ஆரோக்கியமான மனிதன் தன் வாழ்நாள் முழுதும் நடக்கும் தூரம் இந்த உலகை மூன்று சுற்று சுற்றுவதற்கு சமம். அதே போல அவன் இதயம் பம்ப் செய்யும் ரத்தம் மூன்று தொட்டிகளை நிறைக்கும் அளவிற்கு இருக்கும்.
லியானார்டோ டாவின்சி மோனாலிசா ஓவியத்தை வரைய 15 வருடங்கள் எடுத்துக்கொண்டாராம் 1519 ல் மரணம் அடையும் முன்பு அந்த ஓவியத்தை இன்னும் முடிக்கவில்லை என்று சொன்னாராம். மனிதனின் முதுகெலும்பு அப்படி வளைஞ்சு இருக்குன்னு ஸ்கெட்ஸ் போட்டவரும் அவர் தான்.
இந்த உலகில் எவ்வளவு வைரங்கள் இருக்கும் ? உலகின் ஒவ்வொருவருக்கும் ஒரு கப் வைரம் கொடுக்கும் அளவுக்கு.
ஆங்கிலத்தில் அதிகமாக உபயோகிக்கப்படும் பெயர்சொல் (Noun) "time"
ஹெராயினையும் (போதைமருந்து), அஸ்பிரினையும் கண்டுபிடித்தவர் ஒருவரே அதே ஆண்டில் [Felix Hoffman, 1897]
மனித மூளை ஒரு நொடியில் 11 million bits தகவல்களை சேமிக்கும் ஆற்றல் கொண்டது ஆனால் அதில் 40 மட்டுமே ஒரு நொடியில் வெளிப்படுத்த முடியும்.
மனிதனின் பார்வைத்திறன் கும் இருட்டில் ஐம்பது மைல் தொலைவில் ஒரு தீக்குச்சி எரியும் வெளிச்சத்தை அவனால் பார்க்க முடியும்.
ஒரு உருளைகிழங்கு வேக ஆகும் நேரத்தை அடிப்படையாக கொண்டது தான் இன்கா இன மக்களின் நேர அலகு. ( ஆஸ்டிரிச் முட்டை வேக வெச்சு பார்க்கல !! )
1748 மற்றும் 1772 ஆண்டுவாக்கில் உருளை கிழங்கு வைத்து இருப்பதே தண்டனைக்குரியது. எங்கு ? பிரான்ஸில்.
”காலம்” என்பதற்கு சரியான அறிவியல் நிரூபனம் இதுவரை இல்லை என்றே கருதலாம்.
கடலில் இருந்து எவ்வளவு உப்பு எடுக்கலாம்.? மொத்த கடல்களில் இருந்தும் உப்பு எடுப்பதாக கற்பனை (!) செய்தால், அதை அப்படியே நிலப்பரப்பில் 500 அடி உயரத்துக்கு கொட்டி வைக்கலாம்.
ஸ்க்ரு கண்டுபிடிப்பதற்கு 100 வருடங்களுக்கு முன்பே ஸ்க்ரூ டிரைவர் [screwdriver] கண்டுபிடித்து விட்டார்கள். அப்போது இது ஆணி பிடுங்குவதற்கு மட்டுமே பயன் பட்டது.
ஒரு விந்தணுவில் 37.5 MB அளவு கொண்ட (DNA) மரபு கூறு தகவல்கள் பதியப்பட்டு இருக்கிறதாம். (ஹி..ஹி...இதிலிருந்து தானே டெரர் பிட்டுகள் உருவாகிறார்கள் )
அந்த கால கிரேக்கவார்தை “இடியட்” என்பதன் அர்த்தம் ”” “அவன் அரசியல் வாதி அல்ல”
மனித கண்களால் 10 மில்லியன் கலர் ஷேடுகளை அறிந்து கொள்ள முடியும்.
பாபி (Bobby Leach) என்பவர் நயாகராவில் மேல் இருந்து உருட்டி விடப்பட்ட பேரலில் இருந்து கூட உயிர் பிழைத்தார் ஆனால் ஆரஞ்சு தோல் வழுக்கி விழுந்து இறந்து போனார்.
1 முதல் 10 க்குள் மிதமின்றி வகுபடும் மிகச்சிறிய எண் 2520.
நோமோ போபியா (Nomophobia) என்பது போன் தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பவர்களுக்கு ஏற்படும் பயம். (The fear of being out of mobile phone contact)
சூரியன் கேளக்சியில் ஒரு சுற்று முடிக்க 220 மில்லியன் ஆண்டுகள் ஆகிறதாம் அதில் 20 மடங்கு தூரம் இதுவரை பயணம் செய்து இருக்கிறதாம்.
ஹங்கேரி பாசையில் மகன், மகள் என குறிப்பிட வார்த்தை இல்லியாம் ஆனால் சகோதரி, சகோதரன் எனபதை குறிப்பிட பல வார்த்தைகள் இருக்காம் (ஆனா ”ப்ரதர்” இதுக்கு புது அர்த்தம் கண்டுபிடிச்சவன் தமிழனாத்தான் இருப்பான் ரீ கால்... ராஜா ராணி)
மனித உடலில் 100 ட்ரில்லியன் செல்கள் இருக்காம். ஒவ்வொன்றும் ஊசி முனையின் 10000 ல் ஒரு பங்கு அளவு. ஆனால் அதில் இருக்கும் DNA தகவல்களை பிரிண்ட் போட்டால் அந்த புத்தகம் 10,00 600 பக்கங்களை கொண்டிருக்கும்.
மனித எச்சிலில் ஒபிஆர்பைன் (opiorphin) எனப்படும் வலி நிவாரணி மருந்து இருக்காம். இது மோர்பைன் எனும் மருந்தை விட 6 மடங்கு வழுவானது.
ப்ளாடிபஸ் முட்டை போட்டு குட்டிக்கு பால் கொடுக்கும் உயிரினம்.
இவ்வுலகில் 6,900 மொழிகள் அழியாமல் இருப்பதாக சொல்லப் பட்டாலும், அதில் உலகின் மொத்த பகுதி ஜனங்கள் உபயோகிப்பது அவற்றில் 20ஐ தான்.
2 சதவீத பெண்கள் மட்டுமே தாங்கள் அழகு என்பதை வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறார்கள்.
ஆய்வுக்காக ஐன்ஸ்டீன் இறப்புக்கு பின் அவரது மூளை 240 பாகங்கள் ஆக்கப் பட்டு குடுவைகளில் பாதுகாக்கப்பட்டது. மொத்தமும் “Costa Cider” என பெயர் கொடுக்கப்பட்டு 20 வருடங்கள் வைத்திருந்தார்கள்.
ஹோண்டா, டயோட்டா இந்த பெயர்கள் ஜப்பானிய மொழியில் நெல் விளைவிக்கப்படும் நிலத்தின் பெயர்கள்.
”கவ் பாக்ஸ்” க்கும் பசுவிற்கும் சம்பந்தம் இருக்கு ஆனால் ”சிக்கன்பாக்ஸ்” க்கும் சிக்கனுக்கும் சம்பந்தம் இல்லை.
ஒரு பென்சிலை கொண்டு 45000 வார்த்தைகளை எழுதலாம். 35 மைல் நீளத்திற்கு ஒரே கோடாக போடலாம்.
காளான்களுக்கும் மனிதர்களுக்கும் சம்பந்தம் (closely related)இருக்கு ஆனால் செடி,கொடி,மரங்களுக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லை.
ஆரோக்கிய மனிதன் உலகை மூன்று சுற்று சுற்றி வருவதற்கு சமம் ,நம்ம தல நடக்கிறதைப் பார்த்தா ஏழு சுற்று சுற்றி விடுவார் போலிருக்கே !
ReplyDeleteத ம 1
நாற்பதும் நமதே என்று சொல்வது இதனால் தானோ....! ஹிஹி...
ReplyDeleteசிறப்பான பொது அறிவுத்தகவல்கள்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeletePizza- படம் விளக்கம் அருமை, அது உண்மையா?
ReplyDelete\\ஹெராயினையும் (போதைமருந்து), அஸ்பிரினையும் கண்டுபிடித்தவர் ஒருவரே அதே ஆண்டில் [Felix Hoffman, 1897].\\ வெளிநாட்டில் ரெண்டையுமே தடை பண்ணிட்டாங்க!!
\\மனிதனின் பார்வைத்திறன் கும் இருட்டில் ஐம்பது மைல் தொலைவில் ஒரு தீக்குச்சி எரியும் வெளிச்சத்தை அவனால் பார்க்க முடியும்.\\ இயல்பில் யார் இப்படி இருக்காங்களோ தெரியலை!! எல்லாம் கம்பியூட்டர் டி.வி பார்த்தே கண்ணை நாசமாக்கிகிட்டு இருக்காங்க.
\\”காலம்” என்பதற்கு சரியான அறிவியல் நிரூபனம் இதுவரை இல்லை என்றே கருதலாம்.\\ ஐன்ஸ்டீனின் சார்பியல் கொள்கைகள் கூட எதுவும் சொல்லவில்லையா? அடப் பாவமே!!
\\பாபி (Bobby Leach) என்பவர் நயாகராவில் மேல் இருந்து உருட்டி விடப்பட்ட பேரலில் இருந்து கூட உயிர் பிழைத்தார் ஆனால் ஆரஞ்சு தோல் வழுக்கி விழுந்து இறந்து போனார்.\\ விதி வலியது!!
\\சூரியன் கேளக்சியில் ஒரு சுற்று முடிக்க 220 மில்லியன் ஆண்டுகள் ஆகிறதாம் அதில் 20 மடங்கு தூரம் இதுவரை பயணம் செய்து இருக்கிறதாம்.\\ சூரியனின் வயது 5000 மில்லியன் ஆண்டுகள், எனவே பலமுறை அது முன்னரே சுற்றி முடித்திருக்கலாம். இந்த 20% ஏதாவது ஒரு reference ஐப் பொறுத்து கணக்கிடப் பட்டிருக்கலாம்!!
\\ஹங்கேரி பாசையில் மகன், மகள் என குறிப்பிட வார்த்தை இல்லியாம் ஆனால் சகோதரி, சகோதரன் எனபதை குறிப்பிட பல வார்த்தைகள் இருக்காம் (ஆனா ”ப்ரதர்” இதுக்கு புது அர்த்தம் கண்டுபிடிச்சவன் தமிழனாத்தான் இருப்பான் ரீ கால்... ராஜா ராணி)\\மகன், மகள் என குறிப்பிட வேண்டிய அவசியம் வந்தால் அவர்கள் என்ன செய்வார்கள்??!!
\\இவ்வுலகில் 6,900 மொழிகள் அழியாமல் இருப்பதாக சொல்லப் பட்டாலும், அதில் உலகின் மொத்த பகுதி ஜனங்கள் உபயோகிப்பது அவற்றில் 20ஐ தான்.\\ வெறும் 20-ஆ ?? நிச்சயம் அதிகமாக இருக்கும்................
\\2 சதவீத பெண்கள் மட்டுமே தாங்கள் அழகு என்பதை வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறார்கள்.\\ "தன்னை விட அழகாக வேறு யாருமில்லை" என்று நினைப்பவர்கள் தான் அதிகம்............
\\”கவ் பாக்ஸ்” க்கும் பசுவிற்கும் சம்பந்தம் இருக்கு ஆனால் ”சிக்கன்பாக்ஸ்” க்கும் சிக்கனுக்கும் சம்பந்தம் இல்லை.\\ பதிவிற்கே திருஷ்டி மாதிரி இருக்கு!
அனைத்து தகவல்களும் சுவராஸ்யம், ரசித்துப் படித்தேன், நன்றி.
ஒவ்வொரு குட்டித் தகவலும் சுவாரஸ்யம். ரசித்துப் படித்தேன். நீங்கள் உடனே எனக்கான ஒரு கப் வைரத்தை என் வீட்டிற்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யவும்! ஹி.... ஹி... ஹி...!
ReplyDeleteநன்றி...நன்றி... < பகவான் ஜி, திண்டுக்கல் தனபாலன், தளிர் சுரேஷ், ஜெயதேவ் தாஸ், மற்றும் பாலகணேஷ் >
ReplyDeleteReally nice
ReplyDeleteReally nice
ReplyDelete