Followers

Showing posts with label அறிவியல் புதிர். Show all posts
Showing posts with label அறிவியல் புதிர். Show all posts

Tuesday, February 11, 2014

உருவங்களை நிஜத்தில் மறைய வைப்பது சாத்தியமா?

ஹாரி பாட்டர், ப்ரிடேட்டர் {potter , predator} போன்ற படங்களில், சயன்ஸ்பிக்ஸன் படங்களிலும், இரும்புக்கை மாயாவி போன்ற கார்டூன் கதைகளிலும் உருவங்களை மறைய வைப்பது அல்லது மறைந்து போவது என்பது இல்லாமல் இருந்தால் அது ஆச்சர்யம்.



உண்மையில் மேஜிக் போல நிஜத்திலும் நிகழ்த்துவது சாத்தியமா ? இன்னும் இல்லை ஆனால் அந்த மாதிரியான நிகழ்வை சாத்தியப் படுத்த அருகில் சென்று  கொண்டிருக்கிறார்கள்  என்று சொல்லலாம்.

இதற்கான திறப்பான் தான் மெட்டா மெட்டீரியல் (Metamaterial).   இது ஒருவகையான இயற்கையில் இல்லாத உருவாக்கப்பட்ட சிந்தடிக் பொருள். ஒளி இதனை சுற்றி சிதறச் செய்யும் தன்மையானது.  அதனால் அந்த பொருளை காணாது மறையச் செய்யலாம்.


டார்சின் முன்னால் வைக்கப்பட்ட துண்டினை(துணி) ஒளி ஊடுருவி கடந்து செல்வதாக உருவகப்படுத்திக்கொள்ளுங்கள் மெல்லிய இழையை ஒளி ஊடுருவாமல் அந்த இழைகளுக்கு இடைப்பட்ட துவாரத்தின் வழியாக செல்லும் அல்லவா.  அந்த இழையில் ஒரு நுண் துவாரம் செய்தால் ஒளியானது அதனுள் செல்ல முடியாமல் விலகி செல்லும் இல்லையா ?. அப்படி ஒளியானது விலகி செல்லும் போது அந்த பொருள் கண்ணுக்கு தெரியாமல் மறைக்கப்படுகிறது.



மிக மிகச்சிறிய தட்டியை கற்பனை செய்து கொள்ளுங்கள் அப்படி இருக்கும் இந்த மெட்டா மெட்டீரியல்.


“Such a lens would offer superior resolution over conventional technology, capturing details much smaller than one wavelength of light to vastly improve imaging for materials or biomedical applications,” says Costas Soukoulis, a physicist at Iowa State University. “A metamaterial superlens could give researchers the power to see inside a human cell or observe DNA.”

ஒரு தட்டி வடிவத்தில் உருவாக்கப்பட்ட தனிமங்களுக்கு இடையே செல்லும் ஒளியின் அலை நீளத்தை விட குறைவான இடைவெளியில் ஒளி வளைந்து செல்லுகிறது. போட்டான்கள் சல்லடை போன்ற நுண்பொறியில் சிக்கி கொள்கின்றன அவை அந்த நுண்துளையில் நுழைய முடிவதில்லை அதற்கு பதிலாக அவை அந்த பொருளை புனல் வடிவில் சுற்றி செல்கிறது.

இந்த டெக்னிகல் இன்னும் ஆய்வுக்கட்டத்தில் இருக்கிறது. மெட்டா மெட்டீரியல் எனும் இத்தனிமம் ஆனது லைட் ரேடியேசனை ஒரு குறிப்பிட்ட வேவ் லெந்தில், குறித்த அலைவரிசை நிறங்களில் மட்டுமே பரிட்சிக்கப் பட்டது. டெக்ஸாஸ் யுனிவர்சிட்டியை (ஆஸ்டின்) சேர்ந்த ஆராய்சியாளர்களின் அடுத்த கட்ட ஆய்வு " இந்த தனிமத்தில் ஒரு போர்வை அல்லது கோட் செய்வது " அப்படி உருவாக்கப்பட்டு வெற்றியடைந்தால், திரைப்படங்களில் காட்டப்படும் கிராபிக்ஸ்கள் உண்மையில் உண்மையாகும்.





"The voltage generated by this photodiode when it is illuminated with light can be used to change the resonance of the metamaterial structure," explains Shadrivov. "This means that we can control the refractive properties of the structure at will and bend the microwave light beams passing through the material in whichever direction we like."




Labels: மெட்டாமெட்டீரியல்,metamaterial

Download As PDF

Thursday, February 6, 2014

புதிர்களும்... ஜோக்குகளும் !!



மகள் ; அம்மா ,அப்பா மீன் வாங்கிட்டு வந்திருக்காரு மா ?

மனைவி ; முன்னமேயே சொல்லியிருந்தா. ..மசால் ரெடி செஞ்சு இருப்பனே ,..

மகள் ; அம்...மா (ஷாக்காமா..!)
இது நல்லா சாப்பிடுற மீனுமா ..

நான் ; அதுங்க நல்லா சாப்பிடுற மீன்கள்...

மனைவி ; க்..கும், கலர் மீனுன்னு சொல்ல வேண்டியது தானே. எனக்கு தெரியாதா நீங்க வாங்கி வருவீங்கன்னு.

(அதானே..மீச இருந்தாத்தானே மண்ணு ஒட்டறதுக்கு)

@@@@@@

நண்பனோட மானத்த காப்பாத்துனேன்னு சொன்னியே என்னாச்சு. ?

"அவன் போட்டு இருக்கரது என்னோட சட்ட பேண்ட் "

@@@@@@

பேராசிரியர் சொன்னார், "கவனம் வெச்சுக்குங்க..சொர்கத்துக்கு போக வரவு செலவு கணக்கு இருக்குப்பா..."

கடைசி பெஞ்சில் இருந்து ஒரு குரல்

"இருக்கட்டும் இந்த பிசினெஸ் நடக்கர இடம் எங்கே இருக்கேன்னு தெரிஞ்சிக்கலாமா? "

@@@@@@

கல்யாண ஆல்பத்தை எடுத்து வைத்து பார்த்துக் கொண்டிருந்தாள், மகள்.

"ஆமா.. ம்மா, அப்ப ஊட்டி விட்டதோட சரி" இது நான்.

"உ க் .. ஊம்..கொமட்ல குத்துவேன்" இது மனைவி.

"சரி..சரி சண்டை போடாதீங்க, என்ன விட்டுட்டு நீங்க ரெண்டு பேரும் போட்டோவுக்கு போஸ் கொடுத்திட்டு இருக்கீங்க...ஹாங்" - இது மகள்.

@@@@@@



"வெஜிட்டேரியன் டயட்டு உடம்புக்கு நல்து, என்னான்ட ஹார்டு ப்ராப்ளமின்னிட்டு ஒத்த முசலு குட்டி கூட வந்ததில்ல..."

@@@@@@

புதிர் 1

"CAFFEINE ENHANCES MEMORY " என்று கண்டுபிடிச்சிருக்காங்க



உங்க மூளைத்திறனை டெஸ்ட் செஞ்சு பாருங்க. மேலே உள்ள படத்தில் ஒரு முகம் ஒழிஞ்சு இருக்கு "மூனு" செகண்டுக்கு உள்ள கண்டு பிடிக்க முடியுதா பாருங்க. 

புதிர் 2




மேலே உள்ள படத்தில் ஒன்னுக்குள்ள ஒன்னு இரண்டு பாசிமணி மாலைகள் இருக்கு ..அது தெரிஞ்சதுதான் !.. நான் கேட்கரது அவை இரண்டும் சரியான வட்ட வடிவில் இருக்குதா ? (க்ளூ.... இரண்டு மாலைகளுக்கும் இடைப்பட்ட இடைவெளி சமச்சீரா இருக்கான்னு பாருங்க)

புதிர் 3



மேலே இருப்பது கோக்கு மாக்கான கணக்கு.,, இப்படி சொல்வதற்கு காரணம் பெருக்கலின் நேரிடையான பதிலை கொஞ்சம் அறிவுப்பூர்வமான ( ! ) சிந்தனை தான். யோசிங்க இதுக்கு என்ன விடை என்பதை இறுதியில் சொல்கிறேன்.

புதிர் 4


எத்தனை "F " ? கேள்வியில் வரும் எழுத்தை தவிர்த்து பாருங்க.  15 நொடிக்குள்ள கண்டுபிடிக்க முயற்சி செய்ங்க. இது நம் மூளை எந்த அளவு ஸ்ட்ராங்கா ? ! இருக்கு என்பதற்கான சின்ன டெஸ்ட்.

புதிர் 5




புதிர் 6

இரண்டு பசங்க ஒரு ஆற்றை கடக்கனும் கரையில் ஒரே ஒரு படகு மட்டும் இருக்கு ஆற்றை கடக்க வேறு கயிறு , மிதவை ஏதும் இல்லை அவங்களுக்கு நீச்சலும் தெரியாது. பிரச்சனை என்னன்னா அந்த படகில ஒருத்தர் மட்டுமே போகலாம். படகு தானா திரும்பி வராது. ஆனாலும் அவங்க ஆற்றை கடந்தாங்க அது எப்படி?

புதிர் 7


லாஜிக் கேள்வியும் ; லாஜிக் பதிலும்

காடு மலை சுத்தி பார்ப்பதில் ஆர்வமுள்ள ஒருத்தன் காட்டுவழியா
போனப்ப எதிர் பாராத விதமா "அறிவுப்பூர்வமா" அதாவது லாஜிக்கா யோசிக்கிற நரமாமிசம் சாப்பிடும் கூட்டத்தில் மாட்டிக்கிட்டான்.

அந்த கூட்டத்தோட தலைவன் கிட்ட அவன கூட்டிட்டு போனாங்க

தலைவன் சொன்னான் " இப்ப நீ உன்னோட கடைசி வாக்கியத்தை பேசலாம்"

நீ சொல்ற வாக்கியம் உண்மையா இருந்தா விறகு கட்டையில்
வெச்சு எரிச்சிடுவோம்.

நீ சொல்ற வாக்கியம் பொய்யா இருந்தா உன்ன எண்ணையில்
போட்டு பொரிச்சிடுவோம் னாங்க.

சிக்கிய சிங்காரம் கொஞ்ச நேரம் யோசிச்சிட்டு சொன்னான் "_ _ _ - -"

அவன் சொன்னத கேட்ட அந்த கூட்டம் அவன விட்டுட்டு போய்ட்டாங்க

அப்படி அவன் என்ன தான் சொல்லி இருப்பான் ? ?

புதிர் 8

ஒரு சின்னகணக்கு..

எங்கிட்ட இரண்டு மீன் தொட்டிகள் இருக்கு. இரண்டிலும் மீன்கள் எண்ணிக்கை சமம் இல்லை.

முதல் தொட்டில இருந்து ஒரு மீன எடுத்து இரண்டாவது தொட்டில போட்டா முதல் தொட்டியில் இருக்கும் மீன்களின் இரண்டு மடங்கு இரண்டாவது தொட்டியில் இருக்கும்.

இரண்டாவது தொட்டியில இருந்து ஒரு மீன எடுத்து முதல் தொட்டியில் போட்டா இரண்டு தொட்டி மீன்களும் சமமாயிடும்.

அப்படின்னா, இரண்டு தொட்டியிலேயும் எத்தனை எத்தனை மீன்கள் இருக்கும் ?

புதிர் 9


புதிர் 10


புதிர் 11

ஒரு ஆள் அவசரமா ஒரு பையன தூக்கிட்டு ஆஸ்பத்திரிக்கு வந்தாரு தன்னோட பையன் கால்ல ஆணி குத்திடுச்சு வைத்தியம் பாருங்கன்னு சொன்னாரு

ஆனா அந்த சர்ஜன் "இவனுக்கு என்னால ஆபரேசன் செய்ய முடியாது ஏன்னா இவன் என் பையன்"

அங்க என்ன நடக்குது உங்களுக்கு புரிஞ்சதா?

@@@@@@

இந்த குதூகலத்தை நம்மால் உணர முடியாது போவதேன் ? இது புதிர் இல்லை சிந்தனைக்கு ;


புதிர்களுக்கான விடை உங்களுக்கே தெரிஞ்சிருக்கும் இருப்பினும்....

 புதிர் 1 :

If you managed to find the man in 3 SECONDS, 
the RIGHT part of your brain = > more developed than in the average person.
If you found him in about 1 MINUTE => the right part of your brain is of the average person.
If you needed more than 1 minute to find him => the right part of your brain is slow.


புதிர் 2 : வட்ட வடிவில் இருக்கு (ஆப்டிகல் இல்யூசன்)

புதிர் 3 :this is one of derives....இண்டெலிஜெண்ட் மல்டிலெவல் எல்லாம் இருக்கு நாம எளிமையா இதை அனுகலாம் என்று நினைக்கிறேன் ; 11x11 = 4 இதை a = 4
22x22 = 16 => 11x2x11x2 => 11x11x2x2=> ax2x2 => 4x4 =16
33x33 => 11x3x11x3=> ax3x3=>4x9=36
44x44 => ax4x4 => 4x16=64
சமத்தின் வலதுபுறம் 4,16,36,64

கணித கோட்பாடு இல்லைன்னாலும் ஒரு இண்டெலிஜெண்ட் லாஜிக்கா எடுத்துக்கலாம்னு நினைக்கிறேன்.
11x11=121 => 1+2+1=4
22x22=484 => 4+8+4=16
33x33=1089 => 1+0+8+9=18
இது சரி என படவில்லை 4,16,18 இதில் முரண்பாடு தெரிகிறது.

இதை இப்படி கூட்டலாம், 9+18+9 =36
(10 லிருந்து 1 குறச்சு 9,
10+8=18)
44x44=1936 இதை எப்படி அடுத்து அடுத்து கூட்டுவது?
like this, 44x44=1936 இதை எப்படி அடுத்து அடுத்து கூட்டுவது?
(16)(33)(6)
(16)(32)(16)
1936=16+32+16=64

33x33=36 is correct how ?
11x11=4
22x22=16

Let us say a Common divisional Number 'A '
11x11=121/A = 4
22x22=484/A=16

A=121/4 =30.25
A=484/16=30.25

so common divisional number must be 30.25
So 33x33=36 A=1089/36 =30.25

44x44=64 A=1936/64=30.25
55x55=100 A=3025/100=30.25

புதிர் 4 :  பெரும்பாலானவர்களுக்கு 3 F களே கண்களுக்கு சட்டென தெரியும். ஆப் வரும் இடங்களை விட்டுவிடுவார்கள். சரியான விடை 6 F

புதிர் 5 :  சரியான விடை 4

புதிர் 6 :  இருவரும் எதிர் எதிர் கரையில் நிற்கிறார்கள்.

புதிர் 7 : என்னை எண்ணையில் போட்டு பொரிச்சுடுவீங்க.

புதிர் 8 : விடை முதல் தொட்டியில் 5, இரண்டாவதில் 7

புதிர் 9 : வட்டத்தில் உள்ள நம்பர் எதிர் திசையில் இருக்கும் செக்மென்ட்களின் கூட்டல் (17)

புதிர்10 : 101 - 10^2 = 1  (101 - 10 அடுக்கு 2 =1) ,  101 = 102 - 2

புதிர்11 : சர்ஜன் அந்த பையனின் அம்மா.

Download As PDF

Wednesday, November 20, 2013

எத்தனை பூனை புதிருக்கான பதிலும், பைரசி நம்பினால் நம்புங்கள் கம்யுனாட்டியும் !

கடந்த 15 நவம்பர் 2013 ல் எத்தனை பூனை புதிருக்கான பதிலை இந்த பதிவில்,  அதற்குமுன் என்னை மன சஞ்சலத்திற்கு உள்ளாக்கிய பதிவு திருட்டு.

நம்பினால் நம்புங்கள் கம்யூனிட்டி இது  பேஸ்புக் குழுக்களில் ஒன்று சமீபத்தில் எனது பல பதிவுகளை வரி மாறாமல் அப்படியே எடுத்து போட்டிருந்தது.   ஏற்கனவே வலைபதிவுகளில் அப்படியே காஃபி அடித்து போடும் செயல் நடந்து கொண்டுதான் இருக்கிறது.  இதற்கும் பேஸ் புக்கில் போடுவதற்குமுள்ள வித்தியாசம் நோய் தொற்று ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு பரவுவதற்கும், காற்றில் பரவுவதற்கும் இருக்கும் வேறு பாட்டை போன்றதே.

வலைத்தளத்தில் மட்டுமே எழுதி வருபவர்களுக்கு பேஸ்புக்கில் அவர்களின் பதிவுகள் திருடி போடப் படுவது தெரியாது.

யாரும் ஜீனியசாக பிறப்பதில்லை, கூகுல் காரன் இலவசமா கொடுக்கும் (அவன் நம்மள வெச்சு சம்பாதிப்பான், அத விடுங்க..) தளத்தில் ஏதேனும் உபயோகமான தகவல்கள தேடியும், புத்தகங்கள பிறாண்டியும், அதுக்கப்புறம் பின்னூட்ட வாதிகள் கேள்விகளுக்கும் பதில் சொல்லியாகனும், தூக்கம் கெடனும், இதுக்கும் மேல வீட்டுகாரம்மா கேட்கும் ஏங்க உங்களுக்கு கிருக்கு பிடிச்சிருச்சா? என்ற கேள்விகளுக்கு பதில் சொல்லாம முழிக்கனும்.  இதெல்லாம் அப்படியே சுட்டுப் போடும் கம்யூனாட்டிகளுக்கு எங்கே தெரியப் போகிறது.

மார்குகிட்ட (பேஸ்புக் ஓனர்) கம்ளைண்ட் செய்யறதுக்கு முன்னாடி மருவாதையா கேட்டேன் ஐயா நீங்க போட்டிருக்கிற போஸ்டல இருக்கற சமாச்சாரம் நான் எழுதுனது இன்னின்ன தேதில, அதனால தகவலுக்கு கீழே எம்ட தளத்தோட பேரப் போடுமய்யான்னு ! முகத்தில அடிச்ச குறையா போட்ட கமெண்ட நீக்கி என்ன தள்ளி வைச்சிட்டான்.  அப்ப தெளிவா ஒன்னு புரிது இவன இதுன்னுதான் கூப்பிடோனும்.

அந்த கம்யூனிட்டில லைக் செஞ்சிருக்கர 27000 மஹா சனங்களே நீங்க படிச்ச பதிவ பார்த்தா இது இந்த பதிவு சமாச்சாரம்னு குட்டுங்க.  அந்த பதிவுகள பகிர்ந்து அதுக்கு கிர்....ர் ஏத்தாதீங்க.

என்னோட பிரச்சனைக்கு பதிவின் மூலம் குரல் கொடுத்த நண்பர் கோவை ஆவிக்கு நன்றி.

இந்த பூனை புதிரையும் திருடி போட்டு விட்டது அந்த திருட்டு பூனை.

இதில விடை தேடுனவங்க 740பேரு,விரும்புனவங்க 275, பகிர்ந்துகிட்டவங்க 96

இந்த தளத்து ஓனருக்கு விழுந்த ஓட்டுகள் 39


இந்த புதிருக்கான படத்தை கொடுத்தது நண்பர் தமிழ்குளோன் அவர் காசு கட்டி (ஆன்ராய்டு paid site) ஒரு தளத்தில் இருந்து இதை பெற்று இருக்கார்.

ஒரு பேச்சு மொழி சொல்லுவாங்க கோல்ட விட கில்டுக்குதான் பவுசு அதிகம்னு அது சரியாத்தான் இருக்கு.

சரி புதிரோட பதில பார்போம்.

இரண்டு கண்ணாடிகளை பக்கத்தில் ஒட்டி வைத்தால் 180 டிகிரி கிடைப்பது ஒரே பிம்பம்.

http://angelgilding.com/Multiple_Reflections.html  இந்த தளத்தில் செய்முறை விளக்கம் இருக்கு.

இரண்டு கண்ணாடிகளையும் 45 டிகிரி சாய் கோணத்தில் வைத்தால் 7 அல்லது 8 பிம்பங்கள் தெரியும். கோணத்தை இன்னும் குறைச்சா தோராயமா 33 டிகிரி என்றால் ஒரு பூனை(ஒரிஜினல்) ஒன்பது பூனையா (பிம்பம்) தெரியும்.

 இரண்டு கண்ணாடிகளுக்கு இடையே கோணம் குறைய குறைய பிம்பங்களின் எண்ணிக்கை கூடும்.  அதே போல பார்க்கும் கோணம் , கண்ணாடியின் அளவு இப்படி எல்லா அம்சங்களும் ஒத்து வரவேண்டும்.

நண்பர் கமல் பாலனும் இதுக்கு ஒரு பார்முலா கொடுத்து இருந்தார்
 Number of images=(360/angle between two mirrors)-1 இதற்கும் பொருந்தி வருகிறது.
சரியான விடை ஒரே ஒரு பூனை. 

சென்னை பதிவர் சந்திப்பின் போது நடந்த நிகழ்ச்சியை பற்றி நான் ஒரு பதிவு போட்டிருந்தேன்.

பாமரனின் நக்கலும் நையாண்டியும்

அதே போல் நண்பர் சங்கவி ஒரு பதிவு போட்டிருந்தார். இரண்டுமே ஒரே சப்ஜக்ட் ஆனா காஃபி செய்யப் படாதவை.

பதிவர் சந்திப்பும் பாமரனின் பட்டைய கிளப்பும் பேச்சும்...


நன்றி,

கலாகுமரன்
Download As PDF

Friday, November 15, 2013

எத்தனை பூனைகள் - படப் புதிர்

மூளைக்கு வேலைன்னா ஓடிபோயிடுறாங்க...சரி கண்களுக்கு வேலை.

தப்போ சரியோ ? உங்கள் பதிலை தேர்ந்தெடுங்கள் ( just for fun !) No tracking.

மொபைல் வழி தளத்திற்கு வருபவர்கள் (வெப் வியூவில் உங்கள் ஓட்டை போடலாம்... ஓட்டு பெட்டி பதிவின் மேலே ) பதிலை வரும் செவ்வாய் (19.நவ.2013) கிழமை வெளியிடுகிறேன்.


நன்றி
கலாகுமரன்




Download As PDF

Wednesday, November 13, 2013

சொக்காயில் எத்தனை ஓட்டைகள் ? புதிருக்கான விடை

கடந்த சனியன்று (9 நவ. 2013) அன்று இந்த பட புதிர் வெளியானது அதற்கான பதிலை இந்த பதிவில் காண்போம்.


மேற்கண்ட புதிரில் முதல் சந்தேகம் இது நிஜமாலுமே ஓட்டை தான அல்லது அச்சு வடிவமா ? இது நிஜமாலுமே (மெய்யாலுமே) என்றே எடுத்துக்கொள்வோம்.

அடுத்த கேள்வி ஒன்று முன் வைக்கப்பட்டது கைகள், கழுத்து, பனியனின் அடிப்புறத்தை ஓட்டை என்று சொல்ல முடியும்?.

ஓட்டை இதன் ஆங்கில வார்த்தை ஹோல் (Hole) ஆங்கில அகராதி விளக்கம்;

Definitions of hole ஓட்டை
noun 1. an opening into or through something,
2.an opening deliberately made in or through something,
3. one playing period (from tee to green) on a golf course,
4. an unoccupied space,
5. a depression hollowed out of solid matter,
6. a fault  informal terms for a difficult situation

எனவே இந்த புதிர் படத்தில் கேள்விக்கான பதில் கிடைக்கிறது.


இப்புதிருக்கு பதில் அளித்தவர்களில் 

இரண்டு (2)  என்றவர்கள் - 5%
நான்கு (4) என்றவர்கள் - 12%
ஆறு (6) என்றவர்கள் - 29%
எட்டு (8) என்றவர்கள் - 54% பேர்கள்.



நன்றி,

கலாகுமரன்.

Download As PDF

Friday, November 8, 2013

புதிர் படம் Mysterious writing


Serge Raynaud de la Ferrière (18 January 1916 – 27 December 1962) செர்ஜி ரைநாட் பெரைரே என்பவர்  பிரெஞ்சு தத்துவவாதி.  இவர் 43 நாடுகளுக்கு பயணம் செய்திருக்கிறார். யுனிவர்ஸல் கிரேட் ப்ராதர்குட் (Universal Great Brotherhood ) என்ற அமைப்பை 1948 ல் வெனினிசுலாவில் நிறுவி இருக்கிறார்.  அதில் அறிவியல், கலை, சமயம், (யோகா) சம்பந்தமான போதனைகளை செய்துள்ளார். இவர் எழுதிய புத்தகங்களில் ஒன்று The Psychological Proposals.

இவர் எழுதிய புத்தகங்களில் ஒன்றில் கீழ் காணும் படத்தை குறிப்பிட்டு இருக்கிறார்.  இதை இவர் இந்தியா திபெத் பயணத்தின் போது ஒரு யோகியிடம்  இந்த படத்தை பெற்றதாக சொல்லப்படுகிறது.  இந்த படம் Triangle of Light என குறிப்பிடப் பட்டு இருக்கிறது.




புதிரான இந்த படத்தில் உள்ள எழுத்துக்கள் உங்களுக்கு புரிகிறாதா ? என பின்னூட்டத்தில் குறிப்பிடவும்.

 
Download As PDF

Wednesday, November 6, 2013

நான்கு படங்களில் தொடர்பில்லாத ஒன்று - புதிருக்கான விடை


இந்த நான்கு படங்களில் ஒன்று தொடர்பில்லாதது.  அது எது என்ற புதிர்  நவம்பர் 2 (2013) அன்று வெளியானது. அந்த புதிருக்கான பதிலை இப்போது பார்ப்போம்.

இம்மாதிரியாக நான்கு படத்தில் ஒன்று வித்தியாசமானது என்றோ, பொருத்தமில்லாதது என்றோ கோட்கப்படும் போது  இரண்டு விதமாக
பதிலை யோசிக்கலாம்
ஒன்று வரிசை (Order) (படத்திற்கான குணாதிசயத்தை ஒப்புமை செய்து வரிசைப்படுத்துவது.)
இன்னொன்று லாஜிக்.

இந்த படங்களின் வரிசையை இப்படி யோசிக்கலாம்
(வெளிப்புறத்தில் இருந்து உட்பக்கமா செல்லாம்.)
A.  சதுரம், வட்டம், வட்டம்
B.  சதுரம், வட்டம், சதுரம்
C.  சதுரம், சதுரம், வட்டம்
D. வட்டம், சதுரம், சதுரம்
வித்தியாசப்படுவது  B

படத்தின் உள்புறத்தில் இருந்து
A.   வட்டம், வட்டம், சதுரம்,
B.  சதுரம், வட்டம், சதுரம்
C.  வட்டம், சதுரம், சதுரம்,
D.  சதுரம், சதுரம்,  வட்டம்

இப்படி பார்த்தாலும் அடுத்தடுத்த வட்டங்களோ அடுத்தடுத்த சதுரங்களோ  A,C,D ஒத்து போகிறது மாறி மாறி இருப்பது இருப்பது B

                                                    வித்தியாசப்படுவது  B

பெரும்பாலானவர்கள் யோசித்தது இது வாக இருக்கும்.
A, B, C  மூன்றும் வெளிப்புறத்தில் சதுரம் இருக்கிறது D ல் இல்லை அதனால் இது வித்தியாசப்படுகிறது என்று.  பரப்பை பொருத்த அளவீடும் இதில் இல்லை.
முடிவான பதில் B

பங்கு கொண்டவர்களில், 
25 % பேர் சுட்டி காட்டியது = A
20 % பேர் சுட்டி காட்டியது = B
5 % பேர் சுட்டி காட்டியது   = C
50 % பேர் சுட்டி காட்டியது = D 


Download As PDF

Saturday, October 26, 2013

மூளைக்கு வேலை புதிரின் விடை இந்த பதிவில்


இந்த புதிரில் உந்து விசையானது முதல் பல்சக்கரத்திற்கு கொடுக்கப்பட்டால் முடிவில் இருக்கும் பல் சக்கரத்தோடு இணைந்த முள் ஒன்றை தொடுமா அல்லது இரண்டை தொடுமா ? என்பதே கேள்வி.

இந்த காணொளியை பாருங்கள்



அதாவது ஒன்றுடன் ஒன்று அச்சில் இணைக்கப்பட்ட மூன்று தொடர் பல் சக்கரங்களில் முதல் சக்கரம் வலப் பக்கம் சுழன்றால் மூன்றாவது சக்கரம் வலது பக்கம் திரும்பும்.   முதல் சக்கரம் இடது பக்கம் திரும்பினால் இணைப்பில் உள்ள மூன்றாவது சக்கரம் இடப்பக்கம் திரும்பும்.
இந்த படத்தில் மொத்தம் 17 பல் சக்கரங்கள் இருக்கு (அதாவது ஒன்றைப் படை) முதல் பல் சக்கரம் இடது புரம் திருப்பப்படுகிறது  இறுதியில் இருக்கும் சக்கரம் இடது புரம் தான் திரும்ப வேண்டும்.

 


ஆனால் இந்த தொடர் இணைப்பின் நடு நடுவில் நாடாவால் (belt ) இணைக்கப்பட்டு உள்ளது அதனால் உறுதியாக மேல் சொன்னது போல் முடிவை சொல்ல முடியாது.  இந்த பெல்ட் தான் இந்த புதிரின் டிவிஸ்ட்.   இடையில் இரண்டு டிவிஸ்ட்டான பெல்டுகள் இருக்கே அதனால சக்கரம் சுத்தாம நிக்குமா ? என்றால்  நிற்காது. வேகம் வேணா குறையும்.

இரண்டு சக்கரங்கள் பெல்டால் இணைக்கப்பட்டால் முதல் சக்கரம் வலதுபுரம் சுற்றினால் இரண்டாவது அப்படியே தான் சுற்றும்.

ஆனால் பெல்ட் டிவிஸ்டாகி இருந்தால் முதல் சக்கரம் வலது புரம் என்றால் இரண்டாவது இடது புரம் சுற்றும்.

(வைஸ்வெர்சா  இடதுன்னா வலது)

இந்த விளக்கப் படம் புதிரை விடுவிக்கிறது.

புதிருக்கான விடை :  இரண்டு (2)

கலந்து கொண்டவர்களில்
55 % பேர்  ஒன்றை தொடும் என்றும்
36 %  பேர் இரண்டை தொடும் என்றும்
4%  பேர் சக்கரம் சுற்றாது என்றும் பதில் அளித்திருந்தார்கள்.

புதிரை விடுவிக்க கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.

கீழே உள்ள படத்தில் ஒரு எலி கலாட்டா செய்கிறது.  அந்த எலி எங்கே ? என்று கண்டுபிடியுங்கள்.


கீழே உள்ள படத்தில் ஒரு  " C "  ஒளிந்திருக்கிறது உங்கள் கண்ணுக்கு தெரிகிறதா ?




Download As PDF

Monday, October 21, 2013

மூளைக்கு வேலை



இது ஒரு கற்பனையான இயந்திரம்,இதில்  இரண்டு விதமான மெக்கானிசங்கள் உள்ளன
(1.)பல்சக்கரங்கள் இணைப்பு, (2) அதனுடன் நாடா (பெல்ட்) இணைப்பு

உந்து விசையானது முதல் பல்சக்கரத்திற்கு கொடுக்கப்பட்டால் முடிவில் இருக்கும் பல் சக்கரத்தோடு இணைந்த முள் ஒன்றை தொடுமா அல்லது இரண்டை தொடுமா என்பதே கேள்வி. இதோடு நான் இன்னொரு கேள்வியையும் இணைத்திருக்கிறேன் அது முள் இரண்டு எண்களையும் தொடாது என்பது.  (இது ஏன் என்றால் இந்த மெக்கானிசம் வேலை செய்யாது போனால் முள் எந்த எண்ணையும் தொடாது இல்லையா ? )



உங்களது பதிலை மேலே உள்ள ஓட்டு பெட்டியில் போடவும்.


 மொபைல் மூலமாகப் படிப்பவர்கள் view web version - ஐ கிளிக் செய்து வந்தால் உங்கள் பதிலை பதிவு செய்ய முடியும்.

இந்த கேள்வியின் பதிலை வரும் சனி (26.10.2013) அன்று வெளியிடுகிறேன்.  ஏதேனும் சந்தேகம் இருந்தால் கருத்து டப்பியில் கேட்கலாம்.

Labels: அறிவியல் புதிர், மூளைக்கு வேலை
Download As PDF

தமிழ் எழுதி (உதாரணம்) - ammaa =அம்மா, aRam=அறம், thamiz=தமிழ்,manjsaL=மஞ்சள்

மேலும் படிக்க பக்க எண்களை காண பழைய இடுகையை [OLD POSTS ]மீது கிளிக் செய்யவும் !


பிரபலமான இடுகைகள்

கடந்த 30 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Labels of this Blog

Alien (1) amphibians (1) ancient people (2) ancient scripts (1) ancient tamil poets (1) anteater (1) antibiotics (1) archaeologist (5) art (4) Artic (1) Asteroid (1) astronomy (4) atom (1) bangalore lalbagh (2) bats (1) beauty (1) Bees (2) Belmez faces (1) Bermuda Triangle (1) Birds (7) birthday song (1) black holes (1) brain activity (5) brains (2) Brown Drawfs (1) carnivorous plants (2) chennai conference (1) cloning (2) Cockroach farrms (1) Concisious mind (3) conjoined animals (1) conjoined twin (1) Contest approach (1) crinoids (1) curiosity (1) darwin (2) dhasavadaram (1) dinosaur bird (1) Draco (1) dreams (4) earth worm (1) earthday (1) environment (2) Firefly (1) Fugu (1) G.D.NAIDU (4) Galaxies (2) general knowledge (1) Genetic (1) Ghost (1) Gillette razor (1) golden buddha (1) Gulf streem (1) H.Erectus (1) Hess (1) highway of kongu culture (1) Hindusim (1) Historical Famous Faces (1) human (1) HumanMilk (1) humanoid (1) ice melting (1) indian iron pillar (1) infrared (1) interview (1) jellyfish (1) Jokes (12) KaKapo (1) Kongu culture (6) land scape (1) Library of Alexandria (1) life of bees (2) life science (3) Life Sciences (11) Liger Tigon (1) long life (1) M.Metha (1) mamies milk (1) Mars (1) meat-eating plants (1) milkyway (2) mind (1) MIR Diamond mine (1) Moscow Kremlin (1) Mosquito (1) mushroom (2) Mystery (14) mystry (2) nanban (1) Nasca (1) Nazca Lines (1) Northern Hawk owl (1) Number 108 (1) oddity (1) Omen (1) paranormal interpretation (1) Penquins (1) peru (1) Perur (1) Perur Temple (5) philosophers (1) Piri Reis Map (1) poet Kannadasan (2) QUIZ (2) rare animal (2) Religion (1) RHINOCEROS (2) Richard III (1) RMS Queen Mary (1) Rongorongo script (1) Russian royal bell (1) save trees (2) Science (3) Sea level Rise (1) sediba (1) self confidence (1) Shark (1) Short Stories (1) silambam (1) sleep (3) Sloth (1) smallpox (1) song-birds (3) Space (2) space scientist (1) sphere Robo (1) Spider (2) Sprit (1) Stars (1) story (3) strangeness (1) Superstitious behavior (1) swami vivekanandar (1) tamil artist maruthu (1) tamil history (6) Telescope (1) tibet (3) tickle (1) Tsar Bell (1) twins (1) ultraviolet (1) universe (2) vairamuthu (1) Virus (1) water (2) whales (1) windmill (1) அணு (1) அமானுஷ்யம் (4) அலெக்ஸாண்டிரியா (1) அறிவியல் துணுக்குகள் (14) அறிவியல் புதிர் (9) அனுபவம் (87) அனுபவம். பயணம் (4) அஸ்ட்ராய்டுகள் (2) ஆதி மனிதன் (2) ஆய்வு (11) ஆர்டிக் (1) ஆவி (1) ஆழ்கடல அனுபவம் (2) ஆழ்கடல் அனுபவம் (1) ஆனந்தம் இதழ் (1) ஆன்டிபாயாடிக்ஸ் (1) இரட்டை உயிர்கள் (1) இரும்பு தூண் (1) ஈஸ்டர் தீவு (2) உணவு (1) உணவுப்பழக்கம் (2) உயிர்நிழல் (1) உள்ளுணர்வு (3) உறக்கம் (1) எகிப்து (2) எண்ணங்கள் (2) எண்ணியல் (1) எறும்புதின்னி (1) ஏமாற்றம் (1) ஏன் எதற்கு எப்படி (26) ஐன்ஸ்டீன் (1) ஒளிஉமிழ்காளான் (1) ஓவியம் (6) கடல் ஆய்வு (2) கடல் சுழல் ஆய்வுக்கூடம் (2) கடல் மட்டம் (1) கடல் லில்லி (1) கடல்பல்லிகள் (1) கட்டுரை (125) கணினி (1) கண்காட்சி (3) கண்டுபிடிப்பு (5) கதை (6) கரப்பான்கள் (1) கருந்துளை (1) கல்வெட்டு (1) கவிஞர் கண்ணதாசன் (6) கவிஞர் வைரமுத்து (2) கவிதை (2) கவிதைகள் (2) கற்பாறை சித்திரங்கள் (2) கனவு (1) கனவுகள் (4) காடுறை உலகம் (1) காண்டாமிருகம் (2) காதல் (1) காந்தி (1) காளான் (2) கிச்சுக்கிச்சு (1) குளவி (1) குளோனிங் (2) கேலக்ஸி (3) கொங்கு (7) கொங்கு வரலாறு (1) கொசு (1) கொசு ஒழிப்பு (2) கொசுக்கள் (2) கோபிநாத் (1) கோவை புத்தக வெளியீடு (2) கோவை வரலாறு (7) சகுணம் (1) சலீம் அலி (1) சவரம் (1) சாதனை (1) சார்லி சாப்ளின் (1) சார்லிசாப்ளின் (1) சிங்கம்புலி (1) சிந்தனை (6) சிரோ டிகிரி. சிறுகதை (1) சிலம்பம் (1) சிறுகதை (4) சினிமா (2) சுறா (1) செண்டினல் தீவு (1) செப்பேடு (1) செய்தி (3) செய்திகள் (10) செவ்வாய் (2) டார்வின் தவளை (1) டாவின்சி (1) டிசைனர் பேபி (1) டிராட்ஸ்கி மருது (2) தங்க புத்தர் சிலை (1) தண்ணீர் (1) தத்துவம் (3) தமிழர் (2) தமிழர்கலை (1) தமிழன் (4) தமிழ் (7) தவளைகள் (1) தாய்ப்பால் (1) திபெத்திய குகைகள் (3) திமிங்கிலம் (1) தினமலர் (1) தீவு வாசிகள் (1) துணுக்குகள் (16) தூக்கம் (4) தூப்ளே (1) தேவிகா (1) தேனீ (3) தொலைநோக்கி (1) நகைச்சுவை (17) நடிகர் சிவகுமார் (3) நட்சத்திர குள்ளர்கள் (1) நட்சத்திரம் (1) நாசா (1) நாயக்கர் மகால் (2) நானோ டெக்னாலஜி (1) நானோ-தொழிநுட்பம் (1) நானோபாட்கள் (1) நாஸ்க்கா (1) நீண்ட ஆயுள் (1) நீர் சிலந்தி (1) நொய்யல் (4) பதிவுதிருட்டு (1) பயணம் (2) பறவை (7) பறவை மனிதன் (1) பறவைகள் (2) பாக்தாத் பேட்டரி (3) பாமரன் (1) பால்வீதி (1) பால்வெளி (2) பிரபஞ்சம் (5) பிரிரெயிஸ் (1) பில் கேட்ஸ் (1) பிளாஸ்டிக் (1) பிளேட்டோ (2) பிறந்தநாள் பாடல் (1) புதுவை (1) புத்தகம் (2) புவி தினம் (1) புவி வெப்பமாதல் (1) புழு (1) புனைவுகள் (1) பூச்சியுண்ணும் தாவரங்கள் (1) பூமி தினம் (1) பெங்களூரு (2) பெரிய ஆலமரம் (1) பெருவழிப்பாதை (1) பெல்மீஸ் (1) பேரூர் (7) பேரூர் கல்வெட்டு (1) பொன்மொழிகள் (3) போலியோ (1) ப்ளாஸ்மான்கள் (1) மங்கள்யான் (1) மணிகள் (1) மதுரை (1) மரங்களின் பாதுகாப்பு (2) மரபியல் (5) மருத்துவம் (18) மனம் (2) மனித மூளை (1) மனோவலிமை (2) மாமிச உண்ணி தாவரம் (1) மின்மினிப் பூச்சிகள் (1) மீன்கள் (2) மு. மேத்தா (1) முதுமக்கள் தாழி (1) மூடபழக்கவழக்கம் (2) மூளை (4) மேஜிக் (1) ராசாளி ஆந்தைகள் (1) ராஜநாகம் (1) ரூபிக் க்யூப் (1) ரேசர் (1) வரைபடம் (1) வலைப்பதிவர்கள் விழா (1) வாழ்க்கை (1) விச சிலந்தி (1) விண்கற்கள் (1) விண்ணியல் (3) விண்வெளி (6) விண்வெளி வாகனங்கள் (3) விண்வெளி விஞ்ஞானிகள் (2) விநோதங்கள் (1) விமர்சனம் (1) விலங்குகள் (2) வெப்பமயமாதல் (1) வெளவால் (1) வேற்றுகிரகவாசி (1) வைர சுரங்கம் (1) வைரஸ் (1) வொயுனிச் (1) வௌவாள் (1) ஜி.டி.நாயுடு (3) ஜெல்லி மீன் (1) ஜோக்குகள் (3) ஜோக்ஸ் (10) ஸ்டெம் செல் (1) ஸ்லவுத் (1)