Followers

Showing posts with label விண்வெளி. Show all posts
Showing posts with label விண்வெளி. Show all posts

Monday, June 29, 2015

அண்ட வெளியில் பூமியின் முகவரி


அண்டவெளியில் பூமியின் முகவரி சூரியகுடும்பம்(solar system), பால்வெளி(milkyway), விர்கோ திரள் (virgo cluster) , பிரபஞ்சம் (the universe) என்று சொல்லிவந்தோம். இனி
இந்த முகவரி விர்கோவில் இருந்து லேனியாக்கி (Laniakea) என்று மாற்றம் பெறுகிறது.

இந்த மாபெரும் பிரபஞ்சத்தில் பூமி ஒரு மீச்சிறு புள்ளி.

விண்ணியலாளர் R Brent Tully  (the University of Hawaii ) தலைமையில் உலக அஸ்ட்ரானமி குழு ஒன்று கடந்த 10 ஆண்டுகளாக விண்ணியல் அமைவிடங்கள் குறித்த தகவல்களை ஆராய்ந்து வந்தது.

இந்த ஆய்வில் சுமார் 8000 பால்வெளி மண்டலங்கள் (Galaxies) ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டன.

the Name Laniakea means "immeasurable heaven"

லேனியாகி எனும் மாபெரும் திரள் (super cluster) ஒரு லட்சம் பால்வெளி மண்டலங்களை உள்ளடக்கியது. இதன் விஸ்தீரணம் ஒளியாண்டுகளில் சொன்னால் 522 + மில்லியன் ஒளியாண்டுகள் அல்லது நமது சூரிய குடும்பத்தின் விஸ்தீரணத்தில் 260 மில்லியன் மடங்குகள் விரிவானது எனக்கொள்ளலாம்.

நம் சூரிய குடும்பத்தில் ஜூபிடர் கோளின் குறுக்கு விட்டத்தில் பத்தில் ஒரு பங்கு தான் பூமியின் விட்டம். இதன் நீளம் சுமார் 12700 கி.மீ கள்.


கடந்த நூற்றாண்டுகாலம் விண்ணியலாளர்கள் இந்த பால்வெளி மண்டலம் விர்கோ எனும் மாபெரும் திரளில் உள்ளடங்கியது என்றும் றே  இந்த திரளானது சுமார் 2000 பால்வெளி (கேலக்ஸி) மண்டலங்களை உள்ளடக்கியதாகவும் இதன் விஸ்தீரணம் 100 மில்லியன் ஒளியாண்டுகள் கொண்டது எனவும், நமது சூரியக்குடும்பத்தின் நீளத்தில் 50 மில்லியன் மடங்குகள் பெரிது எனவும் கருதிவந்தனர்.

 சூப்பர் கிளஸ்டர்களின் விஸ்தீரணம் செக்ஸ்டில்லியன் கிலோமீட்டர்கள்.

ஹவாய் குழுவாளர்கள் நமது பால்வெளி மண்டலத்திற்கு வெளியே உள்ள ஆயிரம் பால்வெளி மண்டலங்களுக்கு இடையே யான ஈர்ப்பை, நகர்தலை ஆய்வு செய்தனர். அதன்படி சூப்பர் கிளஸ்டர் விர்க்கொ இல்லை என்ற முடிவிற்கு வந்தனர்.  இந்த சூப்பர் கிளஸ்டர்களின் விஸ்தீரணத்தை கணிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.

சூப்பர் கிளஸ்டரின் ஈர்ப்பு மையத்தை நோக்கியே மற்ற மண்டலங்களின் இயக்கம் இருக்கும். ஒரு கேலக்ஸியானது இந்த மைய ஈர்ப்பை ஒரு சுற்று சுற்றவே பல மில்லியன் ஆண்டுகாலம் ஆகும். ஒரு குறிப்பிட்ட கேலக்ஸியானது எந்த சூப்பர் கிளஸ்டரை மையத்தின் ஈர்ப்பு எல்லைக்குட்பட்டு இயங்கி செல்கிறது என்பதை நுண் கவனிப்பினால் கவனிக்க வேண்டி இருக்கும். ஒவ்வோர் கேலக்ஸியின் இயக்க வேகமும் மாறு படும்.

ஹப்பில் ஆப்டிகல் டெலஸ்கோப் உட்பட்ட உலகின் பல ஆப்டிகல் டெலஸ்கோப்களில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டன. சுமார் 8000 கேலக்ஸிகளின் ஒளி அளவீடுகள் ஆய்வுக்குட்பட்டன. ஒளி அளவீடுகள் அதன் இயக்க திசை மட்டும் அல்ல அவற்றின் வேகத்தையும் கணக்கில் கொண்டது. இதை ப்ளூஷிப்ட், ரெட்ஷிப்ட் என குறிக்கிறார்கள். கேலக்ஸியானது உள் இயக்கத்தில் செல்கிறதா வெளி இயக்கத்தில் செல்கிறதா என்பதை இவை முடிவு செய்யும். இவற்றைக் கொண்டு பெரிய அட்டவணை தயார் செய்தார்கள்.

நமது சூரியக் குடும்பத்தில் உள்ள ஒவ்வோர் கோளும் தனக்கென்று  ஈர்ப்பை கொண்டிருக்கும் அந்த ஈர்ப்பு கோள்வட்டத்திற்குள் (நீள்வட்ட)அந்த கோளின் ஆதிக்கம் இருக்கும். உ-.ம் பூமிக்கென்று அதன் துணைக்கோள் நிலா புவி ஈர்ப்பு எல்லைக்குட்பட்டது ஆனால் பூமி சூரியனின் ஈர்ப்பு மண்டலத்திற்குள் இருக்கிறது. அதே போல சூரியனின் ஈர்ப்பு இயக்கம் கேலக்ஸியின் கட்டுப் பாட்டிற்குள் வருகிறது.

சுழன்று செல்லும் நீரோடையில் வெவ்வேறு திசையில் தெறிக்கும் நீர் திவளைகள் எப்படி எப்படி திரும்ப அந்த சுழலில் சேர்கிறது இதுபோல் தான் கேலக்ஸிகளின் இயக்கமும் இருக்கும் என்பதை கற்பனை செய்து கொள்ளலாம்.

சுற்றிக்கொண்டு செல்லும் நமது  சூரியக் குடும்பத்தின் வேகம் மணிக்கு சுமார் 7லட்சம் கி.மீகள்

*****


THE MILKY WAY is a barred spiral galaxy surrounded by spiral arms, where billions of stars and planets are united. They all orbit a central black hole called Sagittarius A*, with a mass four million times the Sun’s.


******
The centre of the galaxy is split by a bar. It isup to 16,000 light years long.

********
The Solar System rotates at a speed of around 700,000 KM/H
*****
Compared to the Milky Way, the Solar System is a tiny dot. Our galaxy has a diameter of 100,000 light years, or 50,000 times the Solar System’s, and it is 1,000 light years thick. Distributed between 7 spiral ams, its 200 billion stars orbit a central black hole. Around the stars, even more planets are orbiting, and maybe 10 billion are inhabitable.

*****


In the Laniakea supercluster, all galaxies, including the Milky Way, are affected by the same gravity source. The galaxies move towards a com-mon gravity region, which astronomers have named the Great Attractor.


*****
The biggest galaxy we've spotted, IC 1101 has a diameter of six million light years – over 60 times the diameter of the Milky Way. Containing around 100 trillion stars, it is located in the Abell 2029 galaxy cluster.
*****
as Laniakea contains 100,000 galaxies and stretches 522+ million light years, or 260 million times the width of our Solar System.

The light takes 170,000 years 
to travel from the Sun’s core to the surface, 
but only 8 minutes to travel from the Sun’s 
surface to Earth.
*****
the Milky Way moves through space at a speed of 2.3 MILLION KM/H
******
THE OBSERVABLE UNIVERSE contains
millions of superclusters such as Laniakea.

*****

Download As PDF

Sunday, June 8, 2014

பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தொலைவும் கிரேக்கர்களின் கணக்கீடும் !

பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தொலைவும் கிரேக்கர்களின் கணக்கீடும் !
கிரேக்க வானியல் விஞ்ஞானியும், கணிதமேதையுமான அரிஸ்ட்டார்கஸ் (கி.மு 310 - 230 ) சாமோஸில் வாழ்ந்தவர்.

சூரிய மண்டலத்தில் சூரியன் தான் மையம் என்பதை 265 B.C ல் தெரிவித்தார். அதுமட்டுமல்ல இரவுக்கும் பகலுக்குமான கால வேறுபாடு சூரியன் தன்னைத்தானே சுற்றுவதும் சாய் கோணம் என்பதையும் விளக்கினார்.

முதன் முதலில் தியரிட்டிக்கலாக அண்டவெளி என்பது எப்படி இருக்கும் என்பதையும், பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தொலைவையும் சொன்னவர்.

அவர் வகுத்தளித்த தொலைவு தற்கால கணக்கீட்டிற்கு பெரிதும் ஒத்து வருகிறது.
நிலவுக்கும் பூமிக்கு இடையே உள்ள தொலைவைப் போல 19 மடங்குகள் சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள தூரம் இருக்கும் என குறிப்பிட்டார்.

ஆனால் உண்மையில் அது 390 மடங்கு தொலைவில் இருக்கு !!
ஆனால் தொலைவை நிர்ணயிக்க அவர் வகுத்த முறையில் பெரிய வேறுபாடு இல்லை என்றே சொல்லவேண்டும். (பார்க்க படம்)




சூரியன் கதிர்கள் நிலவில் எதிரொலிப்பது தெரிந்ததுதான். அரைவட்ட நிலவையும் பார்த்திருப்பீங்க. சூரியனின் கதிர்கள் நிலவை நோக்கி 90 டிகிரியில் பட்டு எதிரொளிக்கிறது.
அந்த ஒரு கோணத்தை வைத்து மட்டும் தொலைவை கணக்கிடமுடியாது இல்லையா..?

அரைவட்ட நிலவின் ஒளியை வைத்து பூமிக்கும், நிலவுக்கும் இடையே உள்ள கோணம் 87 டிகிரி என தீர்மானித்தார்    (Aristarchos).

ஒரு முக்கோணத்தின் கோணங்களின் கூட்டு தொகை 180 டிகிரி என்பதால் பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள கோணம் 3 டிகிரி.

சூரியன் கதிர்கள் நிலவில் எதிரொலிப்பது தெரிந்ததுதான். அரைவட்ட நிலவையும் பார்த்திருப்பீங்க. சூரியனின் கதிர்கள் நிலவை நோக்கி 90 டிகிரியில் பட்டு எதிரொளிக்கிறது.

அந்த ஒரு கோணத்தை வைத்து மட்டும் தொலைவை கணக்கிடமுடியாது.


அரைவட்ட நிலவை வைத்து அவர் நிர்ணயம் செய்த கோணம் 87 டிகிரிகள், இன்றைய கணக்கீட்டின் படி அது 89.85 பாகைகள்.

ஆனால் தசம கோணத்திருத்தம் ஏற்புடையதே.  அக் கால கட்டத்தில் இருந்த கருவிகளின் துணையுடன் அவரின் கணிப்பு எப்படி என்பதே ஆச்சர்யமான ஒன்றுதான்.

நிலவு சூரியனை சுற்றுகிறது அதே சமயத்தில் பூமியும் சூரியனை சுற்றிக்கொண்ட்டே இருக்கு ஆனால் சமமான வட்டம் இல்லையே எந்த கால அமைவில் இந்த கணக்கீட்டை (சீசன்) எடுத்தார் என்பதையும் கருத்தில் கொள்ளும் போது வானியல் விஞ்ஞானிகள் வியப்படைகிறார்கள்.

wow...What a brilliant ancient Astronomers !!

பூமிக்கும் நிலவுக்கும் இடையே உள்ள தொலைவு
3,84,400 கிலோ மீட்டர்கள்

பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தொலைவு :
149,600,000 கிலோ மீட்டர்கள்.
Download As PDF

Thursday, February 28, 2013

[ Asteroid ]விண்கற்களில் தங்கப் புதையலா? !!

சமீபத்தில் கூட ரஷ்யாவில் ஒளி வெள்ளத்துடன் மோதிய விண்கற்களை பற்றி செய்தி தாள்களில் படித்தோம். (அதனால் 1000 பேர் பாதிக்கப்பட்டனர்)  அது போல ஒரு பெரிய விண்கல் பூமி மீது மோதும் அபாயம் விலகியது என்பதும் செய்தியாக இருந்தது.



எரிகல் விழுவதை பல்வேறு கோணங்களில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம்.

சிறிதும் பெரிதுமான ஒரு குறிப்பிட்ட வடிவம் அற்ற “அஸ்ட்ராய்டுகள்” என அழைக்கப்படும் விண்கற்கள் சூரியனை மையமாக கொண்டு சுற்றுபவை. சர் வில்லியம் ஹெர்ஷீல் 1802 ல் முதன் முறையாக இக்கற்களை அவ்வாறு அழைத்தார். அஸ்ட்ராய்டுகள் என்பது கிரேக்க மொழியில் ”நட்சத்திரத்தைப் போல” எனப் பொருள் கொள்ளும் வார்த்தை.

சூரிய குடும்பம் உருவாகிய போது ஏற்பட்டவை இந்த உதிரி பெரும் பாறைகள் என்று சொல்லுகிறார்கள். 

அஸ்ட்ராய்டுகளை விட சிறிய அளவு உள்ள பாறைகளை மெட்ராய்டுகள் (meteoroids) என்கிறார்கள். இவை சில சமயங்களில் பூமியின் ஈர்ப்பு சக்தியால் பூமியின் காற்று மண்டலத்தினூடாக பூமியை நோக்கி வரும் பொழுதே வேகத்தாலும் வெப்பத்தாலும் காற்றின் உராய்வினால் வெளிச்சத்துடன் உருகி  பூமியை தொடும் முன்னரே சாம்பலாகி விடுகின்றன. ஆனால் அதனால் ஏற்படும் அதிர்வலைகளால் சன்னல் கண்ணாடிகள் நொறுங்குகின்றன.

சில சமயங்களில் இந்த மெட்ராய்டுகள் பாறைகளாக விழுவதும் உண்டு. ஒருகாலத்தில் டைனசோர் போன்ற பெரும் விலங்குகள் இப்படி விழுந்த மெட்ராய்டுகளால் முற்றிலும் அழிந்து போனதாக நம்பப்படுகிறது (65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்).

லட்சக்கணக்கான மெட்ராய்டுகள் இப்போதும் பூமியின் மீது விழுந்து கொண்டுதான் இருக்கின்றன வெறும் கண்களுக்கு ஏதோ நட்சத்திரம் விழுவது போன்று தெரியும். இவற்றின் சராசரி எடை 100 டன் என்பது ஆச்சர்யம் தான். கூட்டமாக இவை விழுவதை “மீடீ பூ தூரல் (meteor shower)” அல்லது ”மீடீ புயல்(meteor strom)” என்றும் செல்லமாக கூறலாம்.

அமெரிக்காவின் அரிசோனா பாலைவனத்தில் ஒரு கிலோமீட்டர் சுற்றளவுள்ள பிரம்மாண்டமான குழி (crater) இப்படி விண் கல் (கல்லா ? இரும்பா ?) விழுந்ததினால் ஏற்பட்டது. இது சுமார் 50,000 வருடங்களுக்கு முன் ஏற்பட்டது என்கிறார்கள்.

பியல்லா எனும் வால் நட்சத்திரமும் இப்படி விண்கற்பாறைகளோடு சூரியனை சுற்றிக்கொண்டுள்ளது.

செவ்வாய் மற்றும் வியாழன் (கோள்கள்) இவற்றின் சுற்று பாதையின்  இடையில்  சூரியனை சுற்றும் ஆயிரக்கணக்கான அஸ்ட்ராய்டுகள் உள்ளன. இதை ”அஸ்ட்ராய்டு பெல்ட்(asteroid belt)” என்று அழைக்கிறார்கள்.


(ஆஸ்திரேலியாவில் விழுந்த எரிகல் இந்த அஸ்ட்ராய்ட் பெல்டில் இருந்து விலகி வந்ததாக சொல்கிறார்கள்)

அஸ்ட்ராய்டுகளின் வேகம் நொடிக்கு 25 - 30 கிலோமீட்டர்கள் என்பது ஒரு சராசரி கணக்கீடு. 

அளவை பொருத்து அஸ்ட்ராய்டுகளை "சிறு கோள்கள்" என்றும் சொல்லலாம். (கற்களாலும் உலோகங்களாலும் ஆனது) உதாரணமாக இடா எனும் அஸ்ட்ராய்டுக்கு டாக்டைல் எனும் (நிலா)துணைக்கோள் உண்டு. இது கலிலியோ ஸ்பேஸ்கிராப்ட்டால் 1993 ல் கண்டறியப்பட்டது.

கடந்த பிப்ரவரி 25(2013)ல் 7 சாட்டிலைட்டுகளுடன்   இந்தியாவின் PSLV C-20 ( Polar Satellite Launch Vehicle) ராக்கெட் செலுத்தப்பட்டது. அந்த ஏழில் ஒன்று சூட்கேஸ் அளவிலான கனடாவின் சாட்டிலைட் (NEOSSat) நூறு நிமிடங்களில் பூமியை ஒரு சுற்று சுற்றிவிடும். இதன் முக்கிய பணி பூமிக்கருகில் வரும் அஸ்ட்ராய்டுகளை கண்காணிப்பதுதான். கனடியன் ஸ்பேஸ் ஏஜென்சி இதை ”வானத்திலொரு காவல்காரன்” ("sentinel in the sky") என்று வர்ணிக்கிறது.



அஸ்ட்ராய்டுகளில் தங்கம், பிளாட்டினம், ரோடியம், இருடியம், பலாடியம்..இப்படி மதிப்புமிக்க பல தாதுக்கள் அடங்கி இருப்பதாக விண்ணியல் ஆய்வக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படிப்பட்ட மதிப்பு மிக்க உலோக தாதுக்களை பூமிக்கு கொண்டு வர ரோபோ விண் இயந்திரங்கள் தயாரிப்பு முயற்சியில் சில தனியார் நிறுவனங்கள் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகின்றன.

241 GERMANIA  எனும் அஸ்ட்ராய்டில் 95 டிரிலியன் டாலர் மதிப்புமிக்க உலோக தாதுக்களை கொண்டு வரலாம் என மதிப்பிடுகிறார்கள். எதிர்காலம் தான் இதற்காண விடையளிக்க வேண்டும்.

நாசா அடுத்த பத்தாண்டுக்குள்ளாக ஒரு கிராப்டை(CRAFT) ஒரு அஸ்ட்ராய்டில் (1999 RQ36) தரை இறக்கி அதிலிருந்து சாம்பிளை எடுத்துவர திட்டம் (OSIRIS -REx MISSION) வைத்துள்ளது. Download As PDF

Monday, January 21, 2013

விண்வெளி தகவல்கள் - செவ்வாய்க்கு செல்ல 1000 பேருக்கு ஒன்வே டிக்கட் !


வெப்ப வாயு பாலம் எங்கே உள்ளது?

வெப்ப வாயு பாலம் (bridge of hot gas) இது ஏபெல் 399, ஏபெல் 401 [ Abell 399 (lower
centre) and Abell 401 (top left)] என்ற இரு கேலக்ஸி தொகுப்புகளுக்கு இடையே அமைந்துள்ளது.   இதன் நீளம் ஏறக்குறைய 10 மில்லியன் ஒளி ஆண்டுகள். பூமியில் இருந்து ஒரு பில்லியன் ஒளி ஆண்டு தொலைவில் உள்ளது. ப்ளாங் விண்வெளி வானிலை ஆய்வுக்கூடம் (Planck space observatory ) மூலமாக இது கண்டறியப்பட்டுள்ளது.



காஸ்மிக் பிசாசு 

பூமியில் இருந்து 1400 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால், பால்வெளியின் வட திசையில் (Cepheus )செபையஸ் தொகுப்பில் தோன்றும் ஒளி வெள்ளம் காஸ்மிக் பிசாசு [ cosmic ghost ]என அழைக்கப்படுகிறது.


நிலவிலிருந்து விண்வெளி ஓடத்திற்கு செல்லும் கதிர்

இது ஒது அதிசய நிகழ்வு புகைப்படமாக கருதப்படுகிறது.  2001 அட்லாண்டிஸ் விண்வெளி ஓடம் பூமியில் இருந்து செலுத்தப்பட்ட போது முழு பெளர்ணமி தினத்தில் சூரியனின் கதிர்கள் நிலவின் மேல் விழ நிலாவின் நிழலானது நேரடியாக விண்கலத்தை குறிவைப்பது போல தோற்றம் அளித்தது.


புதன் கோளில் தண்ணீரா ?

புதன் கோளில் தண்ணீர் இருப்பதற்காண ஆதாரம் ”நாசா”வால் வெளியிடப்பட்டது.  இந்த புகைப்படம் மெசேஞ்சர் ஸ்பேஸ்கிராப்டால் எடுக்கப்பட்டது.  புதனின் வட கோளார்த்ததில் தண்ணீர் ஐஸ் கட்டி வடிவில் இருக்கலாம் என்பதற்கான ஆதாரம் கிடைத்திருக்கிறது. வால்நட்சத்திரத்தின் ஐஸ் கட்டிகள் 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் புதன் மீது மோதியதால் பாறைகளுக்கிடையில் வேதியியல் மாற்றத்தினால் உறைபனி ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதாகவும்.  படத்தில் மஞ்சள் வண்ணத்தில் இருப்பவை உறைபனி எச்சங்கள்.


நியூட்ரான் ஸ்பெக்ட்ரோமீட்டரால் (Neutron Spectrometer ) இதை உறுதி செய்ய முடிகிறது என்கிறார் விஞ்ஞானி டேவிட் லாரன்ஸ்.

செவ்வாய்க்கு செல்ல 1000 பேருக்கு ஒன்வே டிக்கட் !

நோபெல் பரிசு பெற்ற இயற்பியல் விஞ்ஞானி ஜெரார்ட் ஹாப்ட்
[Gerard ‘t Hooft ] மற்றும் இவரது குழுவினர் [Dutch entrepreneur
Bas Lansdorp ] திட்ட வரைவு தயாரித்து உள்ளனர்.  இத் திட்டத்தின் படி வரும் 2023 ல் முதலில் நான்கு பேர் செவ்வாயில் தரையிரங்க போகிறார்கள்.   செவ்வாயிற்கு செல்ல 1000 பேர் ஒன்வே டிக்கெட் டச்சு மார்ஸ் ஆர்கணைசேசன் மூலமாக முன்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.




நீங்க தயாரா ?

இது பால்வெளிக்கு வெகுஅருகாமையில் இருக்கும் பெரிய கேலக்ஸி ஆன்ரோமிடா கேலக்ஸி இதில் 600 நட்சத்திர தொகுப்பு (star cluster) கண்டறியப்பட்டுள்ளதாகவும் இன்னும் 1900 வெயிடிங் லிஸ்டில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (ஒரு தொகுப்பிலேயே எக்கச்ச்ச்சக்க நட்சத்திரங்கள் இருக்கு)


 2010 முதல் ஹப்பில் தொலை நோக்கி மூலமாக 3 பில்லியன் இமேஜ்கள் சேகரிச்சு இருக்காங்க. இவற்றை ஆராய்ச்சி செய்ய www.andromedaproject.org  என்ற தளத்தில் இது குறித்து ஆர்வமுடைய சேவை மனப்பான்மையுள்ளவர்களை தேடுகிறார்கள்.

தொடர்புடைய பதிவுகள்

பிரபஞ்சம் அறிவோம் : கேலக்ஸிகள் பற்றிய சில தகவல்கள்

பிரபஞ்சம் அறிவோம் : நட்சத்திரம் பற்றிய சில தகவல்கள்

செவ்வாயில் மனிதன் மற்றும் செவ்வாய் கிரகம் பற்றிய சில தகவல்கள்


Download As PDF

Tuesday, January 8, 2013

விண்வெளியில் விண்வெளி வீரர்களின் ஒரு நாள் பொழுது !


சர்வதேச விண்வெளி ஆய்வுக்கூட விண்வெளி வீரர்களுக்கு (International Space station- I S S ) நேர நேரத்திற்கு என்ன செய்யவேண்டும் என்பது பூமியில் இருந்தே தரை கட்டுப்பாட்டு நிலையத்தால் நிர்வாகிக்கப்படுகிறது. அதாவது அவர்களின் கை கடிகாரம் இயக்கம் பூமியின் நிர்வாக கட்டுப்பாட்டில் இருக்கும் என்று சொல்லலாம். (அவர்களும் தான் !)

அவர்களுக்கான வேலை செட்யூல்கள் தினமும் அறிவிக்கப்பட்டு விடும்.
தினம் ஒன்பது மணிநேரம், ஐந்து நாள் மட்டும் வேலை. ஓய்வில் அவர்களுக்கு பிடித்த செயலில் ஈடுபடலாம்.  ஆனால் பெரும்பாலும் சுத்தம் செய்வது ஏதேனும் பழுது நீக்கும் பணி செய்து கொண்டிருப்பார்கள்.

காலை 6.00 மணி - நாளின் துவக்கம்

பூமியை போல அவர்களுக்கு காலை 6 மணிக்கு சூரிய உதயம் கிடையாது. ஏனெனில் ஒருநாளில் அவர்களுக்கு 16 தடவை சூரிய உதயம் தோன்றும். ( அதாவது ISS ஒரு நாளுக்கு 16 முறை பூமியை சுற்றும்.) காலை ஆறு மணிக்கு அலாரம் அடித்துவிடும் எழுந்து கொள்ள வேண்டும்.

காலை 7.00 மணி - உடல் நலம் பேனல் (Hygiene), காலை உணவு

பல் துலக்குதல் - பேஸ்டால் பல் துலக்கியபின் அப்படியே விழுங்கிக்கொள்ளலாம். அதிக நுரைவராத சாம்பு தலைக்கு போட்டு கொள்ளலாம் தலை குளித்தல் (தினமும் இது தேவையில்லை..) வைப்பர் மற்றும் டிரையர் கொண்டு உலர வைத்துக்கொள்கிறார்கள்.

காலை 7.30 மணி கான்பெரன்ஸ்

ஐ.எஸ்.எஸ் ல் எல்லோரும் ஒரே இடத்தில் கூடி தரை கட்டுப்பாட்டு நிலையத்தில் தொடர்பு கொண்டு அன்றைய வேலைக்காண கட்டளையை பெறுகிறார்கள். தங்களின் பிரச்சனைகளை தெரிவிக்கலாம். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து அவர்களுக்கு வந்த தகவல்கள் அளிக்கப்படுகின்றன.

காலை 8.00 பயிற்சி நேரம்

எடையற்ற நிலையில் உடல் பல பிரச்சினைகளை சந்திக்கும். அதனால் கட்டாயம் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.  காலின் கீழிருக்கும் ஸ்ராப்பினால் தங்கள் உடலை இணைத்துக்கொண்டு நிலையான சைக்கிள் ஓட்டி பயிற்சி செய்கிறார்கள் இது கால் சதைப்பாகங்களுக்கு மற்றும் உடலின் நரம்புகளுக்கு உறுதி அளிக்கிறது. இதேபோல் ட்ரட்மில் துரித நடையோட்ட பயிற்சியும் செய்கிறார்கள்.

காலை 10.30 வேலைதுவக்கம்.

ஒவ்வொருவருக்கும் அன்றைக்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த அட்டவணை வழங்கப்படுகிறது. இது பெரும்பாலும் வழக்கமாக அவர்கள் தொடரும் ஆய்வகப் பணியாக இருக்கும். அல்லது ஐ.எஸ்.எஸ் வெளியே அமைக்கப்பட்ட இணைப்பு தளத்தில் இருந்து சோதனை செய்ய வேண்டி இருக்கலாம்.

மதியம் 1.00 உணவு இடைவேளை

இந்த மதிய உணவு அவர்களின் விருப்ப உணவாக பூமியில் முன்னதாக தீர்மானிக்கப்பட்ட மூன்றில் ஒன்றாக இருக்கும்.  விருப்ப உணவு ஏற்கணவே தாயார் செய்யப்பட்டு பேக்கிங்கில் இருக்கும். சிலவற்றை உடனடியாக சாப்பிடும் வகையிலும் சிலவற்றில் சிறிது தண்ணீர் சேர்த்து ஓவனில் சூடாக்க வேண்டி இருக்கும்.

மதியம் 2.00 மணி வேலை துவக்கம்

ஐ.எஸ்.எஸ் ல் உள்ள கிப்போ சோதனைக்கூடத்தில் விண்வெளி மருந்து, உயிரியல், புவி சூழ்நிலை ஆய்வு, பொருள் உருவாக்கம், புரோட்டீன் படிம உருவாக்க பெட்டியில் சில சோதனைகள்...இப்படி,

மாலை 5.00 மணிக்கு உடற் பயிற்சி

இரண்டு ட்ரெட்மில்கள், இரண்டு நிலையான சைக்கிள், ஒரு எடை தூக்கி பயிற்சி செய்யும் சாதனம் இவைதான் நிரந்திர பயிற்சி சாதனங்கள்.
எந்த பயிற்சி செய்வதாக இருந்தாலும் அவர்கள் தரையோடு இருக்கும் ஸ்ட்ராப்பில் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள்.

மாலை 6.00 மணி க்கு வேலை

விண்வெளி நிலையத்திற்குள்ளே அமைக்கப்பட்டிருக்கும் சிறிய சோதனைக்கூடம் கொலம்பஸ் இது ” மைக்ரோ கிரேவிட்டி சயன்ஸ் க்ளோவ் பாக்ஸ்” என அழைக்கப்படுகிறது. இங்கு சில சோதனைகளை செய்கிறார்கள்.

இரவு 7.30 மணி இரவு உணவு

விண்வெளி வீரர்களுக்கு அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட உணவுகளை தேவையான அளவிற்கு வழங்கப்படுகிறது.   ஒருவாரம் அல்லது ஒருமாதம் தங்குவதாக இருந்தால் அதற்கு தகுந்தாற்போல் உணவுகள் வினியோகிக்கப்படுகிறது. கூடுதலாக ஆரஞ்சு பழங்கள் எடுத்துக்கொள்ளலாம்.
பெரும்பாலும் டயட் என்று சொல்லப்படுகிற நிலையை அவர்கள் கடைபிடிக்க வேண்டும்.

இரவு 8.30 மணி கான்ஃபரன்ஸ் (கலந்துரையாடல்)

தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தோடு அன்றைக்கு மேற்கொள்ளப் பட்ட பணி விவரங்கள், அடுத்த நாள் மேற்கொள்ளப்போகும் பணி இவற்றை விவாதிக்க வேண்டியிருக்கும். விண்வெளி நடை பயிலல் (ஸ்பேஸ் வாக்) மேற்கொள்ளப்படுகிறது. அடுத்து பத்திரிக்கையாளர்கள் கேள்விகளுக்கு கான்ஃபரன்ஸ் முறையில் பதிலளிக்க வேண்டியிருக்கும்.

இரவு 9.30 மணி ஓய்வு நேரம் துவக்கம்

பணி ஓய்வு நேரம் இப்போது எடையற்ற நிலையில் சில விளையாட்டுகளையும் விளையாடுகிறார்கள். புத்தகம் படித்தல், டிவிடி பார்த்தல், இசை கேட்டல், லேப்டாப்பின் மூலம் தங்கள் குடும்பத்தினரோடு பேசி நேரத்தைக் கழிக்கலாம். ஒலி ஒளிகளை பதிவு செய்து வைத்துக்கொள்ளலாம்.

இரவு 10.00 மணி : தூக்கம்

கேஷுவல் டிரஸில் தங்களுக்கென கொடுக்கப்பட்டிருக்கும் தூங்குவதற்கான குழாய் படுக்கையில் உறங்கலாம்.  கண்கள் மற்றும் காதுகளை மறைக்கும் பிரத்தியோக முகமூடிகளை அணிந்து கொள்கிறார்கள்.  இந்த பை போன்ற படுக்கை மிதந்து சென்றுவிடாமல் இருக்க பெல்டுகளால் இணைக்கப்பட்டிருக்கும்.

ISS- Toilet

அறிவியல் உலகிற்காக தங்கள் உயிரைப் பணயம் வைத்து, பல கஷ்டங்களுக்கு தம்மை பழக்கி கொண்டு, சுக துக்கங்களை மறந்து அவர்கள் ஆற்றும் பணிகளுக்கு நம் சிரம் தாழ்த்தி வணக்கத்தை தெரிவித்து கொள்வோம்.

ISS daily Life  காணொளி



Download As PDF

Saturday, December 22, 2012

எதிர்கால விண்வெளி பயணங்கள்...


விண்வெளி வீரர்கள் தற்போது விண்வெளியில் மிதக்கும்
இன்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷனில் (  சுருக்கமாக ISS
international space station ) அதிக நேரங்களை செலவிட்டு ஆய்வுகளை நடத்தி வருகிறார்கள்.

அமெரிக்கா, ரஷ்யா,கனடா, ஜப்பான் மற்றும் 11 ஐரோப்பிய நாடுகள், பிரேஸிலுடன் சேர்த்து 16 நாடுகள் ISS திட்டத்தில் பங்கெடுத்து உள்ளன. விண்வெளியில் 1998 ல் ஆரம்பிக்கப்பட்டு இன்னும் பல பகுதிகள் இணைக்கப் பட்டு வருகிறது. இதற்கென 50 திற்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளில் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு இணைப்பதற்காக 140க்கு மேற்பட்ட ஸ்பேஸ் வாக் நடத்தப்பட்டு உள்ளது.

அடுத்து பல கட்டங்களில் எதிர்கால விண்வெளி பயணங்கள் திட்டமிடப்பட்டு வருகின்றன.  குறிப்பாக அடுத்த பத்தாண்டுகளில், விண்வெளி வீரர்களை முதலில் நிலவுக்கும் அதன் பின் செவ்வாயிற்கும் அனுப்பும் திட்டம் அமெரிக்காவும் சைனாவும் வைத்திருக்கிறது.

செவ்வாயில் மூன்று வாரங்கள்  இருப்பதற்கு போக வர 18 மாதங்கள் விண்வெளி வீரர்களுக்கு தேவைப்படும் என்று சொல்லலாம்.

இன்னும் சில பத்தாண்டுகளில் (Decades) நிலவுக்கு ஓய்வெடுக்க சென்று வருவது என்பது விண்வெளி வீரர் அல்லாதோருக்கு சாதரணமாகி விடும் காலம் வெகு தூரத்தில் இல்லை.


  • ஓரியான் (orion)


அமெரிக்க விண்வெளி வீரர்களுக்காக தயாரிக்கப்பட்டு வரும் ஒரு புது ஸ்பேஸ்கிராப்ட் (விண்வெளி ஓடம்) ஓரியான்.   வரும் 2014 ல் இது ஏர்ஸ்-1 ராக்கெட் மூலம் எடுத்து செல்லப்பட்டு  I S S ல் வீரர்களை இறக்கிவிடும்.
அங்கிருந்து அப்படியே நிலவிற்கு பயணப்படலாம்.  மேலும் ஒரே நேரத்தில் ஆறு பேர்கள் நிலவிற்கு சென்று வரக்கூடிய மேம்படுத்தப்படும் திட்டம் உள்ளதாம்.  குறைந்தது ஆறு மாதங்கள் நிலவில் அவர்கள் ஓய்வெடுத்து ..! ஓரியான் மூலமாக பூமிக்கு திரும்பிவிடலாம்.  ( ஜாலி டிரிப் !! )



  • லூனார் ரோவர் (Lunar Rover)


நிலவில் விண்வெளி வீரர்களுக்காக பிரத்தியோகமான ஒரு வாகனம் லூனார் ரோவர். இதில் அவர்கள் கார் பவனி வருவது போன்று நிலவில் சுற்றி வரலாம்.  இந்த ப்ரோட்டோ வகை ரோவர் பூமியில் ஏற்கனவே பரிசோதித்து பார்க்கப்பட்டுவிட்டது.  இரண்டு பேர் இதில் தாரளமாக செல்லலாம். இதன் வேகம் மணிக்கு 10 கிலோமீட்டர்கள் தான். இதில் உள்ள எரி பொருள் 240 கிலோமீட்டர்களுக்கு தாங்கும் என்பது கூடுதல் தகவல்.


  • செவ்வாயில் மனிதர்கள்


மனிதன் காலடி வைக்கும் முதல் கோள் செவ்வாயாகத்தான் இருக்கும்.  இதற்கு புவியை சுற்றி வரும் ஸ்பேஸ்கிராப்டிற்கு ஓரியான் மூலமாக தங்க வைக்கப்பட்டு பின் அங்கிருந்து செவ்வாயிற்கு அழைத்து செல்லப்படுவர்.  கால அளவு ஒன்பது மாதங்கள்.  இதெல்லாம் நடப்பதற்கு 2030 இறுதி வரை காத்திருக்க வேண்டும்.


  • மார்ஸ் - 500


 நீண்ட காலம் செவ்வாயில் இருந்தால் மனிதனுக்கு என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதும், அப்புறம் உணவு பழக்க வழக்கங்கள், இன்னபிற பிரச்சனைகள் குறித்து ஆராய பரிசோதனையில் அடிப்படையில்  ஏற்படுத்தப்பட்ட ஐசுலேசன் சேம்பர் தான் செவ்வாய் -500.  2009 லேயே மாஸ்கோவில் பரிசோதிக்கப்பட்டது.  இதில்ஆறு பேர் கொண்ட ஒரு குழு 105 நாட்கள் இருந்திருக்கிறார்கள்.


  • ஸ்பேஸ் ஹோட்டல்




விண்வெளியில் பூமியை சுற்றும் வகையில் அமைக்கப்படும் ஒரு ஸ்பேஸ் ஹோட்டல் ( வித்தியாசமா இருக்கு இல்ல...இட்லியும் கெட்டி சட்னியும் ஸ்பெசல் மெனுவா...? ) விண்வெளி வீரரா இல்லாதவங்களும் இந்த ஹோட்டல தங்கி ஓய்வெடுக்கலாம்.   இது பூமியை ஒரு நாளுக்கு 16 முறை சுற்றும். தனியார் ஆர்கனைசேசன் ஒன்று GENESIS-1 என்ற ரஷ்ய ராக்கெட்டில் ஏற்கனவே ப்ரோட்டோ டைப் ஹோட்டலை அனுப்பி பரிசோதித்து விட்டது.


  • கொசுறு தகவல் 


முதல் விண்வெளி பயணி (first traveller ) ( அதாவது விண்வெளி வீரர் அல்லாதவர் ) டெனிஸ் டிட்டோ.   இவர் அமெரிக்க தொழில் அதிபர்.   20 மில்லியன் US டாலர் கட்டணம் செலுத்தி ஏப்ரல் 2001 ல் ஒருவாரம் பயணம் முடித்து திரும்பினார்.   இவருக்கு முன் சென்ற விண்வெளி வீரர்கள் 414 பேர். (சென்ற விண்கலம் சோயுஸ் TM 32) இவர் தங்கி இருந்த  7 நாள் 22 மணிநேரத்தில் I S S  - 128 முறை பூமியை சுற்றி காட்டியது.

தொடர்புடைய பதிவு :



Download As PDF

தமிழ் எழுதி (உதாரணம்) - ammaa =அம்மா, aRam=அறம், thamiz=தமிழ்,manjsaL=மஞ்சள்

மேலும் படிக்க பக்க எண்களை காண பழைய இடுகையை [OLD POSTS ]மீது கிளிக் செய்யவும் !


பிரபலமான இடுகைகள்

கடந்த 30 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Labels of this Blog

Alien (1) amphibians (1) ancient people (2) ancient scripts (1) ancient tamil poets (1) anteater (1) antibiotics (1) archaeologist (5) art (4) Artic (1) Asteroid (1) astronomy (4) atom (1) bangalore lalbagh (2) bats (1) beauty (1) Bees (2) Belmez faces (1) Bermuda Triangle (1) Birds (7) birthday song (1) black holes (1) brain activity (5) brains (2) Brown Drawfs (1) carnivorous plants (2) chennai conference (1) cloning (2) Cockroach farrms (1) Concisious mind (3) conjoined animals (1) conjoined twin (1) Contest approach (1) crinoids (1) curiosity (1) darwin (2) dhasavadaram (1) dinosaur bird (1) Draco (1) dreams (4) earth worm (1) earthday (1) environment (2) Firefly (1) Fugu (1) G.D.NAIDU (4) Galaxies (2) general knowledge (1) Genetic (1) Ghost (1) Gillette razor (1) golden buddha (1) Gulf streem (1) H.Erectus (1) Hess (1) highway of kongu culture (1) Hindusim (1) Historical Famous Faces (1) human (1) HumanMilk (1) humanoid (1) ice melting (1) indian iron pillar (1) infrared (1) interview (1) jellyfish (1) Jokes (12) KaKapo (1) Kongu culture (6) land scape (1) Library of Alexandria (1) life of bees (2) life science (3) Life Sciences (11) Liger Tigon (1) long life (1) M.Metha (1) mamies milk (1) Mars (1) meat-eating plants (1) milkyway (2) mind (1) MIR Diamond mine (1) Moscow Kremlin (1) Mosquito (1) mushroom (2) Mystery (14) mystry (2) nanban (1) Nasca (1) Nazca Lines (1) Northern Hawk owl (1) Number 108 (1) oddity (1) Omen (1) paranormal interpretation (1) Penquins (1) peru (1) Perur (1) Perur Temple (5) philosophers (1) Piri Reis Map (1) poet Kannadasan (2) QUIZ (2) rare animal (2) Religion (1) RHINOCEROS (2) Richard III (1) RMS Queen Mary (1) Rongorongo script (1) Russian royal bell (1) save trees (2) Science (3) Sea level Rise (1) sediba (1) self confidence (1) Shark (1) Short Stories (1) silambam (1) sleep (3) Sloth (1) smallpox (1) song-birds (3) Space (2) space scientist (1) sphere Robo (1) Spider (2) Sprit (1) Stars (1) story (3) strangeness (1) Superstitious behavior (1) swami vivekanandar (1) tamil artist maruthu (1) tamil history (6) Telescope (1) tibet (3) tickle (1) Tsar Bell (1) twins (1) ultraviolet (1) universe (2) vairamuthu (1) Virus (1) water (2) whales (1) windmill (1) அணு (1) அமானுஷ்யம் (4) அலெக்ஸாண்டிரியா (1) அறிவியல் துணுக்குகள் (14) அறிவியல் புதிர் (9) அனுபவம் (87) அனுபவம். பயணம் (4) அஸ்ட்ராய்டுகள் (2) ஆதி மனிதன் (2) ஆய்வு (11) ஆர்டிக் (1) ஆவி (1) ஆழ்கடல அனுபவம் (2) ஆழ்கடல் அனுபவம் (1) ஆனந்தம் இதழ் (1) ஆன்டிபாயாடிக்ஸ் (1) இரட்டை உயிர்கள் (1) இரும்பு தூண் (1) ஈஸ்டர் தீவு (2) உணவு (1) உணவுப்பழக்கம் (2) உயிர்நிழல் (1) உள்ளுணர்வு (3) உறக்கம் (1) எகிப்து (2) எண்ணங்கள் (2) எண்ணியல் (1) எறும்புதின்னி (1) ஏமாற்றம் (1) ஏன் எதற்கு எப்படி (26) ஐன்ஸ்டீன் (1) ஒளிஉமிழ்காளான் (1) ஓவியம் (6) கடல் ஆய்வு (2) கடல் சுழல் ஆய்வுக்கூடம் (2) கடல் மட்டம் (1) கடல் லில்லி (1) கடல்பல்லிகள் (1) கட்டுரை (125) கணினி (1) கண்காட்சி (3) கண்டுபிடிப்பு (5) கதை (6) கரப்பான்கள் (1) கருந்துளை (1) கல்வெட்டு (1) கவிஞர் கண்ணதாசன் (6) கவிஞர் வைரமுத்து (2) கவிதை (2) கவிதைகள் (2) கற்பாறை சித்திரங்கள் (2) கனவு (1) கனவுகள் (4) காடுறை உலகம் (1) காண்டாமிருகம் (2) காதல் (1) காந்தி (1) காளான் (2) கிச்சுக்கிச்சு (1) குளவி (1) குளோனிங் (2) கேலக்ஸி (3) கொங்கு (7) கொங்கு வரலாறு (1) கொசு (1) கொசு ஒழிப்பு (2) கொசுக்கள் (2) கோபிநாத் (1) கோவை புத்தக வெளியீடு (2) கோவை வரலாறு (7) சகுணம் (1) சலீம் அலி (1) சவரம் (1) சாதனை (1) சார்லி சாப்ளின் (1) சார்லிசாப்ளின் (1) சிங்கம்புலி (1) சிந்தனை (6) சிரோ டிகிரி. சிறுகதை (1) சிலம்பம் (1) சிறுகதை (4) சினிமா (2) சுறா (1) செண்டினல் தீவு (1) செப்பேடு (1) செய்தி (3) செய்திகள் (10) செவ்வாய் (2) டார்வின் தவளை (1) டாவின்சி (1) டிசைனர் பேபி (1) டிராட்ஸ்கி மருது (2) தங்க புத்தர் சிலை (1) தண்ணீர் (1) தத்துவம் (3) தமிழர் (2) தமிழர்கலை (1) தமிழன் (4) தமிழ் (7) தவளைகள் (1) தாய்ப்பால் (1) திபெத்திய குகைகள் (3) திமிங்கிலம் (1) தினமலர் (1) தீவு வாசிகள் (1) துணுக்குகள் (16) தூக்கம் (4) தூப்ளே (1) தேவிகா (1) தேனீ (3) தொலைநோக்கி (1) நகைச்சுவை (17) நடிகர் சிவகுமார் (3) நட்சத்திர குள்ளர்கள் (1) நட்சத்திரம் (1) நாசா (1) நாயக்கர் மகால் (2) நானோ டெக்னாலஜி (1) நானோ-தொழிநுட்பம் (1) நானோபாட்கள் (1) நாஸ்க்கா (1) நீண்ட ஆயுள் (1) நீர் சிலந்தி (1) நொய்யல் (4) பதிவுதிருட்டு (1) பயணம் (2) பறவை (7) பறவை மனிதன் (1) பறவைகள் (2) பாக்தாத் பேட்டரி (3) பாமரன் (1) பால்வீதி (1) பால்வெளி (2) பிரபஞ்சம் (5) பிரிரெயிஸ் (1) பில் கேட்ஸ் (1) பிளாஸ்டிக் (1) பிளேட்டோ (2) பிறந்தநாள் பாடல் (1) புதுவை (1) புத்தகம் (2) புவி தினம் (1) புவி வெப்பமாதல் (1) புழு (1) புனைவுகள் (1) பூச்சியுண்ணும் தாவரங்கள் (1) பூமி தினம் (1) பெங்களூரு (2) பெரிய ஆலமரம் (1) பெருவழிப்பாதை (1) பெல்மீஸ் (1) பேரூர் (7) பேரூர் கல்வெட்டு (1) பொன்மொழிகள் (3) போலியோ (1) ப்ளாஸ்மான்கள் (1) மங்கள்யான் (1) மணிகள் (1) மதுரை (1) மரங்களின் பாதுகாப்பு (2) மரபியல் (5) மருத்துவம் (18) மனம் (2) மனித மூளை (1) மனோவலிமை (2) மாமிச உண்ணி தாவரம் (1) மின்மினிப் பூச்சிகள் (1) மீன்கள் (2) மு. மேத்தா (1) முதுமக்கள் தாழி (1) மூடபழக்கவழக்கம் (2) மூளை (4) மேஜிக் (1) ராசாளி ஆந்தைகள் (1) ராஜநாகம் (1) ரூபிக் க்யூப் (1) ரேசர் (1) வரைபடம் (1) வலைப்பதிவர்கள் விழா (1) வாழ்க்கை (1) விச சிலந்தி (1) விண்கற்கள் (1) விண்ணியல் (3) விண்வெளி (6) விண்வெளி வாகனங்கள் (3) விண்வெளி விஞ்ஞானிகள் (2) விநோதங்கள் (1) விமர்சனம் (1) விலங்குகள் (2) வெப்பமயமாதல் (1) வெளவால் (1) வேற்றுகிரகவாசி (1) வைர சுரங்கம் (1) வைரஸ் (1) வொயுனிச் (1) வௌவாள் (1) ஜி.டி.நாயுடு (3) ஜெல்லி மீன் (1) ஜோக்குகள் (3) ஜோக்ஸ் (10) ஸ்டெம் செல் (1) ஸ்லவுத் (1)