி எரியும் வெளிச்சத்தை அவனால் பார்க்க முடியும்.

ஒரு உருளைகிழங்கு வேக ஆகும் நேரத்தை அடிப்படையாக கொண்டது தான் இன்கா இன மக்களின் நேர அலகு. ( ஆஸ்டிரிச் முட்டை வேக வெச்சு பார்க்கல !! )

1748 மற்றும் 1772 ஆண்டுவாக்கில் உருளை கிழங்கு வைத்து இருப்பதே தண்டனைக்குரியது. எங்கு ? பிரான்ஸில்.

”காலம்” என்பதற்கு சரியான அறிவியல் நிரூபனம் இதுவரை இல்லை என்றே கருதலாம்.

கடலில் இருந்து எவ்வளவு உப்பு எடுக்கலாம்.? மொத்த கடல்களில் இருந்தும் உப்பு எடுப்பதாக கற்பனை (!) செய்தால், அதை அப்படியே நிலப்பரப்பில் 500 அடி உயரத்துக்கு கொட்டி வைக்கலாம்.


ஸ்க்ரு கண்டுபிடிப்பதற்கு 100 வருடங்களுக்கு முன்பே ஸ்க்ரூ டிரைவர் [screwdriver] கண்டுபிடித்து விட்டார்கள். அப்போது இது ஆணி பிடுங்குவதற்கு மட்டுமே பயன் பட்டது.

ஒரு விந்தணுவில் 37.5 MB அளவு கொண்ட (DNA) மரபு கூறு தகவல்கள் பதியப்பட்டு இருக்கிறதாம். (ஹி..ஹி...இதிலிருந்து தானே டெரர் பிட்டுகள் உருவாகிறார்கள் )

அந்த கால கிரேக்கவார்தை “இடியட்” என்பதன் அர்த்தம் ”” “அவன் அரசியல் வாதி  அல்ல”

மனித கண்களால் 10 மில்லியன் கலர் ஷேடுகளை அறிந்து கொள்ள முடியும்.

பாபி (Bobby Leach) என்பவர் நயாகராவில் மேல் இருந்து உருட்டி விடப்பட்ட பேரலில் இருந்து கூட உயிர் பிழைத்தார் ஆனால் ஆரஞ்சு தோல் வழுக்கி விழுந்து இறந்து போனார்.

1 முதல் 10 க்குள் மிதமின்றி வகுபடும் மிகச்சிறிய எண் 2520.


நோமோ போபியா (Nomophobia) என்பது போன் தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பவர்களுக்கு ஏற்படும் பயம். (The fear of being out of mobile phone contact)


சூரியன் கேளக்சியில் ஒரு சுற்று முடிக்க 220 மில்லியன் ஆண்டுகள் ஆகிறதாம் அதில் 20 மடங்கு தூரம் இதுவரை பயணம் செய்து இருக்கிறதாம்.


ஹங்கேரி பாசையில் மகன், மகள் என குறிப்பிட வார்த்தை இல்லியாம் ஆனால் சகோதரி, சகோதரன் எனபதை குறிப்பிட பல வார்த்தைகள் இருக்காம் (ஆனா ”ப்ரதர்” இதுக்கு புது அர்த்தம் கண்டுபிடிச்சவன் தமிழனாத்தான் இருப்பான் ரீ கால்... ராஜா ராணி)

மனித உடலில் 100 ட்ரில்லியன் செல்கள் இருக்காம். ஒவ்வொன்றும் ஊசி முனையின் 10000 ல் ஒரு பங்கு அளவு. ஆனால் அதில் இருக்கும் DNA தகவல்களை பிரிண்ட் போட்டால் அந்த புத்தகம் 10,00 600 பக்கங்களை கொண்டிருக்கும்.

மனித எச்சிலில் ஒபிஆர்பைன் (opiorphin) எனப்படும் வலி நிவாரணி மருந்து இருக்காம். இது மோர்பைன் எனும் மருந்தை விட 6 மடங்கு வழுவானது.

ப்ளாடிபஸ் முட்டை போட்டு குட்டிக்கு பால் கொடுக்கும் உயிரினம்.

இவ்வுலகில் 6,900 மொழிகள் அழியாமல் இருப்பதாக சொல்லப் பட்டாலும், அதில் உலகின் மொத்த பகுதி ஜனங்கள் உபயோகிப்பது அவற்றில் 20ஐ தான்.

2 சதவீத பெண்கள் மட்டுமே தாங்கள் அழகு என்பதை வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறார்கள்.


ஆய்வுக்காக ஐன்ஸ்டீன் இறப்புக்கு பின் அவரது மூளை 240 பாகங்கள் ஆக்கப் பட்டு குடுவைகளில் பாதுகாக்கப்பட்டது. மொத்தமும் “Costa Cider” என பெயர் கொடுக்கப்பட்டு 20 வருடங்கள் வைத்திருந்தார்கள்.

ஹோண்டா, டயோட்டா இந்த பெயர்கள் ஜப்பானிய மொழியில் நெல் விளைவிக்கப்படும் நிலத்தின் பெயர்கள்.

”கவ் பாக்ஸ்” க்கும் பசுவிற்கும் சம்பந்தம் இருக்கு ஆனால் ”சிக்கன்பாக்ஸ்” க்கும் சிக்கனுக்கும் சம்பந்தம் இல்லை.



ஒரு பென்சிலை கொண்டு 45000 வார்த்தைகளை எழுதலாம். 35 மைல் நீளத்திற்கு ஒரே கோடாக போடலாம்.

காளான்களுக்கும் மனிதர்களுக்கும் சம்பந்தம் (closely related)இருக்கு ஆனால் செடி,கொடி,மரங்களுக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லை.





Download As PDF

Thursday, May 1, 2014

பிளேட்டோவின் தத்துவங்களில் இருந்து...சில

கனவு

 நல்லவனோ கெட்டவனோ எந்த மனிதர்களின் அந்தரங்கத்
திலும் அடக்க முடியாத சில மிருகப் பிராந்தியமான இச்சைகள் இருக்கின்றன.  அவை மனிதன் உறங்கும் போது கனவுகளாக வெளிப்படுகின்றன.


அன்றாட வாழ்க்கையைப் பரிசுத்தமாகவும், நிதானமாகவும் நடத்தி செல்பவன், உறங்கப் போவதற்குமுன் மிதமாக உணவருந்தித் தன் ம்னதிலுள்ள இச்சைகளையும், கோப தாபம் முதலான உணர்ச்சிகளையும் உதறித் தள்ளிவிட்டு, உறங்குவானாகில், அவன் கெட்ட கனவுகள் காண மாட்டான்.

(கனவுபற்றிய ஆய்வுகளும் கட்டுரைகளும் எழுதி தள்ளிய பேரறிஞர் ப்ராய்டிற்கு முன் 2300 வருசங்கள் முந்தியே மனதை பற்றிய சிந்தனைகளின் மூல வேர் பிளேட்டோவின் வார்த்தைகளில் இருப்பதை காணலாம்.)

பெண்களின் முன்னேற்றம் !

ஆண்களை போலவே பெண்களுக்கும் ராணுவ பயிற்சி அளிக்க வேண்டும்.  அப்போதுதான் நாட்டின் தற்காப்பு நிலைத்திருக்கும், அதற்குமாறாக இப்போது இருப்பது போல் பெண்களுக்கு சம உரிமை வழங்காதிருந்தால், அந்த ராஜியத்தின் பாதிப் பகுதி ஊனமடைந்ததாக இருக்கும்  - பிளேட்டோ

(இந்த முற்போக்கு கருத்து இன்னும் கூட உலகில் சரியாக வேர் விடவில்லை இல்லை இல்லை முளை விட வில்லை என்பதை கவனிக்க.)



செல்வம்

அளவுக்கு மீறிய செல்வமோ.. அளவு மீறிய வறுமையோ மனிதர்களை ஒழுக்கம் கெட்டவர்களாகவும் திறமை அற்றவர்களாகவும் செய்துவிடுகிறது.

ஒரு நாட்டில் பிச்சைக் காரர்கள் இருந்தால் அங்கே திருடர்களும் கோயிலில் கொள்ளையடிப்பவர்களும் இருப்பார்கள்.

கவிஞர்கள் எவ்வாறு தங்கள் சொந்த கவிதைகளின் மேல் மோகம் உள்ளவர்களாக இருக்கிறார்களோ, பெற்றோர்கள் எவ்வாறு தங்கள் குழந்தைகளிடம் பாசம் வைக்கிறார்களோ அப்படியே சுயமாக பணம் சம்பாதிப்பவர்களும் அந்த பணத்தின் மீது அதிக மோகம் (பாசம்) உள்ளவர்களாக இருப்பார்கள்.

பகுத்தறிவு

அறிவும் சத்தியமும் நெருங்கிய உறவு உடையன.

படிப்புகள் அனைத்திலும் அதி உன்னதமான படிப்பு மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்பதை தேட வேண்டும் என்ற படிப்புதான்.

சமாதானத்திற்காக சண்டை பிறப்பிக்காமல் சண்டைக்காக சமாதானத்தைப் பிறப்பிக்கும் சட்ட சபையினன் புத்திசாலி அல்ல.

உண்மையான அறிவின் காதலனாய் இருந்தால் அவன் தன் இளமைப் பருவத்திலிருந்தே எல்லாவற்றிலும் மெய்மையை விரும்புபவனாய் இருக்க வேண்டும்.

மனிதனிடம் அறிவு உறங்கினால் மிருக இச்சைகள் கண் விழித்து எழுந்து குதியாட்டம் போடும்.

எவனொருவனுடைய ஆசைகள் ஒவ்வொரு வடிவத்திலுமுள்ள அறிவை நோக்கியே கவரப் படுகின்றனவோ, அவன் தன் மனதுக்கு ஏற்படக்கூடிய இன்பங்களிலே லயித்திருப்பானே தவிர உடலுக்கு ஏற்படக் கூடிய இன்பங்களை உணர மாட்டான்.

இளமை எனும் பக்குவமான வயதில் தான் எந்தவிதக் குணப் பண்பும் உருப்பெருகிறது; எந்த அபிப்ராயமும் ஆழமாகவே வேரூன்றுகிறது.

  தெரிந்து கொள்ள ஒன்றுமில்லை ; நாம் அறியாத ததை அறிந்து கொள்ள அலைவதில் எந்த வித உபயோகமோ இல்லை என்று அசமந்தமாக மூழ்கி கிடப்பதை : இந்த கொள்கைக்கு எதிராக என் சக்தி எல்லாம் திரட்டி சொல்லாலும் செயலாலும் போரிடத் தயாராக இருக்கிறேன்

என் அறிவின் பிரதி பலிப்பில் எனக்கு சிறந்தது என தோன்றினாலும், அந்த அறிவின் படியே எப்போதும் வழி நடக்கும் சுபாவமுள்ளவர்களில் நானும் ஒருவன்.

நான் சொல்வதில் ஏதாவது உண்மைக்கு புறம்பாக இருந்தால் என் தவரை மற்றவர் திருத்திக் கொள்ள விரும்புகிறேன்.  அதே போல பிறர் சொல்வது உண்மைக்கு மாறாக இருந்தால் பிறர் அவற்றை திருத்த விரும்புகிறேன்.  ஏனெனில் இது தான் இரு சாரருக்கும் பெருத்த லாபம்.  பிறர் தீமைகளை நான் குணப் படுத்துவதை விட எனது பெருந்தீமையைப் பிறர் குணப் படுத்துவதில் லாபம் அதிகம் உண்டு.

ஒவ்வொரு மனிதனின் அறிவிலும் 4 நிலைகள்; முதல் நிலை யூகம், இரண்டாவது நம்பிக்கை, மூன்றாவது சிந்தனை தெளிவு, நான்காவது மெய்யான பகுத்தறிவு. 

அறிவின் எதிரில் அறியாமை தலை வணங்குகிறது.

அறியாமையில் எல்லாம் பெரிய அறியாமை தெரியாதவன் தனக்கு அது தெரிந்து இருப்பதாக நினைத்துக் கொள்வது.







Download As PDF

காதலும் ; காமமும் பிளேட்டோ - [18 +]



தத்துவ ஞானி பிளேட்டோ அறிஞர் சாக்ரடீஸின் மாணாக்கர்
கி.மு 427 ல் ஏதென்ஸில் (கிரேக்கம்) பரம்பரை பரம்பரையான செல்வமும், செல்வாக்கும் உள்ள குடும்பத்தில் பிறந்தவர்.

அவர் எழுதிய 50க்கு மேற்பட்ட நூல்களில் ஒன்று சிம்போசியம் (Symposium) ”ஆன்மீக காதல்” திருக்குறளின் காமத்துப் பால் போன்றது எனச் சொல்லலாம். காதலும் காமமும் பற்றி பிளேட்டோவின் கருத்துகளின் (ஒரு பகுதி ) சுருக்கத்தை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.

காதல் - ஒரு தீவிரமான மனநோய்

உன்னைக் காதலிக்க வேண்டுமானால் நீ காதலி.

காதலானது மனிதர்களை தங்கள் காதலிகளுக்காகச் சாகவும் துணியச் செய்கிறது. காதல் ஒன்றுதான் அந்தமாதிரி ஆக்குகிறது ; ஆணாக இருந்தாலும் பெண்னாக இருந்தாலும்.

அழகில் சிறந்ததை காதலிப்பது இயற்கை.  ஆத்மாவில் உள்ள குறை பாடுகளை காதல் விரும்பாதே தவிர, உடல் குறைபாடுகளை அது பெரிது படுத்துவதில்லை.

மனிதன் பல வழிகளில் இழுக்கப் படுகிறான்.  இரண்டு நோக்கங்களுக்கு இடையே இழுக்கப்படுகிறான் என்பதில் சந்தேகமே இல்லை.  இளமையின் அழகை அனுபவிக்க ஒன்று தூண்டுகிறது ; இன்னொன்று அவனை தடுக்கிறது.  ஏனெனில் முன்னவன், உடலை காதலிப்பவன், பழுத்த கனிபோல அழகைத் தேடிப் பசித்து அலைபவன்.  காதலியின் பண்பைப் பற்றி எந்த அக்கறையும் இல்லாமல் தன் பசியை வேட்கையுடன் திருப்தி செய்து கொள்வான். மற்றவனோ உண்மையில் இன்னொரு ஆத்மாவை விரும்பும் ஓர் ஆத்மா ஆவான் ; உடல் இச்சையை இரண்டாவதாகத் தான் கைக் கொள்கிறான்.  சரீர காதலின் திருப்தியை மூர்க்கத்தனமானதெனக் கருதுகிறான். சுபாவத்தையும் திட நெஞ்சையும், கம்பீரத்தையும், அறிவையுமே அவன் மதித்துப் போற்றுகிறான். அவன் வாஞ்சைக்கு பாத்திரமான தூய பொருளான ஒருத்தியுடன் தூய்மையான முறையில் வாழவே ஆசைப் படுகிறான்.

[ தோழமைக்காக பழகும் காதலை தோழமைக் காதல் என்கிறோம், உடல் ஈடுபாடு இல்லாமல் உள்ள ஈடுபாட்டை விரும்பும் காதலை “பிளேடானிக் லவ்” என்கிறோம் ]

ஆண்பெண் உறவை சிற்றின்பம் என்கிறார்கள் அதைவிட வலிமையான சுகம் வேறு ஏதும் இல்லை என்பது வாஸ்தவம் தான். ஆனால் அதைப் போல வெறியூட்டும் போதையும் வேறொன்றுமில்லை.

எது சீராகவும் அழகாகவும் அமைந்திருக்கிறதோ அதை நிதானமாகவும் ஆழமாகவும் கலை உணர்வோடும் காதலிப்பது தானே உண்மையான காதல்.

எது வெறியூட்டக் கூடியதோ, மிதமிஞ்சிப் போவதோ அதற்கு உண்மையான காதலில் இடமில்லை.

உண்மையான காதல் நிலைத்திருக்க வேண்டுமானால் சிற்றின்ப ஈடுபாடு தலை காட்டக் கூடாது.   காதலர்கள் ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராய் காதலிக்கிறவர்களாயிருந்தால் உடல் இன்பத்தில் அக்கரை கொள்ள மாட்டார்கள்.

காதலர்கள் ஒருவரை ஒருவர் முத்தமிடலாம்; இறுக கட்டியணைத்துக் கொள்ளலாம்.  ஓயாமல் ஒன்றாகவே இருக்கலாம். ஆனால் இந்த எல்லையைக் கடந்து அவர்கள் போகக்கூடாது;  சரீர சுகத்தில் நாட்டம் கொள்ளக் கூடாது.  அவ்வாறு மீறி செய்வார்களானால் காதலின் நிஜச் சுவையை உணராமல் போவதோடு, சரீர ஈடு பாடு அதிகரிக்க நாளடைவில் பலஹீன மாவார்கள்.

(திருவள்ளுவர் இதே கருத்தைத்தான் சொல்லி இருக்கிறார் காமம் மலரைவிட மென்மையனது. அதன் தன்மை அறிந்து நுட்பமாக ஈடுபடுபவர்கள் இவ்வுலகில் வெகு சிலரே )
Download As PDF

தமிழ் எழுதி (உதாரணம்) - ammaa =அம்மா, aRam=அறம், thamiz=தமிழ்,manjsaL=மஞ்சள்

மேலும் படிக்க பக்க எண்களை காண பழைய இடுகையை [OLD POSTS ]மீது கிளிக் செய்யவும் !


பிரபலமான இடுகைகள்

கடந்த 30 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Labels of this Blog

Alien (1) amphibians (1) ancient people (2) ancient scripts (1) ancient tamil poets (1) anteater (1) antibiotics (1) archaeologist (5) art (4) Artic (1) Asteroid (1) astronomy (4) atom (1) bangalore lalbagh (2) bats (1) beauty (1) Bees (2) Belmez faces (1) Bermuda Triangle (1) Birds (7) birthday song (1) black holes (1) brain activity (5) brains (2) Brown Drawfs (1) carnivorous plants (2) chennai conference (1) cloning (2) Cockroach farrms (1) Concisious mind (3) conjoined animals (1) conjoined twin (1) Contest approach (1) crinoids (1) curiosity (1) darwin (2) dhasavadaram (1) dinosaur bird (1) Draco (1) dreams (4) earth worm (1) earthday (1) environment (2) Firefly (1) Fugu (1) G.D.NAIDU (4) Galaxies (2) general knowledge (1) Genetic (1) Ghost (1) Gillette razor (1) golden buddha (1) Gulf streem (1) H.Erectus (1) Hess (1) highway of kongu culture (1) Hindusim (1) Historical Famous Faces (1) human (1) HumanMilk (1) humanoid (1) ice melting (1) indian iron pillar (1) infrared (1) interview (1) jellyfish (1) Jokes (12) KaKapo (1) Kongu culture (6) land scape (1) Library of Alexandria (1) life of bees (2) life science (3) Life Sciences (11) Liger Tigon (1) long life (1) M.Metha (1) mamies milk (1) Mars (1) meat-eating plants (1) milkyway (2) mind (1) MIR Diamond mine (1) Moscow Kremlin (1) Mosquito (1) mushroom (2) Mystery (14) mystry (2) nanban (1) Nasca (1) Nazca Lines (1) Northern Hawk owl (1) Number 108 (1) oddity (1) Omen (1) paranormal interpretation (1) Penquins (1) peru (1) Perur (1) Perur Temple (5) philosophers (1) Piri Reis Map (1) poet Kannadasan (2) QUIZ (2) rare animal (2) Religion (1) RHINOCEROS (2) Richard III (1) RMS Queen Mary (1) Rongorongo script (1) Russian royal bell (1) save trees (2) Science (3) Sea level Rise (1) sediba (1) self confidence (1) Shark (1) Short Stories (1) silambam (1) sleep (3) Sloth (1) smallpox (1) song-birds (3) Space (2) space scientist (1) sphere Robo (1) Spider (2) Sprit (1) Stars (1) story (3) strangeness (1) Superstitious behavior (1) swami vivekanandar (1) tamil artist maruthu (1) tamil history (6) Telescope (1) tibet (3) tickle (1) Tsar Bell (1) twins (1) ultraviolet (1) universe (2) vairamuthu (1) Virus (1) water (2) whales (1) windmill (1) அணு (1) அமானுஷ்யம் (4) அலெக்ஸாண்டிரியா (1) அறிவியல் துணுக்குகள் (14) அறிவியல் புதிர் (9) அனுபவம் (87) அனுபவம். பயணம் (4) அஸ்ட்ராய்டுகள் (2) ஆதி மனிதன் (2) ஆய்வு (11) ஆர்டிக் (1) ஆவி (1) ஆழ்கடல அனுபவம் (2) ஆழ்கடல் அனுபவம் (1) ஆனந்தம் இதழ் (1) ஆன்டிபாயாடிக்ஸ் (1) இரட்டை உயிர்கள் (1) இரும்பு தூண் (1) ஈஸ்டர் தீவு (2) உணவு (1) உணவுப்பழக்கம் (2) உயிர்நிழல் (1) உள்ளுணர்வு (3) உறக்கம் (1) எகிப்து (2) எண்ணங்கள் (2) எண்ணியல் (1) எறும்புதின்னி (1) ஏமாற்றம் (1) ஏன் எதற்கு எப்படி (26) ஐன்ஸ்டீன் (1) ஒளிஉமிழ்காளான் (1) ஓவியம் (6) கடல் ஆய்வு (2) கடல் சுழல் ஆய்வுக்கூடம் (2) கடல் மட்டம் (1) கடல் லில்லி (1) கடல்பல்லிகள் (1) கட்டுரை (125) கணினி (1) கண்காட்சி (3) கண்டுபிடிப்பு (5) கதை (6) கரப்பான்கள் (1) கருந்துளை (1) கல்வெட்டு (1) கவிஞர் கண்ணதாசன் (6) கவிஞர் வைரமுத்து (2) கவிதை (2) கவிதைகள் (2) கற்பாறை சித்திரங்கள் (2) கனவு (1) கனவுகள் (4) காடுறை உலகம் (1) காண்டாமிருகம் (2) காதல் (1) காந்தி (1) காளான் (2) கிச்சுக்கிச்சு (1) குளவி (1) குளோனிங் (2) கேலக்ஸி (3) கொங்கு (7) கொங்கு வரலாறு (1) கொசு (1) கொசு ஒழிப்பு (2) கொசுக்கள் (2) கோபிநாத் (1) கோவை புத்தக வெளியீடு (2) கோவை வரலாறு (7) சகுணம் (1) சலீம் அலி (1) சவரம் (1) சாதனை (1) சார்லி சாப்ளின் (1) சார்லிசாப்ளின் (1) சிங்கம்புலி (1) சிந்தனை (6) சிரோ டிகிரி. சிறுகதை (1) சிலம்பம் (1) சிறுகதை (4) சினிமா (2) சுறா (1) செண்டினல் தீவு (1) செப்பேடு (1) செய்தி (3) செய்திகள் (10) செவ்வாய் (2) டார்வின் தவளை (1) டாவின்சி (1) டிசைனர் பேபி (1) டிராட்ஸ்கி மருது (2) தங்க புத்தர் சிலை (1) தண்ணீர் (1) தத்துவம் (3) தமிழர் (2) தமிழர்கலை (1) தமிழன் (4) தமிழ் (7) தவளைகள் (1) தாய்ப்பால் (1) திபெத்திய குகைகள் (3) திமிங்கிலம் (1) தினமலர் (1) தீவு வாசிகள் (1) துணுக்குகள் (16) தூக்கம் (4) தூப்ளே (1) தேவிகா (1) தேனீ (3) தொலைநோக்கி (1) நகைச்சுவை (17) நடிகர் சிவகுமார் (3) நட்சத்திர குள்ளர்கள் (1) நட்சத்திரம் (1) நாசா (1) நாயக்கர் மகால் (2) நானோ டெக்னாலஜி (1) நானோ-தொழிநுட்பம் (1) நானோபாட்கள் (1) நாஸ்க்கா (1) நீண்ட ஆயுள் (1) நீர் சிலந்தி (1) நொய்யல் (4) பதிவுதிருட்டு (1) பயணம் (2) பறவை (7) பறவை மனிதன் (1) பறவைகள் (2) பாக்தாத் பேட்டரி (3) பாமரன் (1) பால்வீதி (1) பால்வெளி (2) பிரபஞ்சம் (5) பிரிரெயிஸ் (1) பில் கேட்ஸ் (1) பிளாஸ்டிக் (1) பிளேட்டோ (2) பிறந்தநாள் பாடல் (1) புதுவை (1) புத்தகம் (2) புவி தினம் (1) புவி வெப்பமாதல் (1) புழு (1) புனைவுகள் (1) பூச்சியுண்ணும் தாவரங்கள் (1) பூமி தினம் (1) பெங்களூரு (2) பெரிய ஆலமரம் (1) பெருவழிப்பாதை (1) பெல்மீஸ் (1) பேரூர் (7) பேரூர் கல்வெட்டு (1) பொன்மொழிகள் (3) போலியோ (1) ப்ளாஸ்மான்கள் (1) மங்கள்யான் (1) மணிகள் (1) மதுரை (1) மரங்களின் பாதுகாப்பு (2) மரபியல் (5) மருத்துவம் (18) மனம் (2) மனித மூளை (1) மனோவலிமை (2) மாமிச உண்ணி தாவரம் (1) மின்மினிப் பூச்சிகள் (1) மீன்கள் (2) மு. மேத்தா (1) முதுமக்கள் தாழி (1) மூடபழக்கவழக்கம் (2) மூளை (4) மேஜிக் (1) ராசாளி ஆந்தைகள் (1) ராஜநாகம் (1) ரூபிக் க்யூப் (1) ரேசர் (1) வரைபடம் (1) வலைப்பதிவர்கள் விழா (1) வாழ்க்கை (1) விச சிலந்தி (1) விண்கற்கள் (1) விண்ணியல் (3) விண்வெளி (6) விண்வெளி வாகனங்கள் (3) விண்வெளி விஞ்ஞானிகள் (2) விநோதங்கள் (1) விமர்சனம் (1) விலங்குகள் (2) வெப்பமயமாதல் (1) வெளவால் (1) வேற்றுகிரகவாசி (1) வைர சுரங்கம் (1) வைரஸ் (1) வொயுனிச் (1) வௌவாள் (1) ஜி.டி.நாயுடு (3) ஜெல்லி மீன் (1) ஜோக்குகள் (3) ஜோக்ஸ் (10) ஸ்டெம் செல் (1) ஸ்லவுத் (1)