Followers

Showing posts with label ஓவியம். Show all posts
Showing posts with label ஓவியம். Show all posts

Wednesday, February 12, 2014

டாவின்சி ஓவியத்தில் ஒளிந்திருக்கும் இரகசியம் !

15 ம் நூற்றாண்டின் சிறப்பு தன்மை வாய்ந்த ஓவியமாக டாவின்சி வரைந்த சுவர் ஓவியம் "தி லாஸ்ட் சப்பர் (கடைசி இரவு விருந்து)" திகழ்கிறது. 1495 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக இல்லாமல் வெவ்வேறு கால கட்டத்தில் வரைந்திருக்கிறார், 1498 ல் இது முற்றுப் பெற்றிருக்கிறது. இத்தாலிய மறுமலர்ச்சிக் காலத்தின் சிறப்பான படைப்பாகவும், இயேசு அருந்திய இறுதி விருந்தைச் சித்தரிக்கும் ஓவியங்களுள் முதன்மையானதாகவும் கருதப்படுகிறது.

 கட்டிடக்கலை "ப்ரஸ்பெக்டிவ் " என்று சொல்ல கூடிய நுணுக்கமும் இந்த ஓவியத்தில் உள்ளது.  இதை பார்வையிட்ட அறிஞர்களும், ஆர்வளர்களும் இந்த ஓவியம் பற்றி பல்வேறு கருத்துக்கள் ,அபிப்ராயங்கள் சொல்லுகிறார்கள். (தத்துவ விளக்கம், ஜோதிடம், விண்ணியல், கணிதவியல், கலாச்சாரம் இப்படி)


1726 லிருந்து 1954 வரையிலும் பல கால கட்டங்களில் , பல ஓவியர்களால் இந்த ஓவியம் சிதையாமல் (ரீ கலரின்ங் / பேட்ச்) பாதுகாக்கப்பட்டது.  பார்ஸிலோன் என்பவர் சுமார் 20 ஆண்டுகாலம் (1979- 1999) துல்லியமான முறையில் இதை மறுசீரமைவு செய்து பழைய வடிவத்தை கொடுத்தார். இந்த ஓவியம் இருக்கும் சுவரின் மறுபக்கம் சமையலறை அதனாலும் ஈரம் காரணமாக இந்த ஓவியம் பொழிவிழந்தது. 1943 ல் உலகப்போரின் போது கட்டிடத்தின் அருகில் குண்டு விழுந்தது, அப்போது அதிர்ஷ்டவசமாக இந்த ஓவியம் தப்பியது. ஓவியம் இருந்த அறை சிறையாகவும் இருந்திருக்கிறது.

யேசு தன் சீடர்களுடன் விருந்துன்னும் காட்சி "தி லாஸ்ட் சப்பர்" பைபிளில் இந்த காட்சி வர்ணிக்கப்பட்டிருக்கிறது (as it is told in the Gospel of John, 13:21. Leonardo has depicted the consternation that occurred among the Twelve Disciples when Jesus announced that one of them would betray him.)


The Last Supper (1498)—Convent of Sta. Maria delle Grazie, Milan, Italy







  • மூன்று வாயில்கள் எதற்கு  ? நாம் காந்தப்புல மற்றும் மின் உலகத்தில் வசிக்கிறோம்.  யேசுவை  சூரியனாகவும் , சூரியனைச் சுற்றி 12 ராசிகளையும் உருவகப்படுத்தி வரையப்பட்டிருக்கிறது.



  • மூன்று மூன்று பேராக 4 குழுக்கள் இருக்கு, மொத்தம் 12 பேர் இது வருடத்தின் 12 மாதங்களையும், நான்கு சீசனையும் (காலங்கள்), ஒவ்வொரு சீசனும் மூனு மாசம் இருக்கும் என்பதை சுட்டி காட்டுகிறது.  முதல் குழுவில் 3பேர் இருக்காங்க இரண்டு கைகளை உயர்த்தி இருப்பது ஜெமினி, அடுத்த குழு லியோ, இப்படி ராசிகளையும் சுட்டிக்காட்டுது. மூன்று வாயில்களில் வலதில் செல்லக் கூடாது, இடதிலும் செல்லக் கூடாது, நடுவில் உள்ள வாயில் வழிதான் செல்லவேண்டும்.

  • யூதர்கள் அந்த டேபிலை சுற்றி இருக்கிறார்கள், அவர்கள் உட்கார்ந்து இருக்கவில்லை. .. இதை டாவின்ஸி ஏதோ குறிப்பால் உணர்த்துகிறார். எகிப்தியர், இந்தோனேஷியன்கள், மெக்ஸிகோ டேபிலை சுற்றி இருக்கிறார்கள்.


(in medieval )ஐரோப்பிய சர்சுகள் மற்றும் கதீரிட்ரல்களில் இந்த வாயில் வடிவங்களை காணலாம்.


  • ஐரோப்பிய கலாசாரத்தில் மூன்று எனபது வாழ்கையின் பிறப்பு, உயிர், மறு பிறப்பு இன்னும் இது போல மூன்று என்ற எண் ( triadas),செயல்கள், வழிமுறைகளில் முக்கியமாக இடம் பெற்றிருப்பதை காணலாம்.
  •  Trinity மூன்று வாயில்கள் , கட்டிடக்கலையில் அந்த கால கட்டங்களில் அப்படி அமைக்கப்பட்டிருக்கும் அதை அவர் அப்படியே யோசித்து வரைந்து இருக்கலாம்.


  • இந்த படத்தை( ஓவியத்தை) அப்படியே திருப்பி பார்த்தோமானால் பின்புலமானது பியானோ கட்டைகளை போலிருக்கும் விரல்கள் வாசிப்பதையும் பார்க்கலாம். 


                                              கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் 
(In greek mythology the stars of Pleiades represented the seven sisters)
மூன்று வாயில்கள் (கதவுகள்) ஓரியான் (Orion ) நட்சத்திர கூடங்களை குறிக்கிறது.

  • யேசுவின் உருவமே ஒரு பிரமிட் வடிவத்தில் இருப்பதை பார்க்கலாம்.
  • சிறிய வாயில் கதவுகள் இரண்டும் சூரியனையும்(ஆண்பால், ஆண்), நிலவையும் (பெண்பால்,பெண்) குறிக்கிறது நடுவில் உள்ள பெரிய கதவு யுனிவர்ஸ், அதன் வழி செல்லவேண்டும்.


  • கணிதவியலின் கூற்றுப்படி, 3, 9 , 6 தனித்த சத்தி கொண்ட எண்கள் எனலாம்.  இந்த மூன்று எண்களையும் அந்த வாயில் கதவுகள் குறிப்பிடுகின்றன.


“Philosophy [nature] is written in that great book which ever is before our eyes — I mean the universe — but we cannot understand it if we do not first learn the language and grasp the symbols in which it is written. The book is written in mathematical language, and the symbols are triangles, circles and other geometrical figures, without whose help it is impossible to comprehend a single word of it; without which one wanders in vain through a dark labyrinth.”  — Galileo Galilei

The entire Universe (including our solar system, as well as atoms, DNA and life-forms) reveals the secrets of balance, rhythm, proportion and unity in diversity, the fractal  interconnection of parts with each other and the whole. This harmony is expressed by some “key” numbers: Fibonacci Series, Phi, Pi and “e”.

The creation myths of many traditions describe the universe as the work of a Divine Architect who uses “sacred geometry” to unfold the dimensions of a beautiful cosmos, wisely designing every aspect of it, and governing by just proportions evidenced in the geometric shapes and processes of nature.

நன்றி _ கலாகுமரன்

Download As PDF

Saturday, January 18, 2014

நடிகர் சிவகுமாரின் அனுபவங்கள் - Part 3

பரதகலை பற்றியது, பரத நாட்டியம் ஆடுவதில் மனிதர்களுக்கு கிடைக்கும் அனுபவம் பற்றி கூறுங்கள்.

மனிதன் கதை சொல்லியாக இருந்த ஆரம்ப காலத்திலே இது தோன்றி இருக்க வேண்டும். பின்னர் பொருளார ரீதியாக இது வளர்ந்தது. கதை சொல்லியே காலத்தை ஓட்டியிருக்கிறான். கதை சொல்ல ஆரம்பிச்சான், பாடிட்டு கதை சொன்னான்,பின்னாடி ஆடிட்டே கதை சொல்ல ஆரம்பிச்சான்.

கி.பி 2 நூற்றாண்டில் இருந்து கி.பி 5 ஆம் நூற்றாண்டு காலத்தில் ஏற்படுத்தப் பட்ட அஜந்தா எல்லோரா சிலைகள பார்த்தீங்கன்னா பரத நாட்டியம் எந்த அளவு வளர்ந்திருந்ததுன்னு தெரியும்.. அதுக்குமுன்னாடி கி.மு 2 லேயே இது இருந்திருக்கலாம். இந்த கலையை காப்பாற்றியவன் ராஜ ராஜ சோழன் கி.பி 10 நூற்றாண்டில் ஓவியமாகவும், சிலைகளாகவும் படைக்க வெச்சான்.
அவங்களுக்கு ஆதரவு கொடுத்தான், அதுக்கப்புரம் பல்வேறு ஆட்சியாளர்கள் வரும்போது அப்படியே குறைஞ்சு குறைஞ்சு போய்,  அந்த கலை சம்பந்தப் பட்டவங்க எல்லாம் கோயிலோடு வாழ்ந்து, திருமணம் செய்து கொள்ளாம போய், ”தேவதாசி” என்று முத்திரை குத்தப் பட்டு ஆடுவதற்கு தடை செய்யப்பட்டு அவமானப் படுத்தப்பட்டாங்க. நாடு சுதந்திரம் அடையரதுக்கு ஒரு ஐம்பது வருசம் முன்னாடி, பால சரஸ்வதி,ருக்மனி அன்னை போன்றவங்க எல்லாம் தமிழ்நாட்டில் மரியாதை செய்யப்பட்டாங்க.

பரத நாட்டியம் ஆடும் பொன்னுங்க எல்லாம் “தாயே யஷோதா..ன்னு” பாடிட்டு இருக்க அவங்க ஸ்மைலோட ஆடினா போதும். சினிமாவில் எனக்கு கொடுத்த அசைன்மெண்ட் பாடிட்டே ஆடனும்...பாட்டுன்னா எப்படி  “ அனங்கன் நல் கஜநண்பன் வசந்தன் மன் மதனென்பன் வணங்கும் என் உயிர் மன்னவா...கதம்பம் செண்பகம் தங்கும் கருங்கூந்தல் கவி பொங்கும் தனித்தோங்கும் கயல் கன்னியே, ஆடலுடன் பாடல் இன்பம் ஊடலுடன் கூடல் இன்பம் தேடலும் உன் செயலல்லவா.... ( இணைந்திங்கே சிவம் கானுவோம்...மூச்சுவிடாமல் தொடர்ந்து பாடி முடிக்கிறார் பலத்த கைதட்டல்..என்னால் தொடர்ந்து எழுத முடியவில்லை)

இப்படி பாடிட்டே ஆடும் போது வாய் சரியா இருந்தா கை மூவ்மெண்ட் போயிடும்..
மூவ்மெண்ட் இருந்தா வாய் போயிடும்..முதன் முதலா டான்ஸ் ஆடும் போது கைய இப்பிடி இப்பிடி மூனு தடவை செஞ்சேன்..கவுண்டரே அளந்திட்டு இருக்கீங்களே எத்தனை முழம்னாங்க..

என்னோட ஸ்ரீவித்யா நடிச்சாங்க அவங்க ஐந்து வயசில இருந்தே ஆடிட்டு இருந்தாங்கலாமா.. கேவி மஹா தேவன் மியூசிக் காரைக்கால் அம்மையார்னு ஒரு படம் கே.பி. சுந்தராம்பால் 64 வயசுல பாடிட்டு இருந்தாங்க..

கே.வி.மாஹா தேவனுக்கு பதிலா சேஞ்சுகாக இருக்கட்டுமேனு ஒரு படத்தில குன்னக்குடி வைத்திய நாதனனை மியூசிக் டைரக்டரா போட்டாங்க. ஏ.வி.எம்.. குன்னகுடி வைத்திய நாதனா அவன் பெட்டி போடற பையனாச்சே அவன் எப்படி மியூசிக் போடுவான்னார்.  தயாரிப்பாளர் சீரியசா இருப்பார் போலிருக்கேன்னு சொன்ன உடனே ஆர்மோனிய பெட்டிய தூக்கிட்டு காலைலேயே அவர் வீட்டுக்கு போனாரு வைத்தியநாதன். என்னப்பா பில்லு ஏதாவது இருக்கா அம்பின்னாரு ஏவிஎம். இவரு இல்லீங்க சின்ன பாட்டு ஒன்னு சுரம் சேர்த்து கொண்டாந்திருக்கேன்... சரி போடு பாப்போம்...

தக தகவென தக தகவென ஆடவா.. சிவ சக்தி சக்தி சக்தியோடு ஆடவா.. (பாடலை பாடிக் காட்டுகிறார் இந்த பாடல் 1972ல ) பாட்டை கேட்ட ஏவிஎம் சாகரவரைக்கும் நீதாண்டா மியூசிக் டைரக்டர்னாரு. தம் கட்டி பாடிய கே.பி. சுந்தராம்பாள் யப்பா (அவருக்கு அப்ப 64 வயசு ) என்னப்பா இந்தமாதிரி மூச்சு வாங்குதேன்னாங்க. யாரு பார்வதி...ஸ்ரீவித்யா, சிவன் யாரு...கோயமுத்தூர்லேர்ந்து வந்த பையன் டான்ஸ் ஆடுவானா... இல்ல இனிமேதான் தெரிஞ்சிக்க போறான் ...சரியாப்போச்சு..இனிமே இத கத்துக்கிட்டு ஆயுசு முடிஞ்சுடுமேப்பான்னாங்க. அதுக்கப்புரம் விடாம ஆடி கத்துகிட்டு அந்தப் படத்தில ஆடி நடிச்சேன் போதும் போதும்னு ஆயிடுச்சு. ஓவியனா இருக்கரது வேற விசயம்...நடிகனா இருக்கரது வேற.



மெல்லிசைப் பாடலுக்கும் கர்னாடக சங்கீதத்திற்கு வேறுபாடு எப்படிப் பார்கிறீர்கள்.

ஊருக்குள்ள கரண்டே கிடையாது அரிக்கேன் வெளக்கு வெச்சே படிசிக்கிட்டு இருந்தேன்.. ரேடியாவுல பாட்டு கேக்கரதெங்க.. பாட்டு கேட்காம கர்னாடக சங்கீதம் எப்படி தெரியும். விதி எப்படி விளையாடுது பாருங்க.

டைரக்டர் பாலசந்தர் படம், சிந்துபைரவி பாகவதர் கேரக்டர்,  ஒரு பாறைமேல பத்மாசனம் போட்டு உட்கார்ந்து பாடறமாதிரி ஒரு சீன்வரும் அவங்க செளரியமா மேட்டுமேல கேமரா வெச்சுகிட்டு உட்கார்ந்திருப்பாங்க நடுக்கடல்ல நான் மட்டும் பாறையல உட்கார்ந்து பாடனும்... சாட் எடுக்கும் போது பெரிய அலை வந்து பொத்துன்னு தூக்கி கடல்ல போட்டுரும்.. சட்டைய திரும்ப காயவெச்சு போட்டு எடுக்கனும்... இப்படியே மாத்தி மாத்தி உணர்ச்சிகரமா நான் நடிக்கனும்...அதோட வாயசைப்பு சங்கீத ஸ்ருதிமாறாம வாயசைச்சு பாடனும்.. நிசரிசசச நிச ரிசசச...பமப கமப நிசரி...பகம (பாடிக்காட்டுகிறார்) யோசிச்சு பாருங்க. நமக்கு ஸ்வரமே தெரியாதே..இந்த எழுத்துக்கள ஒன்னொன்ன பிரிச்சு மனப்பாடம் பன்னி அப்புரம், ஜேசுதாசோட பாட்டையும் மண்டகுள்ள போட்டு இமய மலமேல உட்கார வெச்சாலும் அழுத்திரோவோம்ல...

யோகாசனம் எத்தனை ஆண்டுகளாக செய்கிறீர்கள் ? ப்ரானாயாமத்தின் பயன் என்ன?

இப்பத்தான் இப்பத்தான் ஒரு 55 வருசமா பன்னிட்டு இருக்கேன்..

காபி டீ கூட சாப்பிடுரது இல்ல. ப்ரானாயாமம் இதை திருமூலர் அழகா சொல்லிட்டுப் போய்ட்டார்,...

ஊரார்கூடி ஒலிக்க அழவிட்டு
பேதமை நீங்கி பிணம் என்று பெயரிட்டு
சூரகன் காட்டிடை கொண்டுபோய்
சுட்டிட்டு நீரினில் மூழ்கி நிலை பெற்றோரே.

எப்பேர்பட்ட கொம்பனா இருந்தாலும் இறந்துபோன கடைசில
பிணம் -ன்னுதான் சொல்லுவார்கள்... சாருக்கு மூக்குல பஞ்சு வைன்னு சொல்லமாட்டான்.. பிணத்து மூக்கில ன்னுதான் சொல்லுவான். தூக்கிட்டு போவான் எரிப்பான் இல்லன்ன புதைப்பான். வாழ்க்கைல என்னத்த கண்ட  மாப்ள என்று அழுவார்கள்... செத்துபோனவன் சம்பாரிச்ச சொத்து இதுதான்.

யாக்கைன்னா உடம்பு, யாக்கை நிலையாமை இந்த உடம்பு
காப்பாற்ற என்ன வழி.

உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே. 

உடம்ப காப்பாத்து, தண்ணி அடிக்காத, பீடி சிகரெட் குடிக்காத, டயத்துக்கு சாப்பிடு, ஏழுமணி நேரம் தூங்கு இதத்தான் சொன்னாரு. அதுல ஒசத்தியான விசயம்னா ஒருமனுசன் சாப்பாடு இல்லாம ஒருவாரம் பத்துநாளு   இருக்கலாம் தண்ணி குடிக்காம நலஞ்சு நாளு இருக்கலாம்...ஆனா சுவாசிக்காம இருக்க முடியாது. ப்ராணம் இல்லாம இருக்க முடியாது. இறந்து போனா ப்ராணம் போயிருச்சுன்னு சொல்லுவாங்க.

இடது பக்க நாசிவழியா காத்த உள்ளிழுத்து வலதுபக்க நாசிவழியா 172 முறை வெளிய விடுறது. இதேமாதிரி வலது நாசிவழியா காத்த உள்ளிழுத்து இடது நாசிவழியா 172 முறை வெளியே விடறது. இந்த மாதிரி செஞ்சா ஒருத்தன் 172 வருசம் வாழலாமாம்.  இதுமாதிரி நாஞ்சென்சுபார்த்தேன்.... பாழாப் போன உலகத்துல 172 வருசம் வாழனுமா 86 வருசம் வாழ்ந்தாப் போதும்னுட்டு பாதியா குறைச்சுட்டேன். ப்ராணாயாமம் கரது உயிரோட இருக்கறதுக்கான விசயம். தூங்கிட்டு இருக்காம காலைல நாலரை மணிக்கு எந்திருச்சு சூரியன பாருங்க... சூரியன பார்த்தா ரொம்ப வருசம் உயிரோட இருக்கலாம்.

அக்கால ஆசிரியர் மாணவர் உறவு இக்கால உறவு குறித்து சொல்லுங்கள்.?

இது கொஞ்சம் சீரியசான கேள்வி... மாணவன் டீச்சரை கத்தியால் குத்துவது, பல்லை உடைப்பது...பத்திரிக்கைகல்ல படிக்கிறோம். உலகம் இப்படி போயிட்டு இருக்குது.  நான் கலங்கல்ல தான் படிச்சேன். கல்யாண சுந்தரம் வாத்தியார் ஒழுங்கா படிக்கலேன்னா கொன்னுடுவாருங்க... கொன்னே போடுவார். அப்படி பட்ட வாத்தியாரிடமே படிச்சேன். கால் அரைக்கால் காசுக்கு நாலரைக்கால் கத்திரிக்கான்னா ஒரு காலுக்கு எவ்வளோ... சொல்லி முடிக்கும் போது 3 பைசான்னு போட்டிருக்கனும், தங்கமான வாத்தியாருங்க.. எங்கூருக்கு போற வழில தோட்டத்தில குடி இருந்தாரு ஒருநாளு அவர போய் பார்த்தேன். (என்னோட ஒரிஜினல் பேரு...தண்டபாணி)

"தண்டபாணி மழை ஏமாத்திடுச்சுடா வெள்ளாம ஒன்னும் இல்ல, காட்ல ஒன்னும் விளைய மாட்டீங்குது. மாடு கன்னு தீவனமில்ல அதையும் வித்தாச்சு.. ஒன்னும் முடில நீ ஒரு தபா காட்டுக்குள்ள போய்டுவான்னாரு.." எனக்கொன்னும் புரியல... யோசிச்சேன். கால் பூமில படனும்கிராரு

"ஐயா ...நனொன்னும் ராமபிரான் இல்லே பூமி அகலிகை இல்லே "ன்னேன்... எலேய் ராமாயணம் நாங்க தான் உனக்கு சொல்லி குடுத்தோம் எனக்கே பாடம் எடுக்கறயா... போடா...போடா -ன்னாரு. பத்தடி போய்ட்டு வந்தேன். சாதாரண ஸ்டூடன்டு என் கால் அவரு பூமில படனுமேன்னு சொல்றாரே எனக்கு அழுகையா வந்திச்சு.

மூனு வருசம் கழிச்சு திரும்ப பார்த்தேன். தண்டபானி பரவாயில்ல இடத்த ப்ளாட் போட்டு வித்திட்டேன். பெரிய புள்ளக்கு 4 லட்ச ரூவா, சின்ன புள்ளக்கு 3 லட்ச ரூவா, பேங்கல 5 லட்ச ரூவா போட்டுவெச்சிருக்கேன்னாரு. இது நம்ம நால இல்ல...காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதைதான்.

இப்ப ஏதுன்னாலும் வாத்தியார சஸ்பன்ட் செய்யராங்க இது நல்லா இல்ல. அப்ப பையன் கண்ணு ரெண்டையும் மட்டு விட்டுட்டு தோல உரிச்சுடும்பாங்க... அந்த உறவு போச்சு.

 "கடந்த சனி (4.1.2014) அன்று கோவை கஸ்தூரி சீனிவாசன் அற நிலையத்தின் வெள்ளிவிழா"  நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார் அவர்கள் பேச்சில் இருந்து தொகுக்கப் பட்டது


தொடர்ந்து படித்து வரும் வாசகர்களுக்கு,  ஒன்றை சொல்லிக்கொள்கிறேன்.., நடிகர் சிவகுமார்,  அவரின் பேச்சை கேட்டவர்களுக்கு தெரியும் கட கடவென பேசுவார்...ஓரளவு அப்படியே கொடுத்திருப்பதாக என்னுகிறேன்.

தொடர்கிறேன்....

நன்றி

கலாகுமரன்.

தொடர்புடைய பகுதிகள் :  

சிவகுமாரின் ஓவிய அனுபவம் -பகுதி 1

சிவகுமாரின் ஓவிய அனுபவம் -பகுதி 2




Download As PDF

Monday, January 13, 2014

நடிகர் சிவகுமாரின் ஓவிய அனுபவம் - Part 2

கோவையை பற்றிய வருத்தம் எனக்கு எப்பவுமே ஒன்று உண்டு. 1917 லேயே ஊமைப் பட காலத்திலேயே கோவை மண்ணைச் சேர்ந்த வின்சென்ட் என்பவர்தான் திரைப்படங்களை மக்களுக்கு போட்டு காட்டினார். பட்ஷிராஜா ஸ்டுடியோ, சென்ரல் ஸ்டுடியோ இருந்தது இப்ப காணாம போயிடுச்சு. தொழில் துறை வளர்ந்த அளவுக்கு கலைகள் இங்க வளர்த்தப் படவில்லை,  ஆடிக்கொருதரம் அம்மாவாசைக்கு ஒருதரம்...அமெச்சூர் நாடகம் போடுவாங்க. கலைக்காக இந்த மண்ணில் பர்மனெண்ட்டா ஒரு கல்சுரல் சென்டரை உருவாக்கிய கலைஞன் திரு.சீனிவாசன் அவர்களுக்கு என் சிரம் தாழ்த்திய நன்றிகளையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.   நான் ஓவிய கல்லூரியில் படித்தபோது பார்த்த ஓவியங்கள்..18ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை, இங்கு நிறைய காட்சிப் படுத்தப் பட்டு இருக்கு. எகிப்து, இந்தியா, தாய்வான்,ஜப்பான் தயாரிப்பு ஓவியங்கள் இங்கு வெச்சு இருக்காங்க..வேர்ல்ட் பைன் ஆர்ட்ஸ் தனியா இருக்கு, அது போக 2003 லிருந்து கடந்த பத்து ஆண்டுகளில் 125 எக்ஸிபிசன் நடத்தி இருக்காங்க. என்பது உண்மையிலேயே ரொம்ப ஆக்டிவா இருக்காங்க. வாழ்நாள் முழுக்க இவங்க பணி தொடரனும்.

ஓவிய கல்லூரி வாழ்க்கை...அந்த நாட்களில், ஆசிரியர்கள், மாணவர்கள்...இனிய நினைவுகள் பற்றி சொல்லுங்கள்.

இன்னொரு பிறவி இருந்ததென்றால் பழையபடி அதே ஓவியக் கல்லூரியில் சேர்ந்து படிக்கவேண்டும் என்று ஆசைப் படுகிறேன்.  அப்ப எனக்கு வீட்டில் போடப் பட்டு இருந்த கண்டிசனச் சொல்லனும் எந்த பொட்ட புள்ளயையும் பார்க்கக் கூடாது நல்ல புள்ளயா இருந்தாலும் கெட்டபுள்ளயா இருந்தாலும் பொட்ட புள்ளய பார்க்கக் கூடாது என்று பட்ட போட்டு அனுபிச்சாங்க..பார்த்தா கொண்டே போடுவேன் என்று சொன்ன காலம். ஆனா ஏகப்பட்ட பொண்னுங்க வருவாங்க பெங்காலி,மார்வாடி,குஜராத்தி,மலையாளி,ஆந்திரா...இங்கிருந்தெல்லாம்..ஆனா ஒன்னும் பன்னமுடியாது அம்மா அப்பா குறுக்க வந்திட்டே இருப்பாங்க...வாத்தியாருங்களே பொன்னுங்கள லவ் பன்னி கல்யாணம் பன்னிக்கிட்டாங்க. நடிகனானேன் அதுக்கப்புரம் 14 வருசம் கழிச்சு  ஓவியர் கோபுலு அவர்களை அப்ப சந்திச்சேன்...

இந்தியாவில் பீஷ்மர் பிதாமகர் மாதிரி ஓவியர் கோபுலு அவரை,(90 வயதை தாண்டிய மனிதர்) பார்க்கிறேன். நடிகன்னு என்ன அறிமுகப் படுத்திக்க எனக்கு அவமானமா இருந்தது நான் வரைஞ்ச ஓவியங்கள காந்திபடத்தையும்,மதுரை,தஞ்சாவூர் படத்தை அவருகிட்ட காட்டினேன். தஞ்சாவூர் படம் 8 மணிநேரம் ரோட்ல உட்கார்ந்து வரைஞ்ச படங்கள்னு சொன்னேன்.

யேசுநாதர் பிறப்பு படத்தை ஒரு நாளைக்கு 4 மணிநேரம் பத்துநாட்கள்ல வரைஞ்சேன்னு சொன்னேன். வாங்கி பார்த்திட்டு அப்படியே என் கைய தடவுனாரு,..வாட் எ ஒண்டர்புல் ஹாண்ட்ஸ்னு சொன்னாரு  படக்குன்னு என் கண்களில் தண்ணீர் வந்துவிட்டது.

"  ஏன் என்ன ஆச்சுன்னு " கேட்டாரு...சாகும் வரை பெயிண்டரா இருக்கனும்னு ஆசைப் பட்டு மெட்ராஸ் வந்தேன் விதி வசத்தால “நடிகனாயிட்டேன் அவமானமா இருக்குதுன்னு சொன்னேன்”

 அவர் சொன்னாரு ”யூ டேக்கன் எ ரைட் டெசிஸிசன் ” ஏன்னா இந்தியாவில ஓவியருக்கு மரியாதை கிடையாதுன்னாரு.  ஓவியன்னு சொல்லிட்டு வீட்டு வந்திருந்தீனா உள்ளயே விட்டு இருக்கமாட்டேன்..நீ வேறு துறையை தேர்ந்தெடுத்ததால காருல வந்திருக்கே..

ஓவியரா இருந்திருந்தா பெட்ரோல்  போட முடியாத சூழல் இருந்து இருக்கும்.  ஏன் நீ ஸ்கூட்டர் கூட வாங்கி இருக்க முடியாது, அப்பரம் எங்கே பெட்ரோல் போடுவேன்னாரு. அந்த வாழ்க்கை ப்ரமாதமா இருந்தது.

அப்ப தேவைகள் ரொம்ப குறைவு,  எவன் ஒருவனுக்கு தேவைகள் குறைவோ அவன் தான் நிறைந்த செல்வந்தன். இரண்டு வருசம் இந்தியா பூரா சுத்தி படம் வரையரதுக்கு 7500 ரூபா இப்ப முடியுமான்னு யோசிச்சு பாருங்க.

திருப்பதி கோயிலுக்கு மக்களோட மக்களா கோயிந்தா போட்டுட்டு ரோட்ல படுத்துப்பேன்... சாப்பிடுவதற்கு வாங்கிய மசால் பூரி வாங்கிட்டுப் போய் மலை மலையா சுத்திப்பார்த்து வரைஞ்சிட்டு இருப்பேன் வாங்கி வெச்சது , கெழங்கு கெட்டு போயிருக்கும் தூக்கி வீசிட்டு வெறும் பூரிய மட்டும் சாப்பிட்டுக்குவேன். இப்படியெல்லாம் ஓவியம் வரைஞ்சேன்.

இந்தியாவில் ஓவியனா பிறக்கனுமான்னு தோனும். ஏன் இந்தியாவிலே பிறக்கனுமானு தோனும்...இப்ப இருக்கற சூழ் நிலை அப்படி.

படத்தில் ஓவியர் ஜீவா, சிவகுமார் (tks to photos from artist Jeeva)

 "கடந்த சனி (4.1.2014) அன்று கோவை கஸ்தூரி சீனிவாசன் அற நிலையத்தின் வெள்ளிவிழா"  நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார் அவர்கள் பேச்சில் இருந்து தொகுக்கப் பட்டது

#நடிகர்சிவகுமார்_அனுபவம்_பகுதி 2



தொடர்கிறேன்...


அனைவருக்கும் பொங்கல் தின நல் வாழ்த்துகள் !!


நன்றி , கலாகுமரன்

Download As PDF

Saturday, January 11, 2014

நடிகர் சிவகுமாரின் ஓவிய அனுபவம்

ஓவிய கலைஞன் தான் கண்ட காட்சியை ஓவியமாக்கும் போது அவன் கைக்கொள்ள வேண்டிய விசயங்கள் என்ன? குறிப்பாக மனித உருவங்களை வரையும் போது கவனிக்க வேண்டிய விசயங்கள் என்ன?

ஒன்னும் பெரிய விசயம் கிடையாது போட்டாகிராபிக் கண்ணு நமக்கு வேணும் பார்த்தவுனடே நாம என்ன பார்கிறமோ அத மனசில பதிஞ்சிருக்க வேனும், பதிவானது அப்படியே மேல போயி அப்படியே சுத்திட்டு இருக்கும் (தலையை தொட்டு காட்டுகிறார்)

 உதாரணமா இந்தியாவில 127 கோடி பேரு இருக்காங்கன்னு சொல்றோம் அத்தன பேரோட முகத்த போட்டோ எடுத்து இந்த ஹால்ல இருந்து ஏர்போர்ட் வரை மொத்தமா ஒட்டிவெச்சு பார்த்தோம்னா... எல்லாத்திலேயும் ரெண்டு கண்ணு,  மூக்கு, இரண்டு காது இருக்கும்.. இந்த முகங்கள்ள எந்த ஒரு பேஸ் கூட ஒரே மாதிரி இருக்காது. புருவங்கள்,மூக்கு தூவாரங்கள் இதில எதுவுமே ஒன்னுபோல இருக்காது. இது தான் இயற்கையோட அற்புதம்.

 இறைவனோட படைப்பு. அதுமட்டும் இல்ல ட்வின்சுன்னு சொல்றோம்.  ராமன் லச்சுமன்னு பேர் வைப்போம் தனியா பார்த்தா யார் ராமன் யாரு லட்சுமன்னு குழப்பமா இருக்கும். ரெண்டு பேரையும் நேரா நிக்க வைச்சு பார்த்தம்னா. இரண்டு பேர்த்துல சின்ன டிபரண்ட் இருக்கும், கலர் வித்தியாசம் இருக்கும், ஒருத்தன் ப்ரைட்டா இருப்பான் ஒருத்தன் டார்க்கா இருப்பான். முடில வித்யாசம் இருக்கும், ஹைட்ல சின்ன வேரியேசன் இருக்கும். புருவ முடில சின்ன சேஞ்சஸ் இருக்கும்,பேசும் போது தொண்டை சவுண்ட்ல வித்யாசம் இருக்கும்.

அதுக்கே நீங்க போகாதீங்க...ஸ்டெயிர்ட்டா எடுத்த உங்க போட்டோவுலயே பாஸ்போர்ட்லேர்ந்து  12 x 10 பெரிசா எடுத்துக்கிட்டு நெற்றியில் இருந்து ஒரு நேர் கோடு போட்ட மாதிரி கட் பன்னி எடுத்து வெச்சு பார்த்தம்னா ..சூரியாவுக்கு கூட வலது கன்னு பெரிசா இடது கண்ணு சின்னதா தெரியும், அதேமாதிரி ரஜினிக்கு; மூக்கு தூவாங்கள், உதடுகள் இப்படி பகுதிக்கு பகுதியே வித்தியாசம் இருக்கும். எம்ஜியார்,சிவாஜிக்கு வலது தாடை பெருசா இருக்கும் (யாராவது கவனிச்சிருக்கீங்களா), எந்த தாடையை அதிகமா பயன் படுதரமோ அது வலிமை மிகுந்து பெரிசாயிரும். நூத்தில 85 பேருக்கு இப்படித்தான் இருக்கும்.  ஜெயலலிதா, நாகேஷ், நான் மூனுபேருக்கும் இடது தாடை பெரிசா தெரியும்.  இந்த மாதிரி உலகத்திலேயே சின்ன வயசிலேயே மோசமான தோற்றம் உடையவங்க இரண்டுபேரு ஒருத்தர் மஹாத்மா காந்தி இன்னொருத்தர் லிங்கன் சந்தேகம் இருந்தா ஜீவா கிட்ட கேட்டு பாருங்க (ஓவியர் ஜீவா) காது எலி காது மாதிரி பெரிசா இருக்கும், நெஞ்சு குறுகலா இருக்கும் (கிண்டல் பன்றதா எடுத்துக்காதீங்க... பெயின் டரா சொல்றேன்) ரெண்டு கன்ன எழும்பும் துருத்திட்டு இருக்கும் அப்படியான முகம் வாழ்க்கையில் மேம் படும் போது அவங்க முகம் அழகாகிடுது. நான் வரைஞ்ச காந்தி போர்ட்ரேய்ட் பாருங்க தெரியும்.

லிங்கன் போர்ட்ராய்ட் பார்த்தீங்கன்னா தெரியும் கன்னம் எல்லாம் ஒடிங்கிப் போய் இருக்கும் தாடி வெச்சு இருப்பாரு, கண்ணு உள்ள போன கண்ணு நீண்ட கைகள்...

அழகான முகம்னா நேரு, இந்திரா காந்தி தீட்சயமான கண்கள், நீளமான மூக்கு,  நேரா போட்டோ எடுத்தா மூக்கின் தூவாரம் தெரிய கூடாது இரண்டு கண்களும் ஒரே அளவாக,இடைவெளி (டிவைடர் வெச்சு மெஸர் பன்னீங்கன்னா) சமமா இருக்கனும், நெற்றி,மூக்கு, உதடு தாடை இவைகளுக்கு இடையேயான இடைவெளி சரிசமமா இருந்தா அந்த முகம் அழகானதா தெரியும். இதுதான் சாமுத்ரிகா லட்சனம். கோவில் சிலைகள் இதன் அடிப்படையில் கண்டிப்பா இருக்கும், இந்த அளவுகள் கரெக்டா இருக்கனும்.  காது புறப்பட வேண்டிய இடம் கண்ணுலிருந்து நேரா கோடு போட்டீங்கன்ன கொஞ்சம் மேலிருந்து காதுமடல் ஆரம்பிக்கும். அதுக்கு மேல வரஞ்சீங்கன்ன அது மொராஜி தேசாய் காது( பெரிசா இருக்கும்).  அதே மாதிரி பக்கவாட்டு பகுதியில் இருந்து பார்க்கும் போது, மேல் உதடு கொஞ்சம் வெளியேயும் கீழ் உதடு கொஞ்சம் உள்ளேயும் இருக்கனும், உள்டாவும் இருக்கும், சந்தரகலான்னு ஒரு நடிகை இருந்தாங்க அவங்களுக்கு மேல் உதடு சின்னதாகவும் கீழ் உதடு பெரிசாகவும் இருக்கும், இது இயற்கையோடு படைப்பு.

ஹூயூமன் பாடில..உடம்புடைய அளவு பார்த்தீங்கன்னா, பத்மினி, வைஜெயந்திமாலா இருவரும் அழகானவங்க ஆனா சிலைபோன்ற அழகு உடையவங்க வைஜெயந்திமாலா. ஒரே உயரம் உடைய கணவன் மனைவி ரெண்டு பேர்ல தனியா பார்த்தா அம்மா கொஞ்சம் உயரமா இருப்பாங்க போலிருக்கேம்பாங்க இதுக்கு காரணம் உடை. ஆண்களுக்கு முதுகெலும்பு நீளம் ஜாஸ்தி, பெண்களுக்கு குறைவு, சிம்பிள் தியரி யாருக்கு கால் நீளமா இருக்கோ அவங்க உயரமா தெரிவாங்க.  இந்த மாதிரி உருவ அமைப்பை ஸ்டடிபன்னிதான் வரையனும்.


இயற்கை காட்சிகளை வரையும் போது கவனிக்க வேண்டிய விசயங்கள் என்ன?

கொடைக்கானல் போரீங்க எந்த பகுதியை வரையனும் தெரியாது.. அப்படியே பார்த்துட்டு போனீங்கன்னா குறிப்பிட்ட பகுதி அழகா இருக்கும் வரையலாம்னு உங்களுக்கே ஐடியா கிடைக்கும். அடிப்படை விசயம் என்னன்னா நாலு முனைப் பகுதில எந்த பகுதியும் சொட்டையா இருக்க கூடாது.  காட்சியோட அமைப்பு உங்க மனசுல பதிஞ்சு வெச்சுகனும். திருவண்ணாமலை கோயில வரையப் போயிருந்தப்ப ஒரு வீட்ல பர்மிசன் வாங்கி வரைய ஆரம்பிச்சேன்.  வரைய ஆரம்பிச்ச உடனே மேகங்கள வரைந்தேன் ஏன்னா மேகம் 3 நிமிசத்தில மறைஞ்சி போயிரும்... அதுக்கப்புரம் கோவில் மலைகள வரைஞ்சேன். இதுமாதிரி ஸ்பாட்ல முடிவெடுக்க வேண்டிய விசயங்கள் இருக்கும். அதே மாதிரி தஞ்சாவூர் கோவில் வரைந்தப்ப காலை 6 மணிக்கு ஆரம்பிச்சு மத்தியானம் 2.30 மணிவரைக்கும் சிங்கில் சிட்டிங்ல 8 மணிநேரம் வரைஞ்சேன்.  காலைல ஆறரைமணி..ஏழு..ஏழரைமணில சூரிய உதிச்சு கோயில் மேல அடிக்கும் உச்சி நேரத்துக்கப்புரம் ஷேடோ விழ ஆரம்பிச்சுடும்

மூனுமணிங்கும் போது கருப்பா விழ ஆரம்பிச்சுடும்...அதுக்கப்புரம் வரையறது கஷ்டம். 6 மணிக்கு வரையும் போதே பேசிக்கல் லைட் அண்ட் ஷேடிங் வரைஞ்சிடனும்..மத்த டீட்டெய்ல்கள அப்புரம் வரையலாம்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலையும் இதுபோல வே வரைஞ்சேன். 10 மணிநேரம் ஆச்சு.  திருப்பதி கோயில் வரையும் போது பாதில மழை வந்திடுச்சு. ஷேடிங் ஞாபகம் வெச்சு வரைய வேண்டியதாப் போச்சு. இந்த மாதிரி லேண்ட் ஸ்கேப் வரையும் போது சிக்கல்கள் இருக்கு.

ஓவியர் நடிகரான போது சந்தித்த சங்கடங்கள் என்னென்ன?

அவற்றை எவ்வாறு எதிர் கொண்டீர்கள்.

ஓவியர் வாழ்நாள் பூரா பேச வேண்டியதில்ல கை பேசுதில்ல. நடிகனுக்கு வேற வழி இல்ல பேசியே ஆகனும். 1950 - 60 கள்ள சினிமாவில் நல்ல தமிழ் இருந்தது அதை மறுக்க முடியாது. 45 பைசா குடுத்தாலே படம் பார்க்க முடிந்தது, நடிகனுக்கு அடிப்படை விசயம் உச்சரிப்பு, மேடை பயம் இருக்கக் கூடாது, நினைவாற்றல் இருக்கனும். சிவாஜி எம்ஜி ஆர் நாடகங்கள்ல நடிச்சு வந்தவங்க அவங்களோட நடிக்கனும்னா நாடகத்தில நடிச்சு பயிற்சியும் அவசியமா இருந்தது. 7 ஆண்டுகள் நாடகத்தில் நடித்தேன். கந்தனென்பார், கடம்பனென்பார்,கார்திகேயனென்பார்,குகனென்பார்,சண்முகனென்பார் உம்மையும் படைத்தபின் சூரனையும் வதைத்த திண் தோள்கலெங்கே...ன்னு வசனம் பேசும் போது வீட்டுக்கே ஓடிப் போயரலாமான்னு தோனும். (கட்டபொம்மன் முழுநீள வசனம் பேசி காட்டுகிறார்...கிஸ்தி திறை வரி வட்டி வேடிக்கை வானம் பொழிகிறது பூமி விழைகிறது,... யாரிடம் கேட்கிறாய் வரி மானம் கெட்டவனே... ) நல்ல புள்ளயா இருந்தாலும், கெட்ட புள்ளயா இருந்தாலும் பொட்ட புள்ளய பார்க்கக்கூடாது என்கிற கண்டிசன்லயே சினிமாவுக்கு வந்தேன்.

"கடந்த சனி (4.1.2014) அன்று கோவை கஸ்தூரி சீனிவாசன் அற நிலையத்தின் வெள்ளிவிழா"  நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார் அவர்கள் பேச்சில் இருந்து தொகுக்கப் பட்டது

#நடிகர்சிவகுமார்_அனுபவம்_பகுதி 1



தொடர்கிறேன்...

நன்றி , கலாகுமரன்
Download As PDF

Monday, March 5, 2012

கின்னஸ் சாதனை புரிந்த புதுவை இளைஞர்

"சாதனை புரிய முதலில் எங்காவது தொடங்கு என்பார்கள் இந்த இளைஞர் பென்சில் முனையில் இருந்து தொடங்கி உள்ளார். எந்த ஒரு சாதனையும் எளிதாக கிடைப்பதில்லை கடினமான முயற்சி தான் வெற்றியை கொடுக்கிறது. இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இவரைப்பற்றி இதோ தெரிந்து கொள்ளலாம்."
கின்னஸ் சாதனை படைத்த புதுவை அண்ணாமலையின் படத்தை இளைஞர் மலரில் (தேதி : 3.3.2012 ) அட்டையில் வெளியிட்டு பாராட்டியுள்ளது " தினத்தந்தி"

பேச்சு, மூச்செல்லாம் ஓவியம்...ஓவியம் என்றிருக்கிறார் அண்ணாமலை. அந்த அதீத மோகம்தான் இந்தக் கல்லூரி மாணவரை ' கின்னஸ் சாதனை' என்ற சிகரம் ஏற வைத்திருகிறது.

சென்னை அரும்பாக்கம் டி.ஜி. வைஷ்ணவா கல்லூரியில் பி.எஸ்சி. விஸ்காம் (காட்சித் தொடர்பியல்) முதலாமாண்டு பயிலும் அண்ணாமலையை அண்மையில் சந்தித்தோம். தூரிகை போலவே ஒல்லியாக இருந்த அந்த இளங்கலைஞர் பேசினார்...

சின்னவயதில் சுவற்றில் கரி கொண்டு கிறுக்குவதில் தொடங்கியது எனது கலை ஆர்வம். படிப்பையும் தான்டி எனது ஓவிய விருப்பம் இருந்தது. எனவே வீட்டில் இருந்து படித்தால் சரிவராது என்று புதுவையில் உள்ள ஆச்சாரியா சிக்‌ஷா மந்திர் பள்ளிக்கு எனது பெற்றோர் அனுப்பினர். அப்போது பிறர் குறைசொல்லாத அளவுக்குப் படித்த நான், ஓவிய ஆர்வத்தையும் விட்டு விடவில்லை.

முதல் வெற்றி : 6ம் வகுப்பில் படிக்கும் போது பிரபல தொலைக்காட்சி ஒன்று மாநில அளவில் நடத்திய காந்தியடிகள் ஓவியப்போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றது. பெற்றோர் உள்ளிட்ட பிறரும் எனது ஓவிய ஆர்வத்தை அங்கீகரித்தது அப்போதுதான்.

ஆசிரியர் வழிகாட்டுதல் : 8ம் வகுப்பில் படிக்கும் போது ஓவிய ஆசிரியர் முத்துகுமரன் எனது ஓவிய தாகத்தை ஊக்குவிப்பவராகவும், வழிகாட்டியாகவும் வந்து அமைந்தார். பள்ளி நேரம் முடிந்ததும் அவரிடம் சென்று முனைப்போடு கற்றுக்கொண்டேன். எனது ஆர்வத்தை செதுக்கி சீர்திருத்தி தொழில் நுட்ப ரீதியாக மேம்படுதியவர்கள் அவரைத்தவிர செந்தில்குமரன், அச்சுதன், செல்வகுமார் போன்ற ஓவிய ஆசிரியர்கள்.

கவனிக்க வைத்த வெற்றிகள் : 10ம் வகுப்பில் புதுவை அரசு சார்பில் நடத்தப்பட்ட 'பிளாஸ்டிக்கை தவிர்போம்' என்ற கருத்தின் அடிப்படையிலான போஸ்டர் உருவாக்கும் போட்டியில் புதுவை அளவில் முதலிடத்தையும், மண்டல அளவில் இரண்டாம் இடமும் பெற்றது.

கின்னஸ் போட்டியில் முயற்சி மற்றும் வெற்றி : ஆச்சார்யா சிக்‌ஷா மந்திர் (நிர்வாக இயக்குநர் அரவிந்த், முதல்வர். மணி விஜயராகவன்) சார்பில் கின்னஸ் சாதனை முயற்சி மேற்க்கொள்ள திட்டமிடப்பட்டது. அதற்குரிய தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டேன். நீளமான கார்டூன் தொடர் என்ற பிரிவில் சாதனை புரிய முடிவெடுக்கப்பட்டது.

இச்சாதனைக்கான நிபந்தனைகள் 40 மீட்டர் தாளில் 4 நாட்களுக்குள் வரைந்து முடிக்க வேண்டும். இருகையில் அமர்ந்த படியே வரைய வேண்டும். அப்படி இப்படி அசையக்கூடாது பிறருடன் பேசக்கூடாது, வேகம், நேர்த்தியுடன், ஸ்ட்ரோக் மாறக் கூடாது, 3 மணி நேரத்திற்கு ஒருமுறை 5 நிமிட இடைவேளை எடுத்துக்கொள்ளலாம் என்று ஏகப்பட்ட நிபந்தனைகள்.

அனைவரது பாராட்டு மற்றும் உபச்சாரம் என்னை பெருமையில் மிதக்க வைத்தாலும் பொறுப்புச் சுமையும் உணர்ந்தேன். எனக்கு ஒருமாத கால விடுப்பு கொடுத்தார்கள் அப்போது உணவுக் கட்டுப்பாடு, கார்ட்டூன் பயிற்சி, பிசியோதெரபி என சவாலுக்குத் தயார்படுத்திக் கொண்டேன்.

குறிப்பிட்ட நாளன்று காலை 5 மணிக்கு சாதனைப்பயணம் தொடங்கியது.
பள்ளி ஆசிரிய,ஆசிரியைகள், நிர்வாகிகள், மாணவர்களும் திரண்டு நின்று வாழ்த்த தொடர்ச்சியான தாளில் கார்ட்டூன் கதைகளை பென்சில் கொண்டு தீட்டினேன். டுவிங்கிள் ஸ்டார் என்ற தலைப்பில் 10 கதைகளை தொடராக வரைந்தேன். ஒவ்வொரு கதையும் முடிவில் ஒரு நீதியைக் கொண்டிருக்கும். சும்மா கிறுக்கித்தள்ளவோ, நிறைய இடம் விடவொ முடியாது. ஸ்ட்ரோக் ஓரே மாதிரியாகவும், நேர்த்தியாகவும் இருக்க வேண்டும்.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உள்ளிட்ட வி.ஐ.பி கள் வந்து வாழ்த்தினர். முன்னால் கின்னஸ் சாதனையாளர் பிரதீப்குமார் கின்னஸ் நிறுவனம் சார்பில் பார்வையாளராக வந்திருந்தார். 5 மணி நேரத்திற்கு ஒருமுறை மட்டுமே ஓய்வு எடுத்துக்கொண்டேன். பழச்சாறு மட்டும் அருந்தினேன்.

நேரம் செல்ல செல்ல கைவிரல்கள், மூட்டு, தோள்பட்டை எல்லாம் வலி பின்னியெடுக்க அரம்பித்தது. இருந்தாலும் எந்திர வேகத்தில், ஆனால் தரம் குறையாமல் வரைந்து கொண்டிருந்தேன்.

இரவு 11 மணி வரை வரைந்த நான், மறுநாள் 4 மணிக்கு எழுந்து பென்சில் பிடித்தேன். நேரம் செல்ல செல்ல என்னால் தாக்குப்பிடிக்க ரொம்ப கடினமாக இருந்தது. ஏ.சி அரங்கம் என்பதால் ஜலதோசமும் அவஸ்தைப்படுத்தியது. எனவே முயற்சியை முடித்துக்கொள்ளும்படி அனைவரும் கூற நான் முற்றும் போட்டேன்.

கின்னஸின் வரையறையையும் தாண்டி ஒன்றரை நாளில் 163. 17 மீட்டர் தூரத்திற்கு கார்ட்டூன் தீட்டிவிட்டேன். கின்னஸ் சான்றிதழைப் பெற்ற போது நான் பட்ட கஷ்டம் வலி எல்லாம் பறந்து விட்டது.

அடுத்த இலக்கு : விஸ்காம் படிப்பை முடித்து விட்டு திரைப்பட கலை இயக்கத்தில் கவனம் செலுத்தலாம் என்றிருக்கிறேன். எனக்கு பிடித்த திரைப்பட கலை இயக்குநர் சாபு சிரில்.

எந்த விதமான ஓவியங்கள் பிடிக்கும் : கார்ட்டூன் தவிர காரிகேச்சர், உருவப்படங்கள் வரைதல், ரியலிச பாணி ஓவியங்கள், நிலப்பரப்பு ஓவியங்கள் எனக்கு இஷ்டமானவை. தடகளத்தில் மாநில அளவில் பல வெற்றிகளை பெற்றிருக்கிறேன்.

குடும்பம் குறித்து : நாவண்ணன் தனியார் டி.வி. நிகழ்ச்சி தயாரிப்பாளர். அம்மா விஜயலட்சுமி, தங்கை ராதிகா.

ஓவியம் இல்லாத வாழ்வை என்னால் கற்பனை செய்ய முடியாது. ஓவியமே என்னை உலகுக்கு காட்டியது.

  • " மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துவோம் "

Download As PDF

Monday, February 6, 2012

ஓவியர் எழுத்தாளருக்குப் பக்கவாத்தியம் கிடையாது: டிராட்ஸ்கி மருது - ஒரு நேர்காணல்




ஓவியர் டிராட்ஸ்கி மருது அவர்களின் நேர்காணல் இங்கு மறு பதிவாக வெளியிடுகிறேன் ஓவிய துறையில் அவரது அனுபவங்கள் அதன் மூலமாக நாம் அறியப்படவேண்டிய தகவல்கள் நிறைய உள்ளன. (நன்றி : கீற்று )


ஓவியர் எழுத்தாளருக்குப் பக்கவாத்தியம் கிடையாது: டிராட்ஸ்கி மருது நேர்காணல்: மினர்வா & நந்தன்




ஓவியத்துறையில் கடந்த 25 வருடங்களாக காத்திரமாக இயங்கி வருபவர் டிராட்ஸ்கி மருது. 1977ல் சிறந்த ஓவியராக தமிழக அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டவர். இந்திய அளவில் பல ஓவியக் கண்காட்சிகள் நடத்தியுள்ளார். உலக அளவில் ‘Best Collections’ பலவற்றில் இவரது ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. இந்திய அளவில் கணிப்பொறியை பயன்படுத்தும் ஓவியர்களுக்கு இவர்தான் முன்னோடி. கடந்த 15 வருடங்களாக சினிமாத் துறையில் கலை இயக்குநராகவும், அனிமேக்கராகவும் பணியாற்றி வருகிறார். தமிழ் வணிகப் பத்திரிகைகளிலும், சிறுபத்திரிகைகளிலும் தொடர்ந்து வரைந்து வருகிறார். மருதுவின் இல்லத்தில் அவரைச் சந்தித்து கீற்றுவுக்காக உரையாடினோம். இரண்டு மணி நேரங்கள் நீண்ட அந்த உரையாடலில் இருந்து...




உங்க குடும்ப பிண்ணனி பற்றி சொல்லுங்களேன்...

    நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் மதுரை கோரிப்பாளையம். என் குடும்பத்தோடு பூர்வீகம்னு சொன்னா அது அருப்புக்கோட்டை, காரியப்பட்டிக்குப் பக்கத்துலே இருக்கிற மருதங்குடிங்கிற கிராமம்தான். அங்கிருந்து எங்க தாத்தா காலத்துலே மதுரைக்குக் குடியேறினாங்க. அடிப்படையிலே விவசாயக் குடும்பம் எங்களோடது.

குடும்பத்துலே யாரும் கலை, இலக்கியத்தோட சம்பந்தம் இல்லாதவங்கன்னு சொல்லலாமா?


    அப்படி சொல்ல முடியாது. அப்பாவோட தாய்மாமன்கள் எல்லாம் அந்தக் காலத்துலே என்.எஸ்.கிருஷ்னணை வைச்சி விருதுநகர்லே நாடகம் போட்டவங்க. அம்மாவோட ஒரு சித்தப்பா, பேரு எம்.எஸ்.சோலைமலை, சினிமாவுலே முக்கியமான கதை - வசனகர்த்தாவா இருந்தாரு. பதிபக்தி, பாவமன்னிப்பு, பாகப்பிரிவினை-ன்னு பீம்சிங் இயக்கிய ‘ப’ வரிசை படங்களுக்கு கதை, வசனம் எழுதியது எங்க தாத்தாதான். அந்தப் படங்கள்லே ராமநாதபுரம் மாவட்ட சாயல் இருந்ததுன்னா அதுக்குக் காரணம் தாத்தாவோட பங்களிப்புதான். ஏன்னா டைரக்டர் பீம்சிங் வட மாநிலத்துலே இருந்து வந்தவரு. அவர் திறமையான இயக்குநரா இருந்து, நல்ல படங்களைக் கொடுத்தாரு. ஆனா கதை தாத்தாவோடது.
    அதே காலகட்டத்துலே சினிமாவுல முன்னணி நடிகரா இருந்த எஸ்.எஸ்.ராஜேந்திரன் என்னோட பெரியப்பா பையன்தான். இப்படி எனக்கு ஒரு தலைமுறைக்கு முன்னாடியே எங்க குடும்பத்துக்கு கலைத்துறையிலே தொடர்பு இருந்தது.
    எங்க தாத்தாவுக்கு அப்பா ஒரே பையன். பிரிட்டீஷ் காலத்துலே அப்பா, வார்தாவிலிருக்கிற காந்தி ஆசிரமத்தில் ஒரு வருஷம் இருந்திருக்காரு. அங்க இருந்த ஒருத்தர், அப்பா வீட்டுக்கு ஒரே வாரிசுன்னு தெரிஞ்சு வீட்டுக்குத் திருப்பி அனுப்பியிருக்கிறாரு.
    அதுக்குப் பிறகு, 1940களில் இலங்கையில் பண்டாரநாயகா காலத்திலே கொமீனா டி சில்வா, என்னம்பெரைரா என்ற இரண்டு டிராட்ஸ்கியவாதிகள் அங்கிருந்து தப்பி, தமிழ்நாட்டுலே தஞ்சம் அடையிறாங்க. அவங்களோட அப்பாவுக்குத் தொடர்பு ஏற்படுது. அப்பாவும் டிராட்ஸ்கியவாதி ஆகிறார். எனக்கு டிராட்ஸ்கி மருதுன்னு பேரு வைக்கிறார். சின்ன வயசிலேயே எனக்கு உலக இலக்கியங்கள் படிக்கிற வாய்ப்பு கிடைக்குது.

உங்களுக்கு கலையில் ஈடுபாடு வந்தது எப்படி?
    நான் வளர்ந்த சூழலே அற்புதமானது. நாங்க இருந்த ஏரியாவுலே தான் அய்யனார் சிலை மாதிரியான டெரகோட்டா சிற்பங்கள் செய்யிற கலைஞர்கள் இருந்தாங்க. அவங்க மண்ணைக் குழைச்சு சிற்பமா மாத்துறதை நேரம் கிடைக்கும்போதெல்லாம் பார்ப்பேன். பிறகு மதுரை அழகர் கோயில், மீனாட்சி கோயில் மற்றும் நாயக்கர் மகால் ஆகிய இடங்களில் இருக்கிற சிற்பங்களை அடிக்கடி பார்க்க முடியும். மதுரை அழகர் கோயில் திருவிழாவும் ஒரு முக்கியமான இன்ஸ்பிரேஷன். மதுரையைச் சுத்தி 50, 60 கிலோமீட்டர் தூரத்திலே இருக்கிற எல்லா நாட்டுப்புற கலைஞர்களும் திருவிழாவுக்கு வருவாங்க. இதையெல்லாம் வேடிக்கை பார்க்கிறது எனக்கு மிகப் பெரிய கொண்டாட்டமா இருந்துச்சி
    அப்ப காந்தி மியூசியத்துலே வாரம் ஒரு இலவச சினிமா போடுவாங்க. அதனால் ரொம்ப சின்ன வயசிலேயே வேர்ல்டு கிளாசிக்ஸ் எல்லாம் பார்க்க வாய்ப்பு கிடைச்சது.
    பிறகு எங்க அப்பா மூலமா நான் தெரிஞ்சிக்கிட்டது. அப்ப மதுரையிலே பெரிய புத்தகக் கடை பாரதி புத்தகாலயம். அதை நடத்திக்கிட்டு இருந்த சுவாமிநாதன் அப்பாவோட பால்ய நண்பர். அப்பா என்னை வாரத்துக்கு மூணு தடவையாவது அங்க கூட்டிக்கிட்டு போவாரு. அந்தக் கடைக்கு கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவா மாதிரியான ஆட்கள் எல்லாம் வருவாங்க. ஒரு தடவை போனா, குறைஞ்சது மூணு மணி நேரமாவது இருப்போம். ரொம்ப சின்ன வயசிலேயே உலக இலக்கியங்களோட அறிமுகம் கிடைச்சது.
    ரீகல் தியேட்டர்லே நல்ல இங்கிலீஸ் படம் வந்தா, பரீட்சை இருந்தாக் கூட, அப்பா அதைப் பார்க்கச் சொல்வாரு. ‘Bridge on the river Kiwai-னு ஒரு படம் வந்திருக்கு. புஸ்தகத்துலே படிச்ச பாலைவனத்தை அதிலே பார்க்கலாம்’ன்னு சொல்லிக் கூட்டிட்டுப் போவாரு. டாலி, பிக்காஸோ, டிராட்ஸ்கி இவங்களோட ஓவியங்கள் அப்பா மூலம்தான் எனக்கு அறிமுகமாச்சு. இதெல்லாம் நான் எட்டாம் வகுப்பு படிச்சபோதே கிடைச்சதுங்கிறதுதான் ரொம்ப முக்கியம். இவையெல்லாம் தான் என் கலைப்பாதையின் படிக்கட்டுகள்.

நீங்க ஓவியத்துறைக்கு வருவதற்கு மதுரையில் பார்த்த சிற்பங்கள் ஒரு முக்கிய காரணம்னு சொல்றீங்க. ஆனால், தமிழக மரபில் சிற்பங்களுக்கும், கட்டடக் கலைக்கும் இருக்கிற முக்கியத்துவம் ஓவியங்களுக்கு இல்லையே, ஏன்?

    தமிழகத்தில் ஓவியம் என்பது சிற்பத்தோடு இணைந்தேதான் இருந்தது. தனி ஓவியம்னு இல்லை. கி.பி. 4ம் நூற்றாண்டில் அதாவது பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட கைலாசநாதர் கோயில் சிற்பங்கள் மீது ஓவியங்கள் வரையப்பட்டிருக்கு. காலப்போக்குல ஓவியங்கள் நிறமிழந்து போனது. இப்பயும் வெயில் படாம, கோயிலுக்குள் இருக்கிற சிற்பங்கள் மீது ஓவியப் பூச்சு இருப்பதைப் பார்க்க முடியும்.
    இலக்கியத்துக்கு ஓவியம் எந்தளவுக்கு முக்கியம்னு நினைக்கிறீங்க? இலக்கியத்துக்கு வரையும்போது, நீங்க எந்த மாதிரியான அணுகுமுறையை வைச்சிருக்கீங்க?
    எழுத்துக்கு வரையும்போது வார்த்தைகள்தான் தூரிகையை நகர்த்துதுன்னு சொல்வாங்க. ஆனா நான் கொஞ்சம் வேற மாதிரிதான் இயங்கியிருக்கிறேன். கடந்த 20 வருஷமா பத்திரிகைகளில் வரைஞ்சிட்டு வர்றேன். எப்போதும் எழுத்தாளர்களோட வார்த்தைகளை நான் தேவவாக்காக எடுத்துக்கிட்டது கிடையாது. பொதுவா மற்ற ஓவியர்கள் பத்திரிகைகளுக்கு வரையும்போது, அந்த எழுத்திலே இருக்கிற சம்பவங்களை வரைவாங்க. நான் அப்படி வரைஞ்சது கிடையாது. தேவைப்பட்டபோது எடுத்திருக்கேனேயொழிய அதை மட்டுமே வரைஞ்சதில்லை.
    எழுத்து ஒரு விஷயத்தைச் சொல்லும். அது என்ன சொல்லுதோ, அதை நோக்கிய விஷயத்தை என் படமும் சொல்லும். அதுக்கு மேலே என் படம் எதுவும் சொல்லலைன்னும் கிடையாது. எழுத்திலிருந்து படத்தைப் பிரிச்சிட்டாக்கூட, என் படம் அதே விஷயத்தை சொல்றதை நீங்க பார்க்கலாம். ஓவியர் என்பவர் எழுத்தாளருக்குப் பக்கவாத்தியம் கிடையாது. இன்னும் சொல்லப்போனா ஓவியங்கள்தான் எழுத்தை மக்கள் மனசுலே நிறுத்தி வைக்குது.
    இராமாயணம், மகாபாரதம் எல்லாம் வெறும் வார்த்தைகளால மக்கள் மனசுலே இத்தனை வருஷமா நிக்கலை. அதுக்கு இணையா கடந்த இரண்டாயிரம் வருஷமா இருக்கிற ஓவியங்கள், சிற்பங்கள், கூத்துக்கள் மூலம்தான் நிக்குது. ராமா ராமான்னு என்னதான் எழுதுனாலும், ராமாவோட இமேஜ் கிடைக்கலைன்னா அது இந்தளவுக்குப் போய் சேர்ந்திருக்காது. வெறும் வார்த்தைகள் அனுமானிக்கதான் வைக்கும், கோடுகள்தான் மனசுலே கொண்டு வந்து சேர்க்கும். இன்னும் சொல்லப்போனா, வார்த்தைகள் பொய் சொல்லும், கோடுகள் பொய்யே சொல்லாது.

கடந்த இருபது வருஷமா தமிழ் இலக்கியத்தோட இயங்கிட்டு வர்றீங்க. அது எந்தளவுக்கு உங்களை பாதிச்சிருக்கு?

    Marudhuசிலரோட எழுத்துக்கள் என்னைப் பாதிச்சிருக்கு. பெயர் குறிப்பிட்டு சொல்ல விரும்பலை. சிலரோட வடிவம் நல்லா இருக்கும், சிலரோட உள்ளடக்கம் நல்லா இருக்கும். பொதுவா எழுத்து மட்டுமில்லை, எல்லா விஷயங்களும் என்னை பாதிக்குது. எல்லாத்தையும் கூர்ந்து கவனிக்கிறேன். பத்திரிகைச் செய்திகள், டிவியிலே வர்ற விளம்பரங்கள், கிராமத்துலே இருந்து வர்ற உறவினர்கள், நாடங்கள் எல்லாம் என்னை influence பண்ணுது.

தமிழ் நாடகங்களை நீங்க எப்படி பார்க்கிறீங்க?

    நவீன நாடகங்களில் மிகப் பெரிய முனைப்பு இருக்குது. ஆனா ஒரு ஆர்டிஸ்டா நான் என்ன நினைக்கிறேன்னா, தமிழ் நாடகத்துலே visual poverty இருக்குது. இதுக்குக் காரணமா பட்ஜெட்னு சொன்னாக்கூட, இருக்கிறதை வைச்சி இன்னும் பெட்டரா பண்ண முடியும். இயலாமையே எளிமைன்னு இங்க ஆயிடுச்சோன்னு கூட தோணுது. பின்ன அதுவே ஒரு standard ஆகி, இப்ப வரைக்கும் அதை யாரும் உடைக்க முயற்சிக்கலைன்னுதான் சொல்லணும்.

    நாடகத்துலே மட்டுமில்லை, பட்ஜெட் பிரச்சினையா இல்லாத சினிமாவுலே கூட இந்தப் பிரச்சினை இருக்கு. இரண்டரை மணி நேரம் ஓடுற சினிமாவுலே இரண்டே கால் மணி நேரம் பேசிக்கிட்டே இருக்காங்க. பேசியே கதையை நகர்த்துறாங்க. இது எனக்கு அயற்சியைத்தான் தருது. பெரிய இயக்குநர்னு சொல்ற மணிரத்னம் மாதிரியான ஆட்களோட படங்கள்லே வேறவிதமான தப்பு இருக்குது. அவங்க மிகைப்படுத்தப்பட்ட visuals-யை காமிக்கிறாங்க.
    பெரிய பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் சினிமாவுக்கு வந்தும் கூட இதிலே எந்த மாற்றமும் இல்லை. ஏன்னா இவங்க திரைக்கதையை எழுதுறாங்க; விஷூவலா பார்க்கிறது இல்லை. இவர் வசனம் எழுதுன கதை, இவர் எழுதுன கதைன்னு காட்சி ஊடகத்துலே வசனங்களுக்கு முக்கியத்துவம் தர்ற போக்கு இங்கதான் இருக்கு. கூத்து, மேடை நாடகம் இதோட ஒரு தொடர்ச்சியாதான் சினிமா இருக்கே தவிர, அதை காட்சி ஊடகமா யாரும் இங்க பார்க்கலை.

மற்ற கலைகளும் இதோட தொடர்ச்சியாத்தான் இருக்குதா?

    ஆமா. தமிழ்நாட்டை சத்தங்கள்தான் ஆளுது. அலங்காரமா பேசுறவங்கதான் இங்க கொண்டாடப்படுறாங்க. அலங்காரம் என்பது பொய்னு ஜனங்களுக்குத் தெரியறது இல்லை. அலங்காரமா பேசி ஆட்சியைப் பிடிச்சவங்க எல்லாம் அலங்காரமான கலைகளையே கொண்டாடுறாங்க. திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்த இந்த 40 வருஷத்துலே, அவங்க சினிமாவுலே இருந்து வந்தவங்க என்பதாலே, அவங்க கட்டுன கட்டிடங்கள் எல்லாம் ஜூபிடர் பிலிம்ஸ் செட் மாதிரிதான் இருக்கு. அந்த கட்டிடம் எல்லாம் சிமெண்ட்லே செஞ்ச செட்கள்தான்.
    பெரியார் பிறந்ததாலதான் தமிழ்நாட்டுலே புதிய பாதையே கிடைச்சது. அவர் வந்த பின்னாடிதான் தமிழர் வாழ்க்கையிலே வெளிச்சமே வருது. அவருடைய முக்கிய கொள்கைகள் சாதி மறுப்பு, கடவுள் மறுப்பு மற்றும் பெண் விடுதலை. கடவுளைத் தூக்கிப் போட்டதும், கதை சொல்றதில் இருந்த மாய மந்திரத் தன்மையும் காணாமப் போயிடுச்சி. ஏன்னா இங்க மாய மந்திரங்கிறது கடவுளோட மட்டுமே இணைச்சி வைச்சிருந்தாங்க.
    அந்த மாய மந்திரத் தன்மை கதை சொல்றதில் இருந்திருந்தா தமிழ் சினிமா விஷுவல் மீடியாவா வளர்ந்திருக்க வாய்ப்பிருந்திருக்கும்.

ஓவியத்துறையில் பெண்கள் மிகக் குறைவான எண்ணிக்கையில் இருப்பதற்கு என்ன காரணம்?

    உலக அளவிலேயே இந்தத் துறையில் பெண்களோட எண்ணிக்கை ஆண்களோட ஒப்பிடும்போது மிகக் குறைவுதான். அதிலும் இந்தியாவிலே மிக மிகக் குறைவு. இதற்குக் காரணம் இங்க பெண்கள் படிக்க வந்ததே கடந்த 50, 60 வருஷமாத்தான். இங்க சமூகத் தடைகள் ஏராளமா இருக்கு. ஒரு கலைஞராக இருப்பது என்பது lifetime commitment. ஆனா இங்க கல்யாணத்துக்குப் பிறகு பெண்கள் வீட்டுக்குள்ளேயே முடக்கப்படுறாங்க. அதனாலே பிரகாசிக்க முடியாம போயிடுது.

    ஆனா இந்தியாவிலே நவீன ஓவியங்கள்லே முக்கியமான பாதையைத் தொடங்கி வைத்த அமிர்தா சர்கில் ஒரு பெண்தான். ஒரு ஹங்கேரியனுக்கும், இந்திய பெண்ணுக்கும் பிறந்தவர். இவர்கிட்ட இருந்துதான் இந்திய நவீன ஓவியங்கள் தொடங்குதுன்னு சொல்லலாம்.

ஓவ்வொரு ஓவியருக்கும் ஒரு தனித்தன்மை இருக்கு. நெதர்லாந்து ஓவியர் ரெம்பரெண்ட்-னு சொன்னா, லைட்டிங்கை ரொம்பவும் வீச்சோட தன் ஓவியங்களைப் பயன்படுத்தினவர், பிரான்சில் டேவிட் தன்னோட ஓவியங்கள் மூலமா புரட்சியை மக்கள் மனதில் தூண்டி விட்டவர்னு சொல்லலாம். இந்த மாதிரி இருக்கிற ஆளுமைகளில் உங்களை ரொம்பவும் கவர்ந்தவர் யார்? யாரோட ஓவியங்களைத் திரும்பத் திரும்ப ரசிக்கிறீங்க?

    அப்படி ஓரே ஒருத்தரை மட்டும் சொல்ல முடியாது. ஏன்னா என்னை பாதிச்சவங்க நிறைய பேரு இருக்காங்க. ஓவியர்கள் மட்டுமில்லாம, என்னைச் சுற்றியிருக்கிற எல்லாமே என்னை influence பண்ணுது - அது அழகர்கோயில் திருவிழாவாக இருக்கலாம், இல்லை நம்முடைய மரபுக்கலைகளாக இருக்கலாம்.

    குறிப்பாக ஓவியர்கள்னு சொல்லனும்னா ஆரம்ப காலகட்டத்தில் கிளாசிக் பெயிண்டர்ஸ் எல்லோரையும் விரும்பிப் பார்த்தேன். பின்னாடி நவீன ஓவியங்களுக்கு வந்தபோது, எனக்கு உருவங்களை வரைவதில் அதிக ஆர்வம் இருப்பதால், அந்த மாதிரி வரையறவங்களை அதிகம் ரசிக்கிறேன். காமிக் புத்தக ஓவியர்கள் மீதும் எனக்குப் பெரிய ஈடுபாடு இருக்கு. அதோடு கிராபிக்ஸ் டிசைனிங்கில் முக்கியமான எல்லோரையும் க்ளோசா வாட்ச் பண்றேன். அதிலே ஜேன் லேனியான் (போலாந்து), மில்டன் கிளேசர் (அமெரிக்கா), ஹேன்ட்ஸ் எடில்மன் (ஜெர்மனி) முதலானவங்களை ரொம்பவும் ரசிக்கிறேன்.

    காமிக் புத்தகங்களில் வரையாம, நவீன ஓவியம்னு சொல்லவும் முடியாத, அதே நேரத்தில் ரொம்ப பவர்புல்லா பத்திரிகைகளில் வரையற ஸால்ட் ஸ்டீபக், ரால்ட் ஸ்டீமன், ரொனால்ட் ஷெர்லி ஆகியோரையும் எனக்குப் புடிக்கும்.

    இந்த வகையில்தான் ரசிக்கிறேன்னு கிடையாது. எல்லாத்தையும் ரசிக்கிறேன். ஏன்னா என்னோட வொர்க் ஸ்டைலே அப்படித்தான் இருக்குது.

    எனக்குப் போட்டோகிராபி பிடிக்கும். ஓரு போட்டோ எடுத்து, அதை பிரிண்ட் பண்ணுவேன். அதுமேல manual-ஆ வரைவேன். வரைஞ்ச ஓவியத்தை கம்ப்யூட்டருக்குக் கொண்டுபோய், கிராபிக்ஸ் பண்ணுவேன். என்னோட படங்கள் எல்லாமே ஒரு mixed paintings. அதிலே போட்டோ இருக்கும், ஓவியம் இருக்கும், கிராபிக்ஸ் இருக்கும். அதனால் ரசனையும் mixed-ஆ தான் இருக்கு.


நீங்க ஐரோப்பாவில் இருக்கிற முக்கியமான ஆர்ட் கேலரி, மியூசியம் எல்லாத்துக்கும் போயிருக்கீங்க. அந்த அனுபவங்களைப் பத்தி சொல்ல முடியுமா?

    சின்ன வயசிலே நான் போட்டோவில பார்த்த ஓவியங்கள் எல்லாத்தையும் நேரில் பார்க்க முடிஞ்சது. போட்டோவுல, பிக்சர்லே பார்த்துட்டு சின்னதா இருக்கும்னு நான் நினைச்ச ஓவியங்கள் எல்லாம் மிகப் பெரியதா இருந்தது. அதே மாதிரி பெரிசா இருக்கும்னு நினைச்ச பல ஓவியங்கள் ரொம்பவும் சிறிசா இருந்தது. இந்த அனுபவம் இந்தியாவிலிருந்த போன பெரும்பாலான ஓவியர்களுக்கு இருந்திருக்கும்.

    டெலாய்ராய்க், டேவிட், மைக்கேல் ஆஞ்சலோ, டாவின்சி ஆகியோருடைய படங்களை நேரில், அதுவும் ஒரு அடி கிட்டத்துலே பார்க்கிறது இருக்கே, அது விவரிக்க முடியாத அனுபவம். அதில பல ஓவியங்கள் என் வாழ்நாள் முழுக்க என்னைத் துரத்திக்கிட்டே வருபவை. ஜெர்மன் நாட்டிலே இருக்கிற முன்ஸ்டர்லே ஒரு பெரிய மியூசியம் இருக்கு. அதுல எனக்கு ஒரு மறக்க முடியாத அனுபவம் கிடைச்சது.

    அந்த மியூசியத்துலே தெருவைப் பத்தின ஓவியம் ஒண்ணு பார்த்தேன். பார்த்துட்டு வெளியே வந்தா, அதே தெரு அப்படியே வெளியே இருக்கு. ‘ஐயோ இப்பதான் இந்தத் தெருவை ஓவியத்திலே பார்த்தேன்’ அப்படின்னு மிகப்பெரிய வியப்பு. ஏன்னா அந்த ஓவியம் 400 வருஷத்துக்கு முந்தினது. அந்த ஓவியத்திலே இருக்கிறமாதிரியே இப்பவும் அந்த தெருவை பராமரிக்கிறாங்க.

    அந்த நகரத்துலே ரெண்டு முனிசிபாலிட்டி இருக்கு. பழைய நகரத்தைப் பராமரிக்க old municipality, புதிய நகரத்தைப் பராமரிக்க new municipality. பழைய நகரத்துலே இருக்கிறவங்க தன்னோட வீட்டின் வெளிப்புறத்தை கொஞ்சம்கூட மாத்த மாட்டாங்க. தாழ்ப்பாள் பழுதானக்கூட அதே கலர்லே, அதே டிசைன்லே தாழ்ப்பாள் செஞ்சுதான் மாத்துறாங்க. அதே நேரத்துலே வீட்டுக்குள்ளே என்ன வேணும்னாலும் பண்ணிக்கலாம். பழைமையைப் பாதுகாக்கிறதில் அவங்க காட்டுற ஆர்வம் என்னை மலைக்க வைச்சது.

    பின்னே சிசிலி, இத்தாலி, பிரான்ஸ் நாடுகளில் இருக்கிற ஓவியங்கள், சிற்பங்கள் பெரும்பாலானவற்றைப் பார்வையிட முடிஞ்சது. இத்தாலியில் ஒரு அனுபவம். 1940களில் இரண்டாவது உலகப் போர் நடந்தபோது, 4 மாடிக் கட்டிடம் ஒண்ணு குண்டு வீசித் தாக்கப்படுது. தாக்குதலுக்குப் பின்னாடி அந்தக் கட்டிடத்தோட ஓரே ஒரு சுவர் மட்டும் நான்கு மாடி அளவுக்கு இடிபடாம தப்பியிருக்கு. போருக்குப் பின்னாடி அந்த இடத்தை வாங்குனவரு, அந்த சுவரை இடிக்காம, தன்னோட புதிய கட்டிடத்துக்கு ஒரு பக்க சுவரா அதை இணைச்சுக்கிட்டாரு. பழைமைக்கு அவங்க கொடுக்கிற முக்கியத்துவம் அப்படி.

    பாரீஸ்லே ஒரு இடம் இருக்கு. நம்ம லேண்ட்மார்க்கை விட மூணு மடங்கு பரப்பளவுல விஸ்தீரணமா இருக்கும். அது மாதிரி மூணு மாடி. அதுலே ஒரு மாடி முழுக்க காமிக்ஸ் புத்தகங்கள். எனக்கு அது ஒரு கனவுலகம்னு சொல்லணும். கடந்த 150 வருஷத்துலே வந்த முக்கியமான எல்லா காமிக்ஸ் புத்தகங்களும் அங்க இருக்கு.

    காலையிலே 9 மணிக்கு நண்பர்கள் என்னை அங்க விட்டுட்டுப் போவாங்க. கையிலே ஒரு பேக். அதிலே கொஞ்சம் சாண்ட்விச். மதியம் வரைக்கும் சுத்துவேன். பின்னே ஒரு பார்க்கிற்கு வந்து, கொண்டு வந்த சாண்ட்விச்சை சாப்பிடுவேன். மறுபடியும் உள்ளே போயிடுவேன். ராத்திரி எட்டரை மணிக்கு நண்பர்கள் வந்து பிக்கப் பண்ணிக்கிடுவாங்க. இப்படி 4 நாள் அங்கே மட்டுமே சுத்திப் பார்த்தேன்.

    காமிக்ஸ் புத்தகத்துலே ஏதாவது ஒரு பக்கம் ரொம்பவும் பிரமாதமான ஓவியமாக இருக்கும். அதை புளோ-அப் பண்ணி, வரைஞ்சவங்க கையெழுத்தோட விற்கிறாங்க. அது 10,000 டாலருக்கு விலை போகுது. ஒரு பெயிண்டிங்க்கு கொடுக்கிற விலையை காமிக் புத்தகத்தோட ஒரு பக்கத்துக்குக் கொடுக்கிறாங்க. அந்த இடத்தைப் பார்க்கிறதுக்கு எனக்கு சொர்க்கம் மாதிரி தெரியுது.

    வெளிநாடுகளுக்குப் போய்விட்டு வந்த பிறகு என்னோட ஓவியங்களை ஒரு self review பண்ன முடிஞ்சது.


ஓவியர்களைக் கொண்டாடுற தேசங்களுக்குப் போயிட்டு வந்த பிறகு, ஓவியங்களுக்கு பெரிய மரியாதை இல்லாத நம்ம நாட்டு சூழலை எப்படிப் பார்க்கிறீங்க?

    கொஞ்சம் வருஷங்களுக்கு முன்னாடி வரைக்கும் நம் நாட்டுலே நிலைமை ரொம்ப மோசமாத்தான் இருந்தது. சென்னையிலே மிஞ்சிப் போனா ரெண்டு அல்லது மூணு கேலரிதான் இருக்கும். ரொம்பவும் கஷ்டப்பட்டாதான் கூட்டம் சேர்க்க முடியும். ஆனா இப்ப நிலைமை மாறியிருக்கு. நல்ல தரத்தோட 30 கேலரிகள் இருக்கு. கண்காட்சி நடத்துனா கூட்டம் வருது. ரசிக்கிறாங்க.

    ஓவியம் ஒரு தொழிலா வளர்ந்துட்டு இருக்கு. ஓவியம் சார்ந்த அறிவு எல்லோருக்கும் தேவைப்படுது. ஒரு Web designerக்கு டிசைனிங் பண்ணும்போது கலர் சென்ஸ் தேவைப்படுது. முன்னே நான் காலேஜ் படிச்சிக்கிட்டு இருந்தபோது அனிமேஷன் பத்தி பேசறதுக்கு எனக்குத் துணையா யாருமே இல்லை. இப்ப நிறைய பேருக்கு அனிமேஷன் பத்தி நல்ல ஐடியா இருக்குது. இந்த நிலையில் இன்னும் முன்னேற்றம் ஏற்படும்னு தோணுது.


மீண்டும் மீண்டும் வரையத் தூண்டுகிற மாதிரியான ஒரு object ஒவ்வொரு ஓவியருக்கும் இருக்கும். உங்களை அது மாதிரி விடாமல் வரையத் தூண்டும் object எது?

    எனக்கு அசைவுகளை வரைவதில் அலாதி ஆர்வம். என் படங்கள் எல்லாம் ஏதோ ஒரு மூவ்மெண்ட்டை பேசுறதாத்தான் இருக்கும். அதனால்தான் என்னுடைய ஓவியங்களில் மனிதர்களும், விலங்குகளும் அதிகமாக இருக்கிறார்கள். அசைவுகளின் மீது இருக்கும் ஆர்வத்தால்தான், நான் அனிமேஷனுக்குப் போனேன். அதனால்தான் ரொம்ப சீக்கிரமாவே கம்ப்யூட்டரை பயன்படுத்தவும் ஆரம்பிச்சேன்.


நீங்க சினிமாவில் அனிமேஷன், ஆர்ட் டைரக்ஷன் ஈடுபட்டு வர்றீங்க. அந்த அனுபவங்களைப் பற்றி?

    சினிமாவில் ஒரு சின்ன வட்டத்துக்குள்ளேதான் நான் வேலை பார்த்திருக்கேன். வித்தியாசமா வொர்க் பண்றதுக்கு வாய்ப்பு இருக்கிற படங்களில் மட்டும்தான் பண்ணியிருக்கேன். நாசரோட ‘தேவதை’, செல்வமணியோட ‘அசுரன்’ மாதிரியான படங்களில்தான் எனக்கு ஆர்வம்.

    Marudhuகொஞ்சம் படங்களில் அனிமேஷன் வொர்க் பண்ணியிருக்கேன். ஆர்ட் டைரக்ஷன்லேயும் கிரியேட்டிவிட்டிக்கு வாய்ப்பு அதிகம் இருக்கிற படங்களைத்தான் பண்ணியிருக்கேன்.

    மகேந்திரனின் சாசனம் படத்திலே வேலை பார்த்ததில் நிறைய பாராட்டுக்கள் கிடைச்சது. ஆனால், உண்மை என்னன்னா, படத்தில் நான் பண்ணி வெச்சிருந்த நிறைய பொருட்கள் பயன்படுத்தப்படலை. செட்டிநாடு தொடர்பா என்கிட்ட நிறைய இருந்தது. நானும் நிறைய வொர்க் பண்ணினேன். அதெல்லாம் முழுமையா படத்திலே வரலை. இருந்தாலும் என்னால முடிஞ்சவரைக்கும் செட்டிநாட்டு சூழலை படத்திலே கொண்டு வந்தேன்.

    நம்ம தமிழ்நாட்டிலே வெள்ளைக்காரன் வர்ற வரைக்கும் நாற்காலிகள் கிடையாது. வெறும் திண்டுகளைத்தான் மன்னர்கள் பயன்படுத்திக்கிட்டிருந்தாங்க. அந்த மாதிரியான நிஜமான சரித்திரப் பின்புலம் உள்ள படங்கள்லே வேலை பார்க்கணும்னு ஆசை.

நீங்க கத்துக்கிட்டதை அடுத்த தலைமுறைக்கு எப்படி கொடுக்கறீங்க?

    நான் படிக்கற காலத்துலே அனிமேஷன் பத்தி பேசறதுக்கு எனக்குத் துணையா யாருமில்லைன்னு சொன்னேன் இல்லையா? ரொம்ப நாளைக்கு அப்படித்தான் இருந்தது. அனிமேஷன் பத்தி நான் நிறைய படிச்சி தெரிஞ்சிக்கிட்டதுதான். அதுலே வொர்க் பண்றதுக்கு நான் 18 வருஷம் காத்திருக்க வேண்டியிருந்தது.

    இப்ப அப்படியில்லை. என்கிட்டே ஜூனியரா இருந்த 40 பேர் இப்போ நல்ல அனிமேஷன் கிரியேட்டரா பீல்டுல இருக்காங்க.

    அதுதவிர குழந்தைகளுக்கு அனிமேஷன் பயிற்சி வகுப்பை கடந்த 10 வருஷமா பண்ணிட்டிருக்கேன். அதிலே படிச்சவங்க இப்போ நல்ல குறும்பட இயக்குநர்களா வளர்ந்திருக்காங்க.


போட்டோகிராபியில் உங்களுக்கு எப்படி ஆர்வம் வந்தது?

    நான் எட்டாம் வகுப்பு படிச்சிக்கிட்டிருந்தபோது, மதுரை டவுன் ஹால் ரோட்டிலே பாரிலேண்ட்னு ஒரு கடை இருந்தது. அதிலே சினிமா புரொஜெக்டர் ஒண்ணை விற்பனைக்கு வைச்சிருந்தான். நான் அந்தக் கடை வழியா போகும்போதெல்லாம் அதை பார்ப்பேன். பிறகு கொஞ்சநாள்லே என்கிட்டே இருந்த பாக்கெட் மணியெல்லாம் சேர்த்து மொத்தம் 35 ரூ வந்துச்சி. அதை எடுத்துக்கிட்டு நேரே கடைக்குப் போனேன்.

    கடையில் ரெண்டு மார்வாடிங்க இருந்தாங்க. புரொஜெக்டர் வேணும்னு சொன்னேன். அதிலே பெரியவரா இருந்த ஒருத்தர், இன்னொருத்தர்கிட்டே, ‘இந்த மாதிரி சின்னப் பசங்கிட்டே வியாபாரம் பண்ணாதே’ அப்படினு இந்தியிலே சொன்னார். எனக்குப் பாஷை புரியாட்டாலும் அவர் என்ன சொல்றாருன்னு புரிஞ்சது. ‘இல்லையில்லை, என்னாலே எந்தப் பிரச்சினையும் வராது’ன்னு சொல்லி வாங்கிட்டு வந்துட்டேன்.

    வீட்டிலே வந்து ஆபரேட் பண்ணிப் பார்த்தா நான் எதிர்பார்த்த மாதிரியான விஷூவல் அதிலே கிடைக்கலே. அம்மா ஒரே திட்டு, இப்படி காசை வேஸ்ட் பண்ணிட்டியேன்னு. மறுபடியும் கடைக்குப் போனேன். எனக்குப் புரொஜெக்டர் வேண்டாம்னு சொன்னேன்.

    பெரியவர், ‘நான் சொன்னேன் கேட்டியா? இந்த மாதிரி பையங்கிட்டே பிசினஸ் பண்ணாதே’. நான் சொன்னேன், ‘நான் தப்பா எதுவும் வியாபாரம் பண்ணலை. நான் எதிர்பார்த்த எபெக்ட் கிடைக்கலை. அதனால இதைக் கொடுத்துட்டு ஒரு ஸ்டில் கேமிரா வாங்கிக்கிறேன்.’

    அப்படித்தான் முதல்லே கேமிரா வாங்கினேன். அன்னையிலிருந்து என்கிட்டே அந்தந்த காலகட்டத்துலே வேற வேற கேமிராக்கள் வந்து போயிட்டிருக்கு. இப்ப டிஜிட்டல் கேமிரா யூஸ் பண்றேன். கேமிரா, கம்ப்யூட்டர் இதெல்லாம் எனக்கு ஒரு வரப்பிரசாதம். நான் முழு சுதந்திரத்தோட வேலை பார்க்க முடியாது. ஒரு பெரிய கதவு திறந்திருக்குது. நான் வேலை செய்யறதுக்கு ஒரு பெரிய ஸ்பேஸ் கிடைச்சிருக்கு. அதனால்தான் என் பெயிண்டிங்ஸ்ல ஒரு வெரைட்டி பார்க்க முடியுது.


நீங்க எப்படி அறியப்படணும்னு விரும்புறீங்க?

    நான் வெறும் ஓவியர் கிடையாது. அடுத்த தலைமுறை ஆர்டிஸ்ட்களுக்கு நான் தான் முன்னோடி. ஏன்னா இனி வர்ற ஆர்டிஸ்ட்டுக்கு எல்லாம் தெரியணும். பிலிம் கிராமர், பெயிண்டிங், போட்டோகிராபி, அனிமேஷன் இதெல்லாம் தெரிஞ்சிக்கணும். இதெல்லாம் தெரிஞ்சிக்கிறதுக்கு எனக்கு வாய்ப்பு கிடைச்சது. அதே நேரத்தில் நான் நகர்ந்துக்கிட்டிருந்த பாதைக்கு பக்கமா காலமும் நகர்ந்து வந்தது.

    ஓவியத்திலிருந்து தான் போட்டோகிராபி பிரிஞ்சுது. அதுலேயிருந்து அனிமேஷன் வந்தது. இப்போ இது எல்லாத்தையும் கம்ப்யூட்டர் ஒண்ணாக்கிருச்சு. இப்ப எல்லா ஊடகமும் கலந்து ஒரு ஊடகமா மாறிடுச்சு. இந்தப் பாதையிலே நான் முதல் ஆள்னு நான் என்னைக் கருதுறேன். அடுத்த தலைமுறை ஆர்டிஸ்ட் எப்படி தயாராகணுமோ அப்படித்தான் நான் தயாராகிக்கிட்டு வந்தேன். நான் தயாராகி வந்த இடத்துக்குத்தான் உலகம் வந்திருக்கிறதா நினைக்கிறேன்.




மேற்கண்ட பேட்டி வெளியான ஆண்டு : ஜூலை 2009 (நன்றி : கீற்று ) Download As PDF

தமிழ் எழுதி (உதாரணம்) - ammaa =அம்மா, aRam=அறம், thamiz=தமிழ்,manjsaL=மஞ்சள்

மேலும் படிக்க பக்க எண்களை காண பழைய இடுகையை [OLD POSTS ]மீது கிளிக் செய்யவும் !


பிரபலமான இடுகைகள்

கடந்த 30 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Labels of this Blog

Alien (1) amphibians (1) ancient people (2) ancient scripts (1) ancient tamil poets (1) anteater (1) antibiotics (1) archaeologist (5) art (4) Artic (1) Asteroid (1) astronomy (4) atom (1) bangalore lalbagh (2) bats (1) beauty (1) Bees (2) Belmez faces (1) Bermuda Triangle (1) Birds (7) birthday song (1) black holes (1) brain activity (5) brains (2) Brown Drawfs (1) carnivorous plants (2) chennai conference (1) cloning (2) Cockroach farrms (1) Concisious mind (3) conjoined animals (1) conjoined twin (1) Contest approach (1) crinoids (1) curiosity (1) darwin (2) dhasavadaram (1) dinosaur bird (1) Draco (1) dreams (4) earth worm (1) earthday (1) environment (2) Firefly (1) Fugu (1) G.D.NAIDU (4) Galaxies (2) general knowledge (1) Genetic (1) Ghost (1) Gillette razor (1) golden buddha (1) Gulf streem (1) H.Erectus (1) Hess (1) highway of kongu culture (1) Hindusim (1) Historical Famous Faces (1) human (1) HumanMilk (1) humanoid (1) ice melting (1) indian iron pillar (1) infrared (1) interview (1) jellyfish (1) Jokes (12) KaKapo (1) Kongu culture (6) land scape (1) Library of Alexandria (1) life of bees (2) life science (3) Life Sciences (11) Liger Tigon (1) long life (1) M.Metha (1) mamies milk (1) Mars (1) meat-eating plants (1) milkyway (2) mind (1) MIR Diamond mine (1) Moscow Kremlin (1) Mosquito (1) mushroom (2) Mystery (14) mystry (2) nanban (1) Nasca (1) Nazca Lines (1) Northern Hawk owl (1) Number 108 (1) oddity (1) Omen (1) paranormal interpretation (1) Penquins (1) peru (1) Perur (1) Perur Temple (5) philosophers (1) Piri Reis Map (1) poet Kannadasan (2) QUIZ (2) rare animal (2) Religion (1) RHINOCEROS (2) Richard III (1) RMS Queen Mary (1) Rongorongo script (1) Russian royal bell (1) save trees (2) Science (3) Sea level Rise (1) sediba (1) self confidence (1) Shark (1) Short Stories (1) silambam (1) sleep (3) Sloth (1) smallpox (1) song-birds (3) Space (2) space scientist (1) sphere Robo (1) Spider (2) Sprit (1) Stars (1) story (3) strangeness (1) Superstitious behavior (1) swami vivekanandar (1) tamil artist maruthu (1) tamil history (6) Telescope (1) tibet (3) tickle (1) Tsar Bell (1) twins (1) ultraviolet (1) universe (2) vairamuthu (1) Virus (1) water (2) whales (1) windmill (1) அணு (1) அமானுஷ்யம் (4) அலெக்ஸாண்டிரியா (1) அறிவியல் துணுக்குகள் (14) அறிவியல் புதிர் (9) அனுபவம் (87) அனுபவம். பயணம் (4) அஸ்ட்ராய்டுகள் (2) ஆதி மனிதன் (2) ஆய்வு (11) ஆர்டிக் (1) ஆவி (1) ஆழ்கடல அனுபவம் (2) ஆழ்கடல் அனுபவம் (1) ஆனந்தம் இதழ் (1) ஆன்டிபாயாடிக்ஸ் (1) இரட்டை உயிர்கள் (1) இரும்பு தூண் (1) ஈஸ்டர் தீவு (2) உணவு (1) உணவுப்பழக்கம் (2) உயிர்நிழல் (1) உள்ளுணர்வு (3) உறக்கம் (1) எகிப்து (2) எண்ணங்கள் (2) எண்ணியல் (1) எறும்புதின்னி (1) ஏமாற்றம் (1) ஏன் எதற்கு எப்படி (26) ஐன்ஸ்டீன் (1) ஒளிஉமிழ்காளான் (1) ஓவியம் (6) கடல் ஆய்வு (2) கடல் சுழல் ஆய்வுக்கூடம் (2) கடல் மட்டம் (1) கடல் லில்லி (1) கடல்பல்லிகள் (1) கட்டுரை (125) கணினி (1) கண்காட்சி (3) கண்டுபிடிப்பு (5) கதை (6) கரப்பான்கள் (1) கருந்துளை (1) கல்வெட்டு (1) கவிஞர் கண்ணதாசன் (6) கவிஞர் வைரமுத்து (2) கவிதை (2) கவிதைகள் (2) கற்பாறை சித்திரங்கள் (2) கனவு (1) கனவுகள் (4) காடுறை உலகம் (1) காண்டாமிருகம் (2) காதல் (1) காந்தி (1) காளான் (2) கிச்சுக்கிச்சு (1) குளவி (1) குளோனிங் (2) கேலக்ஸி (3) கொங்கு (7) கொங்கு வரலாறு (1) கொசு (1) கொசு ஒழிப்பு (2) கொசுக்கள் (2) கோபிநாத் (1) கோவை புத்தக வெளியீடு (2) கோவை வரலாறு (7) சகுணம் (1) சலீம் அலி (1) சவரம் (1) சாதனை (1) சார்லி சாப்ளின் (1) சார்லிசாப்ளின் (1) சிங்கம்புலி (1) சிந்தனை (6) சிரோ டிகிரி. சிறுகதை (1) சிலம்பம் (1) சிறுகதை (4) சினிமா (2) சுறா (1) செண்டினல் தீவு (1) செப்பேடு (1) செய்தி (3) செய்திகள் (10) செவ்வாய் (2) டார்வின் தவளை (1) டாவின்சி (1) டிசைனர் பேபி (1) டிராட்ஸ்கி மருது (2) தங்க புத்தர் சிலை (1) தண்ணீர் (1) தத்துவம் (3) தமிழர் (2) தமிழர்கலை (1) தமிழன் (4) தமிழ் (7) தவளைகள் (1) தாய்ப்பால் (1) திபெத்திய குகைகள் (3) திமிங்கிலம் (1) தினமலர் (1) தீவு வாசிகள் (1) துணுக்குகள் (16) தூக்கம் (4) தூப்ளே (1) தேவிகா (1) தேனீ (3) தொலைநோக்கி (1) நகைச்சுவை (17) நடிகர் சிவகுமார் (3) நட்சத்திர குள்ளர்கள் (1) நட்சத்திரம் (1) நாசா (1) நாயக்கர் மகால் (2) நானோ டெக்னாலஜி (1) நானோ-தொழிநுட்பம் (1) நானோபாட்கள் (1) நாஸ்க்கா (1) நீண்ட ஆயுள் (1) நீர் சிலந்தி (1) நொய்யல் (4) பதிவுதிருட்டு (1) பயணம் (2) பறவை (7) பறவை மனிதன் (1) பறவைகள் (2) பாக்தாத் பேட்டரி (3) பாமரன் (1) பால்வீதி (1) பால்வெளி (2) பிரபஞ்சம் (5) பிரிரெயிஸ் (1) பில் கேட்ஸ் (1) பிளாஸ்டிக் (1) பிளேட்டோ (2) பிறந்தநாள் பாடல் (1) புதுவை (1) புத்தகம் (2) புவி தினம் (1) புவி வெப்பமாதல் (1) புழு (1) புனைவுகள் (1) பூச்சியுண்ணும் தாவரங்கள் (1) பூமி தினம் (1) பெங்களூரு (2) பெரிய ஆலமரம் (1) பெருவழிப்பாதை (1) பெல்மீஸ் (1) பேரூர் (7) பேரூர் கல்வெட்டு (1) பொன்மொழிகள் (3) போலியோ (1) ப்ளாஸ்மான்கள் (1) மங்கள்யான் (1) மணிகள் (1) மதுரை (1) மரங்களின் பாதுகாப்பு (2) மரபியல் (5) மருத்துவம் (18) மனம் (2) மனித மூளை (1) மனோவலிமை (2) மாமிச உண்ணி தாவரம் (1) மின்மினிப் பூச்சிகள் (1) மீன்கள் (2) மு. மேத்தா (1) முதுமக்கள் தாழி (1) மூடபழக்கவழக்கம் (2) மூளை (4) மேஜிக் (1) ராசாளி ஆந்தைகள் (1) ராஜநாகம் (1) ரூபிக் க்யூப் (1) ரேசர் (1) வரைபடம் (1) வலைப்பதிவர்கள் விழா (1) வாழ்க்கை (1) விச சிலந்தி (1) விண்கற்கள் (1) விண்ணியல் (3) விண்வெளி (6) விண்வெளி வாகனங்கள் (3) விண்வெளி விஞ்ஞானிகள் (2) விநோதங்கள் (1) விமர்சனம் (1) விலங்குகள் (2) வெப்பமயமாதல் (1) வெளவால் (1) வேற்றுகிரகவாசி (1) வைர சுரங்கம் (1) வைரஸ் (1) வொயுனிச் (1) வௌவாள் (1) ஜி.டி.நாயுடு (3) ஜெல்லி மீன் (1) ஜோக்குகள் (3) ஜோக்ஸ் (10) ஸ்டெம் செல் (1) ஸ்லவுத் (1)